ச்செல்ல மழையும் நீ!!….. ச்சின்ன இடியும் நீ!!!…..

about1.jpg

“என்னக் கொடுமை இது சரவணன்?”

“ஏண்டா செல்லம் அப்டி சொல்ற? நல்லா இல்லையா?”

“அது இல்லைம்மா, blogsனா என்னன்னு சொன்னீங்க அன்னிக்கி?”

“என்ன சொன்னேன், நினைவில்லையே.. அன்னன்னிக்கி மூடைப் பொருத்து சொல்றதுதான்..”

“Blogனா அவங்கவங்க பெர்சனல் டைரிமாதிரி. உனக்குக் கூட ஒன்னு ஆரம்பிச்சு தரேன். நீ பெர்சனலா நினைக்கறதெல்லாம் எழுதலாம்னு சொல்லலை?”

“ஓ அப்டி சொன்னேனா, ஆமாம். ரைட்.”

“பின்ன ஏன் சமையல் பத்தி? உண்மையா சொல்லுங்க, உங்களுக்கு சமையலுக்கும் பெர்சனலா ஏதாவது சம்பந்தம் இருக்கா?”

“:((( என்னடா இப்டி சொல்ற? எவ்ளோ நாள், ‘My mom is a great cook’னு சொல்லியிருக்க?”

about 5

“அதெல்லாம் சும்மா சொல்றதுதான். நீங்க கூடத்தான் நேத்தி மத்யானம் தூங்க வைக்கும்போது ‘என் செல்ல்லக் குட்டி.., பட்டு மிட்டலமே.. என் லட்டு பொட்டலமே.., இவ்ளோ சமத்தை யாருடா ஒன்மேல கொட்டினது..’ன்னெல்லாம் கொஞ்சினீங்க. நான் தூங்கினதும் மாமாகிட்ட ஃபோன்ல, ‘பொண்ணாவா இருக்கு, பிசாசா படுத்துது’ன்னு சொன்னீங்க. என்னோட ஃபோன் பேசறவங்க எல்லாரும் கடைசில ‘அம்மாவைப் படுத்தக் கூடாது’ன்னு அட்வைஸ்.

“நேத்தி மாமாகிட்ட பேசும்போது கேட்டுட்டியா? ச்சோ ச்வீட். நீ தூங்கிட்டன்னே நினைச்சேன்..”

“பக்கத்துலயே உக்காந்து அவ்ளோ சத்தமா பேசினா எப்டி தூங்கறது? நீங்க ரெண்டுபேரும் பேசறதுதான் worldக்கே கேக்குமே. இனிமே ஃபோன்ல ரிங் பண்ணாமலே பேசுங்க. மாமாவுக்கு கேக்கும்.”

“சரி இப்ப என்னை கொஞ்சம் வேலை செய்ய விடறியா?”

“ஹே.. நானே கேக்கணும்னு இருந்தேன், என்ன செய்ற நீ, மூணு நாளா கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்காம? அப்படி ஏதாவது ரிசல்யூஷன் எடுத்திருக்கியா இந்த வருஷத்துக்கு?”

“உங்க பங்குக்கு நீங்களும் கேளுங்க. புதுசா blog ஆரம்பிக்கப் போறேன்.  நல்லா இருக்கா?”

kitchencustomimage1.JPG

“இது என்ன புதுசா?”

“ஆமாம். திடீர்னு ஒரு எண்ணம். யாரையும் கேக்காம நானே க்ளிக் பண்ணி க்ளிக் பண்ணி கத்துகிட்டேன். Blogspotல ஒரு theme கூட பிடிக்கலை. அப்றம் WordPress போய் எல்லாம் try பண்ணி, எல்லாத்தையும் வரிவரியா படிச்சு, அவங்க support டீமுக்கு சந்தேகத்துக்கு மேல சந்தேகமா கடிதம் அடிச்சு…. பாவம் எவ்ளோ அடிச்சாலும் பொறுமையா ஆனா உடனே உடனே பதில் சொல்றாய்ங்க.. ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாய்ங்க போல..”

“அப்ப இதுக்கு முன்னாடி மூணு வருஷமா நெட்ல என்ன செஞ்சுகிட்டிருந்த?”

“3 வருஷமாவா? :)) சரியாச் சொல்லணும்னா, எதுவுமே செய்யலை! :))”

“ம்ம்..  மணிக்கணக்கா ஒரு இடத்துல உட்கார்ந்தும் 3 வருஷத்துக்கு மேல எதுவுமே செய்யாம இருக்க எல்லாம் ஒரு திறமை வேணும்.”

“FYI, இனிமேலும் நெட்ல அப்படித்தான் இருக்கப் போறேன். என்ன கிண்டலா? வருஷக்கணக்கா உங்களுக்கு wifeஆ இருந்தாலும் ‘சும்மாத்தான் இருக்கேன்’னு சொல்லிக்கறதில்லையா, அது மாதிரி தான் இதுவும். ”

“பொய் சொல்றாங்ப்பா. சமையல் பத்தி எல்லாம் எழுதப் போறாங்களாம். கொடுமையா இல்ல?”

“நான் இதெல்லாம் எனக்காகவா எழுதறேன். உங்க பொண்ணுக்காகத்தான் சேர்த்து வைக்கறேன், பின்னால refer பண்ண உபயோகமா இருக்குமே.”

“ஆங், இப்டி பொண்ணு பேரைச் சொல்லிச் சொல்லித்தான் பீரோ பீரோவா நிரப்பிகிட்டிருக்க. இப்ப இது வேறயா?… நீ எவ்ளோ ந்யூஸ் எல்லாம் படிக்கற, பொது விஷயம் நிறைய எழுதேன்.”

“நான் எழுதி யார் படிக்கறது?”

“சே சே நான் படிப்பேன். அது நல்லா வரும்னு தோணுது.”

“நான் எழுதினதெல்லாம் இதுக்கு முன்னாடி படிச்சிருக்கீங்களா?”

“இல்லை நீ சமைக்கறதெல்லாம் சாப்பிடறேனே, அதை வெச்சு சொன்னேன்.”

“Thanks. ஆனா சகிக்கலை. பழைய ஜோக்.”

“சரி விடு; பாவம் பொண்ணு. அவளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் சேர்த்து வைக்கலாமே. BTW, நீ காய்கறி நறுக்கறேன்னு கத்தியை தலைகீழாப் பிடிச்சது, வெண்டைக்காயை வேக வெக்கறேன்னு குக்கர்ல 3 விசிலுக்கு வெச்சது, பருப்புல வித்யாசம் தெரியாம துவரம்பருக்குப் பதில் கடலைப்பருப்புல சாம்பார் செஞ்சு எனக்கு வயித்தை வலிச்சது… அதெல்லாமும் எழுதுவ இல்ல?”

    kitchenprofile.JPG

“Grrrr.. உங்கம்மா உங்களைப் பத்தி வேற மாதிரி சொல்றாங்க?”

“என்ன சொல்றாங்க, ரொம்ப நல்லவன், போட்டதெல்லாம் குத்தம் சொல்லாம சாப்பிடுவான்னு தானே?”

“அவ்ளோ நாகரிகமா சொன்னாத்தான் பரவாயில்லையே. ‘பொண்டாட்டி பருத்திக்கொட்டையை அரைச்சுப் போட்டாலும் என் பிள்ளை….’ அப்படீன்னு வேற ஏதோ பழமொழி இல்ல சொன்னாங்க. எதுக்கும் அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி சரியா கேட்டுடலாமா?”

“நான் அப்பீட். நீயும் அம்மாவை தொந்தரவு செய்யாதடா கண்ணு. பாவம் அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்!”

“என்னப்பா நீங்க, இனிமே ‘ஆலூ போஹா’வே செய்யக் கூடாதுன்னு அம்மாகிட்ட பிராமிஸ் வாங்கினீங்க இல்ல, அதெல்லாமும் எழுதச் சொல்லுங்க!!”

“அடடா, இப்ப என்ன பிரச்சினை உங்க ரெண்டு பேருக்கும்? நான் என் சமையல் திறமையைப் பத்தி எதுவும் எழுதப் போறதில்லையே. எங்கம்மா எழுதிக் கொடுத்த ரெசிபி டைரி கிழிய ஆரம்பிச்சிடுச்சு. அதனால இங்க அதை எல்லாம் ஏத்தி வைக்கறேன். அவ்ளோதான். சொந்தமா ஒரு வரி கூட எழுத மாட்டேன். போதுமா?”

“அது!!!”

thanks to: WordPress Support Team

தனிமடல் தொடர்புக்கு: jsriblogs@gmail.com

85 பதில்கள் to “About”

  1. பத்மா அர்விந்த் Says:

    நல்ல குறிப்புகள். நானும் செய்து பார்க்கிறேன். நன்றி


  2. செய்து பார்த்துட்டு சொல்லுங்க, பத்மா.

  3. Thiyagarajan Says:

    I like your writing style! i will try some of your tips (specially curd rice!!)

    My daughter standing besides me said the girl in your blog looks like her (your daughter(?)

    Thiyagarajan


  4. தியாகராஜன், அவள், என் பெண்தான். உங்கள் பெண்ணும் அப்படிப் படுத்தாமல் இருந்தால் சரியே! 🙂


  5. உங்கள் வலைப்பதிவைக் கண்டதும் ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு. நீங்கள் எழுதியிருக்கும் உணவு வகைகள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. நானும் என் மனைவியும் சேர்ந்துதான் சமைக்கிறோம். பெரும்பாலும் சமையல் புத்தகம் கைகொடுக்கிறது. இனி உங்கள் வலைப்பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.
    நீங்கள் என்னதான் படம்போட விரும்பவில்லை என்றாலும் உணவும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பிரைடு ரைசுக்கும் பிரியாணிக்கும் வித்தியாசம் தெரியாத, சேப்பங்கிழங்கிற்கும் கருணைக் கிழங்கிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிவருகிறது. இந்த நேரத்தில் உங்கள் சேவை உலகுக்குத் தேவை!


  6. முரளிதரன், என்னன்னவோ சொல்றீங்க. பயமா இருக்கு. எனக்குத் தெரிஞ்சதெல்லா இடியாப்ப சேவை தான். 🙂

  7. பாலராஜன்கீதா Says:

    அன்புள்ள Jsri அவர்களுக்கு,

    சென்ற ஞாயிறு 11 மார்ச் அன்றுதான் இகாரஸ் ப்ரகாஷ் மூலம் நீங்கள் தமிழ் வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். ஒடிவந்து தேடிப்பிடித்து உங்கள் பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மரத்தடி குழுவில் கலக்கியது மறக்குமா என்ன ? இங்குத் தாளிக்க ஆரம்பித்துள்ளது நெட் பிராக்டிஸ்தானே (pun intended)? :-))) சமையற்கட்டை விட்டு வெளியே வந்து நன்கு அடித்து ஆடுங்கள். நல் வரவு மற்றும் வாழ்த்துகள்.


  8. பாலராஜன்கீதா, நம்புங்க, நான் தயிர்சாதம் பதிவு போடும்போது- உங்களை இல்லை- உங்க மனைவியோட கைப்பக்குவம் குறித்து கேவிஆர் சொன்னதை நினைச்சுகிட்டே தான் தட்டினேன்.

    //இங்குத் தாளிக்க ஆரம்பித்துள்ளது நெட் பிராக்டிஸ்தானே//

    எங்க ஸ்கூல்ல wall practice னு சுவத்துல அடிச்சு பிராக்டிஸ் செய்வோம். செமத்தியான எதிராளி இல்லாம, என் பொழைப்பும் அப்படித்தான். ஒரே bore. :((

    இகாரஸ் பிரகாஷா, அதாரு?? :-SS

    1. Caroline Says:

      Jeyashree, Where are you? I am not seeing any posts from you these days..Enna aachu ungalukku? Nalla irukeengala?

  9. பாலராஜன்கீதா Says:

    //யாரையும் கேக்காம நானே க்ளிக் பண்ணி க்ளிக் பண்ணி கத்துகிட்டேன். Blogspotல ஒரு theme கூட பிடிக்கலை. அப்றம் WordPress போய் எல்லாம் try பண்ணி, எல்லாத்தையும் வரிவரியா படிச்சு, அவங்க support டீமுக்கு சந்தேகத்துக்கு மேல சந்தேகமா கடிதம் அடிச்சு…. பாவம் எவ்ளோ அடிச்சாலும் பொறுமையா ஆனா உடனே உடனே பதில் சொல்றாய்ங்க.. ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாய்ங்க போல..”//

    அன்புள்ள ஜெயஸ்ரீ,

    தங்களின் பல இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களைத் தங்கள் பதிவின் முகப்பிலே தெரியப்படுத்த உதவும்படி அந்த நல்லவங்களுக்குத் தாங்கள் இன்னொரு மடல் எழுதி எங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.


  10. பாலராஜன்கீதா, அவ்ளோ படம் தேவை இல்லைன்னு தான் சேக்கலை. இந்த சப்பை மேட்டருக்கெல்லாம் அவங்களைத் தொந்தரவு செய்யணுமா? நானே செஞ்சுட்டேன். இதைவிட சிம்பிளான அபத்தமான சந்தேகம் இருந்தா மட்டும் தான் அவங்க. 🙂

    தலைப்பு Taste Testersக்கு தமிழ்ல என்னன்னு தெரியலை. 😦 இது அவங்களுக்கும் தெரியாது!! 🙂

  11. ரத்தன் Says:

    ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. நான் என்னோட வலைப்பதிவுல நான் சமைச்சுப் பாத்த குறிப்பு(கொடுமை)கள போடலாம்னு நினச்சிகிட்டு இருந்தேன். ஆனா இப்படி ஒன்னு இருக்கும் போது யாரு என்னோடத யாரு பாக்கப் போரா? 😉
    தாளிங்க… தாளிங்க… தாளிச்சிக்கிட்டே இருங்க… 🙂


  12. ரத்தன் நன்றி. ஆனா சமையல் குறிப்பு யார் எழுதினாலும் எல்லாரும் படிப்பாங்க. ஒவ்வொருவரோடதும் ஒவ்வொரு முறை. முக்கியமா நான் எல்லாரோடதும் விரும்பிப் படிப்பேன். செஞ்சும் பார்ப்பேன். என்னோடதுல புதுசா எதுவுமே இல்லை. எல்லாமே எல்லோருக்கும் தெரிஞ்சவைதான். அவசியம் உங்க குறிப்புகளை எழுதுங்க. கொடுமையா இருந்தாலும் ஏன் கொடுமையாச்சுன்னு எழுதுங்க. அது 10 சரியான குறிப்புகளுக்குச் சமம். Please continue sharing. Thanks.

  13. Ganesh Says:

    Hi Jayashree

    nice blog , this blog is going to be very useful for me 😛

    Ganesh

  14. ரத்தன் Says:

    சொல்லிட்டீங்கள்ள! இந்த வாரமே ஒரு கொடுமய பதிவா போட்டுடறேன் :-).


  15. ரத்தன் ஒரு வாரம் ஆச்சே, ஏன் இன்னும் பதிவு போடலை. 🙂 ஆனா, உங்க மத்த பதிவுகளும் நல்லாவே இருக்கு. முடிஞ்சவரை உங்க ப்ளாக்கர் ஐடிலயே பின்னூட்டம் போடுங்க. அப்பத்தான் படிக்கறவங்களும் உங்க பதிவுக்கு இங்கிருந்தே நேரா போக முடியும்.

  16. Rathan Says:

    தயார் ஆகிக்கிட்டே இருக்கு. நான் சமைக்கறதுலயும் சரி, சமையலுக்கான் பதிவு போடறதுலயும் சரி கொஞ்சம் ஸ்லோ தான் ;-). அட, என்னோட பதிவெல்லாம் படிக்கிறீங்களா. மிக்க நன்றி!


  17. தயிர் சாதம் செய்ய வழி கிடச்சாச்சு, அத்தோட வேறு பல பயனுள்ள குறிப்பக்களும் உள்ளன.
    நன்றி… செய்து பாத்திட்டு சொல்லுறேன்…

  18. ramya Says:

    Hi,
    I wish I had tamil fonts uploaded; But I really felt like sending a comment immediately even before uploading it. Your site is fabulous.
    Ungalladu nagaichuvai thiran matrum writing skills migavum paaraattukuriyadhu. I really enjoyed visiting your blog. I dont know how to out it in words..but till date I have never come across such a beautiful blog…great job….


  19. ramya, பயந்துபோற அளவுக்கு புகழ்ந்துட்டீங்க. 🙂 Thanks.

    பின்னூட்ட தமிழ் எல்லாம் தேவை இல்லை. ஆனா உங்க வலைபதிவுல இருக்கற வித்தியாசமான சமையல் குறிப்புகளை நீங்க தமிழ்லயும் பதியலாமே.

  20. Gopalan Says:

    //பருப்புல வித்யாசம் தெரியாம துவரம்பருக்குப் பதில் கடலைப்பருப்புல சாம்பார் செஞ்சு எனக்கு வயித்தை வலிச்சது//

    Ohh yeah..Tell me about it ..My friend did this to me . :(.


  21. Gopalan, அதெல்லாம் ஒரு காலம். பருப்பை ரெண்டு எடுத்து சாப்பிட்டுப் பார்த்தா, அப்பளம் வாசனை, ருசி வந்தா உளுத்தம் பருப்பு. இந்த கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தான் படுத்தல். குக்கரைத் திறந்தா பருப்பு தனித் தனியா நிக்குது, துவரம் பருப்பு மாதிரி குழையாம. குக்கர்தான் சரியா வேகவைக்கலைன்னு(நினைச்சு) அதை திரும்ப வேற அஞ்சு விசில் வர வரைக்கும் வேக வெச்சும் துரைக்கு வயித்து வலி. என்ன மக்களோ! 😦 அப்புறம் டப்பா மேல பேர் எழுதி வெச்சுட்டாரு.

  22. naanaani Says:

    இன்றுதான் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன்.
    முழுவதும் படித்துவிட்டு, சில சுவையான,
    நான் செய்துபார்க்காதவற்றை செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன். ஹ்ப்பா! எவ்ளோ ரெசிப்பிகள் ஒரே பதிவில்! தனித்தனியாகப் போட்டால் எண்ணிக்கை கூடுமே! படங்கள் பார்த்தால் ரியலாக நீங்களே
    செய்தவை என்று அவை சொல்கின்றன.
    நன்றாக இருக்கிறது. மெய்யாலுமே!!


  23. naanaani (இப்படி ஒரு பேரா?)

    எண்ணிக்கையா முக்கியம். ஒரு பதிவு திறந்தா அதோட வெரைட்டி எல்லாம் ஒரே க்ளிக்ல கிடைக்கணும்னு நினைக்கறேன்.

    //படங்கள் பார்த்தால் ரியலாக நீங்களே
    செய்தவை என்று அவை சொல்கின்றன.//

    நல்லவேளை நீங்களாவது நம்பறீங்களே. மக்கள், ‘போட்டோ எல்லாம் மண்டபத்துல யாராவது கொண்டுவந்து கொடுத்ததா’ன்னு கேக்கறாங்க. 😦

  24. Ram Says:

    Excellent blog. I am not much interested in cooking (but have a good appetite for tasty food) .. but I love the way you have humorously presented them.

    I also concur with you on the comments you have posted (in the Q/A article) .. took an interest in all the nice tamil blogs at Tamizmanam, but got put off by the in-fighting and caste-ism (surprised/appalled that learned people still fight about it.. in public and on the net ..)

    (I could have given this feedback in Tamil, but since I haven not learnt Tamil in School, am afraid I would be lynched for my use of ர and ற)


  25. Ram, Thanks.

    ஆனா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க. நாங்களெல்லாம் சுஜாதா சொல்வாரே, ‘ஆங்கிலத்தையே தமிழ்ல தான் சொல்லிக் கொடுப்பாங்க!”ன்னு அந்த ஸ்கூல்ல படிச்சு வந்தவங்க. ஆனாலும் ர, ற சொதப்பி எடுப்போம். தைரியமா அடிச்சு சாத்துங்க. தப்பாயிருந்தா திருத்த இங்க நிறைய பேர் இருக்காங்க.

  26. Ram Says:

    ஜயஸ்ரீ

    நெட்டில் நீங்கள் மிகவும் ரசித்து படிக்கும் (சமயல் சம்பந்தமில்லாத, ஹாஸ்ய) சைட்ஸ் என்ன ?

    – ராம்
    (ஸ்பேம் அனுப்பமாட்டேன் என்று கற்பூரம் அடித்து சத்யம் சேய்தால், உங்கள் ஈமேயில் அட்றஸ் கிடைக்குமா ?)

  27. Bhavani Says:

    An excellent site, well designed, informative and useful. I have just gotten to India consequent to marriage after having been born and educatedin the US of A. I am most grateful to my friend om MMB who showed me this site.

    tks & rgds
    SARVAM KRISHNAARPANAM
    Bhavani


  28. Bhavani, நன்றி உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும். உங்களுக்குத் தெரிந்த மாற்று ஆலோசனைகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளுங்கள்.


  29. இந்த ப்ளாக் ஐ புக் மார்க் பண்ணி வச்சிக்கறேன். வற்ற தங்கமணிக்கு யூஸ் ஆகும் இல்லைன்னா அவிங்களுக்கு செஞ்சு குடுக்கறதுக்காவது யூஸ்புல்லா இருக்கும்.

    நல்லா humour ஆ எழுதறீங்க

  30. senthamizh Says:

    சுவையான பதிவு, மணக்கும் தலைப்பு, பயனுள்ள குறிப்பு என அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  31. Osai Chella Says:

    ha ha! semayaa ezhuthilayum thaazhippeenga pola irukku! appuram unga blog kku PIT photo contest vazhiyaa vanthen! super expressions and taste!!

    vazhthukkal!


  32. மங்களூர் சிவா, எனக்கு என்னவோ இரண்டாம் பகுதி தான் நடக்கும்னு தோணுது. Thanks.

    Senthamizh Thanks.

    ஓசை செல்லா, அக்டோபர் போட்டியில் சேர்ந்ததற்கான ஆய பயன் இது. நன்றி. ஆனா நான் ஆரம்பத்திலேருந்தே உங்க நச் பதிவெல்லாம் உடனே உடனே படிச்சுடுவேன். [பெண்கள் இணையத்துல அப்படி சொல்லிக்கக் கூடாதோ? 🙂 :lol:]

  33. Kasi Says:

    ஜெயஸ்ரீ,
    நல்ல நடை உங்களுக்கு. நல்ல ‘சேவை’:-) வாழ்க!


  34. Kasi, நன்றி. ஆனாலும் உங்கள் ‘சேவை’யைத்தான் உலகமே, என்னையும் சேர்த்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 🙂

  35. Kasi Says:

    ஆஹா,

    சந்தோஷம். கோவையில் விற்பனை ஆரம்பித்துவிட்டோம். புத்தாண்டுக்குள் சென்னைக்கு வந்துவிடுவோம். சில வாரங்களில் ஆன்லைனில் இந்தியா முழுமைக்கும் விற்பனை துவக்கப்படும்.

    உங்கள் சைடுபாரில் உள்ள சமையல் தள சுட்டிகளை எங்கள் சேவைமேஜிக் வலைப்பதிவில் blogroll ஆகக் கொடுக்க ஆசை. பொதுவாக தொடுப்புக் கொடுக்க யாரின் அனுமதியும் தேவையில்லையென்றாலும் உங்களிடம் ஒரு மரியாதைக்கு சொல்கிறேன்:) நன்றி.


  36. காசி, நீங்க வேற. நானே யார்கிட்டயும் அனுமதி வாங்காமத்தான் போட்டிருக்கேன். யாராவது மறுத்தா எடுத்துடலாம்னு இருக்கேன். இதுவரை யாரும் அனுமதி மறுக்கலை. 🙂

  37. Kasi Says:

    சுட்டாச்சு, சுட்டாச்சு 🙂

  38. sevaimagic Says:

    //ஆனாலும் உங்கள் ‘சேவை’யைத்தான் உலகமே, என்னையும் சேர்த்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். :)//

    எங்கள் சேவை இப்போது இந்தியா முழுமைக்கும் கிடைக்கிறது. இங்கே ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் வீடுதேடிவரும்.
    http://www.sevaimagic.com/order_online.php

  39. Leena Sudhakar Says:

    Hi Jayashree,
    I have no words to say on how I feel close and warm with this site. Ennavo theriyale, enga ammavum Nerule thaan irukkanga – adhunaale oru warmth kidaikkidhunnu nenaikkiren.
    I have tried your ‘Iyengar Puliyotharai’, ‘milagu kuzhambu’ and a couple others – ellame romba nalla vanthuthu. Unga recipes ellam romba theliva irukku; photos are excellent.
    ‘Thengaipal payasam’ kooda iruntha story – very entertaining; officele sirichitte irunthen konja neram.
    Ponnu romba prettya irukka; neenga velaikku poreengala? Amamnnu solli vidatheergal; romba gulitya irukkum enakku. Velaikku poitte ivalvu panreengannu!
    Next time, naan India varappe, kandippa ungale Nerule vanthu paapen.
    Best wishes,
    Leena


  40. Leena Sudhakar, thanks. நீங்க நெருள் வரும்போது அவசியம் சந்திக்கலாம். நான் வேலைக்குப் போகலை. ஆனா வேலைக்கு போற பெண்களும் இதெல்லாம் செய்யாம இருக்க முடியாது. என்ன அவங்க செஞ்சதுக்கப்புறம் பொழுதுபோகாம இப்படி வெட்டியா மொக்கைப் பதிவு எழுதமுடியாது. எனக்கு முடியுது. அவ்ளோதான்.

    என் பொண்ணு, அவங்கப்பா ஜாடை. 🙂

  41. S. Vijayan Says:

    For persons like me who stay away from homeland, reading Tamil, in itself, is a big source of happiness – takes one closer to! Add to this the food e had always enjoyed but missed dearly (You should have guessed by now – I am a novice, sort of)! Thank you, a lot. I have tried your recipes, and have come out well. Thanks again, but you have also made me yearn get back home! Please continue the good work. Your native sense of humour is very refreshing.

  42. அதிரை தங்க செல்வராஜன் Says:

    ப்ரிய சகோதரி,
    சமையலை விடுங்கள், உங்கள் பதிவுகள் படிக்க
    ஜனரஞ்சகமாக, மேலும் படிக்க ஆவல் தருகிறது.
    தொடருங்கள் பதிவுகளை.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    அதிரை தங்க செல்வராஜன்


  43. S. Vijayan, அதிரை தங்க செல்வராஜன் நன்றி.

  44. மகி Says:

    உங்கள் பதிவுகள் படிக்க, படிக்க ஆவல் தருகிறது.
    தொடருங்கள் பதிவுகளை.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    மகி


  45. என்ன ஆச்சு?நீ…ண்ட நாள் விடுப்பில் சென்று விட்டீர்கள்?அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் தீர்ந்து விட்டனவா?உங்கள் பதிவுகளைப் படித்தும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தும் அவ்வுணவு வகைகளைச் சாப்பிட்டது போல் ஒரு திருப்தி அடைந்து கொண்டிருந்தேன்.பட்டினி போட்டு விட்டீர்களே?

  46. Radhakrishnan Says:

    Hi Jayashree akka,

    I couldn’t find time to do like this. I believe you have amazing time management skill. Your blog was amazing.

    Bye akka

  47. bala Says:

    this site is very useful to bachelors like me.thank u sister

  48. santhi Says:

    நன்றாயிருக்கிறது ஜெயஸ்ரீ.. நானும் தாய்லாந்து சமையல் பற்றி எழுதலாம்னு நினைக்கிறேன்…

    சரி முதலில் சமைக்க பழகிக்கிறேன் உங்களிடமிருந்து…

    உங்கள் பெண் மிக அழகு.. சுத்திப்போடுங்க… ( எப்படி தைரியமா போடுறீங்க நெட்ல..? ) :-))

  49. valaikkulmazhai Says:

    நானும் வலைப்பதிவு ஒன்று உருவாக்கி உள்ளேன் .பார்த்து கருத்து சொல்லுங்களேன்
    valaikkulmazhai.wordpress.com

    வாழ்த்துக்கள்
    – கார்த்தி

  50. Srividya Says:

    Hi Jayashree,

    Y’day as i was searching for krishna sweet’s mysorepa, i landed on your blogsite. I just gave it a try calling for all the Heaven’s help. I must say that the recipe is really one of its kind with very simple ingredients and easy steps for everyone to follow.

    This is the start for this year’s diwali preparations and i am glad it was a hit. Everyone enjoyed and i thank you for the recipe. You are doing a good job!!

  51. Rama Says:

    Yr daughter is looking very pretty, particularly her eyes & round chubby face, sorry to cross the limits.

    Last few days, have been noticing that the types of dishes are missing in the left side; earlier, it was there and so helpful to retrieve. Pls do the needful.


  52. மதுரைச் சொக்கன்: வருகிறேன். குறிப்புகள் தீர்வதில்லை. 🙂

    Radhakrishnan தம்பி: நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.

    மகி, bala, thanks.

    santhi: பெண்ணாவது சமூகத்தை தைரியமா சந்திக்கட்டும்னுதான். 😦 உங்க பதிவுல நிறைய இருக்கு படிக்க.

    கார்த்தி, பதிவுப் பேரே அழகா இருக்கு. பதிவு வித்யாசமா இருக்கு. வாழ்த்துகள்.

    Srividhya: thanks. 🙂 அது சுலபமான ஸ்வீட்தான். ஒரிஜினல் தான் கொஞ்சம் ரிஸ்க். செங்கல்கட்டியாக சாத்தியம் அதிகம்.

    Rama: முதல்ல நீங்க சொன்னது சரியா புரியலை. இப்ப சரிசெஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்.

  53. viji Says:

    ஹாய் ஜெயஸ்ரீ வணக்கம். உங்கள் எல்லா சமயல்களும் நான் விரும்பி படிப்பேன், டிப்ஸ் , உங்கள் வர்னனை எல்லாம் என்னை கவந்தது.
    நன்றி மேலும் மேலும் நிறய்ய எழுதுங்க.
    என்றும் உங்கள் ரசிகை.

    முடிந்தால் உங்களை பற்றி சொல்லுங்க.இங்கு சொல்ல விரும்ப்வில்லை என்றால் என் ஐடிக்கு போடுங்க. நன்றி


  54. வலைப்பதிவர் விருது
    ————————————————

    முதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ

    http://thamizhstudio.com/blogger_award.htm

    வணக்கத்துடன்
    தமிழ் ஸ்டுடியோ.காம்


  55. viji: என்னைப் பத்தி இங்கயோ உங்க ஐடிக்கு தனியாவோ சொல்ற மாதிரி எதுவும் ஸ்பெஷலா இல்லை. இனிமேதான் சொல்லிக்கற மாதிரி ஏதாவது செய்யணும். 🙂

  56. Harry Says:

    Hello sister!!!

    Your writing is amazing. Recently, after “Thalaivar’s” [Who else?!! The one and only Sujatha] writing, I enjoyed your writing. Hilarious, sweet and delicious same as your recipes. Keep writing.

    I’m sure, your family, especially, your huspand has to be appreciated for supporiting your writing.

    Regards

    Hariharan Ganesan.


  57. Hariharan Ganesan: Thanks.

    ///especially, your huspand has to be appreciated for supporiting your writing.///

    சுத்தம்!

    சமையல் நல்லா இருந்தா சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள நமக்கே கோபம் வரமாதிரி 4, 5 தடவை நல்லா இருக்குன்னு மகிழ்ச்சியா சொல்லுவாரு. நல்லா மட்டும் இல்லாம போச்சு, நமக்குக் கொலைவெறியே வரமாதிரி குறைஞ்சது 4 நாளாவது சொல்லிக் காண்பிப்பாங்க. ஆனா ஊக்கம் எல்லாம் சமையல்ல மட்டும்தான். அதை எழுத்துல கொண்டுவர ஊக்கம், ஊக்கமின்மை, தூக்கம், சோம்பேறித்தனம் கையாலாகாத்தனம் எல்லாம் நானே என் சொந்த முயற்சில செய்ற அடாவடிகள். வேற யாருக்கும் பங்கில்லை.

  58. Harry Says:

    எக்கோவ்!!!

    வெயில் காலத்தில நிறைய கீரை சாப்பிடணும்னு “பெரியவுக” சொன்னதா ஞாபகம். முடிஞ்சா எல்லா வகை கீரைகளையும் கொஞ்சம் “தாளிக்க”வும்.

    நன்றி.

  59. vijaya Says:

    I’m a regular reader of your pages. Id like to know the recipe for aloo palak (without onion). Could you post a recipe for that as well!

  60. Harry Says:

    காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

    நன்றாக சமைக்கவும், அழகாக எழுதவும் (ம்ம்…சில பேரை கண்டு பிடிக்க நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கு.) தெரிந்த எங்கள் சகோதரியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. உடன் கண்டு பிடித்து தருபவர்களுக்கு, சகோதரி கையால் சமைத்த உணவு பரிசாக அளிக்கப்படும். (இதை தண்டனையாக எண்ணுபவர்களுக்கு பழைய சாதமும், பச்சை மிளகாயும் உண்டு)

    இப்படிக்கு
    நாக்கு செத்து போய் கிடக்கும் குடும்பத்தினர்

  61. Ganesh Says:

    Sagothari,

    Ungaludaiya blog padithen. Migavum nandraga irukkirathu. Why long leave. Veetula yedhum visheshama? Ungal samayal kurippai vida neenga eluthugira style migavum jollya iruuku.

    Nanri. Niraya Ezhuthungal

  62. Arunachalam Says:

    அன்புள்ள சகோதரி
    தங்கள் வலைப்பதிவுகளை மீண்டும் எப்போது துவங்குவதாக எண்ணம் ? இப்படியே அஞ்சு மாசம் ஆகிப்போச்சுதே ?

  63. arivan Says:

    நல்லா எழுதுறீங்க…

    நல்லா சமைப்பீங்களா?

    ஆலுபோஹா!

  64. jagan Says:

    intha kurupu nantaka erukurathu anaverukum rampa payanpadum nan anudaya website il entha kurupukalai add saya verumpukeran anumathi taravum type saitaitel yathavathu rong eruntal manukavum

  65. uma Says:

    hi jaysri,

    this is the 1st time i am visiting ur blog. Super Super Super. but one small vinappam can u help with the info of hw to start a blog


  66. […] that the cooking items are mostly Tamil Naduish (or atleast south Indian). I like this blog’s About page which is well written with great […]

  67. Sairam R Says:

    I really enjoyed reading the blogs, including the receipes. I also like Sujatha’s stories, articles, Q&As and writings. It is my father who introduced me to Sujatha. And he died in 1993. After Sujatha passed away, I felt the same way again. Came to know about this site from Desikan’s page. Will visit again. Please dont stop writing. I really admired the thoughts about Sujatha and your last Kavithai.


  68. சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த மாதிரி ஒரு வலை படித்ததில்லை. மிக அருமை.
    உங்கள் நடை சிறப்பு.
    I am not good at writing (even writing comments.) . so அவளோ தான் .
    நன்றி . உங்கள் சேவை ( இடியாப்ப சேவையும் சேர்த்து தான் ) தொடர வாழ்த்துக்கள் .

  69. Shivasankari Says:

    Hello,

    Thanks for the site. Romba nalla iruku .. I have been referring to your site for quite sometime now. I am using them as my template 🙂 Tamil la irukradu innum sooper .. Do’s and Dont’s innum arumai. Bookmarked 🙂

    Thanks again 🙂

  70. சாணவாக்கியன் Says:

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் எழுதுவதை நிறுத்தியது ஒரு இழப்பு. வலைப்பூவாக இல்லாமல், தனிப் படைப்புகளாக அவ்வப்போது எழுதலாம். சிந்தியுங்கள்.

  71. Dula Eugene Says:

    Hello Jayashree Madam,
    I am following your blog for a long time. Why aren’t you updating your blog anymore. Sorry, naanum tamizh than. But ipodhaiku font illa 😦 manikavum. Your recipes and other blogs are equally fantastic. Please keep posting.

  72. Aishwarya Says:

    Hi Mam..
    How are you? Really nice write up..Neenga instagram la irukkingla?

பின்னூட்டமொன்றை இடுக