மெட்ரிக் அளவுகள் சுமாராக…

measure1

15 துளிகள் = 1 மிலி
1 சிட்டிகை = 1 மிலி
1/4 டீஸ்பூன் = 1.25 மிலி
1/2 டீஸ்பூன் = 2.5 மிலி
1 டீஸ்பூன் = 5 மிலி
1 டேபிள்ஸ்பூன் = 3 டீஸ்பூன்(15 மிலி)
1/2 கப் = 125 மிலி

measure 2

1 கப் = 250 மிலி
1/2 கப் = 125 மிலி
1/3 கப் = 80 மிலி
1/4 கப் = 60 மிலி
1/8 கப் = 30 மிலி

measure 3

1 டீஸ்பூன்.. 

உப்பு = 6 கிராம்
சர்க்கரை = 4 கிராம்

measure 4

1 கப்..

அரிசி = 200 கிராம்
கோதுமை மாவு = 120 கிராம்
மைதா = 110 கிராம்
ரவை = 180 கிராம்
கடலை மாவு = 150 கிராம்
வெல்லம் = 200 கிராம்
சர்க்கரை = 200 கிராம்

15 பதில்கள் to “Measures”

  1. barthee Says:

    மதிப்புக்குரியவர்களே வணக்கம்.
    உங்கள் பதிவுகள் எனனை மிகவும் கவர்ந்துள்ளன. இவறிறில் இருந்து எனக்கு பிடித்த உணவுகள் சிலவற்றை உங்கள் பெயருடன் எனது பதிவில் இட விரும்புகின்றேன்.
    தயவுசெய்து அனுமதிதரவும்.(ஏற்கனவே சிலவற்றையும் போட்டுவிட்டேன். அப்போது உங்களிடம் அனுமதி பெறும் தகவலை படிக்கத்தறிவிட்டேன்.)
    எனது e-mail barthee@hotmail.com

    உண்மையுடன்
    பார்த்திபன்.


  2. பார்த்திபன்,

    //மதிப்புக்குரியவர்களே வணக்கம்.//

    அடேயப்பா, என்பின்னால இன்னும் ஒரு கூட்டமே இருக்கோன்னு திரும்பிப் பார்த்துட்டேன். நான் ஒரே ஆள்தான். என் பேர் ஜெயஸ்ரீ. வணக்கம். 🙂

    அனுமதிங்கறதெல்லாம் பெரிய வார்த்தை பார்த்திபன். எல்லாரும் உபயோகிக்கத் தானே பொதுவுல வைக்கறதே. சும்மா எனக்கு தெரியப்படுத்தினா போதும். பின்னால நான்தான் அங்கேருந்து எடுத்து இங்க போட்டேன்னு ஆயிடக் கூடாதில்ல, அதுக்குத் தான். என்னோட சில அமெச்சூர் புகைப்படங்களைக் கூட ஆங்கிலப் பதிவுகள்ல பாத்து அதிர்ந்துபோய் தான் இந்த அறிவிப்பு. 🙂

    நீங்க அறிவிப்பை கவனிக்கத் தவறலை. நானே இப்பத்தான் இதெல்லாம் சேர்த்தேன். So feel free.

    உங்க பதிவு எதுன்ன்னு தெரிஞ்சா நாங்களும் படிப்போமே.

  3. barthee Says:

    வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே,

    சும்மா சொல்லக்கூடாது – சமையல் கலையை நீங்கள் எழுதும் லாவன்யம், ஹாஷ்யம் எல்லாம் மிகச்சிறப்பு.
    பல உணவுகளை அருமையாக படம் பிடித்துவேறு போடுகின்றீர்கள், உண்மையில் அந்தப்படங்களைப் பார்க்கும் போது – நிச்சயமாக செய்து சாப்பிடவேண்டும் என்னும் தோற்றப்பாடு உருவாகின்றது.
    அதுமட்டுமில்லை, முடிவில் இதை இதனுடன் சாப்பிடலாம் என்று (மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:) நீங்கள் தருவது கூட அற்புதம் !
    உண்மையை சொல்லப்போனால் கேள்வியே படாத உணவுகளை எல்லாம் உங்கள் பதிவுகளில் கண்டு வியந்திருக்கின்றேன் ! ஆதலினால்த்தான் அவற்றை எனது Websiteல் போட பிரியப்பட்டேன்.
    நீங்கள் இந்த சமையல் குறிப்பைவிட வேறு ஏதாவதும் எழுதுகின்றீர்களா?…
    எனது Website ….
    http://www.barthee.com

    Websiteல் நான் ஒரு கத்துக்குட்டிதான், எப்படி இருக்கு என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
    email: barthee@hotmail.com

    நண்றி ஜெயஸ்ரீ அவர்களே.

    நண்றியுடன்,
    பார்த்திபன்.

  4. amuthabalachandar Says:

    jeyashree… maakolam podum murai solli thaarungalane… thank u


  5. பார்த்திபன், உங்க பதிவு ஏற்கனவே படிச்சிருக்கேன். அது நீங்கதான்னு இனம்காண முடியலை முதல்ல. அதனாலதான் கேட்டேன். உங்க வலைப்பதிவு, சமையல் பகுதில இருக்கற மற்ற ரெசிபி எல்லாமே நல்லா இருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி அதிகமா இருந்தாலும் நன்றிக்கு ரெண்டு சுழி ‘ன்’ போட்டாபோதும். 🙂 நன்றி.

    amuthabalachandar, மாக்கோலம் சந்தேகம் எங்க இங்க வந்தது? பச்சரிசியை இரண்டுமணி நேரம் தண்ணில ஊறவெச்சு, மிக்ஸில ரொம்ப ரொம்ப நைசா அரைச்சு, தேவையான தண்ணீர் சேர்த்து கரைச்சுக்குங்க. ஒரு சிறிய துணியை நனைச்சு, அதுலேருந்து இழுத்து போடணும். நிஜமாவே எப்படின்னு எழுத்துல சொல்லத் தெரியலை. :))) Sorry.


  6. உங்களுடைய சமையற் குறிப்புகள் மிக அருமை.

    techtamil – தமிழூற்று தளத்தில் உங்கள் தளத்தை பார்வையிடலாம்.

    http://techtamil.in/feed/mykitchenpitch


  7. மாஹிர், நன்றி. பதிவை விட திரட்டி அழகு. 🙂

  8. iamnotgod Says:

    என்னால் செய்யக் கூடியது இதுதான், என் மனைவிக்கு இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தலாம்.அதற்கப்புறம்
    ஆண்டவன் விட்ட வழி, சர்வம்
    கிருஷ்ணார்ப்பணம் 🙂

  9. amuthabalachandar Says:

    Thank u jeyashree.. Now only i happened to see ur reply.. so late iam.. ungaludaya maakolam paarthathum intha ? arise aachu..Anyhow thank u ma… I hope u r younger than me.. so thank u da..


  10. iamnotgod: 🙂 கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிகிட்டாலும் அப்புறம் நாமதானே சாப்பிட்டாகணும். ரொம்ப ரிஸ்க் எடுக்கறீங்க.

    amuthabalachandar, “da” is okay for me. எங்க குடும்பத்துல வயசு, gender எல்லாம் பாக்காம ஆளாளுக்கு ‘da’ போட்டுத்தான் பேசிப்போம். “டீ”தான் எனக்கு அலர்ஜி. 🙂

  11. Nagarajan Says:

    Hi,

    Hope you will not mind my writing in English.

    Your site interests me very much – lots of interesting articles, especially recipes.

    I too own and maintain(trying to) a site by the name http://www.indianotebook.com. My mother who is basically from Kerala but has spent some years in Tamilnadu and now living in Kolkata, cooks many items in the traditional way. I have tried to include some of the items in my site. But I am lazy and hence not posting articles frequently. I don’t have an IT background but somehow manage to run this in my free time. Just wanted to share this info with you.

    Cheers and All the Best

  12. jagan Says:

    this information is very sweet this is very useful information so I deside add this maters my websit please permet to me

  13. ranganathan Says:

    மிகவும் அருமையான குறிப்புகள்..நான் புட் கோர்ட் வைத்து நடத்திக்கொண்டுள்ளேன்..குறிப்பாக தஞ்சாவூர் பாரம்பரிய சமையல் மெனுவுக்காக தேடிக்கொண்டிருக்கிறேன்…தங்களின் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கிறது…வாழ்த்துக்கள்
    ரங்கநாதன்…ஸ்ரீ அரங்கன் ஹாஸ்பிடாலிட்டி சர்வீஸ்

  14. N.Rathna Vel Says:

    உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும். பதிவுகள் பற்றி சில ஆக்கப்பூர்வமான யோசனைகள் சொல்லவேண்டும். நன்றி.

    rathnavel.natarajan@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s