தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 3 டேபிள்ஸ்பூன்
காயம் – சிறு துண்டு
செய்முறை:
- மேலே சொல்லியிருக்கும் எல்லாச் சாமான்களையும் வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மிக்ஸியில் மிக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை கெடாது.
புதன், ஏப்ரல் 18, 2007 at 10:13 முப
சீரகம் எதற்கு? ரசம் வாசனை வராதா? மேலும் இந்தப் பொடி செய்யும் முறை புதியதாக இருக்கிறது.
புதன், ஏப்ரல் 18, 2007 at 11:07 பிப
அதெல்லாம் வராது. இல்லாவிட்டாலும் சீரகம் இல்லாமல் எனக்கு சமைக்கவே தெரியாது. முடிந்தவரை எல்லாவற்றிலும் என் அடையாளமாக சேர்த்துவிடுவேன். சீரகம் சேர்த்துவிட்டால், நான் கடைசியில் கையெழுத்துப் போட்டுவிட்டதாக அர்த்தம் என்று எல்லோரும் கிண்டல் செய்வார்கள். 🙂
ஆனால் இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பது நான் மட்டும் செய்வது இல்லை. எல்லோரும் செய்வதுதான்.
திங்கள், திசெம்பர் 24, 2018 at 2:33 பிப
ஜெ, ‘காயம்’னா என்ன??