தேவையான பொருள்கள்:
அவல் – 3 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை – 1 கப்
முந்திரிப் பருப்பு – 1 கப்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
காரப் பொடி – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்
செய்முறை:
- கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)
- முந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..
- அவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
- சிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)
- எல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.
- கடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.
- பொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.
* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.
* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 11:05 பிப
கார மிக்சரில் முக்கியமான ஒரு ஐட்டம் மிஸ்ஸிங்!
வாட்டர்மார்க் போட மறந்து போய்விட்டதே, யாராவது காப்பி அடித்துவைத்தால் என்னாகும் ருசி?!
புதன், நவம்பர் 10, 2010 at 8:33 முப
இருக்கே ரெண்டு படத்துலயும்; உங்க டைரக்டர் பட CG மாதிரி மிக்ஸர்ல மிக்ஸ் ஆகியிருக்கு.. 🙂
புதன், நவம்பர் 10, 2010 at 9:55 முப
உங்கள் சமையல் குறிப்புகளையெல்லாம் காபி கடை (http://geetharachan.blogspot.com/) நடத்தும் என் வீட்டுக்கார அம்மாவை படிக்க சொல்லியிருக்கேன்:)
திங்கள், செப்ரெம்பர் 26, 2011 at 4:30 பிப
Mam ungaloda neraiya receipe try panni pathuten..yellame super. yenga veetla yenakum samaika theriumnu eppa dhan yethukaranga. neenga ennum neraiya receipe sollanum mam. pls continue pannunga.
வெள்ளி, ஓகஸ்ட் 24, 2012 at 2:56 பிப
Dear Jayashree,
I am great fan of your blog. There is no news/update from you. Eargerly waiting for your post