தேவையான பொருள்கள்:
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
செய்முறை:
- கடலை மாவையும் அரிசி மாவையும் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
- ஓமத்தை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஓமநீர், உப்பு, பெருங்காயத் தூளை மாவில் சேர்க்கவும். (பெருங்காயம் பெரிதாக இருந்தால் அதையும் நீரில் கரைத்தே சேர்க்கவும்.)
- டால்டா அல்லது எண்ணெயைச் சூடாக்கி அதனுடன் சேர்த்து, சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, சூடாக்கி, மாவை ஓம அச்சில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சத்தம் அடங்கியதும் எடுக்கவும். (ஓமப்பொடி மெலிதாக இருப்பதால் உடனே வெந்துவிடும். அதிக கவனம் தேவை.)
- தேவைக்குத் தகுந்த அளவில் ஒடித்து உபயோகிக்கலாம்.
* ஓமம் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.
புதன், நவம்பர் 7, 2007 at 6:10 பிப
தீபாவளி வாழ்த்துக்கள்.
வெள்ளி, நவம்பர் 9, 2007 at 1:53 பிப
அப்படியே நான் தீபவளிக்குச் செய்ததைப் போட்டொ எடுத்தாற்போல் இருக்கே? very similar!very good .keep it up.
வியாழன், நவம்பர் 15, 2007 at 9:49 பிப
Alien, thanks.
kalyanakamala, உங்ககிட்ட பாராட்டு வாங்கினதே மகிழ்ச்சி. தீபாவளிக்கு சொன்னமாதிரியே அல்வா கொடுத்தீங்களா எல்லாருக்கும்? 🙂
வெள்ளி, நவம்பர் 16, 2007 at 2:22 பிப
அல்வா, கேசரி ,ஒமப்பொடி எல்லவற்றையு பராட்டினேனே! நல்லா இருந்தா நல்லா இருந்ததுன்னுதானே சொல்ல முடியும். சின்ன வயதினராகத்தான் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. இவ்வளவு முயற்சியுடன் செய்கிறீர்களே அதுவே பாராட்டுக்குரிய விஷயம்தன்.தீபாவளிக்கு அல்வா,ரவாஉருண்டை எல்லாம் போட்டு வாயை அடைத்து விட்டேன்.
சனி, நவம்பர் 17, 2007 at 12:22 பிப
ஆ, கல்யாணக்கமலா, அஞ்சுகழுதை வயசுக்கு அரை வயசு கூடவே ஆயிடுச்சு. என்னை மாதிரி இல்லாம பொண்ணுக்கே சமைக்க சொல்லிக் கொடுக்க யோசிச்சுகிட்டிருக்கேன். ஆனா உங்களைவிடச் சின்னவதானே. அதனால தவறுகள், மாற்றங்கள் இருந்தா அவசியம் அங்கங்க சொல்லுங்க. நன்றி.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:19 பிப
[…] – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 […]
புதன், செப்ரெம்பர் 10, 2014 at 3:03 பிப
[…] – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க ஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 […]