“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு?” என்று நான் கேட்கமுடியவில்லை.
வழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார். 😦
தீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…
கம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.
மகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.
[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]
ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.
[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]
ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)
எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.
* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.
* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.
* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.
* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.
எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 5:53 பிப
//டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்//
முழு நாத்திக வாதம் செய்றவங்களை extremistனு சமீபத்தில சிலர் சொன்னாங்க. 😦
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:49 பிப
நாத்திகத்துல முழுசு, முக்கால் மூணேகால்னெல்லாம் இருக்கா என்ன? Btw, எப்படி இருக்கீங்க? என்ன, இந்தப் பக்கமெல்லாம்? 🙂
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 5:57 பிப
ஏறத்தாழ இதே பேச்சுக்கள் – கம்பரே, தளைதட்டல், அ கு ஞா ஜால்ரா உட்பட.. நானும் இலவசக்கொத்தனாரும் ட்விட்டரில் ரியல்டைமில் பேசிக்கொண்டிருந்தோம்.(@penathal, @elavasam)
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:48 பிப
சுரேஷ், கமல் தவறியது எனக்கு வருத்தமில்லை. சுத்துப்பட்ட ஜால்ரா சத்தங்கள் அவரை அமுக்குவதைத்தான் வெறுக்கிறேன். பாலசந்தரின் படுசெயற்கையான பேச்சிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை. (எந்திரனுக்கு அதைவிட செயற்கையாக ஒரு கடிதமெழுதியிருக்கிறார். அதற்கு இது பரவாயில்லை.)
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 6:00 பிப
இந்த காலத்தில சினிமா பாட்டே பல சமயம் புரியிரதில்லை, இதில வெண்பா யாருக்கும் புரியாது என்கிற (உண்மையான) நம்பிக்கையில் சொல்லியிருப்பார் போல இருக்கு.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:55 பிப
True. அவர் என்னை- நான் எவ்வளவு மோசமானவங்கறதை மறந்திட்டார். 🙂
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 6:12 பிப
கமலின் பேட்டி பெரிய ஏமாற்றம். கமலை பெரிய கவிஞ்சர் என்று நிறுவ பெரிய போராட்டமே நடக்கிறது. அவரைக் கவிஞர் என்று பாராட்டுபவர்கள் எல்லாம் வைரமுத்து, குஞா, வாலி, கருணாநிதி போன்றவர்கள்தான் என்பது ஓர் ஆறுதல். திடீரென்று இன்னொருமுறை ஞானக்கூத்தன் புறப்பட்டுவிடக்கூடாது.
கடவுள் பற்றிப் பேசியதும் அவரது அறச்சீற்றமும் அக்மார்க் செயற்கைத்தனம். கமலும் செயற்கைத்தனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவ்வளவு பேசுபவர், நான் கோவில்கள் மேல்நிலையாக்கம் செய்யப்படுவதைத்தான் எதிர்க்கிறேனே அன்றி, கிராம தெய்வங்கள் என்பதை ஏற்கிறேன் என்று சொல்வாரா?
மேலும் மக்கள் தெய்வம் என்று சொல்வதே ஓர் அரசியல். மற்றதெல்லாம் மக்கள் தெய்வம் இல்லையா? கிராம தெய்வங்கள் எந்த மதத்தால் அதிகம் அழிக்கப்பட்டிருக்கிறது என்று கமல் நினைத்துப் பார்த்தால் (யோசிக்கவேண்டியதில்லை, இதற்கான தெளிவான பதில் அவருக்கு ஏற்கெனவே தெரியும்) உண்மையில் அவர் பேசவேண்டியது ஹிந்து மதத்தின் ‘பெரிய’ கடவுள்களைப் பற்றியா அல்லது மற்ற மதங்களின் ஆக்கிரமிப்புப் பற்றியா என்பது அவருக்கே புரியும். ‘உன்னைப் போல் ஒருவனை’ விட்டுவிட்டால் கமலும் ’அவர்களைப் போல் ஒருவன்’தான்.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:43 பிப
//கமலும் செயற்கைத்தனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.//
ம்ம் வாய்ப்புக்கிடைச்சா வரப்புக்கெல்லாம் பாத்திகட்டிடுவாங்கய்யா. செயற்கைத்தனம் இல்லாத பப்ளிக ஃபிகர் யார் இங்க?
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 6:22 பிப
உங்காளுன்னா யாருன்னு சொல்லுங்க
அப்புறமா I am not surprised ன்னு நான் சொல்றேன்
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:37 பிப
ஆசிப்பு, வாங்க. நானும் பலவருஷமா பட்சணங்களுக்கெல்லாம் குறிப்பு எழுதிகிட்டிருக்கேன். நாலஞ்சு நாய்க்கடி கவிதைகூட போட்டிருக்கேன். அப்பல்லாம் எட்டிக்கூட பார்க்காத நீங்க, இந்தப் பதிவுக்கு மட்டும் வந்து ஆஜரானதுக்கு– I am not surprised.(நீங்க என்ன சொல்றது, நானே அதைச் சொல்லிட்டேன்.)
சாருவையோ ஜெயமோகனையோ திட்டியிருந்தாகூட வந்திருப்பீங்களா, சந்தேகம்தான். 🙂
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 6:31 பிப
ஆஹா, வார்த்தைக்கு வார்த்தை ரிப்பீட் போட்டா பின்னூட்டம் பெரிசாப் போயிடுமேன்னு, ஒரே ஒரு ரிப்பீட்.
இந்த நிகழ்ச்சி பார்க்கக் கொடுத்து வைக்கலை:-)
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:52 பிப
நானும். நல்லவேளை, வீட்டுல பதிவுசெஞ்சு வெச்சிருந்தாங்க. இல்லைன்னா, பசிக்கு சோறுகிடைக்குமா அடுத்தவேளைக்கு?
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:04 பிப
அக்கா
உங்க பதிவைத் தொடர்ந்து நான் போட்ட பதிவு
http://elavasam.blogspot.com/2010/11/blog-post.html
இரா முருகன் இதைப் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் அந்த வெண்பாவின் முதல் வார்த்தை மகதலினா (Mary Magdalene) என்று சொன்னார்.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 9:15 பிப
எதிர்பார்க்காத பெயர்; கோணம். நன்றி கொத்ஸ். திருத்திவிட்டேன்.
வார்த்தைக்கு வார்த்தை அக்கா போடுவதை நீங்களும் திருத்திக்கொள்ளவும். 🙂 இணையப் பெருவெளியின் பெயர்சொல்லி அழைக்கும் சுதந்திரத்தை எதற்காகவும் இழக்கத் தயாரில்லை.
புதன், நவம்பர் 10, 2010 at 8:18 முப
எனக்குத் தெரிந்த பழைய கமல் வெண்தாடியை மட்டும் பிடித்திருந்தார். இப்ப வெண்பா’வையும்
சொல்ல வந்தது கொஞ்சம் கஷ்டம் தான்.
அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குத் தமிழறிவு போதாது:)
வாழ்த்துகள் ஜெய்ஸ்ரீ.
வியாழன், நவம்பர் 11, 2010 at 12:12 பிப
வெண்பா சொல்லவந்ததில் சிந்தனை நன்றாகத்தான் இருக்கிறது. ஐந்து நிமிடம் உட்கார்ந்து சில நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தால் எவரையும்விட சிறப்பாக எழுதக்கூடியவர். ஆனால் அதைச் செய்யாமல் அரைமணிநேரம் அவரைத் தட்டிவிட்டே கும்மிகொட்டும் சுத்துப்பட்ட ஜால்ராக்கள்மேல்தான் என் கோபம் அத்தனையும்.
புதன், நவம்பர் 10, 2010 at 9:13 முப
///எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…///
ஏன் இந்தக் கொலவெறி? 🙂 கூல்.
உங்கள் வேலையை ஏற்கனவே சாரு செய்துமுடித்துவிட்டார்.
http://charuonline.com/blog/?p=1210
புதன், நவம்பர் 10, 2010 at 9:48 முப
NKS, அரசன் அம்மணமாப் போறதை ஊர்ல ஒருத்தராவது தைரியமா எடுத்துச் சொல்லணுமில்ல. எல்லாருக்கும் அறிவுஜீவிப் பட்டம் பறிபோயிடுமோன்னு பயம். சாரு தாங்குவாரு.
வெங்கட் சாமிநாதன் கூட கொஞ்சமா சொல்லியிருக்கார்.
புதன், நவம்பர் 10, 2010 at 9:23 முப
ஜெயஸ்ரீ மேடம்,
அசோகா பதிவிற்கு உங்கள் குறிச்சொற்கள்:
பயத்தம் பருப்பு, பால், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, தீபாவளி, நெய், தஞ்சாவூர்
இந்தப் பதிவிற்கு உங்கள் குறிச்சொற்கள்:
கமல ஹாசன், கமலஹாசன், கமல், கமல்ஹாசன், kamal, kamal hassan, kamalahassan, kamalhassan
:)))))
இதற்குப் பெயர்தான் கமலபிமானமா? கமலபிமானம் என்று என்னால் சொல்லக்கூட முடியவில்லை. நாக்கு சுழட்டுகிறது.
புதன், நவம்பர் 10, 2010 at 9:24 முப
தன்னை ஒரு அறிவுஜீவி என்று காட்டிக்கொள்ள செயற்கைத்தனமாக பேசும் கமலின் பேச்சுகள்/பேட்டிகள் என்றுமே என்னை கவர்ந்தது கிடையாது. கொஞ்ச நேரம் பார்க்க ஆரம்பித்து தாங்கமுடியாமல் வேறு சேனலுக்கு மாறிவிட்டேன்.
அதற்கு எதார்த்தமாக பேசிய ரஜினியின் பேட்டி பெட்டர். ஆனால்… பேட்டி எடுத்த விஜயசாரதிதான் சன் டிவி கலாநிதி மாறன் என்று சொல்லி சொல்லி ஒவாராக கூவி பேட்டியை கெடுத்து விட்டார்.
புதன், நவம்பர் 10, 2010 at 10:42 முப
//அரசன் அம்மணமாப் போறதை ஊர்ல ஒருத்தராவது தைரியமா எடுத்துச் சொல்லணுமில்ல. எல்லாருக்கும் அறிவுஜீவிப் பட்டம் பறிபோயிடுமோன்னு பயம். //
நல்ல கருத்து. அ. முத்துலிங்கத்துக்கும் அதே பயம்தான் போல. சாருவைவிடவும் கேவலமாக என்னவேண்டுமானாலும் பேசமுடியும் போல.
புதன், நவம்பர் 10, 2010 at 11:34 முப
அ.முத்துலிங்கம் சொன்னாதாலேயே அது சரியென்று உங்களுக்குத் தோன்றலாம். எனக்கு அப்படியில்லை. முற்றுப்புள்ளி.
சாருவைவிடவும் கேவலமாக என்ன பேசிவிட்டேன் என்று சொல்லவும். ஒருவேளை உங்களுக்குப் புரிதல் குறை இருக்குமென்றால் சொல்ல நினைக்கிறேன்– “அரசன்…” தொடர் ஒரு தொன்மையான கதையை இங்கே உவமையாக எடுத்தாண்டது. முற்றுப்புள்ளி.
ஒரு படத்தை, ஹீரோவை ரசிக்கலாம். கொண்டாடலாம். நானும் எந்திரனுக்கு அதையே செய்கிறேன். ஆனால் அதன் அத்தனை அபத்தங்களையும் கண்டுகொள்ளாமல் இப்போது நடந்துகொண்டிருப்பது அருவருப்பானது.
புதன், நவம்பர் 10, 2010 at 3:07 பிப
இன்னா பேசுறீகன்னு சொல்லிட்டு பேசுனா தேவலை ஒண்ணும் புரியலை.
வியாழன், நவம்பர் 11, 2010 at 8:24 முப
முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி என்று விசு போல எழுதியிருக்கிறீர்கள். டாட்டின் ரேஞ்ச்சே வேறு.
அரசன் அம்மணாப் போன கதையை உவமையாக எதற்குச் சொன்னீர்கள்? எந்திரனை எல்லாரும் பாராட்டுகிறார்கள், அதன் அபத்தங்களை யாரும் சொல்லவில்லை என்றுதானே? வலையில் தேடுங்கள், எந்திரனை போட்டு சாத்திய பதிவுகள் வரிசையாக நிற்கும்.
அ.முத்துலிங்கம் சொல்லிவிட்டால் எனக்கு சரி என்று நீங்களாக நினைத்துக்கொண்டு இருப்பது வளைப்பு அரசியல். நடக்கட்டும்.
சாரு இப்படித்தான் ஒரு கருத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார். எந்திரனை எதிர்த்து எழுதமுடியாது என்று. அபத்தம். இதே அபத்தத்தை நீங்களும் சொல்கிறீர்கள், வேறு ஒரு பார்வையில். அதன் அபத்தத்தை யாரும் சொல்லாமல், அரசனை பாராட்டுவதைப் போல பாராட்டுகிறீர்கள் என்று. புள்ளிவிவரப் படி இது தவறு. இது ஒரு பக்கம்.
அரசனைப் பாராட்டியவர்கள் எல்லாம் அம்மணத்தை அறிந்து, அதனை மறைத்துக்கொண்டு பாராட்டினார்கள். எந்திரனைப் பாராட்டியவர்களையும் அதேபோல நீங்கள் ஒப்பிடுவதைத்தான் நான் கேள்விகேட்டேன். அது எப்படி அவர்கள் எல்லாரும் எந்திரனின் அபத்தத்தைத் தெரிந்துகொண்டு, ரஜினி என்பதால் பாராட்டினார்கள் என்று முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே பிடித்துப் பாராட்டியிருக்கலாம் என்பதையெல்லாம் ஏன் நீங்கள் சாய்ஸில் விட்டுவிட்டீர்கள் எனத் தெரியவில்லை.
மந்த்ராலயம் பற்றியும், எந்திரன் பற்றியும் நீங்கள் எழுதலாம். தசாவாதாரத்தின் அபத்தங்கள் மூடிக்கொள்ளும்போது, எந்திரனின் அபத்தங்கள் திறந்துகொள்வதும்கூட ஒருவரின் பார்வை என்கிற அளவில் சரியே என்றுதான் சொல்வேன். மாறாக அது அரசனைப் பாராட்டுவது அல்ல.
வியாழன், நவம்பர் 11, 2010 at 11:29 முப
அநீ, அது எனக்கே புரியலை. ஆனாலும் உங்களுக்குக் கூட புரியாம எழுதமுடிஞ்சதை இன்னொரு ஸ்வீட் எடுத்துக் கொண்டாடனும்.
வியாழன், நவம்பர் 11, 2010 at 12:02 பிப
///வலையில் தேடுங்கள், எந்திரனை போட்டு சாத்திய பதிவுகள் வரிசையாக நிற்கும்.///
எந்திரன் அபத்தங்களை எல்லாம் மிஞ்சிய பெரிய அபத்தம் இதுதான்– இணையத்தில் தேடிப் பார்க்ககச் சொல்வது. இணையத்தில் எத்தனை பேர் எழுதினார்கள் என்பதைவிட அதை எத்தனை ஆயிரம் பேர் மட்டும் படித்தார்கள்? [அந்த டைனாசரை பத்து எறும்பைவிட்டுக் கடிக்கவிட்டோமில்ல. வேறு உவமானம் சொல்லலாம்; ஆனால் ஆபாசம் என்று திசைதிருப்பப்படும். :)]
லட்சம், கோடிக்கணக்கான பேரைப் போய்ச்சேரும் பொது ஊடங்களும் அச்சு இதழ்களும் சினிமா, அரசியல், பொதுவுலப் பிரபலங்களும் எத்தனைபேர் என்ன மாற்றுக் கருத்து கூறியிருக்கிறார்கள்?
///உண்மையிலேயே பிடித்துப் பாராட்டியிருக்கலாம் என்பதையெல்லாம் ஏன் நீங்கள் சாய்ஸில் விட்டுவிட்டீர்கள் எனத் தெரியவில்லை.///
நான் மேலேசொன்ன அத்தனைபேருக்கும் படம் எந்த உறுத்தலுமமில்லாமல் பிடித்திருப்பது உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.
புதன், நவம்பர் 10, 2010 at 12:26 பிப
அந்தாளுக்கு ஒண்ணுரெண்டு வாக்கண்ட் எக்ஸ்பிரஷன் உண்டு. அதை வைச்சே உலக நாயவன் சாரி நாயகன் (நாய்ங்க நல்ல விலங்குகள் கமலஹாசன் இல்லை) அப்படீன்னு பில்டப் கொடுத்தாரு. அதென்ன மேல்நிலையாக்கம் கீழ்நிலையாக்கம்? உலகம் தெரியாம புருடா விட்டே பொழைக்கிற ஆளு கமல். இந்தாளு படத்துல வர்ற ஈவ்டீஸிங் பாட்டுகக்ளால சமுதாயம் கெட்டதைவிட ஒண்ணும் எங்க ஹிந்து மதத்தால உலகம் கெட்டுடல்லை. தனி வாழ்க்கையும் ஒழுங்கா நடத்த முடியாம பொதுவாழ்க்கையிலும் நாத்தமடிக்கிற கேரக்டர் இந்தாளு. இந்தாளுக்கெல்லாம் பதில் ஏகாட்சரம் சாப்பிட்டாடா வளர்ந்தேங்கிறதுதான் (ரொம்ப ஹார்ஷ்னு தோணிச்சுன்னா பப்ளிஷாண்டாம். ஆனா ரொம்ப மென்மையாத்தான் எழுதியிருக்கேன்)
புதன், நவம்பர் 10, 2010 at 4:49 பிப
அநீஜி, நீங்க கமலை இவ்ளோ எல்லாம் திட்ட நான் அனுமதிக்க முடியாது. மந்திராலயம் பயணம் போகணும்னு தோணலை. எந்திரன் படத்துக்கு விமர்சனம் எழுதணும்னுகூட நினைக்கலை. ஆனா அதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லுங்க 🙂
புதன், நவம்பர் 10, 2010 at 7:48 பிப
ஜெயஸ்ரீ,
பின்னூட்டங்கள் எல்லாம் பதிவை இன்னும் அடுத்த நிலைக்குக் கொண்டு போகின்றன பாலிஷ்டு மறுமொழியின் விளக்கம்: பின்னூட்டங்களில் பதிவை விட வம்பு;-)
அரவிந்தனின் பின்னூட்டத்துக்கு //அதென்ன மேல்நிலையாக்கம் கீழ்நிலையாக்கம்? // என் மறுமொழி: கமலின் பொது மற்றும் தனி வாழ்க்கை. இதுக்கு விளக்கம் கொடுத்தா, ஜெயஸ்ரீயின் எந்திரன் விமர்சனப் பதிவு சர்வ நிச்சயம்;-)
இப்படிக்கு,
கமலபிமானி.
புதன், நவம்பர் 10, 2010 at 9:28 பிப
Where is my PATHIL:)
புதன், நவம்பர் 10, 2010 at 11:38 பிப
அக்கா!
மொக்கையான இந்த போஸ்ட் போட்டதுக்கு பதிலா கார மிக்சர்-3 போட்டு இருந்தா உபயோகமா இருந்து இருக்கும்.
நன்றி.
வியாழன், நவம்பர் 11, 2010 at 11:36 முப
கமலபிமானிகள் கலாபிமானிகள் என்று ஒரு தோற்றம் இந்த லோகத்தில் உண்டு. அதே மயக்கத்தில் நானும் கட்டுண்டவன் தான். அவருடைய மொக்கையான நாத்திகவாதம், புத்திஜீவித்தனமான பேச்சுக்கள், கயாஸ் தியரி என்று பல ஜல்லிகள் இருந்தாலும் நடிப்பில் கொஞ்சம் கவர்ச்சி இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. வழக்கம் போல் இழுத்து இழுத்து கொஞ்சம் உலகவிஷயங்கள் எல்லாவற்றையும் பேசினாலும் கல்லும் சொல்லாதோ கதை என்று அவருக்கு வெண்பா ஜல்லியடிக்க உதவியது சமய இலக்கியங்கள் தான் என்றென்னும் போது தலைவர் அதை எவ்வளவு உருப் போட்டிருப்பார் என்று தெரிகிறது…
எனக்கு எளக்கியம் தெரியாது… தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
இந்தக் கமெண்ட்டின் முதல் வார்த்தை எனக்கும் பொருந்தும். 😉
வியாழன், நவம்பர் 11, 2010 at 12:39 பிப
கமலை சரியாய் புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு தேவை. குறை சொல்ல ஒன்றும் தேவையில்லை. மதமே வேண்டாம் என்பது அவரின் முடிவு. உங்களால் முடிந்தால் அதை பின்பற்றலாம் அல்லது விட்டுவிடலாம். ஆத்திக்கவாதியாக நீங்கள் இருப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் செய்வதும் சொல்வதும் எல்லாம், மதம் என்ற பெயரை பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர்களை பற்றி மட்டும் தான். அவரின் எல்லா படங்களிலும் ஆன்மிகத்தை பின்பற்றும் வேறு சில நல்ல கதாபாத்திரங்களும் ஒரு ஓரத்தில் வந்துகொண்டே இருக்கும். அதே சமயம் பாரபட்சம் இல்லாமல் ellaa மதங்களையும் குறை சொல்லுவார். நாம் தான் உற்றுக்கேட்பதில்லை
தசாவதாரத்தில் நாகேஷ் எல்லாரையும் காப்பாத்தினது அல்லா தான் என்று சொல்லுவார். “முட்டாளே எல்லாரையும் காப்பாத்தும் திறன் கொண்ட அல்லா ஏன் இத்தனை மக்களை காப்பாத்தலை, ஒரு வேளை குல்லா போட்டவனை மட்டும்தான் உங்க அல்லா காப்பாத்துவாரா” ன்னு வசனம் வைத்திருந்தால் ஒரு மத கலவரமே நடந்திருக்கும். கமல் மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பார். ஆனால் அவர் புத்திசாலி. எனவே சிம்பிளாக, நாகேஷ் வசனம் முடிந்தபின்னர், அவரின் நம்பிக்கை முட்டாள்தனமானது என்று காட்ட மேலே, பல்ராம் நாய்டு பரந்துகொண்டிருப்பார்(நிஜத்தில் அவரின் டார்ச்சர் தான் எல்லா குல்லாக்களையும் காத்தது)
அதே போல், ஹேராம் முதல் பாடல் அவரே எழுதியது, அதில் ஒரு வரி – மறுமுறை வருவதில் சொல்லி மாயின்தவர் வந்ததே இல்லை. யாரை சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள கிறிஸ்துமஸ் வரை காத்திருக்க தேவையில்லை.
இந்த சிறுதெய்வங்கள் விஷயத்தில் ஒரு கோணம் மறந்துவிட்டீர்கள். கடவுள் தான் உண்டா இல்லையா என்று கமலுக்கு இன்று வரை குழப்பம்( ஆமாம் குழப்பம்தான்! நம்புங்கள். இல்லை என்று தீர்மானமாக அவராலும் சொல்ல முடிய வில்லை). ஆனால் சிறு தெய்வங்கள் என்பது யார்?? பெருமாளோ சிவனோ அல்ல. அதே பேட்டியில் சொன்னாரே, கைப்பிடி மண்(பஞ்சபூதங்களில் ஒன்று) அல்லது ஆப்பன் ஆத்தா, முப்பாத்தா, விருமாண்டி முனியாண்டி என்று ஒருகாலத்தில் வாழ்த்தாக சொல்பவர்கள். அவர்கள் யாரும் சிவன் விஷ்ணு போல மலையை தூக்குவது கடலை குடைவது என்று supernatural செயல்கள் செய்தவர்கள் அல்ல. அதிகபட்சம், மருதநாயகம் போல். சண்டை போட்டு செத்தவர்கள், அல்லது காவல் தெய்வங்கள். அவ்வளவு தான். விருமாண்டி பாடல் “கருமாத்தூர் காட்டுக்குள்ளே” பாடலை கேட்டால் இந்த சிறுதெய்வம் பற்றிய கமலின் defenition உங்களுக்கு புரியவரும்.
வியாழன், நவம்பர் 11, 2010 at 12:52 பிப
போலி அறிவுஜீவி ஆக இருப்பது தான் மன்னிக்க முடியாத ஒரே குற்றம். போலி வசூல் சாதனை எல்லாம் எப்பவுமே கண்டுக்கொள்ள மாட்டாங்க.
நம்மாளுக எப்பவுமே மேலோட்டமாக தான் பார்பாங்க. யதார்த்தமா அடக்கமா பேட்டி கொடுத்துட்டு பின்னாடி சில கல்மிஷ வேலைகள் எல்லாம் செஞ்சா தப்பில்லை. ஆனா மேடைல நல்லவன் வேஷம் போடுவது ரொம்ப முக்கியம். அங்கன வந்து திமிரா கருப்பு டிரஸ்சு எல்லாம் போட்டுக்கிட்டு பகுத்தறிவு பேசுறதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். பெரிய கடவுள்களுக்கு முடிஞ்சளவு ஜைன்ஜப் தாடனும். ஆபத்தான் பாராட்டுவோம்.
அதிலும் அந்த கருப்பு டிரஸ்சு – என்னா திமிரு இருந்தா போட்டிருப்பாரு?!? அதுவும் நம்ம இந்தியா, சாரி சாரி, நம்ம இந்து தேசத்துல, அதுவும் தீபாவளிக்கு!
வெள்ளி, நவம்பர் 12, 2010 at 11:50 முப
என்னுடைய ஓரே கேள்வி … நாதிக்கம் என்றால் இந்து தெய்வம் சாடுவது மட்டும் தானா?
ஞாயிறு, நவம்பர் 14, 2010 at 4:20 முப
kamal kavignar endru kalaignar sollraar, adukku pathilukku kamal kalaignar-i tamil nattu socratees nu sollrar.Tirukkural solladatha-ya karunanithi sollraar,enna kodumada ithu
திங்கள், நவம்பர் 15, 2010 at 3:55 பிப
எல்லாம் சரி, ஒரு “பரிபூரண” நாத்திகவாதிய பேட்டி கண்டு தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சியாகப் போட்டதன் மர்மம் என்ன?
புதன், நவம்பர் 17, 2010 at 11:46 முப
ungalukku oru thani manidhanai saaduvadharkku evlo urimai irukko antha alavirkku Kamalukkum avarudaiya karuthu solla urimai irukku..what the hell you did in your life except writing receipes and scribbled writings? You people do not have sense to understand all his comments…when socrates spoke his mind, people did the same..please grow up
புதன், நவம்பர் 17, 2010 at 10:06 பிப
கிருத்திகா,
//Kamalukkum avarudaiya karuthu solla urimai irukku..//
அதை அவர் அந்தரங்கத்திலே சொல்லிட்டுப் போகட்டும்ணு தான் சொல்றோம்.
என்னது?? சாக்ரடீசா??
நல்ல ஜோக்.
ஹெம்லாக் கிற்கு எல்லாம் இங்க ரிசிபி கிடைக்காது.தயவுசெய்து நீங்களே கமலுக்கு வாங்கிக் குடுத்துருங்க.(விளமபரத்திற்காகவாவது அதைக் கண்டிப்பாக் குடிப்பாரு) தமிழ்நாட்டின் ஒரு தலைமுறையைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்குக் கிட்டும்.
சனி, நவம்பர் 20, 2010 at 2:43 பிப
டாக்டர், kiruthika மறுமொழியை வேர்ட்பிரஸ் ஸ்பேம்ல போட்டுவெச்சிருந்தது. நான் தேடிப்பிடிச்சு உள்ள அனுமதிச்ச காரணம்- “மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டால..” ரேஞ்சுக்கு நான் கமலைத் திட்டி எழுதின பதிவுக்கே இவ்ளோ பாராட்டியிருக்காங்களேன்னுதான். ‘என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்க’ 🙂
வியாழன், நவம்பர் 18, 2010 at 10:22 முப
Kiruthika,
//what the hell you did in your life except writing receipes and scribbled writings? You people do not have sense to understand all his comments…when socrates spoke his mind, people did the same..please grow up//
ஜெயஸ்ரீயை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு கமென்ட் பண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
அதனால் உங்கள் பின்னூட்டத்தை ஒரு 🙂 யோடு கடந்து சொல்கிறேன்.
சனி, நவம்பர் 20, 2010 at 2:45 பிப
priya, நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க, அந்தச் சமையல்குறிப்புகூட என்னோட சொந்த சரக்கு இல்லை; அம்மா எழுதிவெச்சதுன்னு. பாவம், என்னைப் பத்தி ஓவரா நினைச்சிருக்காங்க.
வியாழன், நவம்பர் 18, 2010 at 11:37 பிப
what the hell you did in your life except writing receipes and scribbled writings?
கிருத்திகா,
உங்களுக்கு வெநநீராவது போட தெரியுமா?
ஜெயஸ்ரீ எழுதுவதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது எழுத தெரியுமா?
தமிழில் எழுத தெரியாமல் தங்லிஷில் எழுதும் நீங்களா ஜெயஸ்ரீயைப்பற்றி பேசுவது? சிரிப்புதான் வருகிறது..
அப்புறம் என்ன சொன்னீங்க ?
SOCRATES ஆ?கமல் ஆ?
ஹஹஹா
before telling others,YOU GROW UP FIRST
வியாழன், திசெம்பர் 9, 2010 at 6:07 பிப
Hello..thanks for your comments..
வியாழன், திசெம்பர் 9, 2010 at 6:23 பிப
I need not argue with you guys..and There is no need to know about Jayasree..Thanglish or english..it was just the way of communication..I have no intention to hurt anyone here like the way article conveyed the message.Hello..I need not prove myself just for the sake of your comment..By the way,Do you the preparation of hot water? oh..Gosh..sorry ..i really do not know..
வெள்ளி, திசெம்பர் 10, 2010 at 11:45 முப
Kiruthika, லூஸ்ல விடுங்க. வெந்நீர் போட்டுப்போட்டுதான் என்னத்தக் கண்டோம்?
இங்க மன்மத அம்பு கவிஞர் கமலை அரவிந்தன்ஜி நீலகண்டன்ஜி தொடங்கி எல்லாரும் வரிசைகட்டித் திட்றாங்க. 😦
http://www.tamilhindu.com/2010/12/ant-hindu-vulgar-poem-what-should-we-do/
படிச்சீங்களா? 😉
வெள்ளி, திசெம்பர் 10, 2010 at 11:00 பிப
//Kiruthika, லூஸ்ல விடுங்க. வெந்நீர் போட்டுப்போட்டுதான் என்னத்தக் கண்டோம்? //
You are totally mistaken Jayashree.பெண்கள் சமைப்பதற்கே என்ற கோட்பாடுடைய கற்கால ஆணல்ல நான்.சமையல் அறையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் … எனும் பாரதி வழிவந்தவன்
கிருத்திகாவிற்கு பதில் கடோத்கஜன் என்ற பெயரில் இதே பின்னூட்டத்தை யாரேனும் இட்டிருந்தாலும் என் கேள்வி மாறியிருக்காது!
இது பாலிற்கு அப்பாற்பட்ட கேள்வி!
சனி, திசெம்பர் 11, 2010 at 11:26 முப
Ganpat, நான் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை. அது kruthikaவிற்காக நகைச்சுவையாகச் சொன்னது.
சனி, நவம்பர் 20, 2010 at 2:52 பிப
kiruthika, grow up எல்லாம் ஆனா இப்படி ஜாலி பதிவெல்லாம் எழுதமுடியுமா? அப்றம் அடைக்கு அரைக்கக் கூட அறிவுபூர்வமா சிந்திக்கணும். அப்படி எல்லாம் சிந்திச்சா நெத்தில சுருக்கம் சுருக்கமா கோடு வேற விழுமாம். நான் இப்படியே இருந்துட்டுப் போறேனே, ப்ளீஸ். 🙂 BTW, நீங்க கமலோட அதிதீவிர ரசிகையா இருக்கறதுல மகிழ்ச்சி. பாவம் கமல்.
சனி, நவம்பர் 20, 2010 at 10:41 முப
http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html
சனி, நவம்பர் 20, 2010 at 2:53 பிப
சினிமால இதெல்லாம் சகஜமப்பா! 🙂
சனி, நவம்பர் 20, 2010 at 3:29 பிப
கிருத்திகா,
மேட்டர் என்னன்னா….இவங்க கிட்ட வந்து கமல் சப்போர்ட் பண்றீங்களே…அது வந்து இந்த திருப்பதில போய், பூந்தி லட்டை promote பண்ற மாதிரிங்க…
கமலை அவங்க திட்டலாம். யாரும் கேக்க கூடாது. ஆனா கமலை யாரும் திட்ட கூடாது. அவங்க கேப்பாங்க. புரிஞ்சதா…? கொஞ்சம் வரலாறு படிச்சுட்டு வந்தீங்கன்னா உங்க கமெண்ட்டை பாத்து நீங்களே சிரிப்பீங்க.
செவ்வாய், நவம்பர் 23, 2010 at 7:17 முப
priyakathiravan, ரொம்ப சரி. 🙂
வரலாறு: இட்லிவடை கமலை திட்டி எழுதிய பதிவுகளைவிட ஜெயஸ்ரீக்கு பயந்து நீக்கிய பதிவுகள் அதிகம்.
வெள்ளி, திசெம்பர் 17, 2010 at 10:48 பிப
பதிவை விட மறுமொழிகள் are interesting and engaging 🙂 கமல் கொஞ்சம் eccentric, அவரது அசாத்திய திறமைக்காக அதை மன்னிக்கத் தோணுகிறது, அஷ்டே!
எ.அ.பாலா
புதன், பிப்ரவரி 2, 2011 at 4:53 பிப
இன்றைக்குத்தான் அந்த காபி வித் அனு பாக்க முடிஞ்சுது. அவரு ஒரு சகாப்தம்தான். எல்லாருக்குமே தனி கருத்து இருக்கதான் செய்யுது. நம்ம பிராப்ளமே அது நம்ம க்ருத்தோட ஏன் ஒத்து போகலங்கற ஈகோதான்.
@கிருத்திகா. கிட்ட தட்ட நானும் உங்களை மாதிரிதான். என்ன உங்களுக்கு ஜெயஸ்ரீ மேடம் பத்தி தெரியாது. எனக்கு கொஞ்சம் தெரியும். அதனால அடக்கி வாசிக்கிறேன். பட். சேம் ஃபீல் தான். டோண்ட் ஓரி…
வெள்ளி, ஜூன் 8, 2012 at 11:05 பிப
ஹிந்து மதத்தை மட்டும் இழிவு படுத்தும் கமலை வைத்துப்
படமெடுக்க யாரும் தயாரில்லை.கடவுளை நம்பும் ரஜினியோ
எட்டாத உயரத்தில் இருக்கிறார்.இதைப் பற்றி தொ பரமசிவன்
போன்றவர்கள் ஆய்வு செய்தால் நல்லது.