மைசூர்பா செய்ததன் பரிகாரமாக கால் ஸ்பூன் நெய்யில் தேங்காய் பர்பி.
தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
கோவா – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
ஏலப்பொடி
முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 4
குங்குமப்பூ
செய்முறை:
- தேங்காயை அதன் அடிப்பாகம்(தோல்) இல்லாமல் வெண்மையான பாகத்தை மட்டும் துருவிக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். (பொதுவாக துருவிய தேங்காயை அப்படியே பர்பி செய்தால் சாப்பிடும் போது முதலில் சர்க்கரை வாயில் கரைந்து, கடைசியில் தேங்காயைத் தனியாக சக்கையாய் சாப்பிட வேண்டியிருக்கும். அரைத்தால் அந்தப் பிரச்சினை இல்லை.)
- அடுப்பில் வாணலியில், அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
- கிளறக் கிளற இறுகி வர ஆரம்பிக்கும்போது கோவா சேர்த்து மேலும் கிளறவும். பர்பி, மிகவும் தூளாக கரகரப்பாக இல்லாமல் இருப்பதற்கு இப்படி சிறிது கோவா சேர்த்தால் மென்மையாக வரும்.
- வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி அழுத்தாமல் பரத்தவும்.
- மிகச் சிறிய துண்டுகளாக முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை நறுக்கி, குங்குமப்பூவும் சேர்த்து மேலே தூவி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடலாம்.
* விரும்பினால் திருமணம், இதர விசேஷங்களுக்கு விதவிதமான கலர் சேர்த்துக் கொள்ளலாம். விதவிதமான டிசைன்களிலும் வெட்டலாம். எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்.
புதன், நவம்பர் 7, 2007 at 4:29 பிப
ஹாப்பி தீவாளி!
சனி, நவம்பர் 10, 2007 at 3:52 முப
ஊரில் தீபாவளிக்குத் தேங்காய் பர்பி செய்ததாகச் சொன்னார்கள்..அந்த ஏக்கத்தில் 😦 உங்க பதிவில் atleast recipeஆச்சும் ஏதும் இருந்தா பார்க்கலாமேன்னு வந்தேன்..நீங்களும் இப்ப தான் இதை எழுதி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி. அருமையான சமையல் பதிவைத் துவக்கி தொடர்ந்து ஈடுபாட்டுடன் எழுதி வருவதற்குப் பாராட்டுக்கள்.
சனி, நவம்பர் 10, 2007 at 6:06 முப
கோவான்னா என்ன? பால்கோவாவா? இல்லை வெண்ணையா?
-முதல் அடியெடுத்து தேங்காயை அரைத்துக் கொண்டே பதிவு செய்யும் கேள்வி..
எச்சரிக்கை: வெட்டியாகப் படித்துக் கொண்டே போகாமல் சமைக்கத் தொடங்கிவிட்டதால் இதே போன்ற கே.கே (கேனத்தனமான கேள்விகள்) அடிக்கடி எதிர்பார்க்கலாம் 😉
சனி, நவம்பர் 10, 2007 at 6:38 முப
ஆறுவதற்கு சுமாராக எவ்வளவு நேரமாகும்? இந்த முறை நானே கண்டுபிடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்.. ஆனா அடுத்த தபா அத்தையும் சேர்த்து எழுதிடுங்க 😀
சனி, நவம்பர் 10, 2007 at 9:35 பிப
ம்.. செய்தேன்.. எல்லாம் நல்லாத் தான் வந்தது. அழகா பர்பி டேஸ்ட்டுக்கு வருது.. ஆனா கட்டியாக மாட்டேங்குது.. திரட்டுப்பால் மாதிரி ஒட்டிகிட்டிருக்கு.. இன்னும் கொஞ்சம் கிளறி இருக்கணுமா? இல்லை இன்னும் கொஞ்சம் முன்னமே இறக்கி இருக்கணுமா?
வியாழன், நவம்பர் 15, 2007 at 10:06 பிப
பொன்ஸ், சமையல் கலைக்கூடத்துக்கு நல்வரவு. என்னைப் பார்க்கும்போது நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க.
கோவான்னா, பால்கோவாதான். ஆனா சர்க்கரை சேர்க்காதது. நாமே மைக்ரோவேவ்ல சுலபமா செஞ்சுக்கலாம். அல்லது கடைகள்லயும் வாங்கலாம்.
தேங்காய் பர்பி(அல்லது எந்த கேக்/பர்பியுமே) சூடா இருக்கும்போது கத்தியால இழுத்தா இழுபடும். லேசா ஆறினா (இந்திய தட்பவெப்பத்துக்கு ஒரு 10 நிமிஷம் கழிச்சு), சுலபமா கோடு போட வரும். 20 நிமிஷம் கழிச்சு, சுத்தமா ஆறி, வில்லை தானா கழண்டு வரும்.
ஆறினாலும் ஒட்டிகிட்டிருந்தா,
1)சர்க்கரை அதிகமாகி இருக்கலாம்.
2) இன்னும் கொஞ்சம் கிளறவேண்டி இருக்கலாம்.
3) கோவாவில் கொழுப்பு(நெய்) அதிகமாகி இருக்கலாம். மைசூர்பாகோ, பர்பியோ, நெய் அதிகம் சேர்ந்தா, அது கேக் மாதிரி ஆயிடும்.:(
//எல்லாம் நல்லாத் தான் வந்தது. அழகா பர்பி டேஸ்ட்டுக்கு வருது// இதுக்கு பாராட்டுகள். பயப்படாம தொடர்ந்து கலக்குங்க.
வெள்ளி, நவம்பர் 16, 2007 at 10:42 முப
மோகன்தாஸ் தம்பி, ரவிசங்கர் நன்றி.
//அருமையான சமையல் பதிவைத் துவக்கி தொடர்ந்து ஈடுபாட்டுடன்..//
ஹி.. ஹி.. கண் போடாதீங்க. அப்பப்ப அதுவே மக்கர் பண்ணுது. 🙂
வெள்ளி, நவம்பர் 16, 2007 at 8:02 பிப
ஜெயஸ்ரீ,
Nothing important. Just felt like asking.
வாழை இலை ஏன் நிரம்பவில்லை? (in the gif image)
இன்னும் திருமாறுதல் முடியலையா?
அல்லது, மிச்சம் விட்டு போனவைகள்? 🙂
During Marghazi, do they chant the whole Tiruppavai (30) in Kovil or one per day for 30 days? If it is latter, the morning pooja becomes very short isn’t it? Is it a norm not to chant all the 30 in a day during Margazhi?
best,
Krishna
best,
Krishna
வெள்ளி, நவம்பர் 16, 2007 at 11:00 பிப
ஆகா.. இனிப்புகளில் எனக்கு ரொம்ப பிடித்தது பால்கோவா தான்.. conventionalலா கிளறத் தெரியும், ஆனா மைக்ரோவேவில் எப்படி செய்வது?
என்னோட பர்பியில் bug சக்கரை தான் போலிருக்கு.. இங்க சக்கரை மாவு கிடைச்சதுன்னு வாங்கிட்டேன், அளவு அதிகமாகிட்டது போல…
சனி, நவம்பர் 17, 2007 at 12:23 பிப
பொன்ஸ்,
சர்க்கரைப் பவுடர் குறித்து சொன்ன தகவலுக்கு நன்றி. இந்த மாதிரி குறிப்புகள் தான் எல்லார்கிட்டயும் எதிர்ப்பார்க்கறேன். இந்தச் சந்தேகத்தை uma kumar முந்தி கேட்டிருந்தாங்க.
வழக்கமா செய்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இங்க.
மைக்ரோவேவ்ல பால்கோவா செய்ய கண்டென்ஸ்ட் மில்க் ஒரு டின், தயிர் அரை கப் கலந்து ‘ஹை’ல 5 நிமிஷம். வெளில எடுத்து கலக்க வேண்டியது. திரும்ப மைக்ரோவேவ் 5 நிமிஷம். வெளில எடுத்து கிளறவேண்டியது.. திரும்ப.. 15 அல்லது 20 நிமிஷத்துக்குள்ள கட்டாயம் ஆயிடும்.
பால்பவுடர் சேர்த்தா இன்னும் சுருக்க இங்க.
இதை எல்லாம் அப்படியே சாப்பிடலாம். ஆனா தேங்காய் பர்பி மாதிரி பிற உணவுகளுக்குச் சேர்க்க கோவா மட்டும் தேவைன்னா, சர்க்கரை சேர்க்காத கண்டென்ஸ்ட் மில்க் தேவை. அது மட்டும் தான் கவனிக்கணும்.
சனி, நவம்பர் 17, 2007 at 12:28 பிப
krishnan,
///வாழை இலை ஏன் நிரம்பவில்லை?///
டாக்டர் முழு இலைல அணைகட்டி அடிக்காம, கொஞ்சம் கொஞ்சமா 5, 6 தடவையா சாப்பிடச் சொல்லியிருக்காரு. அதான் அப்படி. 🙂
///During Marghazi, do they chant the whole Tiruppavai (30) in Kovil or one per day for 30 days? If it is latter, the morning pooja becomes very short isn’t it?///
மார்கழி மாதம் நான் ஏற்கனவே மற்ற நாள்களுக்குச் சொல்லியிருப்பது போல் விஸ்வரூபம், யானை, பசுமாடு, குதிரை, ரொட்டி வெண்ணை சமாசாரம் எதுவும் கிடையாது. காலையில் 5 மணிக்கே கோயில் திறந்து தரிசனம். அதற்கு திருப்பள்ளியெழுச்சி என்று பெயர். பொங்கல் நிவேதனம். அரையர் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவையிலிருந்து அனைத்துப் பாடல்களையுமே சொல்வார். நாங்கள் எல்லாம் திருப்பாவை சொல்வதும் அந்த முறையில்தான் இருக்கும். ஒவ்வொரு பாடலின் கடைசி அடியையும் முழுக்கச் சொன்னதும் மீண்டும் முக்கால் அடியில் ரெம்பாவாய்க்கு முன் நிறுத்துவது.
….
….
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
பாரோர் புகழப் படிந்து.
….
….
உய்யுமாறெண்ணி உகந்தேகோ ரெம்பாவாய்
உய்யுமாறெண்ணி உகந்து.
….
….
நீங்காதசெல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
நீங்காதசெல்வம் நிறைந்து.
….
….
[வாரணமாயிரம் திருமணங்களில் பாடும் போது ஒவ்வொரு பாடலுக்கு முன்னும், “தோழீ நான் கண்டக னாவெல்லாம் நீ கேளாய்!” என்று இழுத்துப் பாடுவார்களே அதுமாதிரி இது கோயில் ஸ்டைல்.]
அனைத்துப் பாடல்களையும் சொல்லி முடித்தபின், கடைசியில் அன்றைய தினத்துக்கான பாடலை மட்டும் மீண்டும் ஒருதடவை சொல்வார். நாங்களும் அப்படித்தான் சொல்வோம். வேறு ஊர்களில் சிலர் சொல்லிக் கொண்டுவரும்போதெ அன்றைய பாடலை இரண்டு முறை சொல்லிவிடுவதும் வழக்கம்.
மார்கழி மாதம் இடையிலேயே உற்சவம் வந்துவிடும். ஆனாலும் காலையில் நிகழ்வு இப்படித்தான்.
///Is it a norm not to chant all the 30 in a day during Margazhi?///
இல்லை. லேசாக மாற்றிச் சொல்கிறீர்கள். அந்த மாதம் முழுவதும் எல்லா சன்னதிகளிலும் வீடுகளிலும் (உற்சவத்தில் கோயில் அரையர் சேவை தவிர்த்து) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை அதன் தனியன்கள் தவிர மற்ற பாசுரங்கள்(நாலாயிரத்திலிருந்து) எதுவும் சொல்லக் கூடாதென்று சொல்வார்கள். பாசுரங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு. மற்ற மந்திரங்கள்(காயத்ரி இன்னபிற), ஸ்லோகங்கள்(அஷ்டோத்திரங்கள், கனகதாரா இப்படி) சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஒரே நாளில் எல்லாத் திருப்பாவைப் பாடல்களும் சொல்லும் வழக்கம் உண்டு.
சனி, நவம்பர் 17, 2007 at 10:11 பிப
Thanks Jayashree. It is very helpful. Enjoyed your response on Vazha elai.
best,
Krishna
செவ்வாய், நவம்பர் 27, 2007 at 2:11 முப
ஜெயஸ்ரீ,
ஒரு காலதாம கேள்வி:
// மார்கழி மாதம் நான் ஏற்கனவே மற்ற நாள்களுக்குச் சொல்லியிருப்பது போல் விஸ்வரூபம், யானை, பசுமாடு, குதிரை, ரொட்டி வெண்ணை சமாசாரம் எதுவும் கிடையாது. காலையில் 5 மணிக்கே கோயில் திறந்து தரிசனம். அதற்கு திருப்பள்ளியெழுச்சி என்று பெயர். பொங்கல் நிவேதனம் //
</b/
வெண் பொங்கலா/சர்க்கரை பொங்கலா?
Thanks for your time and help.
best,
Krishna
புதன், நவம்பர் 28, 2007 at 12:27 பிப
Krishna,
எல்லா நாள்களிலும் வெண்பொங்கல் தான்.
23ம் நாள்(மாரிமலை முழஞ்சில்), மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்படும் சிங்கத்துக்காக 🙂 – சர்க்கரைப் பொங்கல்.
27ம் நாள் – கூடாரை வெல்லும்சீர் (அக்கார அடிசில்)
28 – கறவைகள் பின்சென்று (தயிர்சாதம்)
அநேகமாக பிற சன்னதிகள், வீடுகளிலும் கூட அப்படித்தான் செய்வோம்.
அந்த மாதம் பிரபந்த பாராயணம் குறித்து நீங்கள் கேட்ட இன்னொரு தகவல்:
அரையர் பெரியபெருமாள் சன்னதியில் மற்றும் உற்சவத்தில் சேவிக்கும் பாசுரங்களை, கோயில் அத்யாபகர்கள்( இவர்கள் கோயிலால் நியமிக்கப் பட்ட official பிரபந்த பாராயணம் செய்பவர்கள்.) கோயிலுக்குள் முதலில் உடையவர் சன்னதி, தொடர்ந்து உள்ஆண்டாள் சன்னதி, கோயிலுக்கு வெளியே தெற்கு உத்தரவீதி மணவாள மாமுனிகள் சன்னதி, தொடர்ந்து இறுதியாக கீழ உத்தர வீதியில் இருக்கும் கோயில் கந்தாடை வாதூல அண்ணன் ஸ்வாமிகள் திருமாளிகையிலும் பாசுரங்கள் சேவிப்பார்கள். ஆக, அரையர், கோயில் அத்யாபகர்களுக்கு மட்டும் மார்கழி உற்சவத்தைப் பொருத்து, இதில் விலக்கு உண்டு. நேரில் போகும்போது தகவலில் மாற்றம் இருந்தால் சொல்கிறேன்.
புதன், நவம்பர் 28, 2007 at 11:18 பிப
ஜெயஸ்ரீ,
மிகவும் நன்றி.
மேலும் சில கேள்விகள்:
ததியோனத்தில், மண்ணுக்கு அடிவிளையும் (இஞ்சி) போன்றவை சேர்க்கலாமா?
அரங்கனுக்கு நெய்தான் என்று சொன்னதாய் ஜாபகம் – தாளிப்பில் மட்டிலும் விலக்கு?
// எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைக்கவும். //
Krishna
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 9:40 முப
Krishna,
தயிர்சாதம் ஸ்ரீரங்கம் கோயிலில் செய்வதுபோல் எல்லாம் நான் சொல்லியிருக்கவில்லை. பொதுவாக நாம் வீட்டில், விருந்தில் செய்வது போல் தான் சொல்லியிருக்கிறேன். சரியாகச் சொன்னால் சாதம் அதிகம் மீந்தால் உடனே எப்படி தயிர்சாதமாகக் கலந்து அடுத்த வேளைக்கு உபயோகிப்பது என்றுகூட சொல்ல நினைத்து விட்டுப் போயிருக்கிறது.
பொதுவாக வீட்டில் செய்யும்போது ஸ்ரீரங்கம் கோயிலில் செய்வதுபோல் சில பண்டங்களை எல்லாம் விலக்கி செய்ய மாட்டோம்.
திங்கள், திசெம்பர் 24, 2007 at 10:40 முப
Krishna, ஒரு அப்டேட். 🙂
///கோயிலுக்குள் முதலில் உடையவர் சன்னதி, தொடர்ந்து உள்ஆண்டாள் சன்னதி, கோயிலுக்கு வெளியே தெற்கு உத்தரவீதி மணவாள மாமுனிகள் சன்னதி, தொடர்ந்து இறுதியாக கீழ உத்தர வீதியில் இருக்கும் கோயில் கந்தாடை வாதூல அண்ணன் ஸ்வாமிகள் திருமாளிகையிலும் பாசுரங்கள் சேவிப்பார்கள்.////
இதில் சொல்லியிருக்கும் வரிசை சரி. ஆனால் கோயிலில் திருநாளுக்கு சேவிக்கும் பிற பாசுரங்கள் மணவாள மாமுனிகள் சன்னதி மற்றும் கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகையில் மட்டுமே சேவிப்பார்கள். உடையவர் மற்றும் உள் ஆண்டாள் சன்னதிகளில் நான் சொன்ன மாதிரி திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை மட்டுமே.(திருப்பல்லாண்டு கூட சொல்வதில்லை.)
மேற்படித் தகவல் கோ.க.வாதூல அண்ணன் திருமாளிகையில் விசாரித்து எழுதப்பட்டது.
புதன், திசெம்பர் 26, 2007 at 11:37 பிப
ஜெயஸ்ரீ,
மிக்க நன்றி.
ஸ்ரீ மடம் கோவில்களில் அத்யாயான உற்சவம் தொடங்கி நான்கு நாட்களா பெரிய திருமொழி நடக்கிறது. கோஷ்டியுடன் சேர்ந்து சில பாசுரங்களை தட்டி தடுமாறி ப(ஆடி)டித்து முடித்தேன். புருஷாளை விட பொம்மனாட்டி அபாரமா சொல்ற (நல்ல நெட்டுரு போட்டு). வென்றி மாமழுவேந்தி முடித்தவுடன் உடனே வெண்ணையும் சர்க்கரையும் சப்ளை (இது திருவல்லிக்கேணி சம்ப்ரதாயம் என்று கேள்வி).
இதுலே வேற எங்களுக்கு அடிக்கடி தொண்டைக்கு மிளகுடன் கூடிய சர்க்கரை சப்ளை நடக்கும். இதை போட்டவுடன் தும்மல் வருகிறது – காட்டம் அதிகம். (இந்த டபரா குழாமுக்கு இல்லை. எதோ எங்களால முடிந்தது .. ஹீ ஹீ. அவாளும் இது எதோ மூக்கு பொடி என்று விட்டுடாள்).
இந்த ரேசிபீ கொஞ்சம் போட்டால் வசதி.
நன்றியுடன்,
கிருஷ்ணா
வியாழன், திசெம்பர் 27, 2007 at 2:36 முப
இந்த டபரா குழாமுக்கு இல்லை. எதோ எங்களால முடிந்தது
பெண் குழாமுக்கு இல்லை.
என்று சொல்ல வந்தது “பெண்” விட்டு போயிருக்கு
வியாழன், திசெம்பர் 27, 2007 at 8:21 பிப
Krishna,
ஸ்ரீமடம் என்று ஒரு மடமா? அல்லது கோயிலைத்தான் அப்படி குறிப்பிடுகிறீர்களா? அந்த உணவுக் குறிப்பு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து கோயில் நீங்கலாக வெளியில் நடக்கும் இதுபோன்ற கோஷ்டிகள், பஜனைகளில் பாலில் மிளகு, சர்க்கரை போட்டுக் கொடுப்பார்கள்.
நான் பொதுவாக இந்த கோஷ்டிகளுக்குப் போனதில்லை. ஸ்ரீரங்கத்தைப் பொருத்தவரை எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகவில்லை. எப்போதோ சின்ன வயதில் என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாவிட்டாலும் பிடிவாதமாகக் கிளம்பிவிடுவார் என்பதற்காக துணைக்கு என்னை அம்மா அனுப்புவாள். (பாவம், நான் கூடப்போய் படுத்துவதைவிட சௌகரியமாக இருந்திருக்க வேண்டியவர்.) சில சமயம் அழகர் கோயில், ஸ்ரீரங்கம் திருமாளிகைகளில் பங்கெடுத்திருக்கிறேன்.
கோயில், மடங்களில் நடக்கும் கோஷ்டிகளில் நீங்களே சொல்வதுபோல் நன்றாகப் பாசுரங்கள் சொல்லத் தெரிந்தும் பெண்களை இரண்டாம் தரத்தில் நடத்துவதில் எனக்கு ஆட்சேபம் இருப்பதால் இனியும்கூட நானாக அங்கெல்லாம் போகமாட்டேன் என்றே நினைக்கிறேன். 🙂 ஆனால் கோயில் அத்யாபகர்கள் சொல்லக் கேட்பதில் மிக விருப்பம்.
வியாழன், திசெம்பர் 27, 2007 at 9:17 பிப
ஜெயஸ்ரீ,
அஹோபிலம் மடஆதின சார்ந்த கோயில்களும், (வடகலையார் சார்ந்தவும் கூட என்று நினைக்கிறேன்) ஸ்ரீமட சம்பிரதாய கோயில்கள்.
//
கோயில், மடங்களில் நடக்கும் கோஷ்டிகளில் நீங்களே சொல்வதுபோல் நன்றாகப் பாசுரங்கள் சொல்லத் தெரிந்தும் பெண்களை இரண்டாம் தரத்தில் நடத்துவதில்
//
this would be streching பார். நான் விளையாட்டாக சொன்னேன்.
எனக்கு தெரிந்த அளவில் இப்படி எல்லாம் பாரபட்சம் கிடையாது. அப்படி நடக்கவும் நடக்காது.
//ஸ்ரீரங்கத்தைப் பொருத்தவரை எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகவில்லை.//
வயது வரம்புகள் எல்லாம் நாம் ஏற்படுத்தி கொள்வதுதான்.
என்னோட மூத்த தமையனார் கூட உங்களை போலதான் சொன்னார். நீங்க ஸ்ரீரங்க வாசி. நீங்க என்னை போல உள்ளவர்களுக்கு சொல்லணும். நான் சொல்வது முறையாகாது.
நான் சொன்ன கோஷ்டி கோயிலில் நடக்கின்றதுதான்.
இந்த பொடி சாப்பிட்டதில் இருக்கிறே தூக்க கலக்கம் எல்லாம் பறந்து விட்டது. பெண்களுக்கு இது தேவை இல்லை (சமையல் அறையில் அடிக்கடி சாப்பிடறது தானே 🙂 என்று கூட நீங்க கொள்ளலாம். It is a compliment to women என்று எடுத்துகொள்ளுங்களேன் 🙂
Nallavan சார், நான் உங்க அறிவுரை படி இதோட முடித்து கொள்கிறேன் 🙂
Thanks,
Krishna
வியாழன், திசெம்பர் 27, 2007 at 9:19 பிப
Far
பார் என்று தப்பாக வந்துள்ளது.
Krishna
வியாழன், திசெம்பர் 27, 2007 at 9:29 பிப
Krishna,
நீங்கள் பெண்களைத் தவறாக எதுவும் சொல்லவில்லை. உங்கள் மறுமொழியை நான் சரியாகத் தான் எடுத்துக் கொண்டேன். பொதுவாக கோயில், மடங்களில் கோஷ்டிகள் குறித்த என் கருத்து அது. உங்கள் மேல் தவறில்லை.
யார் இங்கே நீங்கள் குறிப்பிடும் Nallavan சார்?
வியாழன், திசெம்பர் 27, 2007 at 9:57 பிப
//
nallavan சொல்வதென்னவென்றால்:
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2007 at 2:01 பிற்பகல்
ச.திருமலை, ஜெயஸ்ரீ வலைப்பதிவிலே , நீங்க ஜெயஸ்ரீ கூட நடத்திட்டு இருக்கிற பேச்சு வார்த்தைல, யார் குறுக்க வந்தாலும் வள்ளுன்னு மேலெ விழுவீங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா, எல்லாரும் வாய மூடிட்டு இருந்திருப்பாங்க. இப்ப தெரிஞ்சு போச்சுல்ல , வுடுங்க
பிரேமலதா,பெரீவா பேசிண்டு இருக்க எடத்துல தேவை இல்லாம எதுக்காக்கும் வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க? செத்த நேரம் கம்முனு இருங்கோ
//
அத்தாங்க அந்த “வள் வள்” சொன்னவரு.
நல்லவன் ஒரு போடு போட்டவுடன் சப்த நாடி எல்லாம் ஒடுங்கிவிட்டது.
அதற்கப்புறம் கொஞ்சம் controversial ஆ இருந்தா, உடனே அவர கேட்டு பின்னூட்டம் போட்றது நல்லது என்று மனசுக்கு தோணித்து.
Krishna
திங்கள், ஜனவரி 9, 2012 at 5:39 பிப
திருவாதிரைக்கலி எவ்வாறு செய்வ
து
சனி, ஒக்ரோபர் 22, 2016 at 8:14 முப
Super