தேவையான பொருள்கள்:
பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்
வறுத்துப் பொடிக்க:
அரிசித் திப்பிலி – 100 கிராம்
கண்டத்திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
கிஸ்மிஸ் – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
எள் – 10 கிராம்
ஏலக்காய் – 10
கிராம்பு – 5
விரளி மஞ்சள் – 2
செய்முறை:
- வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருள்களையும்- நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்- தனித்தனியாக, குறைந்த தீயில், நிதானமாக, பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு, அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருளுக்கும் பதம்.) வறுக்கவும்.
- எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
- அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
- வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைத்தால் சுமார் பத்துமாதங்கள் வரை கெடாது.
* மருந்து பக்குவமாக வர, வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில்வைத்துக் காய்ச்சக் கூடாது.
* மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்.
** எச்சரிக்கை: கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற நாட்டுமருந்து, கிளறின லேகியங்களை (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்) உண்பது கூடாது.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 3:41 பிப
ஜெய்ஸ்ரீ,ரொம்ப நன்றி. கிட்டத்தட்ட பத்துவருஷம் ஆகிவிட்டது. நான் மருந்து கிளறி.
இத்தனை எக்ஸ்ட்ரா அலங்காரமும் போட்டதில்லை. இப்போது கிளறினால் அருமையாக வரும். தான்க்ஸ் பா.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 10:21 பிப
revathinarasimhan, உங்கள் அனுபவத்துக்கு எனக்கு மறுமொழி எழுதுவது எல்லாம் மிக அதிகம். திரும்ப பதில் என்ன எழுதுவது என்றே பெரும்பாலூம் தயக்கமாக இருக்கிறது. நன்றி.
புதன், நவம்பர் 10, 2010 at 9:22 பிப
hello hello:)
ஜெய்ஸ்ரீ, இப்ப எல்லாம் டப்பா செட்டி கடை லேகியம்தான் தெரியுமா. அடுப்பு பக்கத்தில நிறைய நேரம் நிற்க முடியறதில்லை.
நீங்க எழுதி இருக்கிறதைப் பார்த்ததும்,மீனாட்சி அம்மாள் பார்த்து,குடித்தனம் ஆரம்பித்த போது கிளறின நினைவு வந்தது.
மாமியாருக்கெல்லாம் கூடக் கிளறிக் கொண்டு வருவேன்.
உங்கள் பதிவைப் பார்த்து எத்தனை இளவயதுக்காரர்களுக்கு ஆவல் வரும் இல்லையா. அதைத்தான் சொன்னேன்மா. மத்தபடி சாதாரண அம்மாகிட்டப் பதில் எழுத என்ன தயக்கம்.:)
வியாழன், ஒக்ரோபர் 13, 2011 at 6:16 முப
இன்றைய வலைச்சரத்தில்….
போஜனம் செய்ய வாருங்கள்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_13.html
இன்று உங்களது சுட்டி வலைச்சரத்தில்….. வந்து படியுங்களேன்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
புதன், ஒக்ரோபர் 26, 2011 at 8:24 முப
I came across this website and so happy to read in Tamil. Nice posts and especially this one is quite interesting. I have never made such thing because these are normally made by the “ayurvetha vaithiyar” where I lived. Good posts and keep it up
செவ்வாய், ஒக்ரோபர் 29, 2013 at 9:32 முப
Good massage thank you