தீபாவளியன்று காலையில் சூடான பஜ்ஜிக்கு துணையாகச் செய்ய, அவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.
தேவையான பொருள்கள்:
ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
செய்முறை:
- அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
- இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
- ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
- ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
- இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
- பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.
* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.
* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.
* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில் 1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. 🙂 கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.
* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.
# 2.
புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.
- ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
- குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பஜ்ஜி, போண்டா, கார மிக்ஸர்,
வியாழன், நவம்பர் 1, 2007 at 7:09 பிப
//தண்னீரைச//
ஹாஹா ஜெயஸ்ரீ பதிவில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சிட்டேன். 😉
வியாழன், நவம்பர் 1, 2007 at 8:28 பிப
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது . மிகவும் அழகான ரெசிபி. இந்த மாதிரி ஒரு முறை செய்து பார்கிறேன்.
தமிழில் ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.
வியாழன், செப்ரெம்பர் 1, 2011 at 1:08 பிப
kesri tamil la yeluthunga
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 1:27 முப
பாலுக்குப் பதிலா அரைக் கப் பாதாம் பருப்பைத் தோல் நீக்கிட்டு மிக்ஸியில் அதே ரெண்டரைக் கப் தண்ணீர் விட்டு நல்லா அரைச்சுச் சேர்த்தால் பதாம்கேசரியாச் செஞ்சுக்கலாம்.
இதுதான் எப்பவும் நம்ம வீட்டு தீபாவளி ஸ்பெஷல்:-)
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 10:22 முப
அடடா! அருமையான விளக்கம். பார்க்கவே எனக்கு கையும் காலும் பரபரக்குதே! :)))
போட்டோ எல்லாம் நெட்ல சுட்டதா? இல்ல நீங்கலே செஞ்சு போட்டோ எடுத்தீங்களா? நான் அட்ரஸ் குடுத்தா பார்சல் அனுப்புவீங்களா? :p
திங்கள், ஏப்ரல் 22, 2013 at 3:06 பிப
Correct Ambi bcoz antha picture -il TOOTY FRUITY ERUKU bt receipe method -il tooty fruity poda sollalaiyea smthing wrong anyway gud
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 5:08 பிப
yummy…looks so tasty..just like my mom’s
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 8:27 பிப
மோகன்தாஸ், தண்ணி பட்ட பாடா இருக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். ஒரு பத்து நாள் கதவடைப்பு செஞ்சு எல்லாம் திருத்தி இன்னும் organised ஆக்கணும். பிரச்சினை என்னன்னா, அடுத்தவங்க எழுத்துல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் எனக்குத் தெரியும். என்னோடதுக்கு இன்னொரு ஜெயஸ்ரீயை அமர்த்தியிருக்கேன்.
ramya, //தமிழில் ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.// ஆனா தமிழ்ல எப்படி பிழை இருக்கும்? “கால்ல முள் குத்திடுச்சு”, “சட்டை சின்னதா போச்சு”, வரிசைல இதையும் சேர்க்க வேண்டியதுதான். சும்மா சொன்னேன், அசத்திட்டீங்க.
துளசி, கலக்கல். செஞ்சு படம் போடுங்க. தீபாவளி வாழ்த்துகள்!
Ambi, நீங்க ரொம்ப நல்லவருங்க. ஒவ்வொருத்தங்க, “உண்மையைச் சொல்லு, இதெல்லாம் மண்டபத்துல யார்கிட்டயாவது வாங்கிட்டு வந்த படமா?”ன்னு கேக்கறாங்க. நானே என் கையால செஞ்சு, என் கையால எடுத்த படங்க. இனிமே ஜெயஸ்ரீன்னு பேர் வெட்டின பாத்திரங்களைத் தான் ஃபோட்டோக்கு உபயோகிக்கணும். :((( அப்பவும், “எந்தக் கடைல வாங்கிவந்து வெச்சு எடுத்த?”ன்னு கேப்பாங்க.
//நான் அட்ரஸ் குடுத்தா பார்சல் அனுப்புவீங்களா? :p// நீங்க இட்லிவடை குழுவுல ஒருத்தரா இருந்தா தான் இந்த சலுகை. ஏற்கனவே அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன். 🙂
Giridhar, ம்ம்..இன்னும் கல்யாணம் ஆகலை போல! நன்றி.
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 9:46 பிப
அம்பி, கேசரி ரெசிபி அதுவும் படத்துடன் பார்த்ததும், உங்க பதிவுல லிங்க் கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனாலும் மூக்கில் வியர்த்து விட்டது போல 🙂
சனி, நவம்பர் 3, 2007 at 5:36 பிப
அம்பி, உங்களுக்கு கேசரி உஷா சிபாரிசு செய்யும் அளவுக்குப் பிடிக்குமா? சரி அனுப்பி வைக்கிறேன்.
திங்கள், நவம்பர் 5, 2007 at 10:42 பிப
//* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில் 1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை///
நான் ஒரு கப் ரவைக்கு 3/4 கப் சீனிதான் சேர்க்கிறது. போன முறை 1/2கப் ட்ரை பண்ணினேன். வீட்ல எகிறிட்டாப்ல. உப்புமால சீனி போட்டிருப்பியே அத எங்க-ன்னு நக்கல் வேற.
வெள்ளி, மார்ச் 7, 2008 at 2:04 பிப
super. but ghee over.weight watchers are not taken 3/4 ghee. but taste is good.
புதன், மே 28, 2008 at 5:53 முப
ஆகா ஆகா – அருமையான ரவா கேசரி – படங்கள் அனைத்துமே சூப்பர் – வாயிலெ எச்சி ஊறுது – உடனே வேணுமே – என்ன பண்றது – தங்க்ஸைக் காக்கா பிடிக்கணும். இதுலே துளசியோட பாதாம் கேசரு வேற. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லார் வூட்லேயும் தங்க்ஸ் எல்லாம் ரங்க்ஸ் வெளியே போனப்புறம் இப்படித்தான் பண்ணிச் சாப்புடுறாங்க போலிருக்கு
நல்வாழ்த்துகள்
வியாழன், செப்ரெம்பர் 2, 2010 at 8:59 பிப
iyo supera irukku what a color parthale paravasam parcel please
சனி, மார்ச் 19, 2011 at 4:58 பிப
kesari thalarndhu loosa eruka enna panalam.please reply me
வியாழன், செப்ரெம்பர் 1, 2011 at 1:06 பிப
1 liter water add panna kesari payasam agum
புதன், ஏப்ரல் 27, 2011 at 1:11 பிப
NICE
புதன், ஜூலை 3, 2013 at 7:40 பிப
thanks
புதன், ஜூலை 1, 2020 at 4:55 முப
I made it yesterday and came out well. Thanks!
ஸ்ரீரங்கத்தில குங்கும பூ , கிடைக்காதா , இல்லை நீங்க போடற வழக்கம் இல்லியா?:-)