சிலர் முழுமையாக எள்ளையே உபயோகித்து உருண்டை செய்து பிறருக்குக் கொடுக்கவோ, பிறர் அதை வாங்கவோ, வாங்கினாலும் அதன் கொழுப்புச் சத்து காரணமாக உண்ணவோ தயங்கலாம். அவர்கள் சுவையாக இந்த உருண்டையை, பெயரளவில் மட்டும் எள் சேர்த்துச் செய்யலாம். சுவை, குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள்:
நிலக்கடலை – 100 கிராம்
பொரி – அரை லிட்டர்
பொட்டுக் கடலை – 50 கிராம்
கொப்பரைத் துண்டுகள் – சிறிது
எள் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1/2 கிலோ
ஏலப்பொடி
சுக்குப் பொடி (விரும்பினால்)
செய்முறை:
- நிலக்கடலையைத் தோல் நீக்கி, இரண்டாக உடைத்து, வறுத்துக் கொள்ளவும்.
- எள், கசகசாவையும் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- கொப்பரையை மிகச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- நிலக்கடலை, பொரி, பொட்டுக் கடலை, கொப்பரைத் துண்டுகள், எள், கசகசா எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
- வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து முற்றிய பாகு காய்ச்சி, ஏலப் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
- பொரிக் கலவையை பாகில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
- சூட்டோடு கையில் அரிசி மாவு தோய்த்துக் கொண்டு சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
* பத்துப் பத்தாக உருண்டைகள் ஆனதும் ஒரு முறம் அல்லது தட்டில் போட்டு உருட்டினால் மேலும் இறுகி பிடித்துக் கொள்ளும்.
* உருண்டைகள் பிடித்துக் கொண்டிருக்கும்போதே கலவை எடுக்க வராமல் இறுகிவிட்டால் மீண்டும் லேசாக அடுப்பில் வைத்து இளக்கி, பின்னர் பிடிக்கலாம்.
* கொப்பரை இல்லாவிட்டால், தேங்காயை மிகச் சிறிய துண்டுகளாகக் கீறி சிறிது நெய்யில் பொரித்துச் சேர்க்கலாம்.
* முந்திரியை வறுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு உருண்டை உருட்டும்போதும் ஒன்றை இடையில் வைத்தும் உருட்டலாம்.
நவராத்திரி நாயகி: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் – ஷக்திப்ரபா.
ஞாயிறு, ஒக்ரோபர் 14, 2007 at 4:00 பிப
Hello,
Silent reader of your blog. You have very good collection of Traditional Recipes. If find time please visit my blog.
http://www.menutoday.blogspot.c