தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
- அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
- இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
- தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
- தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
- உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு வாசிக்க….
கட்டுரை: ஒரு நதியின் நசிவு
கவிதை: நதி நீராலானது மட்டுமல்ல
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 3, 2010 at 6:08 பிற்பகல்
Thats quite interesting recipe, havent tasted anything like this before’ must be great tasting one’ wanna try this real soon, looks awesome:)
வியாழன், ஆகஸ்ட் 5, 2010 at 6:32 பிற்பகல்
பார்க்கவே சுவையாக இருக்கிறதே. உங்கள் கைகளுக்கும் கற்பனைக்கும் ஒரு வணக்கம். பெண்ணுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த லின்கை:)
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 8, 2010 at 12:47 பிற்பகல்
ஜெ, பொதுவாவே பாஸ்மதி ரைஸ் ரொம்ப படுத்துது. ஒரு முறை சரியா வருது, ஒரு முறை குழைஞ்சுடுது. அந்தந்த நிறுவனம் பாக்கெட்டில் போட்டிருக்கும் அளவுதான் தண்ணி சேக்கறேன். புலாவ்க்கான பொதுவான குறிப்பா எந்த பிராண்ட் பாஸ்மதி ரைஸ் பயன்படுத்தலாம், எப்படி தண்ணீர் சேக்கலாம்னு ஒரு பதிவு போடுங்களேன், புண்ணியமா போகும்..
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 3, 2010 at 10:59 மு.பகல்
basmati rice like all other north indian rice varieties, can not tolerate more water like south indian varieties, like ponni, etc.. we add only two cups of water for the north indian rice. especially for basmati, we have to go by the smell of the rice.. good quality basmati has a unique smell. while making pulav, you have to fist wash the rice, drain out the water completely and roast it in a little ghee before cooking in 1:2 water. that is if you are going to cook one measure of rice, you can add two measures of water or even slightly less, this will give you well cooked, non-sticky rice!
புதன் கிழமை, ஆகஸ்ட் 11, 2010 at 2:57 பிற்பகல்
இதைத்தான் ‘ஆடி’க்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை பதிவு போடறது-ன்னு சொல்லுவாங்களா ?!!!
)
சனிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2010 at 10:08 மு.பகல்
இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
http://cookeryindexer.blogspot.com/
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 31, 2010 at 5:27 பிற்பகல்
நதி நீராலானது மட்டுமல்ல கவிதையைப் படித்தேன்.. மொதல்ல போட்டு சாத்துனதுக்கு இது ஒத்தடமா? ரெசிப்பியெல்லாம் அப்புறமா பாத்துக்குவோம்..
அப்புறம் தயிர் சாதம் கெட்டி தட்டாமலும், சுவையாகவும் இருக்க வெண்ணெய் சேர்க்கச் சொன்னது நீங்களா? ஆமெனில், அட்டகாசமான டெக்னிக். மிக, மிக சுவையாவும், 5 மணி நேரத்திற்குப் பின்னரும் பேக் செய்தபோது இருந்ததுபோல் இருந்தது.
சனிக்கிழமை, அக்டோபர் 30, 2010 at 3:27 பிற்பகல்
ஜெயகுமார், நான் எழுதியிருக்கறது ஒத்தடம் கொடுத்திருக்கறமாதிரியா இருக்கு. கட்டுரைல ஒரு சாதாரண பொதுஜனம் இந்த இஷ்யூல எப்படித் தார்மிகக் கோபம் வந்து தட்டிக்கேட்டுப் பொங்கியிருக்காரு; கவிதை-ங்கற சால்ஜாப்புல இந்த இலக்கியவாதி எப்படி எதுவுமே நடக்காதமாதிரி என்னிக்கோ ஒட்டின மணலை சாவகாசமா தட்டிவிட்டுக்கிட்டு போறாருன்னு பாருங்கய்யான்னு பொதுவுல போட்டுக்குடுத்திருக்கேனில்ல நினைச்சுகிட்டிருக்கேன்.
புதன் கிழமை, நவம்பர் 3, 2010 at 10:05 மு.பகல்
ஏன் இந்தக் கொலவெறி?
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 3, 2010 at 10:51 மு.பகல்
all the recopies are mouth-watering and very practical to follow.. i visit your earlier entries whenever i find time. you have also added the practical tips wherever we find ourselves stumble and falter. hats off to you! continue your great job!
cheers!
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17, 2010 at 7:19 மு.பகல்
ஆஹா…மாங்காய் சாதம் என்னுடைய ஃபேவரைட் உணவு! ஜமாய்ச்சிடுவோம்! நன்றி பகிர்தலுக்கு!