பனீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்:

 பால் – தேவையான அளவு
எலுமிச்சை – 1 
(அல்லது)
வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்

paneer_1paneer_2

செய்முறை:

  • தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தில் காய்ச்சவும்.
  • பால் பொங்கிவரும்போது வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.
  • பால் திரிந்து கட்டியும் தண்ணீருமாகப் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • ஒரு தூய்மையான மஸ்லின் துணியில் அல்லது பனீர் ஸ்ட்ரெய்னரில் கலவையைக் கொட்டி, வாயைக் கட்டி, வடிகட்டுவது போல் தொங்கவிட வேண்டும்.
  • இரண்டு மூன்று மணிநேரத்தில் மொத்த நீரும் வடிந்து, உள்ளே இருக்கும் திடப்பொருளே பனீர். தேவைப்பட்டால், கையால் அழுத்திப் பிழிந்தால் மிச்சமிருக்கும் நீரும் வெளியேறிவிடும்.
  • பனீர் உதிரியாக உபயோகிக்கவிருக்கும் இடங்களில் இப்படியே உபயோகிக்கலாம்.
  • துண்டுகளாகப் பொரிக்க வேண்டிய உணவுப் பொருள்களுக்கு, வடிக்கப்பட்ட பனீரை மேலும் ஒரு மணி நேரம் கனமான பாத்திரத்திற்கு அடியில் வைத்திருந்து எடுக்கவேண்டும். [குக்கரில் நீர் நிரப்பி அதை பனீர் சுற்றியிருக்கும் துணியின் மேல் அழுத்தி வைப்பது சுலபமான முறை. :)]
  • இந்த இறுகிய பனீரை தேவையான அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.

* பனீர் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.

* வடிகட்டிய நீரை கடலைமாவுடன் சேர்த்து ஃபேசியலாக உபயோகிக்கலாம் என்பது இந்தப் பதிவுக்கோ எனக்கோ சம்பந்தமில்லாத ‘அழகு’க் குறிப்பு. 🙂