தேவையான பொருள்கள்:
தோல் உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
அரிசி – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை:
- கருப்புத் தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை அரை மணிக்கு மேல் நீரில் ஊறவைக்காமல் நீரை வடித்துவிடவும்.
- அரிசி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் மட்டுமே கெட்டியாக, கையால் தள்ளிவிட்டுக் கொண்டே தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
- ஒரு எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், வடை நடுவில் துளை போட்டு பேப்பரிலிருந்து எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* இது சில நாள்களுக்குக் கூட கெடாது. அநேகமான கோயில்களில் இப்படியே செய்வார்கள்.
* உளுத்தம் பருப்பு மட்டுமே எடுத்து மேலே சொன்ன மாதிரி மெல்லிய வடைகளாகத் தட்டினால், மேலும் அதிக நாள்களுக்கு வரும்.
மறுமொழியொன்றை இடுங்கள்