தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
எள் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும்.
- எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக)
- அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- உதிராக வடித்த சாதத்தில் தாளித்ததைக் கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலக்கவும்.
* விரும்பினால் ஒரு டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கலாம். சுவையாக இருக்கும். (நான் சேர்த்திருக்கிறேன்.)
* காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகும், எண்ணைக்குப் பதில் நெய்யும் உபயோகிக்கலாம்.
* கருப்பு எள் உபயோகித்தால் சாதம் நிறம் கருப்பாக இருந்தாலும் அதிக மணமாக இருக்கும். (நான் வெள்ளை எள் உபயோகித்திருக்கிறேன்.)
* யார் வீட்டிலாவது எள் சாப்பிட்டால் அவர்கள் வீட்டுக்கு உழைக்க வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. நான் அறிந்தவரை தவறானது. எள் கொழுப்புச் சத்தானது. அதனால் யார் வீட்டில் சாப்பிட்டாலும் நம் வீட்டுக்கு வந்து உண்ட கொழுப்பைக் குறைக்க கொஞ்சம் அவசியம் உழைக்க வேண்டும்.
அவ்வளவுதான்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அப்பளம், வடாம், வாழைத்தண்டு மோர்க் கூட்டு…

செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 7, 2007 at 3:41 மு.பகல்
“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு ” ன்னு பழமொழியே இருக்கே
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 7, 2007 at 12:18 பிற்பகல்
hello j Shri!
i love all your recipies. i want to know one “prasadham recipie” . It will be made with urad dal & pepper corn. It’ll be like flat,little bit hard/gummy thing. I forgot where i had eaten (whether in TV.Kovil prasadam or Sri Rangam prasadam ). I don’t know what its name (thattai?/vadai?). I can’t forget that urad dal taste with pepper corn crunches all over that flat & circle dish. I really need that (desparately).Plz..
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 1:42 மு.பகல்
//It’ll be like flat,little bit hard/gummy thing. I forgot where i had eaten (whether in TV.Kovil prasadam or Sri Rangam prasadam ). I don’t know what its name (thattai?/vadai?). I can’t forget that urad dal taste with pepper corn crunches all over that flat & circle dish.//
I think this is called “milagu vadai”.I also need the recipe. could you help out?
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 2:43 பிற்பகல்
hi Jaya shri!
where are you? I’m waiting for your reply my girl!hope you’ll write to me soon.Thank you.bye.
Nila
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 7:04 பிற்பகல்
ஜெயஸ்ரீ, ஆமாம். ஆனா எனக்கு எள் தான் பிடிச்சிருக்கு.
கொள்ளு பொங்கல் சாப்பிட்டிருக்கீங்களா?
நிலா, நீங்க சொல்றது மிளகு வடையா இருக்கலாம். ஸ்ரீரங்கத்துல அதே மாதிரி திருமால் வடை, ஆனா சுவையா இருக்கும். அப்படியே வாங்கி அந்த மணல்வெளில சாப்பிடணும். ஆனா கோயில் பிரசாதமெல்லாம் அவங்ககிட்டயே கேட்டுட்டு போடறதுதான் சரி. ஆமா, நீங்க மரத்தடில எழுதின நிலாவா?
தியாகராஜன், எனக்குத் தெரிஞ்ச மிளகுவடை நாளைக்கு சொல்றேனே.
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 9:11 பிற்பகல்
This was a surprise to me! I asked for the milagu vadai recipe yesterday. I went home and my mom (currently visiting me) made crisp milagu vadai for an eve snack!(these are amde for my son/daughter ofcourse)!
All she told me was that the soaked urad dal have to be ground into batter with (very very minimum water). Add salt and full or partially ground pepper. This dough have to be rolled very thinly and put on hot oil and the vadai is ready. She told me the trick is in grinding the urad dal and rolling it evenly and thin.
However you may pl tell the recipe ‘cause I like the “spices” you add when writing the recipe (more than the recipe) !! (hope u are recovered from exam fever).
வியாழன், ஆகஸ்ட் 9, 2007 at 1:33 பிற்பகல்
Jaya shri,
i’m not that Nila. I’m a new visitor to this blog. I’m sure i ate it in TV kovil when i have went to my Aunt’s home. It was not spongy urad vadai. That is why i confused.
What you said is right. Kovil prasadam has its own taste. We can not make it. Atleast we can give a try. I really miss T.V. Kovil, Sri Rangam Kovil, Malai Kottai Kovil. You have written most of the prasadam recipes in your blog. That is why i asked you. Ok Jayashri! take care.
Nila
சனிக்கிழமை, மார்ச் 29, 2008 at 4:02 பிற்பகல்
[...] எள் சாதம் தனியாகச் செய்திருக்கிறேன். வாழைத் தண்டு மோர்க் கூட்டும் தனியாகச் செய்திருக்கிறேன். எள் சாதத்திற்கு வாழைத்தண்டு மோர்க் கூட்டு என்பது எனக்குச் செய்தி. இந்த மேட்ச் ஃபிக்சிங் kallyanakamala அவர்கள் சொன்னது. இன்று செய்துபார்த்தேன். நன்றாக இருந்தது. [...]
திங்கட் கிழமை, மார்ச் 31, 2008 at 7:34 பிற்பகல்
Really Interesting..Accidentally visited..looks there is no need to make call to my mother..hereafter..regarding receipes..:)
செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் 1, 2008 at 11:18 மு.பகல்
Abi,
இந்தத் தொல்லை வேணாம்னு தான் எங்கம்மா இதை எல்லாம் எனக்கு டயரில எழுதிக் கொடுத்தாங்க. இருந்தாலும் அம்மாவைக் கூப்பிட்டுப் பேச இதுவும் ஒரு சாக்கா தேவைதான். விட்டுடாதீங்க.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2008 at 9:35 பிற்பகல்
Hello Mam,
I’m Sahaya Rani.I happened to see ur site.Very very useful site.Mam shall i say one suggestion.Please give us full menu of Lunch.I’m newly married.Cooking is a tedious job according to me.If u give us Sunday to Saturday Menu,it will be very very useful like me newly married.Thank you Mam sorry MUM.