தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2, 3
கறிவேப்பிலை.
தோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
செய்முறை:
- அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
- வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.
* இது போன்ற வகை கலந்த சாதங்களுக்குத் தாளிக்கும்போது 1/2 டீஸ்பூன் எள் அல்லது சாதம் கலந்தபின் கடைசியில் 1/2 டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி கலந்தால் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கம்போல் இதன் காப்பிரைட் எனக்கே சொந்தம். 🙂
* விருந்தினர் அல்லது பார்ட்டி மாதிரி நேரங்களில் நிலக்கடலைக்குப் பதில் முந்திரிப் பருப்பு உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கானதாக இருந்தால் கிஸ்மிஸ் கூட.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், குருமா வகை.
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 5:49 பிப
Hi jai,
Enn munnoottam edhuvum illama verum receipe mattum kuthu irukkinga? Ungaloda samayaloda azhage andha munootam than. Pls eppavum adha ezhuthittu apparam receipt kuduinga. Munnoottam illama receipt ezhithuradhu samayala mudichitu thalikkatha mathiri irruku.
சனி, ஓகஸ்ட் 4, 2007 at 9:43 பிப
Srilatha,
பொண்ணுக்கு பரிட்சை. எனக்கு பரிட்சை ஜுரம். ஒன்னும் ஓடலை. அதே விஷயம். நன்றி.
புதன், ஓகஸ்ட் 8, 2007 at 7:47 பிப
hello jeyashree.. u r doing a goodjob.. keepit up.. i like ur sense of humour as well as ur recipe… yaar sonnathau penkallukku nahaichuvai unnarvu kammi entru ? appadiye ” paruppu urundai kuzhambu ‘ recipe sonnaal nantri udayavalaa ha irupane…. LONG LIVE JEYASHREE