தேவையான பொருள்கள்:
முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5
செய்முறை:
- பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
- முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
- பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
- அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
- பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
- எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
- ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
- நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.
செவ்வாய், நவம்பர் 2, 2010 at 9:37 பிப
எல்லாம் பிரமாதம், அப்படியே கொஞ்சம் இஞ்சி சொரஸம் ரெசிபியையும் சொல்லிவிட்டால் வயிறு உங்களை வாழ்த்தும்!
புதன், நவம்பர் 3, 2010 at 7:55 முப
வில்லைகள் போட கத்தி வேண்டும். ஆனால் அது தேவையான பொருள்களில் இல்லை. இதெல்லாம் என்ன சமையல் குறிப்பு?
புதன், நவம்பர் 3, 2010 at 10:17 முப
பரவசமாக இருக்கிறது. கண்ணால் பார்த்ததற்கே இன்னொரு உருண்டை தீபாவளி மருந்து சாப்பிட்டுவிடுகிறேன்.
செவ்வாய், நவம்பர் 9, 2010 at 5:09 பிப
i am ready to eat only not to prepare.hi, hi, hi.
சனி, நவம்பர் 20, 2010 at 1:12 பிப
ஜெ புள்ளி வைத்தால் கோடு இல்லை ரோடே போடுவாராக்கும் என்று எங்களுக்கு உள்ளூற கொஞ்சம் பயம் உண்டு. ஆனால் இந்த மென்மையான கேக்கில் உங்கள் கோடுகளே ஏன் இப்படி? 🙂
சனி, நவம்பர் 20, 2010 at 2:59 பிப
NKS, :)))) உண்மையில் நான் பிரசன்னா சொன்ன கத்தியால கூட கோடுபோடலை. பிறந்தநாள் கேக் கட் பண்ற பிளாஸ்டிக் கத்திலதான் கோடுபோட்டேன். அதுக்கே எனக்கு தட்டு அடில ஸ்கராட்ச் ஆகுமோன்னு கைத் தயக்கமா செஞ்சேன். அதால அப்படி. இந்தக் கூச்சம் என் யத்னமில்லாம எனக்கு எப்பவும் உண்டு. 😦
சனி, நவம்பர் 27, 2010 at 9:08 பிப
hey, this is the first time on your web page. everything about your work is awesome. keep up the good work…..here after i will be a regular here.
revathi