தேவையான பொருள்கள்:
பாதாம் பருப்பு – 1 கப்
முந்திரிப் பருப்பு – 10
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்ப் பொடி
குங்குமப் பூ
கேசரி கலர்
வெள்ளரி விதை – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
- முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிகமிக அதிக மென்மையான விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
- சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். [சர்க்கரை கரைந்ததும், தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் பால் சேர்த்து, மேலே வரும் அழுக்கை நீக்கிவிடவும்.]
- சேர்ந்தாற்போல் வரும்போது 1 டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் கரைத்து, கலவையில் சேர்க்கவும்.
- கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
- நெய் வெளிவந்து ஒட்டாமல் கலவை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, வெள்ளரி விதை கலக்கவும்.
* பொதுவாக பாதாம் அல்வா திகட்டும் இனிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். விரும்புபவர்கள் இன்னும் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது பாதாமை உணரமுடியாமல் செய்துவிடும்.
* இந்த அல்வாவுக்கு முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிப்பது பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருகே நைவேத்தியம் செய்வதுபோல். அதனால் வெள்ளரி விதை மட்டும் போதும்.
* கிராண்ட் ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா— பாதாம் பருப்பு 200 கிராம், சர்க்கரை 400 கிராம், நெய் 200 கிராம், முந்திரிப் பருப்பு தேவையில்லை ; ரவைப் பதத்திற்கு அரைக்கவேண்டும்.
* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது.
திங்கள், நவம்பர் 1, 2010 at 7:17 பிப
அடடா..! மிகவும் அருமையாக உள்ளதே..!!
திங்கள், நவம்பர் 1, 2010 at 9:15 பிப
பாதாம் ஊறவைத்து நெய்யில் வறுத்து உப்பு மிளகுப் பொடி போட்டுச் சாப்பிட்டுவிட்டு,கோதுமை அல்வா சாப்பிட்டால்….ம்ம்ம்.:0
ஹாப்பி தீபாவளி ஜெஸ்ரீ.
திங்கள், நவம்பர் 1, 2010 at 9:18 பிப
Badham halva pidikkum:)
Jayashree. thank you.
செவ்வாய், நவம்பர் 2, 2010 at 1:38 முப
senjudaren!!! 😀
செவ்வாய், நவம்பர் 2, 2010 at 1:58 பிப
Hi Mrs Jaishree Happy Deepavali… and this time i am going to try this badam halwa ( Pavam en kanavar)…
புதன், நவம்பர் 3, 2010 at 12:38 முப
பின்னூட்டம் இடலைன்னாலும் தொடர்ந்து படித்து வருகிறேன்! தீபாவளி நேரத்தில் ஒரு நல்ல செய்முறை தந்திருக்கீங்க! உங்களோட புளியோதரை செய்முறை’ பதிவை உங்கள் அனுமதியுடன் ஒரு குழுமத்தில் இடுகிறேன். முறையாக உங்களுக்கும் ‘வணக்கம்’ சொல்லியிருக்கேன்.! தீபாவளி நல்வாழ்த்துகள்!
புதன், நவம்பர் 3, 2010 at 6:10 பிப
Thappu pannitten…thappu panniten…mathyanam saapida vendiya nerathula itha padichutten…vaayila pathu panaichu spoon salaivavoda…enakku ippavove venum pola irukku.
neenga than oru parcel enakku anuppi vekkanum ippo
Parkarathukkee Supeeraaa irukku…kalakals. Happy deepavali
புதன், நவம்பர் 3, 2010 at 6:15 பிப
நல்ல பகிர்வுங்க ஜெயஸ்ரீ
//* ஆயிரம்தான் பாதாம் பருப்பிலேயே அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. அல்வாக்களில் ராணி கோதுமை அல்வா. எனக்கு பாதாம் பருப்பு, அப்படியே சாப்பிடுவதே சுவையாக இருக்கிறது//
நான் அதை வழி மொழிகிறேன்!என் அம்மா ஒவ்வொரு தீபாவளிக்கும் கோதுமை அல்வாவை செய்து அசத்தி கொண்டு இருக்கிறார்கள்
உங்க about ல ச்செல்ல மழையும் நீ!!….. ச்சின்ன இடியும் நீ!!!….. படித்து ரொம்ப ரசித்து சிரித்தேன்
பகிர்வுக்கு நன்றி ஜெயஸ்ரீ