பொடிகள் அளவு அவசரத்துக்கு ஆபத்பாந்தவன் யாருமில்லை. அதிகம் எண்ணெய், காரம், மசாலா இல்லாத எளிமையான உணவும். கூட. நமக்குத் தேவையான மருத்துவ குணங்களுடைய பொருள்களையும் மானாவாரியாக இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை. இனி, அவ்வப்போது சில பொடிவகைகளும் செய்துபார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
- துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
- காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 6:40 பிப
This blog is amazing! Photos are rocking! I am proud of you. Where are you from?
வெள்ளி, ஏப்ரல் 3, 2009 at 3:17 முப
let me try today…tx
ஞாயிறு, ஏப்ரல் 19, 2009 at 7:51 பிப
நன்றாக உள்ளது உங்கள் இணையம் முக்கியமாக உங்கள் படைப்புக்கள்
ஞாயிறு, ஜூலை 18, 2010 at 10:54 பிப
பருப்புப்பொடி மிகவும் அருமை, அடியேனின் ஒரு சிறு விளக்கம்….. துவரம்பருப்புக்கு பதில் உளுத்தம்பருப்பு போட்டு பாருங்கள், அதுவும் மிகவும் நன்றாய் வரும். காரத்தை கொஞ்சம் கூட்டி போட்டு சுட சுட சாதத்தில் நெய்யை ஊற்றி…..அப்புறம் என்ன “சொர்க்கத்தின் திரப்புவிழா” பாட்டை பாடவேண்டியதுதான். நன்றி! கோபால்.
சனி, திசெம்பர் 4, 2010 at 12:42 பிப
மிகவும் அருமை
வியாழன், ஏப்ரல் 16, 2015 at 8:52 பிப
Thank u for all the wonderful recipe. My daughter 1 yr old’s fav snack is ur karthigai appam. Can u please share sambar podi recipe. Really would appreciate it.