மிஷினில் அரைக்கும் வசதி இல்லாதவர்களும் சுலபமாக இந்த முறையில் அரிசி வடாம் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 10
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு
செய்முறை:
- முதல்நாள் இரவே அரிசி, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம், இரண்டு பங்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
- அத்துடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிக மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தில் மேலும் 3 பங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
- கட்டிகளாகச் சேர்ந்து வரும். பயப்படத் தேவையில்லை. மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும்.
- மறுநாள் காலை எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.
- நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும்.
* மிச்சமுள்ள நீர்மோரைக் கலந்தே கலவையை லேசாக மட்டும் நெகிழ்த்தி, ஒரு ஸ்பூனால் வில்லைகளாகவும் செய்துகொள்ளலாம்.
புதன், ஏப்ரல் 1, 2009 at 1:22 பிப
எல்லாம் நன்னாத்தான் இருக்கு.ஆனா என்னப் போல ஆளுகளுக்காக எண்ணையில் பொறிக்க வேண்டியிருக்காத சமாச்சாரம் ஏதாவது சொல்லுங்களேன்!
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 7:27 பிப
இதை சுலபமா பண்ணிடலாம், Jsri, ஆனா ஒரிஜினல் டேஸ்ட் புட்டுக்குமே 🙂 இந்த மாதிரி டைப் எல்லா இடங்களிலும் கிடைக்குது !
எ.அ.பாலா
வியாழன், ஏப்ரல் 2, 2009 at 11:17 பிப
சென்னை பித்தன், நமக்காகத்தானே அப்பளம் வகை இருக்கு. அப்படியே சுட்டு சாப்பிடவேண்டியதுதான்.
எ.அ.பாலா, அப்படி எல்லாம் சுவைல சமரசம் செய்யவேண்டியிருந்தா அதையும் சொல்லிதான் குறிப்பு எழுதுவேன். ஆனா நான் செஞ்சு பார்த்து சொல்றேன், ஒரு வித்தியாசமும் இல்லை. அரைக்காய்ச்சல் முக்கால்காய்ச்சலும் சாப்பிட்டுப் பார்த்துட்டேன். அதே சுவையோடதான் இருந்தது. இன்னும் காஞ்சதும் நாளைக்கு பொரிச்சு சொல்றேன். நீங்களும் கொஞ்சம் அளவுல செஞ்சு பாருங்க.
வெள்ளி, ஏப்ரல் 3, 2009 at 9:55 முப
Jsri,
நீங்க சொன்ன பிறகு அப்பீல் ஏது ? 🙂 எங்க அக்காவை பண்ணச் சொல்லியிருக்கேன். ட்ரை பண்ணிட்டுச் சொல்றேன்.
நான் முதலில் சொன்னது, வெளியில் வாங்கிய மேட்டர் பத்தி.
எ.அ.பாலா
செவ்வாய், செப்ரெம்பர் 20, 2011 at 2:14 முப
thali vadaam recipe please.
வெள்ளி, ஓகஸ்ட் 10, 2012 at 2:41 பிப
உங்கள் சமையல் குறிப்பினை இங்கே http://nilaachchoru.blogspot.com/2012/08/3.html பகிர்ந்திருக்கிறேன், நன்றி!