தேவையான பொருள்கள்:
மாங்காய் – 1 (சிறியது)
வெல்லம் – 1 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.
செய்முறை:
- மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- கரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
- மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.
- வெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.
- சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
- நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.
[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]
* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]
அனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.
சனி, மார்ச் 28, 2009 at 6:16 முப
கார்ன் ஃப்ளார் செல்லாது. போட்டதால், “ஹாப்பி தமில் நியூ இயர்”.
சனி, மார்ச் 28, 2009 at 12:47 பிப
தேங்காய்,கடலைப்பருப்பு,ஏலக்காய்…………இதெல்லாம் என்ன யுகாதி பச்சடியின் சிறப்புகளா?
கமலா
சனி, மார்ச் 28, 2009 at 2:27 பிப
கெக்கேபிக்குணி: அதெல்லாம் செல்லவைத்து விட்டேன். அரிசிமாவு, கடலைமாவு கரைத்துவிடுவதை விட கார்ன்ஃப்ளோர் கரைத்துவிடுவது, கிரேவியை…
.. கொஞ்சமாக மாவு சேர்த்தாலே அதிகம் இறுக வைக்கும்.
.. பண்டத்தின் ஒரிஜினல் சுவையை மாற்றாது. அல்லது ஏதாவது கரைத்துவிட்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அதன் இயற்கையான சுவையிலேயே இருக்கும்.
.. கண்ணாடி மாதிரி பளபளப்பைக் கொடுக்கும். (அடியில் இருக்கும் தேங்காய்த் துண்டுகள், கடலைப் பருப்புகூட படத்தில் நம்மால் பார்க்கமுடிவது அப்படித்தான்.)
ஒருமுறை உபயோகித்துப் பார்க்கவும். 🙂
சனி, மார்ச் 28, 2009 at 2:36 பிப
kalyanakamala: சந்தேகமாகக் கேட்கிறீர்களா என்றால் ஆமாம். அதைவிட புளி. (ஆந்திர தோசைமிளகாய்ப் பொடியிலேயே புளி உண்டு. அட்டகாசமான சுவை.) தேங்காய் வில்லை அல்லது துருவல் கட்டாயம் உண்டு. ஏலக்காய் நம்முடையதிலேயே உண்டே?
இந்தப் பச்சடியும் கடலைப்பருப்பு அல்லது தேங்காய் போளியும்(பூரண் போளி அல்லது ஒப்பிட்டு) உகாதி, குடிபாட்வா இரண்டுக்குமே ஸ்பெஷல்.
வெள்ளி, ஏப்ரல் 3, 2009 at 10:21 பிப
மிளகாய்ப்பொடியில் (தோசை மிளகாய்ப்பொடியில்) எப்பவும் நானும் புளி சேர்க்கிறேன்.
கமலா