நாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆறரை மணிக்கு இரண்டுபேரையும் வெளியில் தள்ளுவது சாதாரண விஷயமில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரில் ஒருவரை ஒருவர் பார்த்தால்கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஃபோன் வந்தால் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்வோம். வலைப்பதிவுக்காக எந்த தொழில்நுட்பக் குறிப்பும் தெரியாமல், கோணம், வெளிச்சம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோணல்மாணலாக ஒரு க்ளிக் எடுக்கவே அடித்துப் பிடித்து மூன்று முழு நிமிடங்கள் செலவழித்து (கேமிராவை வெளியே எடுக்க, புகைப்படம் எடுக்க, திரும்ப அதனிடதில் வைக்க) பேருக்கு படம் என்று ஒன்று (bsubra மாதிரி நேயர்களுக்காக) எடுத்துப் போட்டுவருகிறேன். உண்மையில் அந்த மூன்று நிமிடம் கூட பல நேரங்களில் கிடைக்காமல்தான் பல படங்களும், அதனால் பல பதிவுகளும் ஏற்றமுடியாமல் நின்றுபோகிறது. எல்லாப் படங்களுக்கும் பின்னால் உற்றுக்கேட்டால்,
“இன்னிக்கு 6:40 டிரெயின் மிஸ் பண்ணப்போறேன்”
“என் வாட்டர் பாட்டில் இன்னும் வைக்கலை”
“எல்லார் வீட்டுலயும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவாங்க; நம்ப வீட்டுல கேமராவுக்கு”
“அவனவன் படம் பாக்கறதோட தப்பிச்சுடறாங்க. நமக்குத் தான் கொடுமை”
மாதிரி முணுமுணுப்பு, சிணுங்கல், சண்டை என்று வகைவகையாகக் கேட்கலாம். சரி, நம்ப பிரச்சினை நமக்கு.
-0-
சென்ற முறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது யதேச்சையாக அம்மா அடுக்கியிருந்த புத்தகங்களிலிருது மெலிதாக ஒன்றை– பெண்கள் மலர் என்று போட்டிருந்தது, நானும் பெண்தானே– எந்த சுவாரசியமும் இல்லாமல் எடுத்துப் புரட்டினேன். ஏதோ தினசரியின் இணைப்புப் புத்தகம். சமையல் குறிப்பு பக்கத்தில் படம்.. ரொம்ப பரிச்சயமானதாக… அட என் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்தது. கொஞ்சம் ஆர்வமாக அதே பெயரில் இருக்கும் இன்னும் சில புத்தகங்களைப் புரட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த வலைப்பதிவுப் படங்கள். மாதிரிக்கு ஒரு பக்கத்தை மட்டும் புகைபடம் எடுத்துக்கொண்டு வந்தாலும், வந்தபின் கணினி பழுதானதில் இங்கே பதியும் அளவுக்கு அந்த விஷயம் பின்பு தீவிரம் குறைந்துவிட்டது.
இதிலிருக்கும் படங்களுக்கான இந்த வலைப்பதிவின் சுட்டிகள்…
https://mykitchenpitch.wordpress.com/2007/09/11/inippu-kozhukkattai-vinaayagar-chathurthi/
-0-
தட்ஸ்தமிழ்.காம் feederல் வைத்துப் படிப்பது அதன் உடனடி செய்திகளுக்காக. எப்பொழுதாவது தலைப்பு ஆர்வம் எடுத்து உள்ளே சொடுக்கினால் படுகேவலமான பின்னூட்டங்களால் நிரம்பிவழியும். கொஞ்சம் இழப்பாக இருந்தாலும் அவர்கள் மறுமொழி மட்டுறுத்தல் வைக்காமல் இனி திறப்பதில்லை என்று பிடிவாதமாக படிப்பதை நிறுத்திவிட்டேன். அப்போது திடீரெனக் கிடைத்தது அதற்கு இணையாக அல்லது அதைவிட அருமையாக tamilvanan.com லேனாவின் ஒருபக்கக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ஒரு சமயம் என் மாமா சிரத்தையாக அவைகளைத் தொகுத்து எடுத்துவைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார். இணையத்திலேயே கிடைப்பதற்காக சென்றவாரம் மிகவும் மகிழ்ந்துபோனேன். அப்புறம்தான் வரிசையில் சமையல்குறிப்பும்வர அதில் நான் எடுத்தபடம். சந்தேகப்பட்டு கீழே இருக்கும் வேறு சில பழைய குறிப்புகளையும் சுட்டிப் பார்த்தால் பல இடங்களில் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்த படங்கள். இரண்டை மட்டும் மாதிரிக்கு கீழே இந்த வலைப்பதிவின் சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன்.
http://www.tamilvanan.com/content/2009/02/27/samayal-6/
https://mykitchenpitch.wordpress.com/2007/04/18/vatral-kuzambu-2-manaththakkaali-vaththak-kuzambu/
http://www.tamilvanan.com/content/2008/11/07/20081107-chettinadu-samayal/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/paagarkkaai-curry/
-0-
‘அம்மாவின் சமையல்’ என்ற பெயரில் ஒரு வேர்ட்பிரஸ் பதிவு (எனக்குப்)புதிது. டேஷ்போர்டில் பார்த்துவிட்டு ஆர்வமாக உள்ளே போனால் முதல் பக்கத்திலேயே என் படங்கள் முகத்தில் அறைகின்றன.
http://top10samayal.wordpress.com/2009/02/12/bitter-guard-kuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2007/08/08/uppuchchaar-1/
https://mykitchenpitch.wordpress.com/2008/03/29/vaazhaiththandu-mor-koottu/
இப்போதெல்லாம் படங்களில் top10samaiyal என்ற லேபிளுடனேனே வருகின்றன என்பது கூடுதல் ……
http://top10samayal.wordpress.com/2009/03/06/morkuzhambu/
https://mykitchenpitch.wordpress.com/2008/04/01/mor-kuzhambu/
இன்றைக்குப் பார்த்த பதிவில் கொஞ்சம் பெரியதாகவே லேபிள்….
http://top10samayal.wordpress.com/2009/03/20/potato-fry/
https://mykitchenpitch.wordpress.com/2007/02/07/chinna-urulai-kizangu-roast/
வாழ்க!
பி.கு: பல ஆங்கிலப் பதிவுகளில் அறிவிக்காமலே என் படங்களைப் பார்த்ததால் தான் வலப்பக்கம் நிரந்தரக் குறிப்பு 1 சேர்த்தேன். அப்புறமும் தமிழ் (படிக்கத்) தெரியாதவர்கள் எடுத்துப் போட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடுவேன்.
ஃபீலிங்ஸ் என்று ஒரு புது ‘வகை’ ஆரம்பித்து இந்தப் பதிவைச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் என் ஃபீலிங்ஸ் என்ன என்று எனக்கே தெரியவில்லை. 😦
திங்கள், மார்ச் 23, 2009 at 8:10 பிப
ஹ்ம்ம்… கஷ்டம்தான் ஜெ. விட்டுத் தள்ளுங்க. அதை விட அங்கேர்ந்து நீங்க சுட்டீங்களான்ற கேள்விகளை எதிர்நோக்கவும், இந்த சுட்டிய மட்டும் கொடுத்துட்டு டென்ஷன் ஆகாம ஸ்மைலி போட்டுட்டு சமாளிக்கவும் கூட ரெடியாகிக்குங்க.. வலையுலக அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… 😉
திங்கள், மார்ச் 23, 2009 at 9:57 பிப
Hello Jayasree
Ungalin ‘Thalikkum Osai’yai konja naatkalukku munbu thaan parthen..its sad that your pictures are being taken without your consent.. I suggest you to leave a “Do Not Copy” mark in you blog..
Continue your amazing work… All the Best…
திங்கள், மார்ச் 23, 2009 at 10:22 பிப
மிகவும் கண்டிக்கப்படவேண்டிய காரியம். இப்படிக்கூட அல்பங்களாய் இருக்கிறார்களே. நீங்கள் உடனே அவர்களுக்கு கண்டித்து படங்களை அகற்றச்சொல்லி எழுதுங்கள். சிலபேர் தெரியாமல் கூட போட்டிருக்கலாம் (;-)) ஒரு ஹோப்தான்…)
மற்றபடி என்னடா புதுசாய் மிஸ்ஸியம்மா போட்டோக்கள் எல்லாம் இப்போ பிராண்டிங் செய்து வருகிறதே என்று யோசித்திருந்தேன். இப்போது புரிகிறது. பஜார்ல உஷாராய் இல்லைன்னா நிஜார் காணாமல் போய்விடும்.. இந்த மாதிரி திருடங்கள் இன்னும் பெரிய லெவலில் பதிப்பகங்களே நடத்துகிறார்களே உங்களுக்கு அது பற்றி ஏதாவது தெரியுமா?? ;-))
செவ்வாய், மார்ச் 24, 2009 at 7:34 முப
இந்த இலக்கியத் திருட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
செவ்வாய், மார்ச் 24, 2009 at 2:07 பிப
ஏதோ படங்களை தானே சுட்டாங்கன்னு லேசா எடுத்துகுங்க.
பெயிண்ட்னு ஒரு வஸ்து உங்க கணினில கண்டிப்பா இருக்கும். அதுல நீங்க எடுக்கற போடோவை திறந்து உங்க ராஜ முத்திரையை (கையெழுத்து தான்) பதிச்சிடுங்க.
அப்புறம் எவன் சுட்டாலும் நம்ம முத்ரையோட தான் சுட்டாகனும். (அவனுக்கும் பெயிண்ட் தெரிஞ்சிருந்தா ரப்பர் வெச்சு அழிச்சுடுவான்).
ஹபியின் கமண்டை பாத்து எனக்கு சிரிப்பே வரலைன்னு சமூகத்துக்கு தெரிவிச்சுக்கறேன்.
செவ்வாய், மார்ச் 24, 2009 at 4:47 பிப
ஜெயஸ்ரீ
திருடுவதோ அல்லது காப்பி அடிப்பதோதான் மிக சிறந்த பாராட்டுன்னு கேட்ட நினைவு. குறிப்பே பேர் மாத்தி போட்டாலும் கண்டுபிடிக்கிறவரை சொந்த படைப்புத்தானே.
செவ்வாய், மார்ச் 24, 2009 at 8:16 பிப
ஹாய் ஜெயஸ்ரீ,
நலமா? சில காரணங்களால் அதிகம் கணினி பக்கம் வர முடியவில்லை. அப்பப்ப ரெசிபி பார்க்க வருவேன். பின்னூட்டம் போடாம ஏதோ மிஸ்ஸான உண்ர்வு. இப்போதான் திருப்தியா இருக்கிறது.
புதன், மார்ச் 25, 2009 at 8:14 முப
வன்மையாக கண்டிக்க வேண்டிய காரியம் இது…எடுக்கிறது தான் எடுக்கிறார்கள்..கீழே உங்கள் பெயரை போட்டால் என்னவாம்…
அல்பங்கள்..
வியாழன், மார்ச் 26, 2009 at 7:09 முப
மிகவும் வருந்த வைக்கிற விஷயம் ஆனால் கோடிக்கணக்கான ரூபா போட்டு எடுக்கிற சினிமாவையே திருட்டு CD எடுக்கும்போது,இது ஜுஜுபி.சிரித்து பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்! இது ‘ஜெயஸ்ரீ வலைதளத்தில் திருடப்பட்டதுஎன எல்லா பாத்திரங்களிலும் பெயர் வெட்டி வைத்துகொள்ளுங்கள்
வியாழன், மார்ச் 26, 2009 at 9:34 பிப
குசேலன் படத்துக்கு நான் எழுதுன விமர்சனத்தையும்,( http://jeyakumar-srinivasan.blogspot.com/2008/08/2.html ) பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன் அவர்களது குசேலன் பட விமர்சனத் தலைப்பையும் (http://pitchaipathiram.blogspot.com/2008/07/blog-post_31.html) அப்படியே ஒரு வலைப் பத்திரிக்கை வெளியிட்டுவிட்டு அதை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கேட்டதற்கு எடுக்க முடியாது, வெண்டுமானால் உங்கள் (எனது) தலைப்பையே வைத்து விடுகிறோம் என்று பெரியமனது செய்து சொன்னது..அதையும் செய்யாமல் எனது பெயரை மட்டும் போட்டது.. அதுவும் ஆசிஃப்மீரான் போன்றோர் சொன்ன பின்பு.. அந்தப் பதிவு இங்கே (http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=3131&Itemid=71) இதெல்லாம் சர்வ சாதாரனமாக நடக்கிறது.. தமிழ் இந்து(www.tamilhindu.com) வலைப் பத்திரிக்கையின் சில படைப்புகளை நன்றி கூட தெரிவிக்காமல் சில பிளாக்கர்கள் மறுபதிப்பு செய்திருந்ததை பர்த்தேன்
வியாழன், மார்ச் 26, 2009 at 9:37 பிப
எதற்கு மேற்கூறிய கதையெல்லாம் என்றால் உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்று தெரிவிக்கவே.. மனம் தளரவேண்டாம்.. உங்கள் பதிவுகள் ருசியாய் இருப்பதால்தானே திருடுகிறார்கள்… அப்படி நினைத்து மனத்தை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 😦 வேறு என்ன செய்ய…
வெள்ளி, மார்ச் 27, 2009 at 10:03 முப
d Jm,
philosophical-aa parthal -AAm Ivvan MUDALVAN endru Kandavar- SRI ALAVANDAR-in vaadam ninaivirkku varugindradhu.
while discussing the issue of plagiarism of chiklit miss visvanathan ,my father consistently & flatly said ‘nothing wrong’.Thiruvillayadal kalla-thil irundhe nadakkum nigazhvu…
Irundalum- HP &-ambi-Kum oru nalla hot & spicy reply is long due..
sundaram
வெள்ளி, மார்ச் 27, 2009 at 10:05 பிப
1.http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html
2.http://labnol.blogspot.com/2007/09/how-to-find-email-addresses-of-people.html
3.http://www.labnol.org/internet/detect-rss-feed-plagiarism/7876/
4.//Content Theft on WordPress
Now let’s consider a similar scenario but with WordPress.com. When Arpit stumbled upon a WordPress blog copying his articles, he opened a new thread in the WordPress.com support forums. The staff moderators were quick to react and they deleted the duplicate posts within 15 minutes of the complaint.
This may have been an exceptionally quick response as WordPress.com too requires you to send formal DMCA notices, but the fact that they have a dedicated staff who monitors and responds to such kind of complaints even in public user forms makes things a little easy for content publishers who may be victims of plagiarism.//
http://www.labnol.org/internet/blogging/content-theft-on-blogger-and-wordpress/4862/
சனி, மார்ச் 28, 2009 at 11:07 முப
என்ன சொல்றதுன்னு தெரியல. ஓண்ணும் பெருசா செய்ய முடியாதுங்கறது தான் நிஜம். செய்யலாம். ஆனா ரொம்ப மெனக்கிடனும். ஒரு சண்டை முடியறத்துக்குள்ள இன்னோன்னு கிளம்பிடும். லஷ்மி அவங்க சொன்னதுதான் பிராக்டிகலி பாசிபிள். சாரி.
//ஹபியின் கமண்டை பாத்து எனக்கு சிரிப்பே வரலைன்னு சமூகத்துக்கு தெரிவிச்சுக்கறேன்.//
அம்பி கமெண்ட பார்த்து எனக்கு ஒரே சிரிப்புன்னு ரெண்டு சமுகத்துக்கும் தெரிவிச்சுகறேன்.
சனி, மார்ச் 28, 2009 at 10:43 பிப
d jm,
‘”பெரியார் ஒரு சகாப்தம்” என்ற புத்தகத்தில் நான் வரைந்த ஓவியம் அட்டைப்படமாக
இடம்பெற்றிருந்ததைகண்டேன். நம்முடைய ஒரு படைப்பை யாருடையதைப் போன்றோ சந்திக்கும் ‘இன்ப அனுபவத்தை’ வாழ்க்கையில் முதன்முதலாகக் கண்டேன். உள்ளே “அட்டை படம்” என்று வேறு யாருடைய பெயரோ இருந்தது. அங்கு உள்ள மேனேஜரிடம் இதை பற்றி கேட்டேன். என்னை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு, தலையை ஒரு முறை ஆட்டிவிட்டு ஏதோ கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டார்.
நான் வரைந்த படத்தை ஒருவர் உபயோகிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எங்காவது ஒரு மூலையில் அதை வரைந்த ஆளின் பெயரைப் போடுவதில் என்ன மனச் சிக்கல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை’.
Ezhuda-ninaithu-vittu-ponadhu..
sundar again.
புதன், ஏப்ரல் 1, 2009 at 11:35 முப
Sundaram:
இந்தப் பதிவுக்கு எந்தக் கருத்தும் சொல்ல நினைக்கலை.
ஒன்றிரண்டு வருஷங்கள் முன்னால காப்பிரைட் குறிச்சு குதிச்ச தமிழ் இணையம் இப்ப இல்லை, ரொம்ப நெகிழ்ந்து போச்சுபோலன்னு வந்திருக்கற மறுமொழிகளை வெச்சு முடிவுபண்ண முடியாது. எடுத்துப்போட்டது என்ன மாதிரி படங்கள் என்பதை வெச்சு வர உளவியல் இது. அதனாலயே இதைப் புறக்கணிக்கறேன்.
இணையம்னா இலக்கியமும் புத்தகமும் இசங்களும் ஈயங்களும் மட்டும்னு நினைக்கற முற்போக்கு நான் இல்லை. அதைத்தாண்டிய உலகமும் உணர்வுகளும் ரசனைகளும் நிறைய இருக்கு.
உங்களுக்கு நடந்தது வருந்தத் தக்கது. ஊர்ல புத்தகத்துல என் படங்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியெல்லாம் ஏற்படலை. இதெல்லாம் என் படம்மான்னு சொன்னா எங்கம்மாவே நம்பலை. 😦 தமிழே படிக்கத் தெரியாதவங்க கூட விக்கிபீடியாவுல உபயோகிக்கவும், தன் சொந்த உபயோகத்துக்கும் என்கிட்ட கேட்டு, உரிமைகளை தளர்த்தச் சொல்லி பிறகுதான் போடறாங்க.
இதெல்லாம் சட்டரீதியாவோ தார்மீக ரீதியாவோ பெரிய தவறுன்னு கூட இங்க சண்டை போடலை. ஆனா பத்திரிகைத் துறைல இருக்கறவங்களும் flickr காப்பிரைட் தெரிஞ்சவங்களும், தன் வலைப்பதிவுல தன் பதிவுப் பேரோட அந்தப் படங்களை முன்ஜாக்கிரதையா போட்டுக்கத் தெரிஞ்சவங்களும் அதையெல்லாம்விட முக்கியமா தமிழ் படிக்கத்தெரிஞ்சும், வலதுபக்கப் பட்டைல நான் குறிப்பு கொடுத்திருந்தும் (இவங்களெல்லாம் தெரியாம செஞ்சிருப்பாங்கன்னு சொல்மண்டி மாதிரியோ, நம்பளொட படம்தான் நல்லா இருந்திருக்கும் போலனு பத்மா மாதிரியோ நினைக்கற அளவுக்கு அப்பாவி இல்லை நான்) எடுத்துப்போட்டுகிட்டே இருக்காங்களேன்னு தான் இந்தப் பதிவு. நான் எடுக்கக் கூடாதுன்னு யாரையும் சொல்லலை. எல்லாரும் உபயோகிக்கத்தானே பொதுவுல போடறதே. ஆனா ஒரு வார்த்தை இங்க சொல்லணும்னு எதிர்பார்க்கறேன். My point is as simple as that of this post heading– ‘என் பேச்சை யாருமே….
போகட்டும், திருவிளையாடல் காலத்துல நடந்த நிகழ்வு என்ன? எனக்குத் தெரியலையே.
Prakash: மிக்க நன்றி. எந்த ஆக்ஷனும் எடுக்கற அளவுக்கு ஆர்வம் இல்லை. அதுக்காக என்வீட்டு நோட்டீஸ் போர்டுல கூட போடாத அளவுக்கு நான் இனா வானா இல்லை. இனியும் வேற எங்கயாவது என் படங்களைப் பார்த்தா இங்க போட்டுவைப்பேன். யார் கண்டா, நானும் ‘வளர்ந்து’ ஒருநாள் பெரிய பதிவரானதும் எல்லாருக்கும் உரிமைகளைத் திறந்துவிடுவேன். 🙂 இப்பதைக்கு அல்பமா இருக்கத்தான் ஆசைப்படறேன்.
ஞாயிறு, ஏப்ரல் 5, 2009 at 3:39 பிப
d jm,
Thiruvilaiyada-lil DHARUMI(stellar performance by super actor NAGESH) character-i ninaivu-paduthinen… Andha nilayil yaru-kenum useful-aa irundhal ungal manam magischi-adaiya-kkudum..
Naan ezudhiya -2 nd pin-padhivu-Desikanin-http://www.desikan.com/blogcms/?query=periyar&amount=0&blogid=1&x=39&y=10… it is not my work..i thought u might have read..
Ungaludya- Adhangam is well written with correct heading..
recollecting an actual episode -oru thadavai veetil thirudiya items PERIYAVALIN ARULINAL thirumba kidaiththu-ninaivu varugindrthu-
Thirudanai-parthu thirun-dhavittal padal varigali ninathu marappoum.
‘நானும் ‘வளர்ந்து’ ஒருநாள் பெரிய பதிவரானதும் எல்லாருக்கும் உரிமைகளைத் திறந்துவிடுவேன்.’
Vamanan-to THIRUVIKKARA-managa Vazhuthugal.
sundaram