தேவையான பொருள்கள்:
வெந்தயக் கீரை – 2 கப்
வெங்காயம் – 1
பயத்தம் பருப்பு – 3/4 கப் *
தக்காளி – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- வெந்தயக் கீரையை தனித் தனி இலையாக உதிர்த்து, தண்ணீரில் அலசி, நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
- பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளிக்கவும்.
- அலசிய கீரையைச் சேர்த்து வதக்கினால் ஒரே நிமிடத்தில் சுண்டிவிடும்.
- நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
- உப்பு, மஞ்சள்தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, நிதானமான தீயில் வேக வைக்கவும்.
- தக்காளி வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, கரம் மசாலா, அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
- சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சூடாகப் பரிமாறலாம்.
* பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம்.
* எலுமிச்சைச் சாறுக்குப் பதில் வதக்கியதும் சிறிது புளித்தண்ணீர் சேர்த்தும் கொதிக்கவிடலாம் அல்லது 2 டீஸ்பூன் மாங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதம், சப்பாத்தி வகைகள்..
திங்கள், மார்ச் 23, 2009 at 1:53 பிப
இந்த மேத்தியை ஏற்கனவே நீங்க தாளிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.
இது என்ன ரீமிக்ஸ் ரவுண்டா? 🙂
இன்னுமா எக்ஸாம்ஸ் முடியல?
திங்கள், மார்ச் 23, 2009 at 6:49 பிப
ambi: ஏற்கனவே இங்க தாளிச்சிருந்தா பத்ரிகைக்கு அனுப்பியிருக்கமாட்டேன். எக்ஸாம்ஸ் முடிஞ்சு லீவு விட்டாச்சு. எனக்கு மேய்ச்சல் எக்ஸாம். 😦 [இதுங்களுக்கு எனர்ஜி எங்கேருந்து வருது?]
செவ்வாய், மார்ச் 24, 2009 at 2:26 முப
i hope u got my prev msgs … if so dint get any replies.. incase u dint, then i’d def appreciate it if u cud give me ur mail id…. be nice to stay in touch
செவ்வாய், மார்ச் 24, 2009 at 11:18 முப
“[இதுங்களுக்கு எனர்ஜி எங்கேருந்து வருது?]”
இதிலென்ன சந்தேகம்.?? எல்லாம் நாம செஞ்சு போடற நள பாகத்திலேருந்துதான்…இப்படிக்கு மேய்ச்சல் சென்னை கிளை..இதுக்கே இந்த எனர்ஜினா, நல்ல சாப்பாடு சாப்பிட்டா குழந்தைகள் எப்படி இருப்பாங்கனு சொல்ற / சொல்லப் போற ரங்கமணிகளுக்கு ஒரு வார்தைதான் இருக்கு..நாங்கெல்லாம் ‘TAKE IT EASY” POLICY
புதன், மார்ச் 25, 2009 at 8:12 முப
பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு…முயற்சி செய்திட்டு சொல்றேன்.நன்றி 🙂