எல்லாரும் எனக்கு friend தான். எல்லாருக்கும் நானும் friend தான். இதுல எல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை.
அதனால நான் யாருக்கும் yaari வழியா Friend Request எல்லாம் அனுப்பலை. [எனக்கே என் பேர்ல ரெண்டு வந்திருக்கு :(] இந்த மாதிரி இணையச் சேவைகள்ல எனக்கு நம்பிக்கையும் இல்லை; நேரமும் இல்லை. அதனால accountம் இல்லை.
Again, நான் யாருக்கும் அனுப்பலை. எனக்கு யாராவது அனுப்பினாலும் திறக்கமாட்டேன். காலைலேருந்து வர கடிதங்களைப் படிச்சு நடந்ததைப் புரிஞ்சுக்க இவ்ளோ நேரமாச்சு. Sorry!
வியாழன், பிப்ரவரி 12, 2009 at 8:20 முப
Ahaa. join the club.
பேர் தெரியாதவாளேல்லாம் நான் உனக்க் சினேகிதமா இருக்கேன். உன் கடிதாசு கிடைச்சுதுன்னு சொன்னா கோபம்தான் வரது.:)
நான் அதெல்லாம் டெலிட் செய்துடறேன்.
வியாழன், பிப்ரவரி 12, 2009 at 10:22 முப
எனக்கும் ஒரு மடல் வந்தது!
வியாழன், பிப்ரவரி 12, 2009 at 10:26 முப
ரங்கமணிக்கே வந்திருக்கு.:P
‘அடங்கமாட்டியா நீ’ன்னு திட்டு. 😦
//எனக்கும் ஒரு மடல் வந்தது!//
இதை நான் அனுப்பலைங்கறதுக்கு இந்தப் பின்னூட்டமே சாட்சி!
வெள்ளி, பிப்ரவரி 13, 2009 at 10:20 முப
ரெண்டுபேரும் அடங்கமாட்டீங்களா?
எனக்கு ஒரு மடல் வரவில்லை. 😦
(என்னடா விஜய் இப்படி குருட்டாம்போக்கு க்ரூப் மெயில்கூட உனக்கு வரமாட்டேங்குது? நீ மட்டும் friend இல்லையா?)
இந்த வலைப்பதிவின் மிகச் சிறிய பதிவு. வாழ்த்துகள்! 🙂
வெள்ளி, பிப்ரவரி 13, 2009 at 10:35 முப
ரேவதி: உங்களை மாதிரி நல்ல உள்ளங்களுக்கு அப்படி வருமாயிருக்கும். எனக்கு, எல்லாரும் வெறியாகி, ‘இதெல்லாம் ரொம்பத் தேவையா? நீ வேற ஏன் உயிரை வாங்கற?’ மாதிரி கடிதங்கள்தான் வருது. 😦
Vijayram: No hard feelings.
In my guess, யாஹூ கால பழைய நண்பர்கள் ஐடிக்குத்தான் போயிருக்கு. நீங்களெல்லாம் ஜிமெயிலர்கள். அதனால வரலையா இருக்கும். 🙂 யாஹூல இருந்த எல்லா முகவரியையும் அழிச்சுட்டேன். வேற என்னசெய்யணும்னு தெரியலை.
வெள்ளி, பிப்ரவரி 13, 2009 at 11:00 முப
எனக்கும் ஒரு மடல் வந்தது:)))))
சனி, பிப்ரவரி 14, 2009 at 12:47 முப
இருங்கங்க. எடாகூடமா எங்க ஜிமெயில் அட்ரஸ் எல்லாம் அழிச்சிராதீங்க. எங்களுக்கும் ஒரு சான்ஸ் கெடைக்கட்டுமே. அப்புறம் சாவகாசமா அழிச்சிக்கலாம். நாங்களும் சொல்லிகலாம்ல. ஜெ வே யாரி மூலமா கேட்டங்க. பட் நாங்கதான் கொஞ்சமா பிஸியா இருந்ததால விட்டுடோம்ன்னு.(சாரிங்க.. ஜஸ்ட் ஆன் த லைட்டர் சென்ஸ்)
//ரங்கமணிக்கே வந்திருக்கு.
‘அடங்கமாட்டியா நீ’ன்னு திட்டு.//
சான்ஸே இல்லாம இது டாப் ஹிட்டுங்க.
சனி, பிப்ரவரி 14, 2009 at 1:10 முப
அப்புறம் இன்னொண்ணு,
//haranprasanna Says:
வியாழன், பெப்ரவரி 12, 2009 at 10:22 மு.பகல்
எனக்கும் ஒரு மடல் வந்தது!//
//Jayashree Govindarajan Says:
இதை நான் அனுப்பலைங்கறதுக்கு இந்தப் பின்னூட்டமே சாட்சி!//
அது சரி…. அப்டின்னா….
//Jayashree Govindarajan Says:
வியாழன், பெப்ரவரி 12, 2009 at 10:26 மு.பகல்
ரங்கமணிக்கே வந்திருக்கு. 😛
‘அடங்கமாட்டியா நீ’ன்னு திட்டு. :)//
“”இதை”” நீங்கதான் அனுப்பி இருக்கீங்கங்கறத்துக்கு இதுவே சாட்சி ஆச்சே!!! ( வேற யாரு ரங்கமணிய இந்த அளவுக்கு போட்டு வாங்குவாங்க??) 😛
திங்கள், பிப்ரவரி 16, 2009 at 7:48 பிப
வழக்கமா தனிப்பட்ட மடல் இல்லாம பொத்தாம் பொதுவா வர மடல் எல்லாம் கவனிக்கும் வழக்கம் இல்லை. ஆனாலும் விடாமல் நீங்கள் அனுப்பியதாக ஐந்தாம் முறையும் விடாக்கண்டனாக மடல் வந்தால் என்ன செய்ய? அதிலும் என் அலுவலக முகவரிக்கு 5ம்(வீட்டு முகவரி மடல்கள் அங்கே பார்வார்ட் செய்திருப்பதால்) வீட்டு முகவரிக்கு ஐந்துமாக 9 முறை உங்களை நினைவு படுத்தியது. அட நல்ல யோசனையாக இருக்கிறதே என்றுதான் நினைத்தேன். யாரியும் லின்க்டென்னும் இன்ன பிறவும் ஆரம்பித்து வைப்பவர்களை கோண்டனமா பேக்கு கூட அனுப்ப முடியாது. மூடிவிட்டார்களாம்.
திங்கள், பிப்ரவரி 16, 2009 at 10:11 பிப
Vijay, உங்க ஐடியை யாஹூல வெச்சு உங்களைக் கொன்னிருக்கணும். 🙂
பத்மா, நானும் யாரி வகையறா கடிதங்களை அழிச்சுடுவேன். இந்தத் தடவை முதல்கடிதத்தை படிச்சு அழிச்சபோது தானே அடுத்த கடிதத்துக்குப் போய் ரணகளமாயிருக்கு. முதல் 4 நாள் ரொம்ப அதிர்ச்சியாவும் மன உளைச்சலாவும் இருந்தது. இப்ப சகஜமாயிட்டேன். யாரி, யாஹூ அட்ரஸ்புக்ல இருக்கற ஐடி மட்டுமில்லாம க்ரூப் கடிதங்கள்ல இருக்கற எனக்கு சம்பந்தமில்லாத மக்களுக்கெல்லாம் அனுப்பித் தள்ளியிருக்கு. இதுல தொடர்ந்து ரிமைண்டர் வேற. 🙂 தலைக்குமேல வெள்ளம்.
பலருக்குப் பிடிச்ச வரி- “Please respond or Jayashree may think you said no :(”
உனக்கு நோ சொல்றது அவ்ளோ சுலபமான்னு மக்கள் மகிழ்ச்சி. யாரி அனுபவங்களை எல்லாம் சேர்த்தா இன்னும் 4 பதிவு எழுதலாம். உலக நன்மைக்காக எழுதாம விட்டிருக்கேன்.
வியாழன், பிப்ரவரி 19, 2009 at 1:20 முப
எனக்கும் வந்தது. டெய்லி ஜெயஸ்ரீ தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொல்லிட்டே இருக்கு :-))
வியாழன், பிப்ரவரி 19, 2009 at 1:24 முப
யாஹூன்னு இல்லைங்க.. என்னோட ஜிமெயில்ல இருக்கிற எல்லாருக்கும் போயிருக்கு. யாரி ல இருந்து எது வந்தாலும் அது ஸ்பேமாகக் கடவதுன்னு சாபம் ஐ மீன் ஒரு ரூல் போட்டுட்டேன்.
இதுக்கு எல்லாம் பயந்து அட்ரெஸ் டெலீட் பண்ணுவாங்களா ? அசராமா யாரி ல இருந்து வர்ர எல்லாத்தையுமே ஸ்பேம் அப்படின்னு சொல்லிட்ட தீர்ந்தது சோதனை!
சொல்ல மறந்துட்டேன். வெல்கம் பேக் 🙂
வியாழன், பிப்ரவரி 19, 2009 at 4:24 பிப
ஐயப்ஸ், என்னடா யாஹு பேரைச் சொல்லியும் இன்னும் ஐயப்ஸ் பொங்கலையேன்னு பார்த்தேன். சரி சரி ஜிமெயிலும் தான். 🙂
வியாழன், பிப்ரவரி 19, 2009 at 8:34 பிப
ஐப்ஸ், உங்க பெயரிலும், ஜெயஸ்ரீ பெயரிலும் யார்ரீ அழைப்பு வந்துள்ளது.யாஹூ , ஜீ மெயில் ரெண்டுலையும். இதுல காமடி என்னவென்றால் ஜெயஸ்ரீ பெயரில், என் கணவரின் யாஹூ மெயில் பாக்சிலும் ஒன்று இருந்தது 🙂
வியாழன், பிப்ரவரி 19, 2009 at 10:08 பிப
:))) உஷா, அதிர்ச்சி, மன உளைச்சல், சமாதானம், அப்படித்தான் அனுப்புவேன்-பிடிவாதம், பரவாயில்லை சாவட்டும்… புன்னகை,.. அடக்கமுடியாத சிரிப்பு வரைக்கும் எல்லா உணர்வும் தாண்டிட்டேன். இப்ப கடைசி ஸ்டாண்ட்-
//..ஜெயஸ்ரீ பெயரில், என் கணவரின் யாஹூ மெயில் பாக்சிலும் ஒன்று இருந்தது//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! 🙂
புதன், மார்ச் 11, 2009 at 2:30 முப
hi jayashree
this is subha.. frm hyd. i dint want make it overly familiar here.. and so keeping it very simple …nice to c ur blog. unfortunately , i cant read or write tamil.. so i cant really tell what the recepies are abt, but the pics look delish.
hey when u get a chance so mail me ur email id . mine is subha21@rediffmail.com.
talk to u soon.