தேவையான பொருள்கள்:
பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)
வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
வெள்ளைக் கொத்துக்கடலை அல்லது சிறிய அளவு கருப்புக் கொத்துக்கடலை உபயோகிக்கலாம். ஊறவைத்த கொத்துக்கடலை, துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
-
பாகற்காயை முற்றலாக இருக்கும் குடல் பகுதிகளை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
-
2 டீஸ்பூன் எண்ணெயில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு, தனியா என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
நறுக்கிய பாகற்காயுடன் வேகவைத்த கொத்துக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிதானமான சூட்டில் புளிநீரில் வேகவைக்கவும்.
-
காய் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
-
விரும்பினால் வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
-
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சூடான நெய்(நல்லெண்ணெய்), பருப்பு சாதம்…
சனி, மார்ச் 15, 2008 at 7:58 பிப
பாவக்காய் பிட்லை பண்றது இவ்வளவு சுலபமா ?? ஆச்சரியம்தான்..
எங்கம்மாவும், அக்காவும் பண்ற பிட்லைக்கு முன்னால நீங்க சொல்றமாதிரி செஞ்சா அவ்வளவு நல்லா வருமான்னு தெரியல.. இருந்தாலும் எங்க ஊட்டுக்காரமாவ செய்ய சொல்லிப்பாக்குறேன்
திங்கள், மார்ச் 17, 2008 at 12:46 பிப
Jeyakumar,
///எங்கம்மாவும், அக்காவும் பண்ற பிட்லைக்கு முன்னால நீங்க சொல்றமாதிரி செஞ்சா அவ்வளவு நல்லா வருமான்னு தெரியல..///
எனக்கு சந்தேகமே இல்லை. உங்க மறுமொழி தொனியை வெச்சே சொல்றேன்(“இந்தக் குறிப்பு சந்தேகம்தான். எங்க அம்மாவும் அக்காவும் நல்லா செய்வாங்க, ஊட்டுக்காரம்மா இனிமேதான் செய்யக் கத்துக்கணும்….”), நீங்க ‘அவிங்க’ளோட உறவுக்காரங்கதான். உங்க வீடுகள்ல பிட்லை சிறப்பா செய்வாங்கன்னும் நம்பறேன். உங்கவீட்டு செய்முறை எப்படின்னு கேட்டு சொல்லுங்களேன். (நிஜமாத்தான்).
திங்கள், திசெம்பர் 16, 2013 at 7:48 பிப
romba nalla sonninga ethil naan kadalai mattum pottathu ellai .