கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல்த் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும் வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகுஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம். அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும். மூலநோய்க்கு மிகவும் நம்பிக்கையான மருந்து என்று சொல்கிறார்கள்.
தேவையான பொருள்கள்:
கருணைக் கிழங்கு – 1/4 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
- கிழங்கைக் கழுவி அப்படியே முழுதாக அரிசி களைந்த நீரில் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மேல் தோலை நீக்கி, கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
- புளியை நீர்க்கக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
- மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.
- குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும்.
- கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய், பருப்பு கலந்த சாதம், தயிர் சாதம், உப்புமா, பொங்கல் வகைகள்…
வியாழன், மார்ச் 13, 2008 at 12:44 பிப
Thaalikkumpodhu podiyaga narukkiya chinna vengayam serthaal migavum nandraaga irukkum.
Shobha
வியாழன், மார்ச் 13, 2008 at 1:24 பிப
Shoba, உண்மை. கருணைக்கிழங்கோட சின்ன வெங்காயம் எப்பவும் நல்ல காம்பினேஷன்; மருத்துவத்துலயும். நினைவுப்படுத்தினதுக்கு நன்றி.
வியாழன், மார்ச் 13, 2008 at 2:44 பிப
கருணைக்கிழங்கு மசியல் என் அம்மாவின் favourite.ஆனால் மிளகாய்த்தூள், சீரகம்,வெந்தயம் எல்லாம் சேர்ப்பதில்லை.aaனாலும் கருணைக்கிழங்கு மசியல் ஒரு தனீ சுவைதான்.
அன்புள்ள கமலா
வியாழன், மார்ச் 13, 2008 at 2:54 பிப
kalyanakamala,
:(( அனுதாங்கள். உங்களுக்கு ஆறுதலை கடவுள்தான் கொடுக்கணும். நீங்க இங்க கொடுக்கற ஐடில கடிதம் எழுதினேன். திரும்ப வந்துடுச்சு. அப்றம் நெட் பக்கமே வராம இருந்துட்டேன்.
முழுக்க மிளகாயே சேர்ப்பாங்களோ? எனக்கு கருணைக் கிழங்கு மசியல் ரொம்பப் பிடிக்கும். காபியைத் தவிர எல்லாத்துக்கும் தொட்டுப்பேன்.
வியாழன், மார்ச் 13, 2008 at 3:47 பிப
பச்சை மிளகாயும் இஞ்சியும்தான்!கடுகு பெருங்காயம் தாளிதம். கொத்தமல்லி வாசனைக்கு.என்னன்னு சொல்லரது?போன தடவை நான் அக்டோபர்ல போனபோது கூட புரட்டாசி சனிக்கிழமைக்கு எள்ளுசாதமும் ,வாழைதண்டு மோர்க்கூட்டும் செய்து போட்டார்கள். நாங்கள் சகோதரிகள் நால்வர், சகோதரர்கள் மூவர். என்னிடம் தனி நம்பிக்கை. அதை அடைய நான் என்ன செய்தேன்னு எனக்கே புரியவில்லை.என்னவோ உங்களிடம் சொல்லணும்ன்னு தொன்றியது சொல்லிவிட்டேன்.என் மெயில் id kalyan_m@yahoo.com
kalyanakamala@gmail.com
கமலா
வியாழன், மார்ச் 13, 2008 at 7:00 பிப
யக்கா,
//அடுப்பில் வாணலியில், எண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும். //
//உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்.//
ரெண்டுத்துக்கும் நடுவால மசிச்சு வச்ச கிழங்கை சேக்கணும்ங்கற அதிமுக்கியமான விஷயத்தையே விட்டுட்டீங்களே?
பி.கு: உங்க பதிவுன்னாலே உடனே கண்ணுல விளக்கெண்ணய குடம் குடமா கொட்டிக்கிட்டு படிக்கற பல பேரில் நானும் ஒருத்தியாக்கும் – என்ன என்னோட டவுட்டெல்லாம் சமையல் குறிப்பை மட்டுமே….ஏஏஏஏஏ இருக்கும், அத்தோட அதை சொந்தப் பேரிலேயே வந்தும் கேப்பேன். அவ்ளோதான் வித்தியாசம். 😉
வியாழன், மார்ச் 13, 2008 at 7:31 பிப
//மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நிதானமான தீயில் சேர்ந்தாற்போல் வரும்வரை கொதிக்கவிடவும்//
கமலா
வியாழன், மார்ச் 13, 2008 at 7:45 பிப
லஷ்மி, நீங்களும் பாஸ். 🙂 ஜெயஸ்ரீக்கு அடுத்த சீட் உங்களுக்கு. பாய்ஸ் வேஸ்ட். உங்க படத்துல குழம்பு மஞ்சளா இருக்கு, கூட்டு சிவப்பா இருக்குன்னு கலர் பார்த்து சொல்லத்தான் லாயக்கு. :)))
kalyanakamala, சில நுணுக்கமான உணர்வுகளுக்கு நமக்கில்லை, அவங்களுக்கே காரணம் தெரியாது. நீங்க கொடுத்து வெச்சிருக்கீங்க. அவ்ளோதான்.
லஷ்மி சொன்னதை நான் திருத்தி முடிச்சதும் நீங்க பாத்து மறுமொழி சொல்லியிருக்கீங்க. நான் முதல்ல கிழங்கை சேர்க்கலை. 😦
வியாழன், மார்ச் 13, 2008 at 8:35 பிப
//உங்க படத்துல குழம்பு மஞ்சளா இருக்கு, கூட்டு சிவப்பா இருக்குன்னு கலர் பார்த்து சொல்லத்தான் லாயக்கு. :)))//
ஏதோ எங்களுக்குத் தெரிஞ்சத சொல்றோம்.
நாங்கல்லாம் ஆரம்பத்தில் இருந்தே அன்னப்பறவையாவே இருந்து பழகிட்டோம். பாலகுமாரனில் இருந்து ‘கடவுள்’ விஷயத்தை விட்டுட்டு மத்ததைப் படிக்கிறது அதற்கு ஒரு உதாரணம்.
நானும் விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுத்தான் வேற விஷயம் எதுனா எழுதுவாங்கன்னு உட்கார்ந்திருக்கிறேன்.
அக்கா இந்தப் புடலங்காயை நறுக்கிப் போட்டு கறி செய்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா(முன்னாடியே போட்டிருந்தீங்கன்னா ஒரு சாரி) செய்து பார்க்கக் கூட தயார்.
சபதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு. 🙂
வியாழன், மார்ச் 13, 2008 at 8:57 பிப
Hi Jayashree,
This is Geetha here.I am a silent and regular visitor to U R blog.This is the first time i have leave my comments here.I have a doubt IS it OK to do this Masiyal with sepankizhangu? Bcoz here i didn’t get this kizhangu.Also if u know,plz tell me the english name of this veggie.I will try to get it.
Thanks,
Geetha
வெள்ளி, மார்ச் 14, 2008 at 12:06 முப
Jaysree,,,ennoda amma solvanga thayir sadadirkku karna kizhangu masiyal serathu enru..becoz karnakizhangodu thayir sadam sapital karal adhigamagividum..
வெள்ளி, மார்ச் 14, 2008 at 5:57 முப
குந்தவை, இப்படியெல்லாம் பம்மக்கூடாது. எப்படி கமெண்ட் போடுவது என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. எப்படி வேண்டுமானாலும் போடலாம்.
இந்த கருணைக் கிழங்கு மசியல் பொதுவாக கெட்டியாகத்தான் இருக்கும். ஆனால் கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதம் என்கிறார்கள். இதைத்தவறு என்று தைரியமாக எதிர்க்கவும். எதாவது பிரச்சினை வந்தால் யாராவது காப்பாற்றுவார்கள்.
அப்புறம் இந்த நிறம் வராது. மஞ்சள் நிறத்தில்தான் வரும் என்றும் சொல்லலாம். பயப்படக்கூடாது.
அப்புறம், சிவப்பாக இருக்கும் கருணைக்கிழங்குகூட அரிக்காது, அது கைவண்ணத்தைப் பொருத்தது என்று சொல்ல்வேண்டும். இதை யாராலும் நிரூபிக்கமுடியாது என்பதால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. கூடவே, என் அம்மா சமைத்து எத்தனையோ முறை உண்டிருக்கிறேன், அரித்ததே இல்லை என்று ஒரு செண்டிமெண்ட்டை சேர்த்துக்கொண்டால், படம் பிச்சிக்கிட்டு போகும்.
இல்லையென்றால், மசியல் சாம்பார் தெரியுமா என்று எதிர்க்கேள்வி கேட்கலாம். நீங்களே ரெஸிபி சொல்லுங்கள் என்பார்கள். சொல்லக்கூடாது. சொன்னால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். இவ்ளோதான் விசயம்!
மேலே ரெண்டுவரி, கடைசியில் ரெண்டு வரி, பின்னூட்டத்தில் ரெண்டு வரி படித்துவிட்டு கமெண்ட் போட்டுவிட்டேன். இதை நீங்களும் கற்றுக்கொள்ளவும். Free coaching உண்டு.
வெள்ளி, மார்ச் 14, 2008 at 9:20 முப
//இந்த கருணைக் கிழங்கு மசியல் பொதுவாக கெட்டியாகத்தான் இருக்கும். ஆனால் கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதம் என்கிறார்கள். இதைத்தவறு என்று தைரியமாக எதிர்க்கவும். எதாவது பிச்சினை வந்தால் யாராவது காப்பாற்றுவார்கள்.
அப்புறம் இந்த நிறம் வராது. மஞ்சள் நிறத்தில்தான் வரும் என்றும் சொல்லலாம். பயப்படக்கூடாது.//
இறக்கியதும் எலும்பிச்சைச்சாறு செர்க்கலாம் என்றும் சொல்லலாம்.
கமலா
வெள்ளி, மார்ச் 14, 2008 at 1:18 பிப
பிரசன்னா, இதான் டெம்ப்ளேட்டா? நாங்கூட என்னமோ சாரு தோஸ்துங்க கால வாரினாலும் கூட பரவால்லியே, வீட்டுல இருக்கற அம்மணிங்க புகழையாச்சும் குறைக்காம சொல்றாரே(எங்கம்மா இத சூப்பரா செய்வாங்க, எங்க அண்ணிய அசைச்சுக்க முடியாது வகையறா புகழ்மாலைகள்) அப்படின்னு உங்களை கொஞ்சம் ஒவர் எஸ்டிமேட் பண்ணிட்டேன்.
சனி, மார்ச் 15, 2008 at 9:55 முப
மோகன் தாஸ் தம்பி, புடலங்காய்க் கறி இங்க இருக்கு. https://mykitchenpitch.wordpress.com/2007/04/09/saadhaa-curry-kaathalikka-karru-kollungal/ நாளைக்கு செஞ்சு படத்தோட பதிவு போட்டாத்தான் நம்புவோம்.
///நானும் விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுத்தான் வேற விஷயம் எதுனா எழுதுவாங்கன்னு உட்கார்ந்திருக்கிறேன்.///
சமையல் குறிப்பு பதிவுல இன்னும் வேற என்ன எழுதணும்?
சனி, மார்ச் 15, 2008 at 10:06 முப
Geetha, சேப்பங்கிழங்கு மசியல் நான் கேள்விப்பட்டதில்லை. முடிந்தவரை அவியலிலேயே அதைத் தவிர்த்துவிடுவேன். ரோஸ்ட் செய்தால்தான் சுவை. கருணைக் கிழங்கை பொதுவாக elephant yam என்றே அகராதிகளிலும் எழுதியிருக்கிறது. இங்கேயும் கொஞ்சம் பேசியிருக்கிறார்கள் . http://thenormalself.wordpress.com/2007/07/19/root-vegetables/
எனக்குத் தெரிந்து (அல்லது எனக்குத் தெரியாததால்) அது வெறும் yam மட்டும்தான். elephant yam- சேனைக் கிழங்கு. குழப்பாமல் இருக்கத் தான் படம் போட்டேன்.
Suba, செஞ்சு முடிச்சதும் காரல் இல்லைன்னா எதோடவும் சாப்பிடலாமே. பிறகு தயிர்சாதத்தோட மட்டும் காரல் இருக்குமா? எனக்கு ஆனதில்லை.
சனி, மார்ச் 15, 2008 at 10:09 முப
ப்ரசன்னா இருடே வேற சமயம் பாத்துக்கறேன்.
லஷ்மி, அப்பக்கூட அம்மா, அக்கா, அண்ணி, அடுத்தாத்து கோமளி பேர் எல்லாம் வருது, ஆத்துக்காரி பேர் வரலைங்கறதுல இருக்கற நுண்ணரசியலை கவனிச்சீங்களா? 🙂 (ஏதோ என்னாலானது.)
சனி, மார்ச் 15, 2008 at 7:27 பிப
//சமையல் குறிப்பு பதிவுல இன்னும் வேற என்ன எழுதணும்?//
யாரு உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது. உங்களுக்கு இந்தக் குழம்பை/கறியை/கூட்டை நினைச்சா சட்டுன்னு நினைவிற்கு வருவது யாரு?
நீங்க அந்த பர்டிகுலர் குறிப்பை முதல் முறை செய்து பார்த்தப்ப கிடைத்த வித்தியாசமான அனுபவங்கள் என்று ஏகப்பட்டது எழுதுவீங்கன்னு நான் எப்பவும் தேடுவேன். சிலசமயம் எழுதியும் இருப்பீங்க. அதைத்தான் சொன்னேன் 😦
திங்கள், மார்ச் 17, 2008 at 12:43 பிப
//நீங்க அந்த பர்டிகுலர் குறிப்பை முதல் முறை செய்து பார்த்தப்ப கிடைத்த வித்தியாசமான அனுபவங்கள்..//
விட்டா சினிமா நடிகை பேட்டி ரேஞ்சுக்கு ஆக்கிடுவீங்க போலிருக்கே மோகன்தாஸ் தம்பி. :(( எல்லாக் குறிப்புமே அநேகமா அம்மா எழுதிக் கொடுத்த டைரிக் குறிப்புதான். முதல் தடவை எளிமையான ரெசிபி எல்லாம் சொதப்பியிருப்பேன். கஷ்டமானதெல்லாம் சூப்பரா செஞ்சிருப்பேன். எதெல்லாம் சொதப்பினேன்னு என்னைவிட ரங்கமணிக்குதான் தெரியும். எனக்கு நினைவிருக்கறதை எல்லாம் சொதப்பினேன்னு சொல்லாம கௌரவமா கிழ * போட்டு எச்சரிக்கைக் குறிப்பா கொடுத்துடுவேன். 😦