தேவையான பொருள்கள்:
முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
செய்முறை:
- பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
- துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
- கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
- ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
* முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம். ஆனால் இங்கே முக்கியமாக முள்ளங்கியைச் சொல்லியிருப்பதற்குக் காரணம்– சாம்பார், ரொட்டி தவிர முள்ளங்கியை கறி, கூட்டாக செய்வதில் பலருக்கு அதன் மணம் பொருட்டு, ஆட்சேபம் இருக்கிறது. இந்த முறையில் முள்ளங்கியின் மணம் அறவே வராது.
* சின்னச் சின்ன இளமுள்ளங்கியாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாமல் எவ்வளவு பெரிய, முற்றல் முள்ளங்கியில் இதைச் செய்தாலும் நன்றாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
குழம்பு, ரசம் சாதம் என்றெல்லாம் அடுக்குவதற்கு முன், அப்படியே சூடாக கறியை மட்டும் தனியாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அதிகம் மசாலா சேர்க்காமல், அதிகம் அடுப்பில் வேகவைக்காமல், முள்ளங்கியின் மண்மணம் வராமல் செய்யக்கூடிய ஆகச் சிறந்த முறை.
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 2:50 பிப
டியர் ஜெய்
இதே மாதிரி கூட்டு செய்யலாமா?
அப்பறம் வாட் ஹேப்பன்ட் டு மணிக்கொழுக்கட்டை & வெஜிடபிள் ரோல்ஸ்?? (அப்பப்ப கொசுவத்தி சுத்தி பழக்கமாயிருச்சு)
//சொக்கரே, மிஸ்ஸி ரொட்டி குஜராத்தி ஐட்டம். நல்லா இருக்கும். இப்ப என்கிட்ட பட்டாணிமாவு இல்லை. அடுத்தவாரத்துக்குள்ள செய்றேன். அல்லது ரெசிபி மட்டும் சொல்றேன்//
(இதுக்கும் படம் போடாட்டியும் ரெசிபியாவது போடலாமில்ல??))
உங்களோட பெசரட் & இஞ்சி சட்னி செய்ஞ்சேன். நல்லா வந்தது.
ஸ்ரீலதா
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 3:22 பிப
முள்ளங்கி வெள்ளை நிறமுடையது சிவப்புக் கிழங்குகளை விட அதிக மருத்துவப் பயன்களைத் தரவல்லது.
முக்கியமாக பசியைத்தூண்டுவதிலும், வயிற்றிலுள்ள ஹைபர் போலி எனும் வைரஸ்ஸைக் கொல்வதிலும் இதன் பங்கு வெகுவாக உள்ளது. வாத நோயும், மூலக்கட்டி, வீக்கங்களுக்கும் இது நல்லது.இதில் புரதம் .7 , நார்ப்பொருள் .8, கால்சியம் 35 மி.கி. பாஸ்பரஸ் 22 மி.கி, வைட்டமின் ஏ 15 மி.கி.; பி.2 வைட்டமின் .02 மி.கி.வைட்டமின் ஸி.15 மி.கி.உள்ளது. இது 17 கலோரி சக்தி தரவல்லது.
துவக்கத்தில் இது வாயுவைக் கிளப்பி, பின் குணமாக்குவதால், இதை சிறிய அளவில் ஆரம்பித்து ப்பின்
அதிக அளவிற்கு செல்லலாம். மேலும் நீங்கள் கறிவேப்பிலை, அல்லது கொத்தமல்லியுடன் கலந்து செய்யும்போது முள்ளங்கியின் வாசனை அவ்வளவு தூக்கலாக இருக்காது. எதற்கும் முதலில் மாமியாருக்கு சமைத்துப் போடுங்கள்.
ஆல் த பெஸ்ட்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
http://movieraghas.blogspot.com
புதன், பிப்ரவரி 27, 2008 at 4:03 முப
//எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.//
காய்ந்த மிளகாய் ??
புதன், பிப்ரவரி 27, 2008 at 7:55 முப
முள்ளங்கி பருப்பு கறி நான் சிறுவனாக இருந்தபொழுதே எனது அம்மா செய்து இருக்கிறாள்.
எனக்கு வயது இப்பொழுது 66. ஆனால், இந்த முள்ளங்கியுடன், கேரட், பீட் ருட், பச்சை
பட்டாணி அவற்றையும், ஒரு அரை பங்கு எடுத்து நன்றாக குக்கரில் தனித்தனியாக வேக
வைத்து அதனுடன் கலந்து பாருங்கள். ருசி அமக்களமாக இருக்கும்.
சாப்பாட்டு ராமன் சூரி
தஞ்சை.
புதன், பிப்ரவரி 27, 2008 at 8:20 முப
யாரு இங்க, இப்டிப் பூந்து விளையாடறது??:)
முள்ளங்கி சாம்பார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதென்னவோ அம்மா செய்த சாம்பார் வாசனையாக இருக்கும். நான் செய்வதில் முள்ளங்கி நான் இருக்கேன்னு சொல்லும்:)
புதன், பிப்ரவரி 27, 2008 at 12:06 பிப
ஸ்ரீலதா,வேற மாதிரி கூட்டு செஞ்சிருக்கேன். இந்தமாதிரி செஞ்சதில்லை. ஆனா அதுலயும் வாசம் வரும். மணிக்கொழுக்கட்டை, வெஜ் ரோல்ஸ் நினைவுவெச்சுக்கறேன்.
சுப்பு ரத்தினம், உங்க தகவல்களுக்கு நன்றி. கறிவேப்பிலை கொத்தமல்லினாலதான் அதோடவாசம் குறையுதுன்னு நினைக்கறீங்களா? அப்ப சாம்பார் கூட்டு செய்யும்போதும் குறையணுமே.
///எதற்கும் முதலில் மாமியாருக்கு சமைத்துப் போடுங்கள்.///
அதான் பொண்ணுக்கே சமைச்சுப்போட்டு டிக் வாங்கிட்டேனே. உலகத்துல கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கமுடியாததாலதான் தாயை பூமிக்கு அனுப்பறாருன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ மாமியார் எல்லாவீட்டுலயும் இருக்கமுடியாததாலதான் கடவுள் பொண்ணை அனுப்பியிருக்காரோன்னு தோணுது. 😦
BTW, உங்கபதிவுகள் வித்யாசம நல்லா இருக்கு. ஆராம்சே படிக்கணும்.
புதன், பிப்ரவரி 27, 2008 at 12:12 பிப
ஜெயஸ்ரீ விழிப்பா இருக்கீங்களான்னு செக்கிங் 🙂 நன்றி. :))
சூரி, நல்லாத்தான் இருக்கும்னு தோணுது. ஏன் பீன்ஸ் விட்டுட்டீங்க?
ரேவதிநரசிம்மன், 🙂 நல்லவேளை எங்கவீட்டுல யாருக்கும் அந்தவாசம் ஒவ்வாமை இல்லை. அடிச்சு நகத்திடுவேன் எல்லாத்துலயும்.
புதன், பிப்ரவரி 27, 2008 at 8:45 பிப
//உலகத்துல கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கமுடியாததாலதான் தாயை பூமிக்கு அனுப்பறாருன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ மாமியார் எல்லாவீட்டுலயும் இருக்கமுடியாததாலதான் கடவுள் பொண்ணை அனுப்பியிருக்காரோன்னு தோணுது//
Amen!
..Ag
வியாழன், மார்ச் 6, 2008 at 1:33 பிப
Nice site. A friend pointed this site to me, and I have made use of several recipes from here. Thank you.
திங்கள், மார்ச் 10, 2008 at 1:07 பிப
Arun சொல்கிறார்:
மார்ச் 10, 2008 இல் 6:04 நான்
ஓட்ஸை கஞ்சி காய்ச்சிவதை தவிர வேறு பலகாரம் செய்ய உதவுமானல் அதைப் பற்றி விளக்கம் தாருங்களேன்.
kamalaa சொல்கிறார்:
மார்ச் 10, 2008 இல் 7:28 நான்
நிச்சயமாயச் செய்யமுடியும்.விரைவில் எழுதுகிறேன்.தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ அதைப் பார்த்துக்கொள்வார் என்று இருந்து விட்டேன்.
அன்புடன்
கமலா
மறுமொழி இடுக
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:16 பிப
Ag, :))
Raveena Rishi, நன்றி உங்களுக்கும் உங்க ஃப்ரெண்டுக்கும்.
kalyanakamala, நீங்களே சொல்லுங்க. என்னை எல்லாம் சமையல்ல உங்க அளவுக்கு ரொம்ப எதிர்பார்க்காதீங்க. நீங்க கேட்டதுக்காக…
ஓட்ஸ்ல ரவை உபயோகிச்சு அல்லது ரவையும் சேர்த்து செய்ற எல்லாம் செஞ்சிருக்கேன். உப்புமா, கிச்சடி, சில கரைச்ச மாவு தோசைகளுக்கு… இப்படி.
முக்கியமா எல்லா சூப்லயும் ஒரு பிடி சேர்த்து கொதிக்கவிடலாம்.(உப்பு கடைசியா போடணும்.) இது சேர்க்கும்போது கார்ன்ஃப்ளோர் சேர்க்கத் தேவை இல்லை.
வெல்லம் பால் விட்டு பாயசம்- நெய் அதிகம் விடாததால கஞ்சின்னே சொல்லலாம். இந்த பாயசம் சீக்கிரம் தயாரிக்க முடிவதும், சர்க்கரையைவிட வெல்லம் போட்டா சுவையா இருக்கறதும் காரணம்.
நான் அன்றாடம் ஓட்ஸ் கஞ்சிலயே பால் சர்க்கரை சேர்க்கறதில்லை. கடைந்த மோர், உப்பு போட்ட சூடான கஞ்சி எப்ப வேணா சாப்பிடத் தயாரா இருக்கேன். இதுவே என் அன்றாட ஃபேவரைட் ஐட்டம்.
Bread, குக்கீஸ் எல்லாம் கடைகள்ல கிடைக்கறதையே சுலபமா வாங்கிடுவேன். செஞ்சு பார்த்ததில்லை. வீட்டுல யாருக்கும் ஆர்வம் இல்லை.
புதன், செப்ரெம்பர் 22, 2010 at 1:58 பிப
I like this recipe.i do it. very nice, super.
திங்கள், திசெம்பர் 31, 2012 at 6:32 முப
ஜெ. கோ. அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் அளவையை ரெட்டிப்பாக்கி ஒரு கிலோ சீனா முள்ளங்கியைச் சமைத்துப் பார்த்தேன். சூப்பர்!
ஒரு டாலர் செலவில் இவ்வளவு அருமையான கூட்டா? மெலிய முயல்வோருக்கு சுவையான டயட். ஒரு கிலோவுக்கு 170 கலோரிதான்.
(எண்ணெய் தவிர). விவரம்: http://nutritiondata.self.com/facts/vegetables-and-vegetable-products/2608/2