தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய்
செய்முறை:
- வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து 😦 ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.
- கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
- குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- மைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
- திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
- இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.
* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.
* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தயிர்ப் பச்சடி(राइता, Raitha), தால் வகைகள், கார, இனிப்பு ஊறுகாய்கள்…
சனி, பிப்ரவரி 23, 2008 at 6:49 பிப
இந்தி ஒழிக. தமிழ் வாழ்க. இந்தியைத் திணிக்காதே!
ஞாயிறு, பிப்ரவரி 24, 2008 at 12:19 பிப
டில்லியிலிருந்து ஒரு முறை டூர் சென்றபோது இதே போல் கொத்தமல்லி சப்பாத்தி செய்து எடுத்துச் சென்றோம். நன்றாக இருந்தது.
மிஸ்ஸி ரொட்டி எப்படி செய்வது,சொல்லுங்களேன் (சூபர் ஸ்டார் இல்லை!)
திங்கள், பிப்ரவரி 25, 2008 at 11:43 முப
//இந்தி ஒழிக. தமிழ் வாழ்க. இந்தியைத் திணிக்காதே!//
:))
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 12:11 பிப
எதிரியாரே, வாங்க சார் 🙂 அங்கங்க மானாவாரியா தங்லீஷும் இங்லீஷும் யூஸ் பண்றேன். நீங்க அதுக்கெல்லாம் ஒன்னும் ஃபீலிங்ஸ் விடலை.
வடஇந்திய உணவுகள், பெயர் உச்சரிப்பு சரியாத் தெரியணுமேன்னு ஹிந்திலயும் சொன்னது தப்பாயிடுச்சா? இந்த ஒத்த வார்த்தைக்காக இனிமே யாராவது தமிழ்நாட்டுல ஹிந்தி புதுசா படிச்சு வரப் போறாங்களா? உங்க பேரை हिन्दी एदिरि ன்னு எழுதினா, ஹிந்திகாரங்க ‘இந்தீ எதிறி’-ன்னு படிக்க மாட்டாங்களா? அந்தந்த மொழில எழுதினா தெரிஞ்சவங்களாவது சரியா உச்சரிப்பாங்கல்ல, அதுக்குத்தான்.
அப்றம், நான் இந்த மொழி விஷயத்துல விஜய்காந்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன் –
“தமிழைக் காப்போம்!
பிறமொழிகளையும் கற்போம்!!”
ப்ரசன்னா, :))
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 12:24 பிப
சொக்கரே, மிஸ்ஸி ரொட்டி குஜராத்தி ஐட்டம். நல்லா இருக்கும். இப்ப என்கிட்ட பட்டாணிமாவு இல்லை. அடுத்தவாரத்துக்குள்ள செய்றேன். அல்லது ரெசிபி மட்டும் சொல்றேன்.
பொதுவா குளிர், மழைகாலத்துலதான் சப்பாத்தி நம்ப மக்கள் அதிகம் செய்றாங்க. தேவை இல்லை; இந்த மாதிரி மேத்தி ரொட்டி, கொத்தமல்லி சப்பாத்தி, மிஸ்ஸி ரொட்டி எல்லாம் கீரை உபயோகிக்கறதால வெயில் காலத்துலயும் தொடர்ந்து செய்யலாம்.
செவ்வாய், பிப்ரவரி 26, 2008 at 7:53 பிப
//இந்தி ஒழிக. தமிழ் வாழ்க. இந்தியைத் திணிக்காதே!//
lol
//
வடஇந்திய உணவுகள், பெயர் உச்சரிப்பு சரியாத் தெரியணுமேன்னு ஹிந்திலயும் சொன்னது தப்பாயிடுச்சா?
//
JG – லைட் தீஸ் கோண்டி 🙂
Krishna
புதன், பிப்ரவரி 27, 2008 at 12:17 பிப
கிருஷ்ணா, நாம எப்பவும் கூல்தான். :)) ஆனாலும் சில டாபிக் எல்லாம் இணையத்துல சும்மா சொல்றாங்களா, சீரியஸான்னு பின்னூட்டங்கள்ல கண்டுபிடிக்கமுடியாது. பாம்புன்னு தாண்டவும் முடியாது, பழுதுன்னு பிடிக்கவும் முடியாது. எதுக்கும் நம்ப பக்கத்தை தெளிவா சொல்லிட்டோம்னா, நாளையும் பின்னயும் பிரச்சினையில்லை பாருங்க, அதான். 🙂
புதன், பிப்ரவரி 27, 2008 at 10:15 பிப
ஜெயஸ்ரீ,
“அப்பம் கலந்த சிற்றுண்டி அக்கார பாலில் கலந்து,
சொப்பட சுட்டு வைத்த ….”
ரெசிபீ உண்டா?
மற்றபடி,
சமீபத்தில் நினைத்து நினைத்து சிரிக்க வைத்த ஒரு கமெண்ட் (நன்றி துளசி கோபால்)
”
//படத்தை பார்த்தபின் எனக்கு தலைவழி வந்து விட்டது.//
அடக் கடவுளே எந்த வழியிலே தலை வந்துருச்சு?
பார்த்துப்பா… கவனமாஇருக்க வேணாமா? 🙂
”
– கிருஷ்ணா
ஞாயிறு, மார்ச் 2, 2008 at 3:59 பிப
///பாம்புன்னு தாண்டவும் முடியாது, பழுதுன்னு பிடிக்கவும் முடியாது.///
இந்தி பழகறேன்னு தமிழை மறந்துடாதீக. அது “பாம்புன்னு அடிக்கவும் முடியாது. பழுது(கயிறு)ன்னு, தாண்டவும் முடியாது” இல்லையா?
புதன், மார்ச் 5, 2008 at 12:52 பிப
ஸ்ரீரங்கம் சுஜாதா ரங்கராஜன் ஐயங்கார் பத்தி எதுவும் எழுதலையே ? அவருக்கு உணவில் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது பற்றி ஏதேனும் எழுதியுள்ளாரா தெரியுமா ?
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:13 பிப
கிருஷ்ணா, என்ன கேக்கறீங்கன்னு புரியலை. 😦
தமிழன், அடிக்க ஒன்னும் வேண்டாம். பாவம். 🙂 ஹிந்திக்குதானே எதிரி. நமக்கு நண்பர்தானே. அதனாலதான் மாத்தி எழுதினேன். தமிழ் எல்லாம் மறக்கலை.
செவ்வாய், மார்ச் 11, 2008 at 9:56 பிப
ஜெயஸ்ரீ,
//
கிருஷ்ணா, என்ன கேக்கறீங்கன்னு புரியலை. 😦
//
பெரியாழ்வாரின் “நீராட்டம்” என்கிற தொகுப்பில்,
“அப்பம் கலந்த சிற்றுண்டி அக்கார பாலில் கலந்து,
சொப்பட சுட்டு வைத்த..” என்கிற வரிகள் வரும். இது க்ருகங்களில், அன்றாட திருவாரதனத்தில், ஒரு கிரமம் ஆகும். இப்படி ஒன்று (பதார்த்தம்) உண்டா என்கிற ஆவலால், ஸ்ரீரங்க (பூர்வாச்ரம) வாசியான உம்மை கேட்டேன்.
சரி. எனக்கு நானே, லைட் தீஸ் கோண்டி, சொல்லி கொள்கிறேன்.
கிருஷ்ணா
புதன், மார்ச் 12, 2008 at 10:58 முப
கிருஷ்ணா,
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கறந்து சொப்பட நான் சுட்டு வைத்த அப்பம், அதிரசம் எல்லாம் ஏற்கனவே சொல்லி முடிச்சுட்டேன். என் சந்தேகமும் அதுல இல்லை. அதைத் தொடர்ந்து நீங்க சொல்லியிருக்கற ஜோக்..
அப்றம் ஸ்ரீரங்கம்னா தினம் எல்லார் வீட்டுலயும் இருக்கற வழக்கம் குறிச்சு உங்களுக்கு அதீத கருத்து எதுவும் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. எங்க காலத்துலயே ஊரை ரொம்ப மாத்திட்டோம். இதுவும் லைட் தீஸ்கோண்டி வகைதான். 🙂
புதன், மார்ச் 12, 2008 at 10:48 பிப
ஜெயஸ்ரீ,
//
அப்றம் ஸ்ரீரங்கம்னா தினம் எல்லார் வீட்டுலயும் இருக்கற வழக்கம் குறிச்சு உங்களுக்கு அதீத கருத்து எதுவும் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.
//
நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஸ்ரீரங்கம் எனக்கு அமெரிக்கா, பாரிஸ் போல.
யாராவது பேசினால் கேட்டு கொண்டே இருப்பேன். கொடும்பினை இல்லை என்கிற குறை அரிக்கும்.
ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்தது சென்னை புற நகர் பகுதியில். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போனால், சேவீச்சுண்டு, பிறகு வீதியில் உலாத்த புடிக்கும்.
கொளுத்தும் வெயிலில் “போறும் வெந்து போறேன்” என்று என்னடோ wife. பொண்ணுக்கோ (எட்டாம் கிளாஸ்) ஹோட்டல் ரூம் போலாம் என்று மனசில். ஆனா வெளிய சொன்னால் ‘பெருமாள் பாவம்’ என்று சொல்லமாட்டாள் 🙂
உங்க பதிவுகளில், “இரும்புக்கை மாயாவி” படித்தது எல்லாம் எனக்கு ஆச்சர்யம்தான். ஏன்னா, அது எல்லாம் நாங்க படிக்கறது என்கிற நினைப்பு எனக்கு. ஸ்ரீரங்க வாசிகள் ஹோட்டல் இல் சாப்பிட மாட்டார்கள் என்கிற நினைப்பும் உண்டு. இப்படி பல.. (வேலையில் இருந்து திரும்பும் அப்பா, கொலுவுக்கு அழைக்க செல்லும் சின்ன பாப்பாவை உச்சி மோந்து .முதல்.. மாங்கா கடி, etc etc) . உங்களின் சில பதிவுகளில் மூலம் சில தெளிவாயின.
எனவே உங்க ஊகம் சரியே.
அப்புறம் அந்த கடி ஜோக் துளசி கோபால் சொன்னது. அவர்க்கு நன்றி சொல்லவேண்டி cut and paste பண்ணும்போது, உங்க மையத்தில் இல் அனுப்பிட்டேன். எப்போவோ
சொன்னேளே “கொட்டின வார்த்தைய திரும்பே எடுத்துட்டா எவ்வோள நல்ல இருக்கும் என்று”. அதுபோல் தான் இதுவும். மறுமொழி கூட எடுக்க முடியவில்லை, மட்டுறுத்தல் முன் . மன்னித்து விடவும்.
அப்பம் – oversight. Sorry. லைட் தீஸ்கோண்டி
கிருஷ்ணா
வியாழன், ஏப்ரல் 16, 2009 at 1:41 பிப
No English translation?