நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன்.
”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்….சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”
அரைக்கீரை குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து அரைக்கீரை மதுரை அளவு அதிகமாகவும் விலை மலிவாகவும் ஸ்ரீரங்கத்தில் கூட பார்த்ததில்லை. நினைவுதெரிந்து சின்ன வயதில் விடுமுறைக்கு மதுரைக்குப் போகும்போது, ஜெய்ஹிந்துபுரம் முதல் மெயின் தெருவில் 10 பைசாவுக்கு ஒரு பெரிய பை நிறைய அடைத்துக் கொடுப்பார்கள்.
முளைக்கீரை மாதிரி இதில் வேர் இருந்து படுத்தாது என்றாலும் கொஞ்சம் கட்டை எல்லாம் நீக்க வேண்டியிருக்கும். அநேகமாக பெருமளவு தண்டுப்பகுதியை நான் சேர்த்துக் கொண்டுவிடுவேன். வெறும் இலைப்பகுதியைவிட தண்டும் சேர்ந்தால்தான் கறி/கூட்டு சுவையாக இருக்கும். அதற்கும் தடிமனான தண்டுப்பகுதியையும் தனியாக எடுத்து குழப்பில் போட்டுவிடுவேன். நான் தூக்கி எறியும் பகுதி மிகமிகக் குறைவாகத் தான் இருக்கும்.
இது ஒரு பத்திய உணவு என்று தெரிகிறது. நாஞ்சில் நாடன் ஐயா, இன்னமொரு நூற்றாண்டிரும்!
தேவையான பொருள்கள்:
அரைக்கீரை
பூண்டு
உப்பு
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
- அரைக்கீரையை பெரிய தண்டுப்பகுதிகளை நீக்கி, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உரித்த பூண்டு தாளிக்கவும்.
- நறுக்கிய அரைக்கீரையைச் சேர்த்து நீர் விடாமல், பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
- சுண்டியதும் இறக்கி உபயோகிக்கலாம்.
* ஒரு காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம் 4 உரித்துச் சேர்த்து வதக்கினாலும் சுவையாக இருக்கும். உடலுக்கு நல்லது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், ரசம் சாதம்.
வெள்ளி, திசெம்பர் 14, 2007 at 12:52 பிப
[…] வலைப்பதிவுச் சுட்டியை அளித்த அரைக்கீரைச் சுண்டலுக்கு நன்றியுடன் […]
வெள்ளி, திசெம்பர் 14, 2007 at 2:05 பிப
அரைக்கீரையில் வேறு எதுவும் (பூண்டு, பெருங்காயம் etc) சேர்க்காமல் அதன் original tasteஇல் சாப்பிடுவது சுவையாக இருக்கும். அரைக்கீரை கீரை மசியல் (கடைஞ்ச கீரை) சூப்பராயிருக்கும். கீரையை (எந்தக் கீரையாயிருந்தாலும்) வதக்குவது கிரிமினல் குற்றம். 😦
மேட்ச் பிக்ஸிங்க் கார்னர்: கேப்பைக் களி, சோளச்சோறு, பச்சரிசிச் சோறு கிண்டியாக்கியது (உருண்டைச்சோறு) மற்றும் ரசம் சோறு (அரிசி).
சனி, திசெம்பர் 15, 2007 at 11:54 முப
ஜெயஸ்ரீ
மதுரையில் அரைக் கீரை நிறையக் கிடைக்கும்தான் ஆனால் அது விளையும் இடத்தைப் பார்த்தால் சாப்பிடமாட்டீர்கள். அவனியாபுரத்தின் கழிவு நீர்ப் பண்ணையில் (மதுரையின் மொத்த சாக்கடையும், கழிவும் சேகரிக்கப் படும் இடத்தில் வளர்வது,அதனால் சுவை அதிகம் :))) மற்றபடி வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் கூட வளர்க்கலாம்,காடாய் வளரும். அதில் புளியிட்ட கீரை என்றொரு வகை செய்யலாம். தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புளி விட்டு மசிக்க வேண்டியதுதான். பழையதுக்கும், மோர் சாதத்துக்கும், பொரிச்ச குழம்பிற்கும் உற்ற துணைவன். அந்தக் காலத்தில் அரைக் கீரையைக் கொடுத்து விட்டுப் பண்டமாற்றாக அரிசி வாங்கிக் கொண்டு போவார்கள்.
அன்புடன்
ச.திருமலை
சனி, திசெம்பர் 15, 2007 at 2:17 பிப
I do not know about madurai, but i strongly object the generalisation.
அரைக்கீரைப் பாத்தி-ன்னு தோட்டத்தில அழகா வளர்த்து பார்த்துப் பார்த்து வளர்த்த தோட்டங்கள்தான் எனக்குத் தெரியும்.
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 4:51 முப
Premalatha
I dont give a damn for your stupid onjectiosn I post my comment here to Jayashree not for you. I didnt generalize anything here.
Sa.Thirumalai
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 11:15 முப
பிரேமலதா,
///அரைக்கீரையில் வேறு எதுவும் (பூண்டு, பெருங்காயம் etc) சேர்க்காமல் அதன் original tasteஇல் சாப்பிடுவது சுவையாக இருக்கும். அரைக்கீரை
கீரை மசியல் (கடைஞ்ச கீரை) சூப்பராயிருக்கும்.////
கீரை மசியல் எல்லாக் கீரையிலயும் செய்யலாம்னு இங்க சொல்லிட்டேன். அதைத் தவிர இருக்கற மத்த குறிப்புகளை ஒவ்வொரு கீரைக்கு ஏத்திச் சொல்லலாம்னு.
இலக்கியவாதிகளை சமையலலோட பேசித் தீர்க்கவேண்டிய நிர்பந்தம் :)) அவசரமா இருந்ததால, இதை எடுக்க வேண்டியதா இருந்தது.
////கீரையை (எந்தக் கீரையாயிருந்தாலும்) வதக்குவது கிரிமினல் குற்றம்.////
நாங்க அகத்திக்கீரையை அப்படி சுண்டித் தான் செய்வோம். (எவ்ளோ நாளாச்சு!)
///பச்சரிசிச் சோறு கிண்டியாக்கியது (உருண்டைச்சோறு)///
இது என்ன, எப்படி செய்யணும்?
அப்புறம் கீரைக்கு அந்த மாதிரி தண்ணி தேங்கின பூமி தேவை. பாத்திகட்டி வளர்க்கறதைவிட ஏனோ சகதில வளர்ற கீரை நல்ல வளர்ச்சியோடயும் நல்ல சுவையோடயும்[:)] இருக்கும். சின்ன வயசுல முதல்ல அதிர்ச்சியா இருந்தாலும் அப்புறம் பழகிடுச்சு.:)
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 11:24 முப
திருமலை,
அரைக்கீரை மதுரைல அப்படித்தான் நிறைய விளையுதுன்னு எனக்கும் தெரியும். அதை இங்க சொல்லவேண்டாம்னுதான் சொல்லலை. 🙂 எங்களுக்கு அவனியாவரம்லேருந்து எல்லாம் கீரை வரத் தேவை இல்லை. இந்தப் பக்கம் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு(எவ்ளோஓஓ நீளமான தெரு… ) முடிவுல கம்மா(கண்மாய்)லயே முழுக்க அதுதான். ஜெய்ஹிந்த்புரம், முருகன் தியேட்டர், பாரதியார் தெரு, காய்கறி மார்க்கெட்…. அதே எங்க உலகம். விடுமுறை, மதுரை வெய்யிலுக்கு பாட்டி கீரை கணிசமா உபயோகிப்பாங்க. மண்சட்டில அபாரமா சுவைக்கும்.
புளியிட்ட கீரை எனக்கும் மிக விருப்பமான முறை. அப்புறம் சொல்லணும்.
கீரைக்கு மாற்றா பச்சரிசி ஸ்ரீரங்கத்துலயே முந்தி பாத்திருக்கேன். எங்கவீட்டுக்கு கீரை கொண்டுவர மீனா அவ்ளூண்டு தலைல அவ்ளோ பெரிய மூங்கில்தட்டும், அதுல தூக்கவே முடியாத அளவு கீரையும் கொண்டுவருவாங்க. இறக்க ஒருகை கொடுன்னு சொல்லி, சின்ன வயசுல நான் பெரிய மனுஷி மாதிரி
இறக்கிஇறக்கப் பார்த்து, அப்படியே மல்லாக்க விழுந்தேன். (தேவையா?) இதைச் சொல்லும்போது ஜெயமோகனோட நினைவின் நதியில்-ல வர சு.ராவோட கூடைக்காரிகளுக்கான குறிப்பு நியாபகம் வருது. சரியான அவதானிப்பு. எனக்குப் பிடிச்ச பகுதி.இன்னமும் மதுரைக்கு வெளில துவரிமான்ல பச்சப்பசேல்னு செடிவாசனைகூட போகாம(அப்பத்தான் பறிச்சது), அரைக்கிலோ பிஞ்சு கொத்தவரங்காய், ஒரு டம்பளர் நீர்மோருக்குக் கொடுத்த அதிர்ச்சி எல்லாம் என் கண் எதிர நடந்தது. நடக்குது.
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 11:56 முப
ஜெய்ஹிந்த் பாரதி தெருவில் எந்த வருடம் இருந்தீர்கள்? மிக நீளமான பரபரப்பான ஒரு சாலை. ஜெய்ஹிந்த்புரமே எப்பொழுதும் பரபரப்பான ஒரு புறநகர்ப் பகுதிதான். கொஞ்சம் எட்டி நடந்தால் அந்தப் பக்கம் சுப்ரமணியபுரம் எல்லையில் மீனாட்சி டால்க்கீஸ் வந்து விடும். முருகன் தியேட்டர் எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்களே?:)) அங்கு ஆதிபராசக்தியோ அல்லது ஏதோ ஒரு பக்தி படம் ஒரு ஏகாதசிக்குப் பார்த்த நினைவு இருக்கிறது :)) நீங்கள் சொல்லும் கண்மாய் எல்லாம் இப்பொழுது இருப்பதாய்த் தெரியவில்லை.
மதுரை முழுக்க அவனியாபுரம் கீரை வருவதில்லைதான் இருந்தாலும் மதுரையில் அரைக்கீரை அதிகம் விளையும் பகுதிகளில் கழிவுநீர்ப் பண்ணையும் ஒன்று. நீங்கள் ஜெய்ஹிந்த்புரம் என்று சொன்னதனால் நான் கீரை விளையும் இடத்தை சற்று நினைவு கூர்ந்தேன். அத்துடன் நான் வளர்ந்த கிராமத்தில் அரைக்கீரைக்குப் பதிலாக அரிசு கொடுக்கும் பண்டமாற்று முறையையும் அரைக்கீரைக்குத் தொடர்புள்ள ஒரு துணுக்குச் செய்தியாகச் சொன்னேன். எங்கள் வயலிலும், வீட்டிலும் கீரை விளைவித்த சிறு விவசாயி என்ற முறையிலும் அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்தேன்.
இதில் பொதுப்படுத்தல் எங்கிருந்து வருகிறது அதற்கு எதற்கு யாரேனும் ஏன் கடுமையாக ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதும் எனக்குப் புரியவில்லை. அதற்குப் பதிலாக பேசாமல் உன் மூஞ்சி பிடிக்கவில்லை அதனால் ஆட்சேபம் தெரிவிக்கிறேன் என்று சொன்னாலும் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும் :)) தமிழ் இணைய அரசியல் வினோதமானதாகவும் கிறுக்குத்தனங்கள் நிரம்பியதாகவும் உள்ளது. நான் சும்மா அரைக் கீரையைப் பற்றி எழுதினால் கூட யாருக்கேனும் பிடிக்காமல் போகும் கொடுமையை என்னவென்று சொல்வது? :)) நான் அரசியல் பேசினால்தான் பிரச்சினை என்று அரிசியல் பேசினாலும் அரைக்கீரையியல் பேசினாலும் அதற்கும் ஆட்சேபணையா? அட ஆண்டவா :)))
பண்டமாற்று வணிகங்கள் சில இன்னும் ஒரு சில கிராமத்தில் மிச்சம் இருக்கலாம். கீரை போன்ற காய்கறிகளுக்கு மட்டும் அல்ல சர்வீஸ்களுக்கும் பண்ட மாற்று உண்டு. எனக்குத் தெரிந்த பண்டமாற்று சேவைகளை இங்கு சொன்னால் யாரேனும் கடுமையான ஆட்சேபணைகளையும் கண்டனங்களையும் சொல்ல நேரிடும் அபாயம் இருப்பதால் நான் கீரை உவமானத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
ச.திருமலை
ஞாயிறு, திசெம்பர் 16, 2007 at 2:01 பிப
ச.திருமலை, ஜெயஸ்ரீ வலைப்பதிவிலே , நீங்க ஜெயஸ்ரீ கூட நடத்திட்டு இருக்கிற பேச்சு வார்த்தைல, யார் குறுக்க வந்தாலும் வள்ளுன்னு மேலெ விழுவீங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா, எல்லாரும் வாய மூடிட்டு இருந்திருப்பாங்க. இப்ப தெரிஞ்சு போச்சுல்ல , வுடுங்க
பிரேமலதா,பெரீவா பேசிண்டு இருக்க எடத்துல தேவை இல்லாம எதுக்காக்கும் வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க? செத்த நேரம் கம்முனு இருங்கோ
திங்கள், திசெம்பர் 17, 2007 at 8:18 முப
மதுரை முருகன் தியேட்டரின் நான் பார்த்த முதல் படம் ‘செங்கமலைத்தீவு’. முருகன் தியேட்டரில் நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை 50வாவது இருக்கும். இத்தனைக்கு இரண்டு வருடங்கள்தான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்தோம். வீர காளியம்மன் கோவில் தெருவில் கொஞ்ச நாளும் முருகன் கோவில் அருகில் ஒரு வீட்டிலும் இருந்தோம். அப்போது மெயின் ரோட்டிலேயே மார்க்கெட் இருந்தது. இப்போது மாற்றிவிட்டார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒரு தியேட்டரைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த தியேட்டரை திறந்தால் ஓனர் இறந்துவிடுவார் என்று ஜாதகத்தில் இருந்தது என பெரிய புரளி வேறு. இப்போதுதான் 5 வருடங்களுக்கு முன்பு அதைத் திறந்தார்கள். குருகுலம் ஸ்கூலில் படித்தேன். தினமும் நடந்து பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்து படம் பார்த்து நினைக்கவே இனிமையாக இருக்கிறது.
திருமலை, அரசியலும் ‘அரை’க்கீரையும் ஒண்ணு அறியாதவர் வாயில மண்ணு என்கிற புதுமொழி தெரியாதா? இதைப் பற்றி யோசிக்கவும்.
திங்கள், திசெம்பர் 17, 2007 at 11:35 முப
பிரசன்னா
முருகன் தியேட்டருக்குப் பின்னால் இவ்வளவு கதை இருக்கிறதா? நான் போனது அது டூரிங் கொட்டாயாக இருந்த பொழுது, 70-75களில். ஆக இணையத்தின் மூலம் சந்தித்திக்கொள்ளும் நம்மை ஜெய்ஹிந்த்புரம் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கிறது :))
அரசியலுக்கும் அரிசிக்கும் சம்பந்தம் உண்டு என்று தெரியும் ஆனால் அரசியலுக்கும் அரைக்கீரைக்கும் சம்பந்தம் இருப்பதை இப்பொழுது தெரிந்து கொண்டேன். எப்படியோ நான் அரைக்கீரையைப் பற்றி பேசின்னாலும் அக்கார அடிசலைப் பற்றி பேசினாலும் யாருக்காவது எங்காவது எரிச்சல் ஏற்பட்டு விடுகிறதூ, பிரச்சினை அரைக்கீரையில் இல்லை ஒரு தனி நபர் மீது என்பது மட்டும் புரிகிறது. அது என் ராசி :)) வள்ளென்று விழுவது உண்மைதான், நான் அவரவருக்குப் புரிகிற மொழிகளில் பேசுபவன் அவ்வளவுதான். புரிந்து கொண்டு வம்பிழுக்காமல் ஒதுங்கிக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
அன்புடன்
ச.திருமலை
செவ்வாய், திசெம்பர் 18, 2007 at 10:28 பிப
திருமலை, ப்ரசன்னா,
நான் முருகன் தியேட்டர்ல பாத்த முதல் படம் கடைசி படம் எல்லாம் நினைவில்லை. ஆனா எக்கச்சக்க படம் அங்கதான் பாத்தேன். அநேகமா எல்லாம் பழைய படங்களா இருக்கும். நிறைய எம்ஜிஆர் படம். இந்த ஒரு தியேட்டருக்குத் தான் வீட்டுல பெரியவங்க துணை இல்லாம குட்டீஸா ஓடிடலாம். வெள்ளிக்கிழமை படம் மாத்தும்போதெல்லாம் பாத்திருக்கேன். மீனாட்சி தியேட்டரும் கிட்டதான். ஆனா பெருசுங்க மனசுவெச்சாதான் முடியும்.
அதைவிட முக்கியம் அங்க இருக்கற எல்லா குட்டிக் குட்டி அம்மன் கோயில்கள்லயும்– வீர காளியம்மன் மட்டும் தான் கொஞ்சம் பெருசு– சித்திரை திருவிழா அமர்க்களம். காலைல 4 மணிக்கு லவுட்ஸ்பீக்கர் எல்.ஆர். ஈஸ்வரியோட ஆத்தா பாட்டுல ஆரம்பிச்சு திடீர்னு ஒரு பிரேக் எடுத்து ஆத்தா ஆத்தோரமா வார்ரியா… வகைதொகை இல்லாம ஓடும். வீட்டுல யாரும் யாரோடயும் பேசமுடியாது. பேசினாலும் காது விழாது. எல்லாம் ஜாடைதான்; முத்திரை தான்; நாட்டியம் தான். அந்த நேரத்துல எலக்ஷனும் வந்துட்டா கேட்கவே வேண்டாம். “அண்ணன் அவர்களுக்கு 38 வது வட்டத்தின் சார்பாக…பொன்னாடைக்குப் பதிலாக ரூபாய் ஐந்து….” அநேகமாக குட்டீஸ்தான் ஆடியன்ஸ். இதுவும் இல்லாம காது ஓஞ்சுதேன்னு இருந்தா எங்கிருந்தாவது வந்துடும் பூப்புனித நீராட்டு விழா, விடுமுறைல வசதிபோல வெச்சுப்பாங்க.
கடைக்காரங்கள்லேருந்து ஊர்ல எல்லாரையும் அண்ணே’ன்னு கூப்பிடறது, ஜில்ஜில் ஜிகர்தண்டா டேஸ்ட் பாத்தது, விசில் அடிக்கக் கத்துண்டது… இப்படி ஸ்ரீரங்கத்துக்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத வாழ்க்கை. ரொம்ப ஆர்வமா அனுபவிச்சிருக்கோம்.
காதல் படம் பார்த்து (அது ஜெய்ஹிந்துபுரம்தான்) திரும்பத் திரும்ப வீட்டுல அதைப்பத்தியே பேசிகிட்டிருந்தோம். 🙂 அந்தப் பூபுனித நீராட்டு விழா பாட்டும் காட்சியமைப்பும் செம தத்ரூபம்.
செவ்வாய், திசெம்பர் 18, 2007 at 11:22 பிப
ஜெயஸ்ரீ,
எங்க வீட்டில் மொத்தம் எட்டுபேர். அம்மா எப்பவும் அடுக்களைல. எல்லா விவாதங்களும் (அண்ணன், தம்பி, அக்கா இடையில்) எங்கோயோ தொடங்கி சமையல் அறையில் சூடாகும். சமையல் அறை ஒரு முக்கிய முணை கூட. அம்மா எப்போதும் சொல்வார் – சமையல் அறை, பூஜை அறை, உணவு உண்ணும் வேளை – இங்கு நிதானம் தவற கூடாது என்று.
படித்து கொண்டே அடிக்கடி கிட்சேன் பக்கம் விசிட் நடக்கும் (வடம், அப்பளம் கொறிக்க). அம்மா அப்படி அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கின உடன், புத்தகம் எல்லாம் அங்கங்கே போட்டு அடுப்படியில் கூட்டம் முந்தும் – ஏன கொஞ்சம் லேட் அனா அவனவன் தட்லே காய், பருப்பு குறைந்திடும் (“ஏன்டா இப்பதான் சென்ட்ரல் ஜெயில்லேந்து ரிலீஸ் அஹ” என்று அப்பா). இதுல கொஞ்சம் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு கொஞ்சம் போகும் (தம்பி கைங்கர்யம்)
ஜெயஸ்ரீ, நீங்க அப்படி பாத்திரம் இறங்கவும், உடனே இணைய சகோதர-சகோதரிகளும், உங்க அடுப்படி இல்தான் சர்ச்சை (ஆனால் கொறிக்க வடம், அப்பளம் தான் இல்லை 🙂
-கிருஷ்ணா
புதன், திசெம்பர் 19, 2007 at 7:54 முப
கிருஷ்ணா, தெரிஞ்ச நண்பர் ஒருவரும், உங்க பதிவுதான் சமையல் குறிப்பு. ஆனா வரவர ஒரே இலக்கிய வாசனை.(வெளில வந்துட வேண்டியதுதான்!) பின்னூட்டமெல்லாம் அரசியல் நெடின்னு எழுதியிருந்தாரு. நீங்களும் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
ஆனா இடைல மோகன்தாஸ் அந்தரங்க மேட்டர் எல்லாம் அப்பளம் வடாம்(கொறிக்க)சமாசாரம் இல்லையா?
///(”ஏன்டா இப்பதான் சென்ட்ரல் ஜெயில்லேந்து ரிலீஸ் அஹ////
:))))))))))
வியாழன், திசெம்பர் 20, 2007 at 3:11 முப
// தெரிஞ்ச நண்பர் ஒருவரும், உங்க பதிவுதான் சமையல் குறிப்பு. ஆனா வரவர ஒரே இலக்கிய வாசனை.(வெளில வந்துட வேண்டியதுதான்!) பின்னூட்டமெல்லாம் அரசியல் நெடின்னு எழுதியிருந்தாரு. //
ஆமா, இலக்கியத்தைக் கிண்டல் பண்ணிட்டே ஒவ்வொரு பதிவிலும் குழுமத்தில் நடக்கிற பரிமாற்றங்களை நேரடியாகவோ (உதாரணம்: அரைக்கீரை பற்றி நாஞ்சில் நாடன் சொன்னது) குறிப்பாலுணர்த்தியோ (உதாரணம்: தலை”மை”ப் பண்பு) எழுதிக் கொண்டிருக்கிறீர்களே. இதற்கெல்லாம் குழும உரிமையாளர் என்ற முறையில் காப்பிரைட் வயலேஷன் அதனால் ராயல்டி தரணும்னு கேக்கலாம்னு இருக்கேன் 🙂 என்ன ராயல்டி கேக்கப் போறேன். இங்கே கொட்டுற குப்பையைக் குழுமத்திலும் கொட்டுங்கன்னுதான் கேட்பேன் 🙂
வியாழன், திசெம்பர் 20, 2007 at 3:59 முப
அப்புறம் நண்பர் சொல்றதைக் கேட்காதீங்க. சமையல் குறிப்பிலும்கூட இரண்டுவரி நீங்கள் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதைப் பொறுக்கமுடியாமல் உங்களைச் சமையலிலேயெ வைத்திருக்க உங்கள் அபிமானி மாதிரி பேசுகிறார் 🙂
வெள்ளி, திசெம்பர் 21, 2007 at 1:45 முப
நல்ல பதிவு தொடருங்கள்
திங்கள், திசெம்பர் 24, 2007 at 10:15 முப
சிவா, என்னைக் குழுமத்தில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. மிக நல்ல, exclusive கடிதங்கள் படிக்கக் கிடைப்பதை நான் சொல்லியே ஆகவேண்டும். நானும் கலந்து எழுதினால் அது சரியாக வராது. எனக்கு இதுவே வசதி.
arunrayan, நன்றி. 🙂
திங்கள், செப்ரெம்பர் 21, 2009 at 6:59 பிப
this is a test mail
i like your website. I enjoy reading this (I was a madurai girl and i know srirangam also)