தேவையான பொருள்கள்:
தக்காளிக் காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
- முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், சப்பாத்தி வகைகள்…
புதன், திசெம்பர் 5, 2007 at 11:51 பிப
Did you read about this post in our group? 🙂
வியாழன், திசெம்பர் 6, 2007 at 10:33 முப
டியர் ஜெய்,
தக்காளிகாய் என்ன டேஸ்ட்?? கசக்குமா புளிக்குமா? இதுவரைக்கும் இதை செஞ்சதே இல்ல. உங்க படம் பார்தா சாப்பிடலாம் போல இருக்கு. அப்ப்றம் வெஜிடபிள் ரோல்ஸ், மணி கொழுக்கட்டை ரெசிப்பி எல்லாம் போடறேன்னு யாரோ வாக்கு கொடுத்ததா ஞாபகம். கொஞ்சம் அவங்ககிட்ட கேக்கறீங்களா? இங்க நாங்க இதல்லாம் வரும்னு காத்திட்டு இருக்கோம்.
ஸ்ரீலதா
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 9:45 முப
சிவா, :(((( பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம், ஒருத்தருக்கொருத்தர் மத்தவங்க இலக்கியத்தை பாராட்டற இடத்துல என் தக்காளிக்காய் கூட்டைப் போட்டு, இமேஜ் டேமேஜ்….. மொத்த குழுமத்தையும் ஒரு 4 நாள் ரூம்புல அடைச்சி வெச்சு, பட்டினில காயப் போட்டு, கவிதை வேணுமா, கூட்டு வேணுமான்னு கேக்கணும். உண்மையா தக்காளிக்காய் கூட்டு எந்தக் கவிதை, கதையும் விட ருசியா இருந்ததுன்னு சொன்னா யார் நம்பப் போறீங்க? :feelings:
உங்களுக்காக நிறைய கீரை சமையல் குறிப்பெல்லாம் சொல்லலாம்னு நினைச்சேன். ஒன்னும் கிடையாது போங்க. 🙂
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 9:46 முப
ஸ்ரீலதா, நீங்களும் என் பொண்ணு மாதிரி படுத்தறீங்க. வாய்தவறி ஒன்னு சொல்லிட்டாலும்,அதை நிறைவேத்தற வரைக்கும் நச்செடுத்துடுவா. அநேகமா அவங்கப்பாதான் மாட்டுவாரு. நான் உஷார் பார்ட்டி. ஆனா இங்க நான் மாட்டிகிட்டேன். 🙂
எங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் வரதுக்கு முன்னால காலங்கள்ல எங்கம்மா திருச்சி காந்திமார்க்கெட்லேருந்து தக்காளி காயும் பழமுமா கலந்து வாங்கிவருவாங்க. முதல்ல பழமா உபயோகிக்க ஆரம்பிச்சா, தினம் 2, 3 காயா பழுக்கப் பழுக்க உபயோகிக்க வாகா இருக்கும். அப்ப அதிகமா வாங்கிவந்தா காய்லயும் நிறைய செய்வாங்க. காய் விலை குறைவுங்கறது இன்னொரு முக்கிய காரணம். கசக்கவெல்லாம் கசக்காது. நாட்டுத் தக்காளியா இருந்தா கடுமையா புளிக்கும்.(அதுல பழமே புளிக்குமே!) நான் படத்துல போட்டிருக்கற சீமைத் தக்காளி குறைவா புளிக்கும். அவ்ளோதான் வித்யாசம்.
ரொம்ப வருஷங்களுக்கப்புதம் Reliance தயவுல காய் கிடைச்சது.
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 11:23 முப
ஜெய்
முதல்ல உங்க பொண்ணுக்கு ஒரு பெரிய “ஓ”சொல்லிடுங்க.அப்படியே குறிப்புகளையும் போட்டிடுங்க.(“உங்கள் சமையல் என்னும் இன்ப வெள்ளத்திலே மூழ்க வந்த என்னை ஏமாற்றாதீர்கள் ஜெய்”)
தக்களிக்காய் கூட்டும், சப்பாதியும் இந்த வீக் எண்ட் மெனு எங்க வீட்ல
ஸ்ரீலதா.
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 12:54 பிப
//மொத்த குழுமத்தையும் ஒரு 4 நாள் ரூம்புல அடைச்சி வெச்சு, பட்டினில காயப் போட்டு, கவிதை வேணுமா, கூட்டு வேணுமான்னு கேக்கணும்.//
நானெல்லாம் கவிதை வேணும்னு சொல்வேன்.
–கவிஞன்.
வெள்ளி, திசெம்பர் 7, 2007 at 1:46 பிப
இதே கூட்டு எங்க அம்மா பண்ணுவாங்க. தக்காளி தொக்கு தயிர் சாததுக்கு சூப்பரா இருக்கும்.
//நானெல்லாம் கவிதை வேணும்னு சொல்வேன்.
//
யக்கா, அப்புறம் என்ன? உடனே இந்த க்ரூப்பை ஒரு ரூமுக்குள்ள அடச்சிடுவோம். :p
ஏதோ வத்தினா குதிரையும் புல்லை திங்குமாம்!னு ஒரு பழமொழி தான் நியாபகத்துக்கு வருது. :))
சனி, திசெம்பர் 8, 2007 at 2:45 முப
//மொத்த குழுமத்தையும் ஒரு 4 நாள் ரூம்புல அடைச்சி வெச்சு, பட்டினில காயப் போட்டு, கவிதை வேணுமா, கூட்டு வேணுமான்னு கேக்கணும். //
வாரமலர் வகையறாவும் இல்லை
ஹரன்பிரசன்னா வகையறாவும் இல்லை
ஞானக்கூத்தன் மாதிரி நையாண்டியும்
கல்யாண்ஜி மாதிரி நேயமும்
புரியற மாதிரி மொழியும் கொண்ட
கவிதை போதுமென்பேன்.
– கவிஞன் இல்லை ஆனால் ரசிகன்
சனி, திசெம்பர் 8, 2007 at 9:45 பிப
ப்ரசன்னா, இருடே இருக்கு வெடி. 🙂
அம்பி, சமத்தா அம்மாகிட்ட கேட்டு தொக்கு ரெசிபி சொல்லுங்களேன். செஞ்சு பாத்துடலாம்.
சிவா, எந்த ரசிகனாவும் இருந்துட்டுப் போங்க. (நைசா ஆட்டோ கேப்ல எது பிடிக்கும், பிடிக்காதுன்னு கொளுத்திப் போட்டுட்டீங்க!) ஆனா என் கேள்வி என்னன்னு படிச்சீங்களா? 🙂
திங்கள், திசெம்பர் 10, 2007 at 10:59 முப
Hello jayashri,
Ramakannan here. We didn’t get tomato kaai in mysore instead can we use tomato rippened one . Whether it ill come nice. write me. Expecting ur next one ur friend RK
வியாழன், திசெம்பர் 13, 2007 at 2:29 பிப
ramakannan, உங்களுக்குப் பரிந்து ஒரு இலக்கியவாதியே குறிப்பு சொல்லியிருக்கிறார் இங்கே. சமையல் பிடிக்காத கவிஞர் சொன்னதே, கேவலமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம், உண்மையிலேயே நன்றாக இருந்தது. செய்துபாருங்கள்.
செவ்வாய், திசெம்பர் 18, 2007 at 9:23 பிப
Hello Jash,
U gave me one very bigggggggggggg…. explation from one ‘ELAKYA VADHI TIPS’. But i cannot read that one. But ask u whether we can make from the rippened one tomato expecting ur reply. Very nice ur MARKALI SPECIAL very nice but that songs i wants to here from their can u send that songs. ok ur friend Ramakannan