உன்பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீ எங்கே நீ எங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம்
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா…
வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. எத்தனையாவது தடவையாகவோ இன்று மீண்டும் சன் டிவி உபயத்தில் “டும் டும் டும்”. மயங்கவைக்கும் இசை, பாடல்கள், மண் வாசனையுடன் அந்த வட்டாரத் தமிழ், வழுக்காத திரைக்கதை, அனைவரது இயல்பான நடிப்பு, எல்லாவற்றையும் விட அசத்தும் ஜோ! (சவீதா, அனு உதவியுடன் தான்).. பார்த்து முடித்ததுமே இன்றைக்கு அல்வா என்று முடிவு செய்துவிட்டேன். சம்பா கோதுமைதான் ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. மாதுங்கா போனால் தான் கிடைக்குமாம். 😦
திருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்; அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).
— ச.திருமலை
தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்
சம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.
செய்முறை:
- சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
- நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
- அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
- பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
- கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
- விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
- இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.
* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது
* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.
ஞாயிறு, நவம்பர் 4, 2007 at 5:45 முப
கெட்டிப்பாலாக இருக்கணும். அரைச்செடுத்து வடிகட்டிக் கொஞ்ச நேரம் வச்சாத் தெளிஞ்சிரும் பாருங்க. மேலாக நிக்கும் தண்ணீரை வடிச்சிட்டு, சக்கரையை அதோடு கலந்து ஒரு குக்கரில் வச்சு மூணு விசில் வரட்டும். பாத்திரத்துக்கு ஒரு தட்டுபோட்டு மூடணும்.
அதுக்கப்புறம் வாணலியில் நெய்யுடன் கிளறுனா சீக்கிரம் வேலை முடிஞ்சுரும்.
கைவலி இருக்குப்பா…… ரொம்ப நேரம் கிளஏற முடியலை. அதான் கொஞ்சம் காம்ச்சோர்:-)))
ஞாயிறு, நவம்பர் 4, 2007 at 8:29 முப
//வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. //
படம் பார்ப்பதற்கு முன்பு இது சோகப்பாடலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அதை சோகப்பாடலாகப் பார்த்தபின்பு எனக்கு மிகவும் சோகமாகிவிட்டது. :)) காணாமலேயே போய்விட்டார் கார்த்திக் ராஜா. 😦
திங்கள், நவம்பர் 5, 2007 at 9:35 முப
நானே ரொம்ப நாள் கழித்து இந்தப் படங்களைப் பார்க்கிறேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி. பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் நாக்கில் நீர் ஊற வைக்கின்றன. அருமையாகச் செய்து அதை விட அருமையாகப் படம் பிடித்துப் போட்டுள்ளீர்கள். இவ்வளவு இனிப்பு என் உடம்புக்கு ஆகாது என்பதனால் நான் படத்தில் மட்டும் பார்த்து சுவைத்துக் கொள்கிறேன் :))
திருநெல்வேலி நகர் முழுக்க சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான டூப்ளிக்கேட் கடைகள் உள்ளன. ஜாக்கிரதையாக ஜங்கஷனுக்கு நேர் எதிரில் முட்டுத் தெருவில் உள்ள கடையில் மட்டும் வாங்கவும்.
புது பஸ்டாண்டில் இருக்கும் அத்தனை சாந்தி ஸ்வீட்டும் டூப்ளிகேட் கடைகளே. ஒரு கடையின் பெயர் புகழ் பெற்று விட்டால் கூசாமல் அதே பெயரை அனைத்துக் கடைகளுக்கும் எந்தவிதக் காப்பி ரைட் பிரச்சினைகளும் இல்லாமல் வைத்துக் கொள்ளும் கொடுமை திருநெல்வேலியில்தான் காண முடியும்.
அன்புடன்
ச.திருமலை
திங்கள், நவம்பர் 5, 2007 at 5:01 பிப
துளசி, காம்சோர் எல்லாம் இல்லை. கை வலிக்காவிட்டாலும், புதுசா சுலப முறை இருந்தா செய்யலாம். முதல் காலத்துல குக்கர் இல்லை, அதனால அப்படி செஞ்சிருக்காங்க. ஆனா இது டிரெடிஷனல் ஐட்டம், அதனால மாத்தலை. அடுத்து சொல்லியிருக்கற கோதுமைப் பால் அல்வாவை அப்படி செஞ்சு பார்க்கறேன். நல்லா வந்ததா உங்களுக்கு?
திருமலை, கோவை கிருஷ்ணா மைசூர்பா அப்படித் தான் ஆகிப் போச்சு. கொஞ்சமா எழுத்து டிசைனை மட்டும் மாத்திடுவாங்க. சுலபமா ஏமாந்துடுவோம். 🙂
திங்கள், நவம்பர் 5, 2007 at 5:15 பிப
//படம் பார்ப்பதற்கு முன்பு இது சோகப்பாடலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.//
தோடாஆஆஆ, பாடல் வரிகளைக் கூடவா கவனிக்கலை. முதல் சரணம் சந்தோஷமாகவும், இரண்டாவது சரணம் சோகமாகவும் சிச்சுவேஷன். இரண்டுக்கும் ஒரே ட்யூன் ஃபிட் ஆகறது எல்லாம் அருமை. பொதுவா இரண்டாவதை சோகமா இழுத்துப் பாடணும்னே கலாசாரம் பழக்கிட்டாங்க. பழகிட்டீங்க. (அவங்கப்பா அதே மாதிரி ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ பாட்டுல இஸ்லாமிய, இந்துத்துவ வரிகளுக்கு ஒரே ட்யூன்ல செஞ்சிருப்பாரு.) ட்யூன் மட்டும் அதிரடியா இல்லை, ஜோ அழறது கூட மத்த செல்லுலாயிட்கள் மாதிரி கேவலமா இல்லாம கம்பீரமா இருக்கும். லேசா கண்ணைத் துடைச்சிகிட்டே பொட்டைத் தொட்டு சரிசெஞ்சுப்பாங்க. எப்ப திரும்ப வருவாங்களோ!
எனக்குப் பிடிச்சிருந்ததை விட உங்களை கா.ரா ஏமாற்றிவிட்டதே எனக்கு மகிழ்ச்சி. :)) நல்லா வேணும். என்சாய்!
திங்கள், நவம்பர் 5, 2007 at 8:45 பிப
//எனக்குப் பிடிச்சிருந்ததை விட உங்களை கா.ரா ஏமாற்றிவிட்டதே எனக்கு மகிழ்ச்சி. :)) நல்லா வேணும். என்சாய்!
//
அட ஏம்பா ‘ஜ’ எனற அருமையான அக்ஷரம் இருக்குப்ர, கோவை சரளா (with due regards to her notwithstanding) மாதிரி ‘ச’ வை ப்ரோயிகித்து என்சாய் என்று சொல்றிங்க?
Krishna
புதன், நவம்பர் 7, 2007 at 9:03 பிப
krishna, மேற்படி இலக்கியவாதியை எரிச்சலாக்கற எத்தனையோ வழிகள்ல இதுவும் ஒன்னு. கண்டுக்காதீங்க. 🙂
புதன், நவம்பர் 7, 2007 at 10:18 பிப
உங்க பக்குவபட்யே செஞ்சேன்,ரொம்ப நல்லா வந்தது.சம்பா கோதுமையான்னு தெரியாது.இங்க (மஸ்கட்)அரபில “Harees Noor”ன்னு இருந்தது .அதுலதான் செஞ்சேன் ,ருசியா இருந்தது ரொம்ப நன்றி
வெள்ளி, நவம்பர் 9, 2007 at 8:00 பிப
JSri:
the ingredients you listed look like normally available kind…still the taste for iruttukadai is very different and mouth watering.
have u tried the recipe with liquid glucose for thirunelveli halwa? just curious… these (liq glucose and also sambha wheat) one is not available in the indian stores here, i ‘ll try once i get hold of it.
வியாழன், நவம்பர் 15, 2007 at 9:46 பிப
Meena Arun, செஞ்சதோட இங்க சொன்னதுக்கும் நன்றி. எனக்கு இன்னும் கிடைக்கலை. ஆனா நான் முந்தி செஞ்சிருக்கேன்.
thiyagarajan, இருட்டுக்கடை அல்வா ருசிக்கு அந்த ஊர் தண்ணியும், அவங்களோட வெளில சொல்லிக்காத ஏதோ ரகசியமும் காரணம்னு சொல்லிக்கறாங்க. நானே பலதடவை அப்படித்தான் அல்டாப்பு விட்டுப்பேன். 😉
வியாழன், நவம்பர் 6, 2008 at 10:34 பிப
I got ur blog recently. Nice mysore pak recipe. Really nice to see ur recipes. I am able to view ur recipe of the photo,i can’t get the exact tamil font wht u are using. I got the font but the font is matching as jumbled words. I hve downloaded many tamil fonts but it does not match ur font. If you don’t mind could you tell me wht font you are using?
திங்கள், நவம்பர் 1, 2010 at 12:05 பிப
[…] அல்வா செய்தாலும் சுவையில் கோதுமை அல்வாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. […]
செவ்வாய், நவம்பர் 2, 2010 at 6:44 முப
திருநெல்வேலி அல்வா பிரபலாமனதற்கு காரணம் அதன் செய்முறையும், தாமிரவருணிதண்ணீரும் தான், இதே இருட்டுக்கடை மதுரையில் ஒரு கிளை தொடங்கினார்கள், அல்வா அந்த சுவை வரவில்லை, மாலையில் இறுகி, கட்டித்தன்மை வந்துவிட்டது, பின் கடையை மூடிவிட்டார்கள். இருட்டுக்கடை பக்கத்திலேயே இவர்களே விளக்கெல்லாம் போட்டு ஒரு கடை நடத்துகிறார்கள், இதே அல்வா அங்கும் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.
செவ்வாய், திசெம்பர் 7, 2010 at 10:11 பிப
இருட்டுக்கடை பக்கத்திலேயே இவர்களே விளக்கெல்லாம் போட்டு ஒரு கடை நடத்துகிறார்கள், அதன் பெயர் விசாகம் ஸ்வீட்ஸ் தேரடி இந்தியன் வங்கி எதிரில் உள்ளது (புதன் விடுமுறை) காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை கிடைக்கும் இதே அல்வா அங்கும் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.
புதன், பிப்ரவரி 2, 2011 at 5:15 பிப
daily nearly about one ton hallwa travels in nellai express train