தேவையான பொருள்கள்:
முந்திரி பருப்பு – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 1 கப்
ஏலப்பொடி
செய்முறை:
- முந்திரிப் பருப்பை மிக நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விட்டு கெட்டிப் பாகாகக் காய்ச்சவும்.
- பாகு காய்ந்ததும் சிறிது சிறிதாக பருப்புத் தூளை தூவிக் கொண்டே கட்டி தட்டாமல் கிளறவும்.
- கலவை கொதித்து இறுகி வரும்போது ஏலப்பொடி சேர்த்து, பின் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்க ஆரம்பித்து விடாமல் கிளறவும்.
- எல்லா நெய்யும் சேர்த்தபின், கலவை சேர்ந்தாற்போல், நுரைத்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
- லேசாக ஆறியதும், வெண்ணை பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி அதன் மேற்புறத்தை வழவழப்பாகத் தடவி, வில்லைகள் போடவும். (கலவையை பெரிய தட்டில் மெல்லியதாகப் பரவுவது போல் (அரை செ.மீ உயரம் மட்டும்) கொட்டினால் கடையில் விற்கும் முந்திரி கேக் போன்றே இருக்கும்.)
* விரும்புபவர்கள் மேலே வெள்ளித் தாள் ஒட்டிக் கொள்ளலாம். நான் செய்வதில்லை.
* இந்த முறையில் முழுமையாக பாதாம் பருப்பிலோ அல்லது பாதி முந்திரி பாதி பாதாம் என்றோ எடுத்தும் செய்யலாம்.
* கோவா சேர்த்துக் கிளறுவது மிகுந்த மணமாகவும் சுவையாக இருக்கும். முக்கால் லிட்டர் பாலைக் காய்ச்சி முழுமையாக கோவா ஆவதற்கு முன் சேர்ந்தாற்போல் வரும்போதே இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை 300 கிராமாக(கோவாவிற்கும் சேர்த்து) எடுத்துக் கொண்டு மேற்சொன்னபடி பாகு காய்ச்சி, பருப்புத் தூளைப் போட்டுக் கிளறும் போதே இந்த கோவாவையும் சேர்த்துக் கிளற வேண்டும்.
வெள்ளி, நவம்பர் 2, 2007 at 10:42 பிப
தீபாவளிக்கு அட்வான்ஸாக ஸ்வீட் ரெசிபி போட்டதற்கு நன்றி. கேசரி படம் பார்க்கவே அழகாக இருக்கிற்து. கெட்டி பாகு பதம் என்றால் மைசூர் பாகு பதம் போல் இரண்டு கம்பி பதமா?. எனக்கு எப்போதுமே ஸ்வீட் செய்யும் போது இதேதான் பிரச்சினை. பாதி நேரம் கேக் போல் வராமல் அல்வா ஆகிவிடும். மைசூர் பாகு சரியாக வராமல் பேஸன் லாடு பிடித்து விடுவேன். புலம்பலை பொறுத்துக் கொண்டு கொஞ்சம் பாகு பதம் பற்றி கூறவும். நன்றி.
சனி, நவம்பர் 3, 2007 at 8:12 முப
நேயர் விருப்பமாக மைசூர் பாக்கு போட வேண்டும்!
சனி, நவம்பர் 3, 2007 at 5:38 பிப
uma kumar,
வெல்லம்:
இளம் பாகு – சிறிது தண்ணீரில் போட்டால் தனியாக ஆனால் தளர்வாக வரும். (தண்ணீரில் கரையக் கூடாது.)
கெட்டிப் பாகு – உடனே அடியில் போய் உருண்டையாக எடுக்க வரும்.
முற்றிய பாகு – உருண்டையாக எடுத்து கீழே போட்டால் டங்’ என்று சத்தம் வரும் அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும்(புட்டு, உக்காரைக்கு)
சர்க்கரை:
கரைந்து கொதித்தால் போதும் (குலாப் ஜாமூன்)
இளம் பாகு – ஒற்றைக் கம்பிப் பதம்.
கெட்டிப் பாகு – இரட்டைக் கம்பிப் பதம்.
ஞாயிறு, ஜனவரி 13, 2008 at 6:45 பிப
Hi Jayshree,
This is my first trial for making a sweet, I tried this, but i over heated the ‘pagu’, so it bcame brownish instead white color.
may b i need to try one more time to get it in correct ‘padam’.. 😦
வியாழன், நவம்பர் 6, 2008 at 11:45 பிப
wow…looks like store bought one..u r genius 🙂
ஞாயிறு, நவம்பர் 1, 2015 at 3:57 பிப
i want more tips for daily