தேவையான பொருள்கள்:
நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
- ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
- எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
- இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
- இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.
* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.
வெள்ளி, ஒக்ரோபர் 26, 2007 at 5:22 பிப
உங்க செய்முறைக்கு மிக்க நன்றி. நானும் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது..இங்குசென்று பாருங்கள்: http://thooyaskitchen.blogspot.com/
புதன், ஒக்ரோபர் 31, 2007 at 4:53 பிப
தூயா, மிக்க நன்றி. மகிழ்ச்சி. உங்களுக்கு நல்ல சுண்டல் கடலையே கிடைத்திருக்கிறது. மேலும் சுவையாக இருந்திருக்கும். என்னுடையது சாதா கடலை. :(. போகட்டும், சமையல் வித்தகர் என்று யாரையோ சொல்லியிருக்கிறீர்களே, யாரை? (கிகிகி..)
செவ்வாய், நவம்பர் 20, 2007 at 11:19 முப
உங்களைத்தான் 🙂