தட்டப் பயறு இரண்டு மூன்று அளவுகளில் கிடைக்கும். நான் அநேகமாக பெரிய அளவான பயறில் காரச் சுண்டலும், சிறிய அளவிலான பயறில் இனிப்பு சுண்டலும் செய்கிறேன். எந்த அளவிலும் மற்ற சாமான்கள் சேர்க்க வேண்டிய அளவு ஒன்றுதான்.
தேவையான பொருள்கள்:
தட்டப் பயறு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 மூடி
ஏலப்பொடி
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
- தட்டப் பயறை 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை சிறிது நீர் விட்டு முற்றிய பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
- பாகு தயாரானதும், வெந்த பயறு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்.
- இறக்கும் முன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* இந்தச் சுண்டல் சீக்கிரம் கெடாது. இரண்டு நாள்களுக்கு வைத்திருக்கலாம்.
* எல்லா வெல்லச் சுண்டல்களுக்கும் இறுதியில் சிறிது நெய் சேர்த்துக் கிளறுவது அதிக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
நவராத்திரி: துர்கா பூஜா (கல்கத்தா) – நிர்மலா
மறுமொழியொன்றை இடுங்கள்