தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
ரவை – 1 டேபிள்ஸ்பூன்
மைதா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
ஏலப்பொடி
எண்ணெய்
செய்முறை:
- கோதுமை மாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
- சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக் கொள்ளவும்.
- அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* அப்பக் குழியிலும் செய்யலாம்.
* விரும்புபவர்கள் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தையும் நன்கு மசித்துக் கலந்து கொள்ளலாம். மிகுந்த மென்மையாக வரும்.
நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சக்தி வழிபாடு – சித்ரா ரமேஷ்.
மறுமொழியொன்றை இடுங்கள்