போட்டிக்கு வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். மிரட்டலாக இருக்கின்றன. 😦

எனக்கு தொழில்நுட்பம் எதுவும் தெரியாது. உணவுக்கு பதிவு வைத்துக் கொண்டு அந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால் கொஞ்சம் அபத்தமாக இருக்கும் என்பதால் நானும்..

முடிந்த வரைக்கும் போட்டிக்காக புதிதாக படம் எடுத்து அனுப்பப்பாருங்கள்,ஏற்கெனவே எடுத்திருக்கும் படங்களில் இருந்து எடுத்து அனுப்பினால் பொதுவாக அவ்வளவாக பொருந்தி வராது.

நண்பர்களுக்கு: எனக்கு நேரமில்லை. :(( எடுத்தவைகளும் மனதிற்குப் பிடிக்கவில்லை. அதனால் பழைய பதிவுகளிலிருந்தே எடுத்துப் போடுகிறேன். அவர்கள் ஒத்துவராது என்று சொல்லவில்லை. அவ்வளவாகப் பொருந்தி வராது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். சொன்ன மாதிரி கலந்துகிட்டேன். ஆளை விடுங்க!

தக்காளி ரசம்: பதிவு

thakkaali rasam

உணவுப் பொருள்கள் என்றால் என்னைப் பொருத்தவரை, உணவு எந்த வண்ணத்தில் இருக்க வேண்டுமோ, இருக்கிறதோ அதே மாதிரி புகைப்படத்திலும் இருந்தால் சரியான புகைப்படம் என்றே எடுத்துக் கொள்கிறேன். உணவுப் படங்களுக்கு அதுவே மிக முக்கியம், அப்பொழுது தான் சாப்பிடும் ஆவல் வரும். அதனால் அதற்கு மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அக்கம்பக்கத்தில் இன்னும் கொஞ்சம் prop வைத்து அழகாக எடுக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் எனக்கு நேரம் ஒத்துவருவதில்லை. 😦

இயல்பான வண்ணங்கள் என்பதைத் தவிர என்னுடைய எல்லாப் படங்களிலிருந்தும் இந்த இரண்டு படங்களை மட்டும் தேர்வு செய்யக் காரணம், ரசம் இருக்கும் அந்த நசுங்கிய ஈயப் பாத்திரமும், தவலை இட்லி இருக்கும் scrtach விழுந்த அந்தத் தட்டும் இன்னும் கொஞ்சம் ஹோம்லி உணர்வைத் தருவதால். உணவுக்கு அந்த உணர்வும் முக்கியம் தானே. 🙂 இதுபோன்ற தடயங்கள் அவரவர் வீட்டிற்கென்று சில பிரத்யேக நிகழ்வுகள், நினைவுகள், கதைகளை வைத்திருக்கும். அம்மா வீட்டிற்குப் போனால் இன்னமும் நான் சின்ன வயதிலிருந்து சாப்பிட்ட அந்த தட்டையே சாப்பிட எடுத்துக் கொள்வேன். மனம் நிறைந்த உணவுக்கு இதுவும் முக்கியம்.

நடுவர்களுக்கு: I repeat, இவை போட்டிக்காக எடுத்த படங்கள் அல்ல. அந்தந்தப் படங்களுடன் அதற்கான முந்தைய பதிவுகளின் சுட்டியையும் சேர்த்த கொடுத்திருக்கிறேன். படங்களில் க்ளிக்கினால் Flickerல் அதனை பெரிய அளவிலும்(All sizes) பார்க்கலாம்.

இந்தப் போட்டியால் கொஞ்சம் குறிப்புகள் தெரிந்துகொண்டேன், நன்றி.

தவலை இட்லி: பதிவு

thavalai idli

Rasam Art நன்றி: “ஓசை” செல்லா.

rasam art by Osai Chella

Advertisements