இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்.
அரைக்க:
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்.
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
செய்முறை:
- புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய் மிளகை சிறிது எண்ணையில் வறுத்து, பொடிக்கவும்.
- தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகத்தை அப்படியே விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காயை சேர்த்து வதக்கவும்.
- அதில் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- சிறிது கொதித்ததும், புளித் தண்ணீர் சேர்க்கவும்,
- புளி கொதித்ததும், அரைத்த விழுதையும் போட்டு, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.
* தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவை கரைத்துச் சேர்க்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
இந்தக் குழம்புடன் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
மோர் சாதத்துக்கு இந்தக் குழம்பு அமிர்தமாக இருக்கும். [இருந்தது. :)]
மறுமொழியொன்றை இடுங்கள்