தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்
உளுத்தம் மாவு – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 மூடி
எள் – 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 2 கப்
ஏலப்பொடி
நெய், டால்டா அல்லது எண்ணெய்.
 

vella cheedai_sreejayanthi

1.
செய்முறை:

 • அரிசியைக் தண்ணீர்ல் அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து ஒரு துணியில் நிழலில் சிறிது உலரவைக்கவும்.
 • மிக்ஸியில் பொடித்து, சற்று கரகரப்பாக சல்லடையில் சலிக்கவும்.
 • வாணலியில் நிதானமான சூட்டில், கோலம் போடும் பதத்தில் வறுத்து எடுக்கவும்.
 • மறுபடியும் சலித்து, கட்டிகளைப் பொடி செய்து கலக்கவும்.
 • உளுத்தம் பருப்பை நன்கு வறுத்து, அரைத்து சல்லடையில் நைசாக சலித்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவு 1/4 கப் இருக்க வேண்டும்.
 • 1/4 கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை அடுப்பில் இளம்பாகாக வைக்கவும்.
 • இந்தப் பதத்தில் இறக்கி, உடனேயே வறுத்த மாவைக் கொட்டிக் கிளறி, நன்கு கலக்கவும்.
 • சின்னஞ் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், ஏலப்பொடி, உளுத்தம் மாவு இவைகளையும் சேர்த்து, தேய்த்துப் பிசைந்துகொள்ளவும்.
 • கொட்டைப் பாக்கு அளவு(அல்லது பெரிய நெல்லிக்காய் அளவு) உருட்டி துணியில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் நிதானமான தீயில் நெய் அல்லது எண்ணெயில் 10 லிருந்து 12 உருண்டைளுக்கு மேல் மிகாமல் போட்டு, மெதுவாகத் திருப்பிவிட்டு, சிவப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

* முதல் நாளே பாகுசெலுத்தி வைத்துவிட்டு, மறுநாள் (கெட்டியாக உதிரும்.) தேங்காய், எள், உளுத்தம் மாவு சேர்த்து லேசாக வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருட்டிப் போட்டும் செய்யலாம். இந்த முறையில் மாவு இறுகி, எடுக்க வராமல் இருந்தால், வெந்நீரைத் தெளித்து, பாத்திரத்துடன் சற்று அடுப்பிலோ, மைக்ரோவேவிலோ வைத்து எடுத்தால் இளகிவிடும்.

* கருப்பு எள்ளாக இருந்தால் தண்ணீரில் களைந்து வெளுப்பாகத் தேய்த்துக் கொள்ளவும்.

* பாகு அதிகமாகக் காய்ந்தாலோ, வெல்லம் அதிகமானாலோ சீடை தூள்தூளாகி விடும். எனவே வெல்லம் அதிகமாகிவிட்டால், 4, 5 டீஸ்பூன் இடித்த மாவை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

2.
செய்முறை: 

 • பச்சரிசி மாவை, கோலம் போடும் பதத்திற்கு சற்று அதிகமாகவே வறுத்து எடுத்து, கட்டியில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
 • சலித்த மாவை கப்பில் அளந்துகொண்டு, அதே அளவு நீரை அடுப்பில் வாணலியில் விட்டு, வெல்லம் சேர்க்கவும்.
 • வெல்லம் கரைந்ததும், நறுக்கிய தேங்காய் சேர்க்கவும்
 • தளதளவென கொதிக்கும் போது அரிசிமாவைக் கொட்டிக் கிளறவும்.
 • சுமார் 5 நிமிடங்கள் கிளறி வெந்ததும், இறக்கி, உளுத்தம் மாவு, எள், ஏலப்பொடி சேர்த்து ஆறியதும் உருட்டிப் போடலாம்.

* இந்த முறையில் செய்தால் வெல்லச் சீடை, தூளாகாமலும், கரகரப்பாகவும் இருக்கும்.