தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 லிருந்து 1 1/4 கப்
ஏலப்பொடி
பால்
எண்ணெய்

செய்முறை:

  • அரிசி மாவையும் கோதுமை மாவையும் சலித்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவை லேசாக வறுத்து, ஆறவிடவும்.
  • சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும்.
  • இரண்டு மாவுகள், தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி எல்லாவற்றையும் கலந்து, சிறிது சிறிதாக பால்விட்டு கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சீடைகளாக உருட்டும் பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • நெய், டால்டா அல்லது எண்ணெய் காய்ந்ததும், குறைந்த சூட்டில் 10, 12 சீடைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

* வெல்லச் சீடை அளவு கூட கடினமாக இல்லாமல், வாயில் போட்டதும் கரகரவென ருசியாக, மென்மையாகக் கரையும்.

Advertisements