நன்றி: ச.திருமலை
 

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
காய்கறி.

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்.

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
அரிசி – 1 டீஸ்பூன்.

uppuchchaar 1

செய்முறை:

  • புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, எள், அரிசி இவைகளை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்றாக ஆனால் கருகாமல் வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய், வெண்டைக்காய் அல்லது பாகற்காய் மாதிரி ஏதாவது ஒரு காய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயாக இருந்தால் நன்றாக எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து, புளி நீரைச் சேர்க்கவும்.
  • காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பொடியையைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

* இதில் மோர் சேர்த்தால் அது மோர் உப்புச்சார்.

Advertisements