தேவையான பொருள்கள்:

பாகற்காய் – 1/2 கிலோ
புளி –  சுண்டைக்காய் அளவு
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு
 

தாளிக்க – எண்ணை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

paagarkaai curry1

செய்முறை:

  • பாகற்காயை உள்ளிருக்கும் முற்றிய விதைப் பகுதியை நீக்கிவிட்டு, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிஞ்சான பகுதிகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பாகற்காயைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், புளிக் கரைசல் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். வேகும்வரை அவ்வப்போது திறந்து கிளறிவிடவும்.
  • நன்கு வெந்து நீர் வற்றியதும், கறி மசாலாப் பொடி அல்லது ரசப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

paagarkaai curry2

* சிலர் தண்ணீரில் வேகவைத்து நீரை வடித்துவிட்டு தொடர்ந்து சமைப்பார்கள். சிலர் சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து சமைப்பார்கள். இதனால் கசப்பு மட்டுப்படும் என்று. நான் செய்வதில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

குழம்பு, ரசம், தயிர்சாதம் மற்றும் கசப்பையும் விரும்பும், ஏற்றுக் கொள்ளும் பெரிய மனம். (என்னை மாதிரி!)