தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/8 கப்
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – 1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 4
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு.

thavalai vadai 3

செய்முறை: 

  • புழுங்கல் அரிசியையும் பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து உப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.
  • தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக அழுத்தாமல் கலந்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, சிறு உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வடைகளாகத் தட்டி எண்ணையில் நிதானமான தீயில் இருபுறமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

[மேலே இருக்கும் படத்துல் இருப்பவை, நான் ஊறவைத்தபின் கரண்ட் போய்விட்டதால் அதிகம் ஊறி மிக்ஸியில் கொஞ்சம் அதிகம் மாவாகிவிட்டது. இந்த மாதிரி நேரங்களில் சோம்பலைப் பார்க்காமல் கிரைண்டரை உபயோகிப்பது நல்லது.😦 ]

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, கெட்சப்.