தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

thavalai adai 2

செய்முறை:

  • அரிசியையும் பருப்புகளையும் மிளகு, மிளகாய் சேர்த்து மிஷினில் அல்லது மிக்ஸியில் தயாராக ரவைப் பதத்திற்கு அரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து 4 கப் தண்ணீர் சேர்க்கவும்
  • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தேங்காய்த் துருவல், அரைத்துவைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
  • மேலே முதல் வகை அடைக்குச் சொன்ன முறையிலேயே உருளி அல்லது வாணலியில் அடைகளாகத் தட்டி மேலே மூடி வேகவைக்கவும்.
Advertisements