தவலை இட்லி – நன்றி ‘அடுப்படி மாமி’
வலையுலக ‘அடுப்படி மாமி’ என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும். சில நாட்களுக்கு முன் ‘தவலை இட்லி’ பற்றி எழுதியிருந்தார். சரி, நீண்ட நாட்களாக அவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில. ( ஜெயஸ்ரீ மாமியின் 108 பதிவை முன்னிட்டு )
Labels: மொக்கை
நீங்கள் மொக்கை போட நான் தான் கிடைத்தேனா? நானே சமூகம், அரசியல், பின் முன் நடு நவீன இலக்கியம், பெண்ணியம், அலுமினியம், பித்தளை இயங்கள் இசங்கள் எதுவுமே வேண்டாமென்றுதானே ஒரு ஓரமாக தாளித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குமுன்… எனக்கு 108வது பதிவு என்று உங்களுக்கு(அல்லது உங்களில் ஒருவருக்கு) எப்படித் தெரியும்? நானே இந்தக் கணக்கெல்லாம் பார்ப்பதில்லை. பாஸ்டன் காரர் தானே இந்தக் (வெட்டிக்)கணக்கெல்லாம் வைத்திருப்பார்? 😉 சரி போகட்டும்.
1. செய்யும் பதார்த்தங்களை நீங்கள் என்றாவது சுவைத்து பார்த்திருக்கிறீகளா ?
ஆமாம். ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேயிருந்து அப்படிச் செய்ததால் தான் கொடுமை தாங்காமல் இந்த அளவாவது தேற முடிந்தது. பின்னே தினமும் தூக்கிக் கொட்டவா முடியும்?
2. போட்டோ எடுப்பதற்காக பதார்த்தங்களுக்கு மேக்கப் போடுவீர்களா ?
இல்லை. இது குறித்து வந்த தனிமடல்களுக்கும் இதுவே பதில். உண்மையில் என் சமையல் நேரம் கொஞ்சம் odd ஆனது. காலையில் ஆறரைக்குள் அப்பாவும் பெண்ணும் கிளம்பிவிடுவார்கள். எப்பொழுதும் அடுப்பில் வாணலியிலிருந்து நேரே தட்டுக்கே மாற்றப்படும் அவசரம் தான். அதனால் நிதானமாக மேக்கப் எல்லாம் போட முடியாது. எப்படி டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போகிறேனோ அப்படியே– அதற்குமுன் ஒரு செகண்ட் சமையல் மேடையிலேயே வைத்து ஒரு க்ளிக். அவ்வளவுதான். (பல நேரங்களில் அதற்குக் கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.) மற்றவர்களின் சமையல் பதிவுகளில் இருக்கும் புகைப்படங்களுக்கும் என் படங்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் அதுதான். அந்த எளிமையையே (கருப்பு மார்பிள் பின்னணி) என் பதிவின் புகைப்படங்களின் அடையாளமாக வைத்துக் கொள்ள நினைக்கிறேன். (இதற்கே ரங்கமணி தினமும் சாப்பிடும் முன் ‘காமிரா சாப்பிட்டாச்சா? நாங்க சாப்பிட ஆரம்பிக்கலாமா? ஒரு கேமிராவை இப்படி கேவலமா மிஸ்யூஸ் பண்றியே’ என்று கிண்டல். அவர் ஒளி ஓவியக் கலைத் தாகத்தோடு காக்காவின் மூக்கு, செடியின் இலை நுனியில் இருக்கிற கிழிசல், வராண்டா கம்பியில் எட்டுக்கால் பூச்சியின் ஏழாவது காலும் வலையும் என்றெல்லாம் எடுக்க யூஸாகும் என்று வாங்கிய காமிரா. நான் தான் கேவலமா மிஸ்யூஸ்.)
3. செய்யும் பதார்த்தங்களை பக்கத்து வீட்டுக்குக் கொடுப்பீர்களா ?
கொடுப்பேன். பொதுவாக பக்கத்துவீட்டுக் காரர்கள் மாறுதலுக்குட்பட்டவர்கள். இப்பொழுது இருப்பவர் மஹாராஹ்டிர மாநில புத்த மதத்தவர்கள். கர்ப்பிணியாக இருந்தார். முன்பு ஒரு பெளர்ணமியின் போது விரதம் என்று சொல்லிவிட்டார்கள். புதிதாகக் குழந்தை வேறு பிறந்திருக்கிறது. அதனால் அவர்கள் சாப்பிடுவார்களா, தூரக் கொட்டுவார்களா என்று தெரியாது. நீங்கள் கேட்டபின் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. மற்றவர்கள், பக்கத்து வீட்டில் இல்லாமல் எதிர் வீட்டிலோ ஏழு வீடு தள்ளியிருந்தாலும், சாப்பிட்டு நானே பார்த்திருக்கிறேன்.
4. உங்கள் பக்கத்துவீட்டில் குடியிருப்பவர் இன்னும் காலி செய்யவில்லையா ? (3 விடை ஆமாம் என்றால் )
கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? நாங்கள் வங்கி அதிகாரிகள் காலனியில் இருக்கிறோம். மாற்றல் ஆனால் தான் வீட்டை மாற்ற முடியும். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவரை ஒருவர், சமையல் உள்பட எல்லாவற்றிலும் சகித்துக் கொள்வோம். இந்தியா முழுக்க கலந்த மாதிரி பாரத விலாஸாக இருப்போம். பழகுவோம். எது நடந்தாலும் ஸ்மைலிகளை இறைத்துக் கொண்டே இயைந்து இயல்பாக வாழ்வோம். இல்லாவிட்டாலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருப்பதால், எங்களுக்கெல்லாம் சாப்பாட்டு விஷயத்தையும் சேர்த்து, சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம். (இணையத்தில் வரும் மொழி, இனச் சண்டைகள் என்னால் செரிக்கமுடியாமல் இருப்பதற்கும் அதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம்.)
முக்கியமாக, நான் கேவலமாக சமைத்தால் என் சமையல்திறனை சந்தேகப் பட மாட்டார்கள். தமிழ்நாட்டுச் சமையலே அப்படித்தான் போலிருக்கிறது என்று நினைப்பார்கள். அதனால் எனக்கு பொறுப்பு அதிகம். கொடுமையாக இருந்தால் நானே கொடுக்க மாட்டேன்.
5. தவலை இட்லி போல் தவலை வடை இருக்கா ? ( இட்லிவடை கூட்டணியில் பிரச்சனை உண்டு பண்ணாதீர்கள் )
ஓ, தாரளமாக இருக்கிறதே! ஆமாம் உங்கள் கூட்டணியில் இன்னும் ஒரே ஒரு வடை மட்டும் தான் இருக்கிறதா? நிறைய பேர் என்று கேள்விப்பட்டேனே. அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று தவலை வடையிலேயே 3 விதம் சொல்லியிருக்கிறேன். சந்தேகத்துக்கு தவலை அடை கூட சேர்த்தே சொல்லியிருக்கிறேன்.
அவற்றையும் நீங்கள் நாந்-வெஜ் ஆக்கிக் கொள்ளலாம். (அந்தத் தவ*ளை* செம க்யூட்! SPB, ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ நிகழ்ச்சியில் பலருக்குச் சொல்வது போல் உங்களுக்கும் ‘ல’, ‘ள’ பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறது. திருத்திக் கொள்ளவும்.)
6. செய்யும் ஐட்டங்களை பார்சல் செய்து அனுப்ப முடியுமா ?
ஆஹா, இதற்காகத்தானே காத்திருந்தாயடி ஜெயஸ்ரீ! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பொதுவில் இல்லாவிட்டாலும் தனிமடலிலாவது சொல்ல முடியுமா? 🙂 ஒருவருக்கா, ஒன்பது பேருக்குமேயா? சென்னை? பெங்களூர்? யுஎஸ் வரை என்றால் வருவதற்குள் ஊசிவிடுமே. பரவாயில்லையா? அட்ரஸ் சொன்னதும் வந்துகொண்டே இருக்கிறது.
7. ‘மேட்ச் ஃபிக்சிங் கார்னர்’ மாதிரி ‘சைடு எபெக்ட்ஸ்’ கார்னர் என்று தர முடியுமா ?
To every action there is an equal and opposite reaction என்று கேள்விப்பட்டதில்லையா? நான் சமைப்பது மட்டும் தான் என்றில்லை எல்லா உணவுக்குமே ஏதாவது சைட் எஃபக்ட் கட்டாயம் உண்டு. அது நல்ல சைட் எஃப்க்டா, அல்லாததா என்பது தான் பிரச்சினை. பொதுவாக அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதில் எனக்கு உடன்பாடு. எதையும் ஒதுக்காமல் ஆனால் எல்லாவற்றையும் மிதமாக உண்டால் ஒரு பாலன்ஸ் இருக்கும். மீறிய சைட் எஃபக்ட்ஸை அவ்வப்போது பதிவுகளில் சொல்லியும் வருகிறேன். நன்றாக கவனித்தீர்களானால், சொல்லியிருக்கும் ரெசிபிக்கும் நம் முன்னோர் அதற்கு வைத்திருக்கும் மேட்ச் ஃபிக்சிங் உணவிற்கும் இடையில் இந்த மாதிரி ஒரு பாலன்ஸ் இருப்பது தெரியும்.
பின்குறிப்பு: நீங்கள் நகைச்சுவைக்காக பொதுவில் பெண்களை, சில இணையக் குழுமங்களை கொஞ்சம் சத்தமில்லாது கிண்டல் செய்வது, மற்றும் பதிவுகளில் இருக்கும் வேறு சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு அவ்வப்போது ஒப்புமை இல்லை. இந்தப் பதிவிலேயே மாமி என்ற குறிப்பு தேவையே இல்லாதது. எனக்கு இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய சௌகரியமாக நான் நினைப்பது, எந்தத் தலையும் வாலும் இல்லாமல் வெறும் பெயரை மட்டும் குறித்தே அனைவரையும் அழைக்க முடியும் என்பதுதான். நேரில் பேசும்போது எதிராளியை நொடிக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்துத் தான் எனக்குப் பேசவே வரும். எல்லாப் பெண்களையும் அவரவர் ஜாதி வைத்தா அழைக்கிறீர்கள் என்று கேட்க நினைத்தேன். நான் சொல்ல நினைத்ததை விட அதிகமாக உஷா கேட்டுவிட்டார். என்றாலும் ஒரு விறுவிறுப்பான வலைப்பதிவை தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமலும், தொடர்ந்து சோர்ந்து போகாமலும் நடத்திவருகிறீர்கள் என்ற வகையில் வாசகியாக என் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! முடிந்தால் 108வது பதிவிற்கே கேள்வி கேட்கும் சேட்டைகளை எல்லாம் குறைத்துக் கொள்ளவும். குறைந்தபட்சம் சம்பந்தப்பட்டவரிடம் ஒரு முன் அனுமதி வாங்கி, பின் கேட்கலாம் என்பது என் எண்ணம். நன்றி.
-0-
ஹரன்பிரசன்னா: இன்னும் சில கேள்விகள்.
01. தவலை இட்லியும் உடைத்த இட்லியும் ஒன்றா?
உடைத்த இட்லி என்றால் என்ன, இட்லி செய்தபின் உடைக்க வேண்டுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த வகை இட்லி, வடைகளுக்கு முதலிலேயே மாவை மிஷினில் அல்லது மிக்ஸியில் உடைத்து வைத்துக் கொண்டும் செய்யலாம். அதைத் தான் கேட்கிறீர்கள் என்றால் விடை ஆமாம்.
02. உங்கள் வலைப்பதிவில் எழுத்துரு பிரச்சினை வந்தபோது அதை சரி செய்ய உதவிய படுபாவி(கள்) யார்?
உம்மாச்சி. 🙂 இது சிஃபி காரர்களுக்கே புரியவில்லை. கமால் ஹை என்று பான் குதப்பிக்கொண்டே ஆச்சரியப்பட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
03. இட்லி வடை ஒரு தடவை பொதுவில் பெயர் சொல்லி மாட்டிக்கொண்டு, சில நிமிடங்களில் அதை சரி செய்தது போல, உண்மையிலேயே நீங்கள் சொல்லும் ரெசிபிகளைச் செய்தது யார் என்று சொல்லி, மாட்டிக்கொள்ளுமுன் தப்பித்த அனுபவங்கள் உண்டுமா?
என் வீட்டில் அநேகமாக எல்லாவற்றையும் நானே சமைக்கிறேன். அல்லாத போது அதை வெளியில் சொல்வதிலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உப்புமா, ரங்கமணிதான் செய்வார் என்று இங்கே ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத நாள்களில், பெண்ணுக்கு தீவிரமாக பாடம் சொல்லிக் கொடுக்கும் நாள்களில் மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளுடன் நிதானமாகவும் சமைப்பதால் ஏதாவது ஒன்றிரண்டு ஐட்டங்கள் (முக்கியமாக, பெண்ணுக்குப் பிடித்ததைச்) செய்ய ஆர்வமுடன் முன்வருவார். எனக்கு மைக்ரேன் வந்து படுத்துவிட்டால் என் பெண் செய்து கொடுக்கும் 2 நிமிட நூடுல்ஸிற்கு ஈடு இணையே இல்லை. ஆனால் இதுவரை பதிவில் போட்டிருக்கும் அனைத்தும் நான் செய்தவையே.
04. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுப்பது நீங்கள் சமையல் செய்யும் நாளிலா அல்லது மறுநாளா?
:)) சென்ற வருடம், என் பெண், வருட இறுதியில் வாங்கிய பரிசுகளில் ஒன்று – Full Attendance.
05. நான் சொன்ன சிறந்த ரெசிபிகளில் சிலவற்றை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். மற்றதை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? (வழக்கம்போல் என் பெயரைச் சொல்லவேண்டாம்!)
இந்தக் கேள்வியே புரியவில்லையே ப்ரசன்னா. நீங்கள் என்ன ரெசிபிகள், எங்கு சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் செய்துவிடலாம். வாழைக்காய் தோல் கறி கூட சொல்லிவிட்டேனே.
பின்குறிப்பு: இட்லிவடை எந்தப் பதிவு போட்டாலும் ஓடோடி வந்து, ‘ஆமா ஆமா பெரியய்யா..’ பாணியில் வருகையைப் பதிவு செய்கிறீர்களே, நீங்களும் இட்லிவடையில் ஒருவரா, அல்லது அவருடைய தீவிர விசிறியா? (ஏதோ என்னாலானது!)
-0-
யோவ் இட்லிவடை, பார்ட்டியை நீ என்ன மல்லிகா பத்ரிநாத் மாமியைக் கேக்கற மாதிரி கேட்டிருக்க. நீ வேஸ்ட்டுயா. நீ கலைஞரைக் கேள்வி கேக்கத்தான் லாயக்கு. நீ ஒத்து. நா கேக்கறேன்..
ஜெ! என்கிற ஜெஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களே,
தன்யனானேன். 🙂
1. ஏன் ஒரேயடியாக அடுப்படிப் பக்கம்?
அப்படி எதுவும் இல்லையே. மரத்தடியில் சமையல் தடைசெய்யப் பட்டிருந்தது. அதனால் அடக்கி வாசித்தேன். வலைப்பதிவு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும், எனக்கே எனக்காக ஆனால் உபயோகமாக ஏதாவது செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்து, கிழிந்துகொண்டிருக்கும் டைரிக் குறிப்புகளை ஓசியில் ஒரு இடத்தில் சேமிக்கிறேன். விபரமாக பதிவின் முகப்பிலும், about பக்கத்திலும் சொல்லியிருக்கிறேன். மிகக் குறைவான நேரமே அங்கே இருக்கிறேன். மற்றபடி எல்லா விதமான பதிவுகளையும் படித்தே வருகிறேன். உங்களையும் படிக்கிறேனாயிருக்கும். 🙂
2. ஏன் திரட்டிகளில்(முக்கியமாக தமிழ்மணம்?) இல்லை?
🙂 இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முன்பு காசி சில பதிவர்களை தமிழ்மணத்திலிருந்து தூக்கியபோது ஒரு வாசகியாக மட்டும் இருந்தாலும் நானும்கூட அதைக் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது நகைச்சுவைக்காக இட்லிவடை எழுதிய பதிவின் ஒரு வரி என்னை மிகவும் யோசிக்க வைத்தது..
“ஏன் திரட்டியிலிருந்து என்னை எடுத்தீர்கள் என்று கேட்பதைவிட, திரட்டிகளாக நம்மைத் தேடிச் சேர்த்துக் கொள்வதுபோல் ஒரு வலைப்பதிவை எழுதலாம்..”
கிட்டத்தட்ட இந்தக் கருத்தில் (வார்த்தைகள் மாறியிருக்கலாம். எனக்குத் தேட நேரமில்லை.) ஒன்றை எழுதியிருந்தார். நான் அறியாமலே என் மனதில் பதிந்த கருத்து அது. அப்படி ஒரு பதிவை நான் எழுதமுடியாது என்று தெரியும். திரட்டிகளின் தானியங்கிச் செயல்பாடு அப்படிப்பட்டது இல்லை என்றும் தெரியும். ஆனால் ஏனோ திரட்டிகளில் என்னை இணைக்க என் மனம் ஒப்பவில்லை. கருத்து மனதை(அல்லது என் ஈகோவை?) நெருடிக் கொண்டே இருக்கிறது. 🙂 என் பதிவை தன் சொந்தத் திரட்டிகளில் இணைத்து எனக்கும் தெரிவித்த தனிநபர்களின் முகவரிகளை என் பதிவில் ‘திரட்டறாங்க’ பகுதியில் கொடுத்தே இருக்கிறேன். அவற்றை நானாகச் சேர்க்கவில்லை.
தவிர நிஜ வாழ்க்கை என்னைச் சுற்றி அவ்வளவு மோசமாக இல்லாதபோது திரட்டிகளில் இருக்கும் ஜாதி, மத, இன அரசியல் எனக்கு மிகுந்த அயர்ச்சியைக் கொடுக்கிறது. 😦 இந்தச் சமுதாயத்தை புரட்டிப் போடும் பதிவு எதுவும் நான் எழுதவில்லை. அதனால் தேவைப்பட்டவர்கள் தேடி வந்து என்னுடையதைப் படித்துக் கொள்வார்கள். பிரச்சினைகள் தொடர்ந்தால் எனக்கே எனக்காக மட்டும் மூடிவிடும் எண்ணமும் உண்டு.
3. ஒரு பக்கம் பிகேஎஸ் என்கிற …… இன்னொரு பக்கம் மதி என்கிற ….. எப்படி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்? என்ன சமரசம் செய்துகொள்கிறீர்கள்?
இருவரிடமும் சண்டையே போடவில்லை. அதனால் சமரசம் எதுவும் எங்களுக்குள் தேவை இல்லாமல் போய்விட்டது. எப்படி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் [அப்படியா சிவா, மதி? :)] என்பது நீங்கள் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. 🙂
இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தால் யாருடன் பேசுவீர்கள்?
அதிகம் தமிழ்நாட்டில் அம்மாவின் அரசியல் பாதையிலேயே சிந்திப்பீர்கள் போல் இருக்கிறது. யாராவது இருவருக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு வந்தால் ஒருவர் நிற்கும் இடத்தில் அடுத்தவர் நிற்கக் கூட மாட்டார் என்று நீங்களே கற்பனை செய்துகொள்வீர்களா? சில கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் வந்திருந்தாலும் நாங்கள் மரத்தடி நிர்வாகக் குழுமத்தில் இருந்தவரை மிகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் ஆக்கப் பூர்வமாகவும் செயலாற்றி வந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இப்பொழுதும் இருவரும் ஒருவேளை நேரில் சந்தித்தால் சட்டென திரைகள் எல்லாம் விலகி, இயல்பாய் பழக முடியும் என்று திடமாக நம்புகிறேன். இது எந்த இருவருக்கும் நடக்கக் கூடியது. இணையத்தில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பதையும் பார்த்துவருகிறீர்கள் தானே? (என்னுடைய கவலை எல்லாம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு என்னை சும்மா நகம்கடிக்க வைத்து விடுவார்களோ என்பதுதான்.) அதனால் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சந்தித்தால் மூன்று பேருமாகச் சேர்ந்து மரத்தடியின் மேல் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் யார் என்று கலந்து பேசிக் கண்டுபிடிக்க முயல்வோம். :))
4. இந்த முறை வித்லோகாவில் என்னென்ன புத்தகம் வாங்கினீர்கள்? (இல்லை என்று மறுக்க வேண்டாம். மஞ்சள் சேலையில் வந்ததை நான் பார்த்தேன்.)
நான் வித்லோகா போனது சென்னையில் என்னுடன் தங்கியிருந்த என் தம்பி, அப்பாவிற்கே கூட தெரியாது. நான் பயணித்த ஆட்டோ டிரைவர் மட்டுமே அறிவார். எனக்கே மறந்துவிட்டது, கத்திரிப்பூ கலரில், மஞ்சளும், கிளிப்பச்சை கலரும் கலந்த சுடிதார் அணிந்திருந்ததாக அன்று எடுத்த புகைப்படங்கள் சொல்கின்றன. ஆனால் நீங்கள் புடைவைக் கலரெல்லாம் சொல்கிறீர்கள். 🙂 இதைத் தான் போட்டுவாங்குவது என்று சொல்வதா? வாழ்க! புத்தகங்கள் என்றால், ம்ம்.. உடல் மண்ணுக்கு, சுப்ரமணியராஜூ கதைகள் வாங்கினேன். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வருவதற்குள்ளாகவே என்னுடைய லக்கேஜ் அதிகமாகிவிடுவதால் வழக்கம்போல் ரொம்ப யோசிக்க வேண்டியதாகி விட்டது.
5.. கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி. இன்னும் வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?
‘கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி’ என்றால் என்ன அர்த்தம்? புரியவில்லை.
🙂 🙂 🙂 ஸ்மைலிகள் உங்களுக்காக இல்லை. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள. ஐயா அநாநி, கிழக்குப் பதிப்பக்கத்தின் ஓனர் (சத்யாவையா சொல்கிறீர்கள்? 🙂 ) மட்டும் ஏன் சரி? முதலில் எனக்கும் ஒரு பதிப்பகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல முடியுமா? எப்பொழுதும் கேட்பதுதான். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அது எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் என்றாவது ஒருநாள் நான், ஒரு பதிப்பகம் எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினால், நான் கேள்விப்பட்ட பதிப்பகம் என்ற வகையில் கிழக்குக்குப் போவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே. :)) வேறு யாரை எல்லாமும் நான் அங்கு சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நானே ‘எனக்கு ஐஜியைத் தெரியும். அவருக்குத் தான் என்னைத் தெரியாது’ என்கிற விவேக் நிலையில் இருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள எந்த விசிட்டிங் கார்டைக் காண்பிப்பது?
6. எனிஇந்தியனில் நடந்த இலக்கியவாதியுடனான சந்திப்பைப் பற்றி எழுதுவீர்களா?
என்னக் கொடுமை இது சரவணன்! ஆனாலும் அந்தக் கொடுமையைச் சொல்லியே ஆகவேண்டும். வித்லோகாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது தம்பி எனக்குக் கொடுத்திருந்தது 10 நிமிட நேரம் மட்டுமே. (“உன் பொண்ணு ஆவி, பேய் படம் பாக்கணும்னு ரெண்டு காலும் தரைல படாம குதிக்கறா. “முனி” படம் கிளம்பறோம். பத்து நிமிஷத்துல வந்தா நீயும் வரலாம். இல்லைன்னா ரூமைப் பூட்டி கையோட சாவிய எடுத்துப் போயிடுவோம். அப்புறம் நீ வாங்கிட்டு வர்ற புக்கைப் படிச்சுகிட்டு ராத்திரி 10 மணிவரைக்கும் வெளில கொசுக்கடில ஒக்காந்திரு!”) மிகவும் அயர்ச்சியாக இருந்தது. இருக்கிற பத்து நிமிடத்தில் ரத்னா கபேயில் ஒரு காஃபி சாப்பிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் எதிரில் இருக்கும் எனி இந்தியன் போனால் அதன் பொறுப்பாளர் நமக்கு வாங்கித் தர மாட்டாரா என்று நப்பாசை கம் நேர மிச்சம் யோசனை. ஆனால் அப்பொழுது இணைய இணைப்பு கிடைக்காததால் அவசரத் தேவை என்று வீட்டிற்கு போய்விட்டாராம். ஃபோனில் தொடர்புகொண்டால் நம்பரைப் பார்த்ததுமே நான் என்று நம்பரை வைத்துத் தெரிந்துகொண்டு பேச ஆரம்பித்தவர்தான்…. என்னை ஹலோ கூட சொல்லவிட வில்லை. நான் மும்பையில் என் வீட்டிலிருந்து பேசுவதாக நினைத்து, தொடர்ந்து 20 நிமிடங்கள்– இலக்கியத்திலிருந்து இணையம் வரை, ஹரப்பா நாகரிகத்திலிருந்து ‘ஹாசினி பேசும்படம்’ சுஹாசினி நாகரிகம் இல்லாமல் பேசுவது வரை பேசிக் கொண்டேஏஏஏஏ இருந்தார். (இடையில் கீக் கீக் என்று என் தம்பியிடமிருந்து தொடர்ந்து எனக்கு ஃபோனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.) ஏற்கனவே களைத்துப் போயிருந்த எனக்கு, கால் வலியோ வலி. ஒருவழியாக, “எனக்கு உங்களை மாதிரி எல்லாம் போன்ல வெட்டியா பேச(???!!!) நேரமில்லை. வேலை இருக்கு!” என்று சொல்லி பதிலுக்குக் காத்திருக்காமலே வைத்துவிட்டார். ஹலோ தான் சொல்லவில்லை என்றில்லை, ‘உங்க கடையிலிருந்துதான் பேசறேன்’ என்று கூட சொல்ல முடியவில்லை. மீண்டும் இந்தப் பத்தியின் முதல் வரியைப் படித்துக் கொள்ளவும். 😦
அங்கே கடைப் பொறுப்பில் வேறு ஒரு பெண்ணும் ஆணும் இருந்தார்கள். ஆணை உள்ளே நுழைந்ததும் என் கண்கள் அரை நொடியும், பொறுப்பாளர் குறித்த தகவல் சொல்லும்போது அந்தப் பெண்ணை 4,5 நொடிகளும் சந்தித்தன. அங்கே நடந்த சந்திப்பு என்றால் இதுதான். ஆனால் அவர்கள் இருவரும் இலக்கியவாதிகளா என்று எனக்குத் தெரியாது. :))
7. உங்கள் புத்தகத்தை வெளியிடப்போவது கிழக்கா, எனி இந்தியனா? ..some words deleted… (கேள்வி செந்தழலார் கொலைவெறிப் படை சார்பாகக் கேட்கப் படுகிறது.)
அடடா… நானே யாரோடாவது போட்டி போடத் தான் 4 வரி கிறுக்கியிருக்கிறேன். அதை அச்சடிக்க ஒரு நோட்டீஸ் பேப்பரே போதும். இதற்கு எதற்கு பெரிய பெரிய மக்களை எல்லாம் இழுக்கறீர்கள். வேண்டுமானால் சண்டை போட்டதை எல்லாம் தொகுத்துப் போடலாம். ஆனால் அதற்கு இந்தப் பதிப்பகங்கள் போறாது. 🙂 நானே சொந்தமாக பதிப்பகம் ஆரம்பித்தால் கூட புத்தகம் வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லை. திருப்தியா? 🙂
[செந்தழல் ரவி, சமீப காலமாக, உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சினையா? 😦 அல்லது உங்கள் கொலைவெறிப் படைக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா? :(( அல்லது உங்கள் கொலைவெறிப் படைக்கும் வேறு யாருக்கும் ஏதாவது பிரச்சினையா? :(( தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்களே. எதாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். :வெள்ளைக் கொடி:]
8. நிறைய புத்தகம் படிக்கிறீர்கள் என்று தெரியும்.
:)) நான் படிக்கும் அறையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், இப்படிச் சொல்ல? :)) மிக மிகக் குறைவாகப் படிக்கிறேன். நேரமில்லை என்பதில்லை. எனக்குப் படிப்பதில் இருக்கும் மனத் தடை. ஒரு சிறு இடத்தில் வார்த்தைகள் குறிப்புகள் தடங்கினாலும் என்னால் மேலே பக்கங்களைப் புரட்ட முடியாது, வெளியே வந்துவிடும் மனம். சமீபத்தில் ‘உடல் மண்ணுக்கு’ முதல் இரண்டு அத்தியாயங்களுக்குள் இருந்த வருட எண்ணில் இருக்கும் ஒரு சிறு அச்சுப் பிழை திரும்பத் திரும்ப என்னை பக்கங்களைப் புரட்ட வைத்தது. (ஒரு புத்தகத்தை 4, 5 பேராவது அச்சுக்கு முன் படித்திருக்க மாட்டார்களா? ஒருவருக்குக் கூடவா இதுபோன்ற தவறுகள் கண்ணில் படாது?) ஒரு வழியாக ஐந்தாம் அத்தியாத்தில் வந்து அமைதி கிடைத்தது. அத்தனை உணர்ச்சிக் கலவைகளோடு அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு மற்றவர்களாக இருந்தால் இரண்டு நாளில் படித்தே முடித்திருப்பார்கள்.
ஏன் எங்குமே புத்தக விமர்சனம் எழுதுவதில்லை?
என் மீது உங்களுக்கு என்ன ஐயா அவ்வளவு நல்லெண்ணம்? பாம்புப் புற்று என்று தெரிந்தே கைவிட நானும் என்ன படைய்ய்யப்பரா?
தமிழக விமர்சனச் சண்டைகள் கண்டு பயந்து “சந்தோஷமே போயிடும் ஜெயன்..” என்று அவள் பின்வாங்கி விட்டாள். உண்மைதான் என்று படுகிறது.
யார் பின்வாங்கியது தெரியுமா? அருண்மொழி நங்கை. பரமசிவன் கழுத்துப் பாம்பே அப்படிச் சொல்கிறார். நமக்கு இதெல்லாம் தேவையா? ‘நல்லாருப்போம் நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்’ என்று ஜோ மாதிரி சாக்லேட் கடித்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதை விட்டுவிட்டு…
என் புத்தகத்தை அனுப்பினால் எழுதுவீர்களா?
அனுப்பத் தேவை இல்லை. நீங்கள் யார், எழுதிய புத்தகம் பெயர்(முடிந்தால் கிடைக்கும் இடம்) எல்லாம் பொதுவிலோ தனிமடலிலாவது சொன்னாலே போதும். வாய்ப்புக் கிடைக்கும்போது நானே வாங்கி, படித்துக் கொள்வேன். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதை என்று திடமாக நம்புகிறேன். விமர்சனம் எழுதுவது சந்தேகம் தான். எனக்கே தேவைப் பட்டால், தனிமடலில் கருத்து சொல்வேன். :safe game: (புத்தகம் எல்லாம் எழுதியிருக்கிற பெரியவர் எதற்காக ஐயா என்னைப் போல் சில்லுண்டிகளிடம் எல்லாம் வந்து கேள்வி கேட்டு பொழுதைக் கடத்துகிறீர்கள்?)
Last but not the least, ‘மரத்தடி’யில் இருக்கிறீர்களா?
இல்லாம பின்ன? 🙂
மரத்தடி சம்பந்தமான அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? (ஆம் என்றால் மேலும் 100 கேள்விகள் அது சம்பந்தமாகக் கேட்டு உங்கள் 108 வது பதிவிற்கு மெருகேற்றுவேன்.)
இல்லை. அதற்காக அங்கே மட்டுநர்கள் இருக்கிறார்கள். (எப்பொழுதுமே, ஒரு இடத்திலிருந்து வெளியே வந்தபின், அந்த இடத்தின் நல்ல விஷயங்களை மட்டுமே என் பதிவில் பகிர்ந்து கொள்வேன். அல்லாதவைகள் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவப் பாடங்கள். என்னோடு மட்டுமே இருக்கும். இதுதான் என் சம்பந்தப்பட்ட எல்லா தளங்களுக்கும் நான் பயன்படுத்துவது. மரத்தடியில் அப்படி எதுவும் அல்லாதவையே என்னைப் பொருத்த வரை நடக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.)
முக்கியப் பின்குறிப்பு: (ஜெ!, உங்களுக்குத் தான் பின்குறிப்பு பிடிக்குமே)
அதி முக்கியப் பின்குறிப்பு:
பின்குறிப்புகள் பிடித்திருப்பதற்காக எழுதுவதில்லை அநாநி. சில விஷயங்களை அடிக்கோடிட அவை தேவையாக இருக்கின்றன.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? முகமூடிகளுக்கு பதில் சொல்வதில்லை என்று தப்ப முடியாது. இட்லிவடையும் முகமூடியே.
முகமூடிகள் அநாநிகள் குறித்து எனக்கு ஒவ்வாமை எதுவும் எப்பொழுதும் இல்லை. ஆனால் இட்லிவடை எனக்குத் தெரிந்து 3,4 வருடங்களாகவே இட்லிவடையாகவே தொடர்ந்து இணையத்தில் எழுதிவருகிறார். ஆனால் நீங்கள் ராமசாமியாகவோ குப்புசாமியாகவோ இணையத்தில் இருந்துகொண்டு என்னிடம் கேள்வி கேட்க மட்டும் அநாநி அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
இட்லிவடை கேட்டிருக்கும் கேள்விகள் குறித்த உங்கள் விமர்சனம் சரி. ஆனால் அதற்காக நீங்கள் ஒன்றும் மலையைப் புரட்டும் கேள்விகளைக் கேட்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளத் தேவை இல்லை. அனைத்தும் “பக்கத்தாத்து பங்கஜம் மாமி” கேட்கும் பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வம்புக் கேள்விகள். பங்கஜம் மாமிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. அல்லது சொன்னாலும் கழுவுற மீனில் வழுவுற மீனாய்ச் சொல்லி அவர்கள் பிபியை எகிறவைத்து மகிழ்வேன். உங்களுக்கும் பதில் சொல்லாமலே புறக்கணித்திருக்கலாம். அல்லது சமையல் கேள்விகளுக்கு மட்டும் பதில் என்று நழுவியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் நீங்கள் சொல்லியிருக்கும் செய்திகள் எல்லாம் உண்மை என்ற பிம்பம் இணையத்தில் ஏற்பட்டுவிட சாத்தியம் அதிகமாக இருக்கிறது. அதற்காகவாவது பொறுமையாக உண்மையை மட்டுமே பேசியிருக்கிறேன். பங்கஜம் மாமிகளைப் போல் இல்லாமல் உங்களுக்கு இதனால் அமைதியும் சமாதானமும் கிடைத்தால் மகிழ்ச்சியே!
திங்கள், ஜூலை 30, 2007 at 11:32 முப
ஜெயஸ்ரீ, தவலை வடையும் தவலை அடையும் ஒண்ணுன்னு சொல்லி இத்தனை நாள் எங்க அம்மா பயங்கரமா ஏமாத்திட்டாங்க.. இன்னிக்கு வீட்டுக்குப் போய் ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்..
நூத்தி எட்டுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நூத்தி எட்டு எழுதுங்க..
பார்சல் அனுப்புவீங்கன்னு இத்தினை நாள் தெரியாம போச்சு.. அட்ரஸ் அனுப்புறது தான் இனி மொதோ வேல.. 😉
திங்கள், ஜூலை 30, 2007 at 12:39 பிப
//பின்குறிப்பு: இட்லிவடை எந்தப் பதிவு போட்டாலும் ஓடோடி வந்து, ‘ஆமா ஆமா பெரியய்யா..’ பாணியில் வருகையைப் பதிவு செய்கிறீர்களே, நீங்களும் இட்லிவடையில் ஒருவரா, அல்லது அவருடைய தீவிர விசிறியா? (ஏதோ என்னாலானது!)//
எல்லாவற்றிற்கும் சிறந்த பதில்கள் சொல்லியிருக்கிறீர்கள். இட்லி வடை யாரென்பது எனக்குத் தெரியாது. நான் யாருக்கும் விசிறியும் இல்லை. பெரும்பாலான சமயங்களில் என் கருத்து அவருடைய கருத்துடன் ஒத்துப்போகிறது. மேலும் நான் தேர்ந்தெடுத்து வாசிக்கும் 10 முதல் 15 வரையிலான பதிவுகளில் இட்லி வடையின் பதிவும் ஒன்று. அதனால் பதில் எழுதுகிறேன். ஆசிஃப் மீரான் பதிவிலும், சுந்தரின் எஸ்பிபி பற்றிய பதிவிலும் (உங்கள் பதிவில் எழுதிய பின்னூங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.) நீங்கள் என் பின்னூட்டத்தைப் பார்க்கவில்லை போல. (ஒருவேளை நீங்கள் இட்லி வடை பதிவை மட்டும்தான் படிக்கிறீர்கள் போல! :))
நீங்கள் எனி இந்தியன் கடைக்கு வந்து அழைத்துவிட்டு, கடையில் இருந்து பேசுகிறேன் என்று வேண்டுமென்றே சொல்லவில்லை. இன்றைய பதிலில் அதைப் பற்றிப் பெரிய காவியம் எழுதியிருக்கிறீர்கள். I enjoyed your answers. நன்றி.
திங்கள், ஜூலை 30, 2007 at 3:33 பிப
பொன்ஸ், அம்மா அரசியல்ல இதெல்லாம் சகஜம். பாவம் பிடிபிடின்னு பிடிக்காதீங்க. கொஞ்சம் விட்டுப் பிடிங்க. நாமும் நாளைக்கு அம்மாவாக வேண்டியிருக்கில்ல.. 🙂
//பார்சல் அனுப்புவீங்கன்னு இத்தினை நாள் தெரியாம போச்சு.. அட்ரஸ் அனுப்புறது தான் இனி மொதோ வேல.. //
பொன்ஸ், நீங்களும் இட்லிவடைல ஒருத்தரா? :-O
திங்கள், ஜூலை 30, 2007 at 3:42 பிப
ப்ரசன்னா, கூல்!
இதே நான் ஆசிப்புக்கோ, சுந்தருக்கோ, ஜெயஸ்ரீக்கோ விசிறியான்னு கேட்டிருந்தா இவ்ளோ டென்ஷன் ஆகியிருப்பீங்களா? இட்லிவடைக்கு விசிறியான்னு கேட்டதும் ஏன் கோபம் வருது? பின்னூட்டம் யாரும் எங்கயும் தொடர்ந்து போடலாம். அது பிரச்சினை இல்லை. நான் குறிப்பிட்ட ‘ஆமா ஆமா பெரியய்யா..’ தொனிக்கு பதில் என்ன?
ஆசிப்புக்கு இப்படியா எழுதறீங்க? “இது வழக்கமான ஆசிப்பின் லூசுத்தனமான பதிவு”ன்னில்ல எழுதறீங்க. (தெரியாமத்தான் கேக்கறேன், வழக்கமான ஆசிப்பின் பதிவுன்னு எழுதினா போறாதா? கவிஞர் வார்த்தைகளை இப்படி விரயம் செய்யலாமா? 🙂 )
அப்ப நீங்க எதிராளியை பேசவே விடாம பேசறது பிரச்சினை இல்லை. எனக்கு கால் வலிச்சதோ, காபி கூட வாங்கிக் கொடுக்க முடியதோ கவலை இல்லை. ஆனா அதை நாலு வரி நான் எழுதினதுமே அது காவியமாயிடுதா??!!… இந்த இலக்கியவாதிகளே இப்படித்தானா? என்னமோ போங்க!
செவ்வாய், ஜூலை 31, 2007 at 7:19 முப
|||ப்ரசன்னா, கூல்!
இதே நான் ஆசிப்புக்கோ, சுந்தருக்கோ, ஜெயஸ்ரீக்கோ விசிறியான்னு கேட்டிருந்தா இவ்ளோ டென்ஷன் ஆகியிருப்பீங்களா? இட்லிவடைக்கு விசிறியான்னு கேட்டதும் ஏன் கோபம் வருது?..||||
||| ‘கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி’ என்றால் என்ன அர்த்தம்? புரியவில்லை.
🙂 :):) ஸ்மைலிகள் உங்களுக்காக இல்லை. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள.|||
ம்ம்.. அதே மாதிரி எல்லாக் கேள்விக்கும் ‘சமத்தா’ அமைதியா பதில் சொன்னீங்களே, கிழக்கு ஓனர் பத்தி கேட்டதும் மட்டும் உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம் வருதுன்னு நான் கேக்க மாட்டேன்… கேக்கவேஏஏஏ மாட்டேன்.
||சத்யாவையா சொல்கிறீர்கள்?||
யக்காவ்… நான் கூட உங்களை என்னவோன்னு நினைச்சேன். கலக்கறீங்க. ரொம்ப ரசிச்சேன்.
நடத்துங்க, உங்க ராஜ்யம்.
செவ்வாய், ஜூலை 31, 2007 at 7:55 முப
Jayashree, I am a regular reader of your blog. I like your writing style- like girl next door. இந்த போஸ்டில் உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. சுமாரான கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இட்லி வடைக்கு நன்றி. நீங்கள் Srirangamaa, சென்னையா, மும்பையா?
Please tell me what to type for ‘shree’ in tamil.
செவ்வாய், ஜூலை 31, 2007 at 4:16 பிப
//இதே நான் ஆசிப்புக்கோ, சுந்தருக்கோ, ஜெயஸ்ரீக்கோ விசிறியான்னு கேட்டிருந்தா இவ்ளோ டென்ஷன் ஆகியிருப்பீங்களா? இட்லிவடைக்கு விசிறியான்னு கேட்டதும் ஏன் கோபம் வருது? பின்னூட்டம் யாரும் எங்கயும் தொடர்ந்து போடலாம். அது பிரச்சினை இல்லை. நான் குறிப்பிட்ட ‘ஆமா ஆமா பெரியய்யா..’ தொனிக்கு பதில் என்ன?
ஆசிப்புக்கு இப்படியா எழுதறீங்க? “இது வழக்கமான ஆசிப்பின் லூசுத்தனமான பதிவு”ன்னில்ல எழுதறீங்க.//
நான் டென்சன் ஆகியெல்லாம் எழுதவில்லை. விசிறி இல்லை என்று சொல்வதுதான் என் நோக்கம். ஆமா, ஆமா என்று சொன்னதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டேன். பெரும்பாலும் இட்லி வடை எனக்குச் சம்மதமான விஷயத்தையே எழுதுகிறார் என்று. மேலும் எனக்குச் சம்மதமில்லாதவற்றிலிருந்து ஒதுங்கித்தான் வருகிறேன்.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 8:46 முப
இட்லி வடை: வலையுலக ‘அடுப்படி மாமி’ என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும்.
ஜெயஸ்ரீ இட்லி வடைக்கு எழுதிய பின் குறிப்பு: ….இந்தப் பதிவிலேயே மாமி என்ற குறிப்பு தேவையே இல்லாதது…
ஜெயஸ்ரீ அனானிக்கு எழுதிய பின் குறிப்பு: …அனைத்தும் “பக்கத்தாத்து பங்கஜம் மாமி” கேட்கும் பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வம்புக் கேள்விகள். பங்கஜம் மாமிகளுக்கு நான் ….
#############
கேள்வி: ‘மரத்தடி’யில் இருக்கிறீர்களா?
பதில்: இல்லாம பின்ன?
கேள்வி: மரத்தடி சம்பந்தமான அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?
பதில்: இல்லை…… ஒரு இடத்திலிருந்து வெளியே வந்தபின், …
#############
??
நிறைய தாளிச்சு நீங்கதான் குழம்பிப்போயிட்டீங்களா? அல்லது உங்க சமையல்கட்டுக்கு வந்து நான் தான் குழம்பிப் போயிட்டேனா?
:-))))
*****
// தவிர நிஜ வாழ்க்கை என்னைச் சுற்றி அவ்வளவு மோசமாக இல்லாதபோது திரட்டிகளில் இருக்கும் ஜாதி, மத, இன அரசியல் எனக்கு மிகுந்த அயர்ச்சியைக் கொடுக்கிறது.//
ஜெயஸ்ரீ,
நிச்சயம் ஜாதி, மத, இன அரசியல் தமிழ் வலைப்பதிவுகளில் இருக்கிறது. ஜாதி,மதம் நிஜ வாழ்வில் உள்ளவரை அது மனிதன் கூடும் எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கும்.இணையத்தில் உள்ள சுதந்திரம் அதைப்பற்றி இங்கே அதிகமாக பேசவைக்கிறது.
உங்களைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை நல்லதாக உள்ளது. ஆனால் நிஜ வாழ்க்கை பலருக்கு வலைப்பதிவு அரசியலைவிட கொடுமையாக உள்ளது.
உதாரணம்: உயர்சாதியினரின் மலம் – வால்மிகி அள்ள வேண்டும். http://sivabalanblog.blogspot.com/2007/07/blog-post_23.html
// இந்தச் சமுதாயத்தை புரட்டிப் போடும் பதிவு எதுவும் நான் எழுதவில்லை //
நீங்கள் சமுதாயத்தை புரட்டிப்போடும் கருத்துகளை கொண்ட பதிவு எழுதாவிட்டாலும், நான் படித்தவரை உங்களின் கருத்துகள் (ஆங்காங்கே பின்னூட்டம் வாயிலாக நான் அறிந்தது) நடுநிலையாக கருத்து கூறாமல் ( நடு நிலை என்பது மொக்கையாக யார் எப்படிப் போனா நமக்கு என்ற ரீதியில் சொல்வது ),சரியான வாதங்களைப் பதிவு செய்துள்ளது என்றே நினைக்கிறேன்.
தாளித்த நேரம் தவிர வலைப்பதிவு குடும்பச் சண்டைகளிலும் கலந்து கொள்ளுங்கள் :-))
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:15 முப
Vijayram,
Press ‘s’ and ‘r’ for shree. Thanks.
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:44 முப
கல்வெட்டு,
உங்கள் வருகைக்கும் உங்கள் வெளிப்படையான கேள்விகளுக்கும் நன்றி.
மாமி என்ற குறிப்பு தேவை இல்லாதது என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அநாநிக்கு அதே பதத்தைப் பிரயோகித்தது, அவரே சொல்லியிருக்கும் மல்லிகா பத்ரிநாத் மாமிக்குக் கேட்பதைப் போல் இட்லிவடை கேட்டிருப்பதாக செய்த விமர்சனத்திற்கு. அப்படியேதான் இவரும் கேட்டிருக்கிறார் என்பதை அதே பதத்தைச் சொல்லித் தானே குறிப்பிட முடியும்? நான் மாமி என்ற பதமே கேவலம் என்றோ குறிப்பிடத் தகாத அருவருப்பான வார்த்தை என்றோ சொல்லவில்லை. நானே என் ச்செல்ல மருமகனுக்கு மாமிதான். இன்னும் பல குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் மாமியாகவும் இங்கே ஆண்ட்டியாகவும் தான் இருக்கிறேன். ஆனால் இங்கே இட்லிவடை சொல்லியிருக்கும் நோக்கமும், தொடர்ந்து அநாநி கிண்டலடித்திருக்கும் நோக்கமும் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து. இட்லிவடையின் மாமித்தனமானதை விட தன் கேள்விகளைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கும் அநாநிக்கு பின்னே அதையேதானே உபயோகிக்க வேண்டியிருக்கிறது. (மாமா, மாமிகளுக்கு எல்லா இடத்திலும் ஒரே பொருள் இல்லையே பலூன் மாமா.)
////
#############
கேள்வி: ‘மரத்தடி’யில் இருக்கிறீர்களா?
பதில்: இல்லாம பின்ன?
கேள்வி: மரத்தடி சம்பந்தமான அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?
பதில்: இல்லை…… ஒரு இடத்திலிருந்து வெளியே வந்தபின், …
#############
நிறைய தாளிச்சு நீங்கதான் குழம்பிப்போயிட்டீங்களா? அல்லது உங்க சமையல்கட்டுக்கு வந்து நான் தான் குழம்பிப் போயிட்டேனா?
////
மரத்தடியில் இருக்கிறீர்களா என்றால், நான் உறுப்பினராக இன்னும் மரத்தடியில் இருக்கிறேன் என்று அர்த்தம். எப்பொழுது வேண்டுமானாலும் போய் யாருடைய கவிதையையும் கிழிகிழியென்று கிழித்துவிட்டு வரலாம். சாத்தான்குளத்திலிருந்து ஏதாவது கதை வந்தால் சாத்தலாம். 🙂
வெளியே வந்துவிட்டேன் என்று சொன்னது குழும ஓனர் பதவியிலிருந்தும், நிர்வாகக் குழுவிலிருந்தும். அதனால் அந்தப் பதவியில் இருந்தபோது எங்களுக்குள் மட்டுமே தெரிந்த மரத்தடி அரசியலின் அநாநி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று அர்த்தம். இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் அநாநிக்குப் புரிந்திருக்கும். 🙂
சமையல்கட்டில் குழம்பு மட்டும்தான் குழம்ப வேண்டும். நீங்கள் ரசம் மாதிரி தெளிவாகவே இருங்கள்.
///நிச்சயம் ஜாதி, மத, இன அரசியல் தமிழ் வலைப்பதிவுகளில் இருக்கிறது. ஜாதி,மதம் நிஜ வாழ்வில் உள்ளவரை அது மனிதன் கூடும் எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கும்.இணையத்தில் உள்ள சுதந்திரம் அதைப்பற்றி இங்கே அதிகமாக பேசவைக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை நல்லதாக உள்ளது. ஆனால் நிஜ வாழ்க்கை பலருக்கு வலைப்பதிவு அரசியலைவிட கொடுமையாக உள்ளது. உதாரணம்: உயர்சாதியினரின் மலம் – வால்மிகி அள்ள வேண்டும். http://sivabalanblog.blogspot.com/2007/07/blog-post_23.html
நீங்கள் சமுதாயத்தை புரட்டிப்போடும் கருத்துகளை கொண்ட பதிவு எழுதாவிட்டாலும், நான் படித்தவரை உங்களின் கருத்துகள் (ஆங்காங்கே பின்னூட்டம் வாயிலாக நான் அறிந்தது) நடுநிலையாக கருத்து கூறாமல் ( நடு நிலை என்பது மொக்கையாக யார் எப்படிப் போனா நமக்கு என்ற ரீதியில் சொல்வது ),சரியான வாதங்களைப் பதிவு செய்துள்ளது என்றே நினைக்கிறேன்.///
கல்வெட்டு, நிஜவாழ்க்கை அவ்வளவு மோசமில்லை என்று சொன்னால், இங்கே எல்லாரும் மறுமலர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. தமிழ்நாட்டை விட மும்பை மோசமாக இருக்கிறது. ஆனால் அதை வைத்து இணையம் செய்யும் அரசியல் தான் எனக்கு ஒவ்வாமையாக இருக்கிறது என்று அர்த்தம். சரி, பின்னூட்டங்களில் சரியான வாதங்களை நான் பதிவு செய்ததாக நீங்கள் சொல்லும்(நன்றி!) இடங்களிலெல்லாம் என்ன ஆயிற்று கல்வெட்டு? வாதங்களுக்கு(என்று கூட சொல்ல வேண்டாம். கருத்து என்றே வைத்துக் கொள்வோம்.) பதில் வைப்பதைவிட ஜாதியையும் இனத்தையும் சொல்லித் தாக்குவதும் தானே நடக்கிறது? யாரையும் இது சரி, சரியில்லை என்று சொல்ல நான் யார்? எனக்கு சரிவரவில்லை அவ்வளவுதான். பின்னூட்டம் எழுதும் நேரத்தில், இந்த மழைநாளில், சலிப்பான வீட்டு வேலைகளிலிருந்து என் வீட்டு வேலைக்காரிக்கு ஒருநாள் ஓய்வு கொடுத்து டிவியில் அவளுக்குப் பிடித்த ஷாரூக்கான் படம் பார்க்கச் சொல்லலாம். புதிதாகப் பிறந்திருக்கும் பக்கத்துவீட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டால் பிள்ளை பெற்ற அந்தப் பெண் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுப்பாள். கண்ணால் பார்க்காதவர்களோடு மல்லுக்கு நிற்பதைவிட, பாத்திரம் தேய்ப்பதும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதும் என்னைச் சுற்றி இருக்கும் சின்ன உலகத்தை மட்டும் பேதமில்லாமல் கவனித்துக் கொள்வதும்- நான் முற்போக்கானவளாக இல்லாதவளாகத் தெரியலாம். ஆனால் எனக்கு வசதியாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
////தாளித்த நேரம் தவிர வலைப்பதிவு குடும்பச் சண்டைகளிலும் கலந்து கொள்ளுங்கள் :-))////
தாளிக்கும் நேரம் மிக மிகக் கொஞ்சம் தான் கல்வெட்டு. வலைப்பதிவு படித்தது போக மிஞ்சிய நேரத்தில் தான் தாளிக்கிறேன். என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு மட்டுமே பதில் அளிக்கறேன். அன்றாடம் வலைப்பதிவுகளில் தான்— சில நேரம் தீவிரமாக வாசித்துக் கொண்டு, சில நேரம் சிரித்துக் கொண்டு, சில நேரம் மென்மையாய் புன்னகைத்து ஒதுங்கிக் கொண்டு… படிப்பதிலிருந்து தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் என்னைச் செதுக்கிக் கொண்டு… வலைப்பதிவு குடும்பத்தில் தான் வாழ்கிறேன். ஆனால் ஆரவாரமில்லாமல். எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் என் கருத்தைச் சொல்லிக் கொண்டு, எப்பொழுதும் என் இருப்பை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கத் தேவை என்ன வந்தது?
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 12:36 பிப
மரத்தடி சம்பந்தமான என் கேள்விக்கு(குழப்பத்திற்கு)
// இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் அநாநிக்குப் புரிந்திருக்கும். //
உண்மைதான். எனக்கு அந்த அரசியல் தெரியாது. இருந்தாலும் உங்களின் பதில் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தவே அறிந்து கொள்ள கேட்டேன்.
****
// பதில் வைப்பதைவிட ஜாதியையும் இனத்தையும் சொல்லித் தாக்குவதும் தானே நடக்கிறது? //
ஒத்துக் கொள்கிறேன்.
அது ஒரு மாதிரியான அரசியல்.
ஆளும் கட்சி ஊழல் செய்தது ஏன் என்றால் விடை வராது. எதிர்கட்சி என்ன செய்தார்கள் என்ற பட்டியலே விடையாக வரும்.
// யாரையும் இது சரி, சரியில்லை என்று சொல்ல நான் யார்? எனக்கு சரிவரவில்லை அவ்வளவுதான். //
உண்மை.
சரி தவறு என்பது அவரவர் கோணங்களில் மாறுபடலாம்.
//பின்னூட்டம் எழுதும் நேரத்தில், இந்த மழைநாளில், சலிப்பான வீட்டு வேலைகளிலிருந்து என் வீட்டு வேலைக்காரிக்கு ஒருநாள் ஓய்வு கொடுத்து டிவியில் அவளுக்குப் பிடித்த ஷாரூக்கான் படம் பார்க்கச் சொல்லலாம். புதிதாகப் பிறந்திருக்கும் பக்கத்துவீட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டால் பிள்ளை பெற்ற அந்தப் பெண் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுப்பாள். கண்ணால் பார்க்காதவர்களோடு மல்லுக்கு நிற்பதைவிட, பாத்திரம் தேய்ப்பதும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதும் என்னைச் சுற்றி இருக்கும் சின்ன உலகத்தை மட்டும் பேதமில்லாமல் கவனித்துக் கொள்வதும்- நான் முற்போக்கானவளாக இல்லாதவளாகத் தெரியலாம். ஆனால் எனக்கு வசதியாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.//
என்னதான் முற்போக்கு ,பின் நவீனம், முன் நவீனம் பேசினாலும் களத்தில் இறங்கி அதற்காக காரியம் ஆற்றாதவரை வெறும் எழுத்துக்களாலும், வார்த்தைச் சண்டைகளாலும் பயனில்லை.முற்போக்கு என்பது பேசுவது,எழுதுவது,கதை/கவிதை எழுதுவது என்ற அளவுகோலின் படியே அளக்கப்படுகிறது. கனிமொழியின் ( ஒரு குறியீடுதான் அவரை மட்டும் நோக்கிய கேள்வி அல்ல) சிந்தனைகள் பாராட்டப்படும் வேளையில் “சின்னப்பிள்ளை”களின் களப்பணிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கனிமொழியின் சிந்தனைகளால்/கவிதைகளால்,கதைகளால்,பேச்சால்…நடந்த சீர்திருந்தங்களைவிட “சின்னப்பிள்ளை” யின் களப்பணியால் நிமிர்ந்துவிட்ட மக்கள் அதிகம்.
களத்தில் இறங்கி தன்னைச் சுற்றி இருக்கும் சின்ன உலகத்தை பேதமில்லாமல் கவனித்துக் கொள்வது என்பது,முற்போக்குவாதியின் மூளையில் முடங்கிப்போய்க்கிடக்கும் ஓராயிரம் முற்போக்கு சிந்தனைகளைவிட உயர்வானது.
// மாமா, மாமிகளுக்கு எல்லா இடத்திலும் ஒரே பொருள் இல்லையே பலூன் மாமா //
:-))
புதன், ஓகஸ்ட் 1, 2007 at 12:38 பிப
பதில்களுக்கு/விளக்கத்திற்கு நன்றி !
வியாழன், ஓகஸ்ட் 2, 2007 at 8:07 பிப
Dear mrs JM,
An avid reader and relisher of ur articles thro’ desikan site.
Ur replies to Idli Vadai is ‘sabhash,sariyana potti sorry paetti’ aaga irunthathu.
Neengal indha vambukellam pogamal irupathal vendumendre vayaai kaatti mattikondargal(may be to tease u and get the readers some fun)
Ungalin ishtta deivamana Azhagiyamanavlanai pattriyum, Srirangathai pattriyum ungal kaivanathali meruguttungalen pl.
sundaram
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 4:33 பிப
Sundaram, JMன்னு என்னையா கூப்பிடறீங்க? புதுசா இருக்கு. உங்க பின்னூட்டத்துக்கு நன்றி.
அழகியமணவாளனைப் பத்தி தேசிகனும் அவங்க ஆதர்ச எழுத்தாளரும் எழுதாததையா நான் எழுத முடியும்? 🙂
வெள்ளி, ஓகஸ்ட் 3, 2007 at 8:02 பிப
Madame Jayashree(thiruppi pottal JM),
i will be the first and foremost to tell fellow bloggers,if u start writing about RANGA,as KRS and Thiruvarangapriya- munbe jagavangivittargal.
u seem to underestimate or downplay ur writing skill,whereas we readers not only enjoy stalwarts u mentioned but also the outlook of ‘Girl next door’ when it comes to views expressed simply.
Muartchi Thiruvinaiakkum.
sundaram
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 4:09 முப
/////‘உடல் மண்ணுக்கு’ முதல் இரண்டு அத்தியாயங்களுக்குள் இருந்த வருட எண்ணில் இருக்கும் ஒரு சிறு அச்சுப் பிழை திரும்பத் திரும்ப என்னை பக்கங்களைப் புரட்ட வைத்தது./////
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் புத்தக உள்ளடக்கத்தைப் பார்க்காமல் அச்சுப் பிழைகளைப் பார்க்கப் போகிறோம்? எரிச்சலாக இருக்கிறது.
/////அத்தனை உணர்ச்சிக் கலவைகளோடு அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு மற்றவர்களாக இருந்தால் இரண்டு நாளில் படித்தே முடித்திருப்பார்கள்./////
அப்படி என்ன உணர்ச்சிக் கலவையோடு அந்தப் புத்தகம் இருந்தது என்று சொல்லுங்களேன். நானும் தெரிந்துகொள்கிறேன். நீங்கள் என்ன கிழக்குப் பதிப்பகத்தின் பிரமோட்டரா? :)))))
(portion edited)
திங்கள், செப்ரெம்பர் 10, 2007 at 12:46 பிப
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் புத்தக உள்ளடக்கத்தைப் பார்க்காமல் அச்சுப் பிழைகளைப் பார்க்கப் போகிறோம்? எரிச்சலாக இருக்கிறது.
உங்களுக்கு எரிச்சலாக இருப்பதற்காக நான் சொல்லாமல் இருக்க முடியுமா மேற்குப் பதிப்பகம்? (‘ப்’ பணுமாக்கும்?) என் மனத்தடை என்று தானே சொல்லியிருக்கிறேன். என் மனத் தடைகளுக்கு நானே பொறுப்பேற்க முடியாத போது உங்கள் எரிச்சல்களுக்கு நான் பொறுப்பில்லை.
புத்தகத்தில் நாயகன், முதலில் 1947 பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடும்பத்துடன் பிரிந்து ரயிலில் போகும்போது தனக்கு 4 வயது பூர்த்தியாகி 3 நாள்கள் ஆகியிருந்ததாகவும்(must be Aug 14th, 1947) சொல்கிறார்.
பின்னர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று பிறந்ததாகச் சொல்கிறார். (ஞே! முன்னர் கொடுத்தது தகவல் பிழை என்று நினைத்து மேலே படிக்கிறேன்.) இந்தியாவில் இருந்தபோது, அண்ணனுடன் தில்லி சர்ச் உயர்நிலைப் பள்ளியில் படித்ததாகவும், ஆனால் அதிகம் நினைவில்லை என்று சொல்கிறார். சரி, 5, 6 வயதில் ஒன்றாவது படித்திருக்கலாம், அதனால் நினைவில்லை என்று நினைத்துக் கொண்டேன். அப்போதெல்லாம் 3 வயதிலேயே பள்ளிக்குத் தள்ளும் வழக்கம் இருந்ததா என்ன?
மீண்டும் இரண்டாம் அத்தியாயத்தில் தில்லியை விட்டுக் கிளம்பினால் 1956 கராச்சிக்குத் திரும்பும்போது தனக்கு 13 வயது என்று சொல்கிறார். வெறுப்பாக இல்லை? கடைசியில் அட்டையில் தெளிவாக ஆகஸ்ட் 11, 1943ல் பிறந்ததாகத் தான் குறிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம், சரியாக பிறந்த நேரத்தையும் இடத்தையும் சொல்லும் இடத்தில் தவறான வருடம் அச்சில் இருப்பது.
அச்சுப் பிழையில் வார்தைகளுக்கான ஸ்பெல்லிங்கோ(இதற்கு தமிழில் என்ன?) தமிழ் நடையிலேயேவோ தவறிருந்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. இவை இல்லாத புத்தகங்களே இல்லை. எனக்கும் உள்ளடக்கம் தான் முக்கியம். ஆனால் உள்ளடக்கமே ஒருவனது வரலாற்றைச் சொல்லும்போது, அதுவும் நாயகனின் பிறந்த வருடத்தைச் சொல்லும்போதே தவறிருந்தால் அவசியம் சொல்வேன். அது தவறுதான். (ஆசாத்தின் ஹஜ் புத்தகத்திலும் இது மாதிரி பிழை இருக்கிறது.) மூலப் புத்தகத்தில் ஒருவேளை இது தவறாக இருந்தாலும் மொழிபெயர்ப்பவர் திருத்தி தன் கருத்தாக அதையும் பதிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அப்படி என்ன உணர்ச்சிக் கலவையோடு அந்தப் புத்தகம் இருந்தது என்று சொல்லுங்களேன். நானும் தெரிந்துகொள்கிறேன்.
🙂 எப்பொழுதும் யோசித்திருக்கிறேன், உலக வரைபடத்தில் இருக்கும் எல்லைக் கோடுகளை எல்லாம் அழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு முறை பாரிசில் ஷாப்பிங் செய்கையில் ஒரு பங்களாதேஷ்காரரை சந்தித்த போது இரண்டாவது வாக்கியமே நீங்களும் என் சகோதரர் தானே என்று ஒரு மரியாதைக்காக நான் பேசியதும், அதைத் தொடர்ந்து அடுத்திருந்த பார்க்கில் எங்களது அரைமணி நேர உரையாடலும் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இவர் அந்த அரசாங்கத்தால் எதோ நூல் எழுதியதற்காக தேடப்பட்டு வருபவர். ஒரு விளையாட்டு வீரர். அகதியாக அல்லது திருட்டுத் தனமாக பிரான்சில் தங்கியிருந்தார். அதன்பிறகு அடிக்கடி எனக்கான எல்லைக் கோடுகள குறித்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
பேப்பரிலும் டிவியிலும் மட்டுமே நான் பார்த்து அறிந்திருந்த முஷரஃப்–
இரண்டு பக்கமும் கொலைகளும் கற்பழிப்பும் நடந்த அந்தக் காலத்திலேயே, பிரிவினையின் போது 7 லட்சம் ரூபாயை பாகிஸ்தானின் வெளிநாட்டு அலுவலகத்துக்காக பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு செல்லும் ஒரு குடும்பத்தில், இரண்டாவது குழந்தையாய் தானும் ரயிலில் பயணப்பட்டது, புது இடத்தில் தங்கள் வசதியில்லாத வாழ்க்கை, தன் அம்மா, அப்பாவின் நெருக்கமான அன்பான திட்டமிட்ட வாழ்க்கை, துருக்கி நாள்கள், மொழிகள், கணிதம், பூகோளம், விளையாட்டுத் துறைகளில் இருந்த ஆர்வம், மாஞ்சா சேர்த்துப் பட்டம் விடும் சண்டையில் தாதா ஆனது, 🙂 வாத்தியாரிடம் அடிவாங்குவது, பதின்ம வயதில் நானியின்(அம்மா வழிப் பாட்டி) புர்க்காவில் அடுத்தவீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் வைத்து அனுப்புவது, சாதா வெடியை சிகரெட்டுடன் சேர்த்து டைம்பாம் மாதிரி வெடிக்கவைக்க 🙂 தானே கண்டுபிடித்து, வார்டன் மற்றும் துணை வார்டன் வீட்டுக்கு எதிரிலேயே வெடி வைப்பது, மரத்தில் ஏறி மாம்பழம் பறித்து கிழே விழுவது, ஆற்றலையும் குறும்பையும் பார்த்து குடும்பம் இராணுவ வீரனாக்கத் திட்டமிடுவது, சல்யூட் அடிப்பதிலிருந்து ஆரம்பித்து தனது இராணுவப் பயிற்சிகள், ஓட வேண்டிய ஒன்பது மைல்களை குறுக்குப் பாதையில் வந்து, கண்டுபிடிக்கப் பட்டு, 4 லிருந்து 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது,…. என்று நாயகனோடு நாமும் பயணித்துக் கொண்டே அவன் உணர்வுகளோடு நாமும் ஒன்றி வரும்போது (சும்மா சொல்லக் கூடாது நல்ல ஓட்டம்)..
1965ல் ஏற்பட்ட யுத்தம்… ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூக்கை உடைத்து அனுப்பியிருந்தது பாகிஸ்தான்….. நாங்கள் அதிகமான நிலப்பிரதேசங்களைப் பிடித்தோம். அதிகமான எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் பிடிபட்டனர். இந்திய விமானப் படையை வானத்திலிருந்து ஊதித் தள்ளிவிட்டோம்…. என்னுடைய ஒட்டுமொத்த இராணுவ வாழ்க்கையிலும் தொடர்ந்த துப்பாக்கிச் சுடுதலின் காரணமாக, தீயைப் போல் துப்பாக்கியின் குழல் சிவப்பாகிப் போனதை அப்போது மட்டும்தான் பார்த்தேன்….. என்னுடைய செயல்பாடுகள் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. வீரத்துக்கான ஒரு விருதும் எனக்குக் கிடைத்தது.
இங்கே ஆரம்பித்து, புத்தகம் நீள இந்த மாதிரி இடங்களில் எல்லாம் மனம் நாயகனிடமிருந்தும் அவன் பெருமிதங்களிலிருந்தும் முற்றிலும் நழுவி மாற்று திசையில் பயணிக்கிறது. மனம் பதறுகிறது. எழுத்தாளனின் உணர்வும் என்னுடையதும் ஒன்றல்ல. காரணம் பலியானவர்கள் என் நாட்டின் எல்லைக் காவல் தெய்வங்கள்.
பொதுவாக வாசிக்கும்போது எழுத்தாளரின் உணர்வுகள் தான் நமக்கும் ஊடுருவ வேண்டும். இதில் மட்டும் தான் இப்படி மாற்றி மாற்றி அலைக்கழிக்கப் படுகிறேன். எனக்கு நிச்சயம் இது உணர்வுகளின் அலைக்கழிப்பு தான். உங்களுக்கு இல்லை என்றால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. இப்பொழுதும் சொல்கிறேன், உலக வரைபடத்தில் இருக்கும் எல்லைக் கோடுகளை எல்லாம் அழிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? கற்பனைக்கு காசா பணமா?
நீங்கள் என்ன கிழக்குப் பதிப்பகத்தின் பிரமோட்டரா? :)))))
🙂 நல்ல கூத்துதான். உங்கள் முதல் கேள்வியில் என்மேல் இருக்கும் கோபத்தைப் பார்த்து நீங்கள் என்ன பதிப்பகத்தின் பிரமோட்டரா, நான் தவறைச் சுட்டினால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று சொல்ல நினைத்தேன். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று ஆகிவிட்டது. இரண்டு பேருமே இல்லாத போது எதற்கு இந்த வெட்டி வேலை மேற்கு?
புத்தகத்தைப் படிக்கும்போது நானும் பர்வேஸ் முஷரஃபும் மட்டும் தான் இருந்தோம். இருக்கிறோம். இடையில் இது யாருடைய பதிப்பகம், யார் மொழிபெயர்த்தது என்றெல்லாம் எனக்குக் குறுக்கீடுகள் இல்லை. ஒருவேளை உங்களுக்கு இந்த மனத் தடைகள் புத்தக வாசிப்பில் இருந்தால் உங்களை அந்த வாக்தேவி தான் காப்பாற்ற வேண்டும்.
நல்லவேளை, பதிப்பகத்தோடு நிறுத்திக் கொண்டீர்கள். என்னை முஷரஃபின் கைக்கூலியா என்று கேட்காமல் விட்டது எங்காத்துப் பெரியவா செஞ்ச புண்ணியம்.
கடைசி பத்தியை எடிட் செய்திருக்கிறேன். அதற்கு பதில் நான் சொல்லமுடியாது. பதிப்பாளரும் பதிவுலகில் தான் இருக்கிறார். அவரிடமே நீங்கள் கேட்கலாம். ஏன் தைரியமில்லையா? 🙂 இது அநாநிமைக்கே இழுக்கு இல்லையா?
இந்தக் கேள்விகளை எல்லாம் நிஜப் பெயரிலேயே எனக்கு தனிமடலில் எழுதிக் கேட்டால் இன்னும் கூட சகஜமாகவும் சந்தோஷமாகவும் நட்புடனும் பதில் சொல்லியிருப்பேன். திங்கள் காலையில் ஆர்வமாக இரண்டு பதிவுகள் போடலாம் என்று வரும்போது இந்த மாதிரி (இந்த வலைப்பதிவுக்குச்) சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் எனக்கு மட்டும் எரிச்சலைத் தரவில்லை. ஏற்காட்டில் இருப்பது போல் இருக்கிறது. 😦
புதன், செப்ரெம்பர் 12, 2007 at 11:07 பிப
/////ஒரு விளையாட்டு வீரர். அகதியாக அல்லது திருட்டுத் தனமாக பிரான்சில்////
அகதியாகவோ திருட்டுத்தனமாகவோ இருப்பவர் எப்படி ஒரு நாட்டுக்காக விளையாட முடியும்?
///////இது அநாநிமைக்கே இழுக்கு இல்லையா?/////
அநாநிமை???
வியாழன், செப்ரெம்பர் 13, 2007 at 11:47 முப
செந்தில், சரியான வரிசையில் சொல்லியிருக்கவில்லை. 🙂
சாமான் வாங்கி பில்போட்டு, சுழல்கம்பியைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்ததும் என் பெண் விளையாட்டுத்தனமாக கைக்கு அடங்காமல் (4 வயது அப்போது) திரும்ப அடிவழியாக நுழைந்து உள்ளே ஓடிவிட்டாள். என்னால் உள்ளே திரும்ப அப்படி நுழைய முடியாதாகையால் என்ன செய்வது என்று தெரியாமல் திடுக்கிட்ட போது எனக்குப் பின்னால் பில் போட்டு வெளியே வந்த இவர்(cart முழுக்க முழுக்க சீஸ், வெண்ணை என்று பால் பொருட்களாகவே இருந்தன.) லாகவமாக பெண்ணை தன் ஒரு கையை மட்டும் உள்ளே விட்டு அவளைத் தூக்கி (சாதாரண ஆண்களுக்கு கொஞ்சம் சிரமம். அப்போது அதிகக் குண்டாகவும் மிகுந்த எடையாகவும் இருப்பாள்.) எடுத்து தன் கார்ட்டிலேயே உட்கார வைத்து தள்ளிக் கொண்டு, என்னைக் கண்டுகொள்ளாமல் அவளைக் கொஞ்சிக் கொண்டே வெளியே வந்தார். ஆளும் நிறமும் உடல்வாகும் அவர் ஒரு ஃப்ரென்சுக்காரராக இருக்கலாம் என்பது என் அநுமானம். என் மூக்குத்தியைக் காட்டி, இந்தியாவா என்று கேட்டார். அசத்தலான ஆங்கிலம் ஃப்ரென்சு ஆள் இல்லை என்று யோசிக்க வைத்தது. அவருடைய நாட்டைக் கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்துவைத்தவர்கள், உங்களுக்கு என்னைப் பிடிக்காமலும் இருக்கலாம், நான் பங்களாதேஷ்’ என்றார். அதனால் என்ன, நீங்களும் சகோதரர் தானே என்று மிக மிகச் சாதாரணமாக, அந்த நிமிடத்தை வலிக்காமல் நகர்த்திவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே சொன்னேன். வீட்டுக்குப் போவதிலேயே குறியாக இருந்தேன். அப்போது அவர் கண்களில் பார்த்த ஒளி இன்னும் எனக்கு ஆச்சரியம். வழியில் இருந்த பார்க்கில் பெண் நுழைந்துவிட தயக்கமே இல்லாமல் உள்ளே கூட்டிச் சென்று சரிசமமாக அவளை engage செய்துகொண்டே பேசினார். [வரவர எனக்கு என்னவோ பெண்களை விட ஆண்கள் தான் குழந்தை வளர்ப்புக்கு லாயக்கு என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. :)] தான் ஒரு நேஷனல் கால்பந்தாட்டக்காரர் என்றும் கொச்சின் சென்னைக்கெல்லாம் தன் நாட்டின் சார்பாக விளையாட வந்திருப்பதாகவும் சொன்னார். (உடல்வலுவின் காரணம் புரிந்தது.) தன்னை ஒரு எழுத்தாளன் என்றும் சொல்லிக் கொண்டார். நானும் ஏதோ எழுதுவேன் என்று சொன்னதற்கு ஒரு புன்னகை. தன் எழுத்து வேறு, தான் எழுதிய ஒரு புத்தகத்திற்காக (அரசையோ மதத்தையோ எதிர்த்து எழுதியதற்காக) அரசாங்கத்தால் தேடப்பட்டு வருபவன் என்று சொன்னார். என் முகம் பேஸ்தடித்ததை கவனித்து விட்டார். பயந்துட்ட தானே, பயந்துட்ட தானே என்று இடையிடையே சிரிப்பினூடாக கேட்டுக் கொண்டே இருந்ததிலேயே பயம் போய்விட்டது. ‘அதெப்படி உனக்கு மட்டும் முள்ளமாரி, முடிச்சவிக்கி எல்லாம் தான் பேசக் கிடைக்கறாங்க’ என்று கோவிந்த் அன்றும் கேட்கப் போவதை நினைத்து சிரிப்புதான் வந்தது. தலைமறைவாக இங்கே ரெஸ்டாரண்டில் வேலை செய்கிறேன் என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் உதைப்பாக இருந்ததால் அதிகம் நான் கேள்வி கேட்கவில்லை. அவரே பேசியவை மட்டும் தான். என் அண்ணன் தம்பி தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும், இவரது முகம் லேசாக மறந்துவிட்டாலும் ஏனோ ரக்ஷாபந்தன் அன்றெல்லாம் இந்த நினைவு வராமல் போனதில்லை.
ஆக உங்கள் சந்தேகம் சரி. அவர் பூர்வாஸ்ரமத்திலே தான் கால்பந்தாட்ட வீரர். அப்போது பாரிஸில் ரெஸ்டாரண்டில் வேலை செய்பவர்.
வியாழன், செப்ரெம்பர் 13, 2007 at 11:53 முப
//////////இது அநாநிமைக்கே இழுக்கு இல்லையா?/////
அநாநிமை???//
ஓ அதுவா, இந்த பெண்மை,ஆண்மை, தந்தைமை மாதிரி… ஹி ஹி கோபத்துல தட்டும்போது ஒரு ஃப்ளோல அப்படியே அந்த வார்த்தை வந்துடுச்சு.(நானே இப்பத்தான் சரியா கவனிக்கறேன்.) ‘அநாநி’ தமிழ் வார்த்தையாகி ரொம்ப நாள் ஆயாச்சு. அதனால அநாநிமை-யும் தமிழ் தான்னு எப்படியாவது பிரச்சினை பண்ணாம உள்ள தள்ளிவிட்டுடுங்க செந்தில். 🙂
வெள்ளி, செப்ரெம்பர் 14, 2007 at 2:51 முப
நான் கேட்டது அதுவல்ல ஜெஸ்ரீ.ஏற்கனவே குழந்தைமை என்ற வார்த்தையை நீங்கள் மரத்தடியில் உபயோகித்ததை அறிவேன். வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் ஒருவரை அநாநி என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? மேற்குப் பதிப்பகம் என்று பெயர் தந்தால் நான் அநாநியா? சரவணன் என்றோ செந்தில் என்ற பெயரிலோ வந்தால் நான் தெரிந்த நண்பர் என்கிற மாதிரி வித்தியாசமில்லாமல் விளக்கமாக பதில் சொல்லுகிறீர்கள்? உண்மையில் இரண்டும் நானே தான். அதைச் சொல்லத்தான் அந்தக் கேள்வி.
செந்தில் என்ற பெயரிலேயே கேள்வி கேட்டும் கொழுக்கட்டை பதிவில் உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. வாயில் என்ன கொழுக்கட்டையா? 🙂 அதுவும் நான் எதிர்பார்த்ததே. ஜெஸ்ரீ கூட இதிலிருந்தெல்லாம் வெளியே வரவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்ததுதான் என் கேள்வி. உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
அநாநியாகக் கேள்வி கேட்பதால் எனக்கு ஒன்றும் இழுக்கு வந்ததாக நான் நினைக்கவில்லை.
— செந்தில். 🙂
வியாழன், செப்ரெம்பர் 20, 2007 at 10:48 பிப
Longtime no see..
என்னாச்சு ஜெயஸ்ரீ? உடல் ஏதும் நலமில்லையா? 😦
நிறைய விரோதிகள் வேறு சேர்த்திருப்பீர்கள் போல் இருக்கிறது. 😉 பதில் சொல்லிவிட்டு, தொடர்ந்து சமையல் குறிப்புகளை எழுதுங்களேன். அல்லது ஒரு மாறுதலுக்கு ஏதாவது கவிதை கூட போடலாம். 🙂 உங்கள் மெயில் ஐடி தெரியப்படுத்த முடியுமா?
சனி, செப்ரெம்பர் 22, 2007 at 1:44 பிப
மேற்குப் பதிப்பகம்,
சொற்குற்றமோன்னு நினைச்சேன்; பொருட்குற்றமாயிடுச்சா? சாரி. முகமூடிமைன்னு சொல்லியிருக்கணும். 🙂
அநாநியா கருத்து சொல்றதே இழுக்குன்னு நான் எங்க சொல்லியிருக்கேன்? தாரளமா சொல்லுங்க. ஆனா அநாநியா சொல்றதையாவது சம்பந்தப்பட்டவங்க கிட்டயே தைரியமா சொல்லலாமில்ல. எதுக்கு through this improper channel? (அப்றம் நான் அதை எடிட் செய்ய வேண்டியிருக்கு!) இது
அநாநிமைக்கேமுகமூடிமைக்கே இழுக்கு இல்லையா? அதான் நான் கேட்டிருக்கேன். புரிஞ்சுதா?அப்புறம் தமிழச்சி மாதிரி ஏன் நான் இல்லைன்னு கேக்கறதே அபத்தம். நானும், பெரியார்தான் திரும்பத் திரும்ப பிறந்து வரணுமா? நீங்களே அவரை மாதிரி சமூகத்துக்கு உங்கள் வாழ்க்கை, குடும்பம், பணம், மானம் எல்லாத்தையும் அர்ப்பணிச்சு என்னையும் சமூகத்தையும் திருத்தலாமில்லன்னு கேட்டா உங்ககிட்ட பதில் இருக்கா? எல்லாவிதத்துலயும் வசதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு, அடுத்தவங்களை, எப்படி வாழணும்னு நாட்டாமை செய்யறது சுலபம். அப்படி இல்லாதவங்களை ‘பெரியார்’னு பேர்வச்சுகிட்டு தனியா யாராவது பிறந்து வந்து திருத்தணும்னு எதிர்பார்க்கறது கையாலாகத்தனம். அவங்கவங்களுக்கு ஒரு வாழ்க்கைத் தளம். சில விருப்பு வெறுப்புகள், சில ‘முடியும்’கள், சில ‘முடியாமை’கள். உங்களுக்கே இந்தக் கருத்தை சொந்தப் பேர்ல என்னை நேரிடையா கேட்க முடியலை தானே. அது தப்புன்னு நான் சொல்லலை. ஆனா அதை நான் புரிஞ்சுக்கற மாதிரி உங்களால மத்தவங்களைப் புரிஞ்சுக்க முடியலை. வேறென்ன சொல்ல? (வேற பதில் கூட சொல்லலாம் விளக்கமா இதுக்கு, ஆனா தமிழச்சி பேரை இங்க சம்பந்தமில்லாம நீங்க இழுத்த மாதிரி நானும் செய்ய விரும்பலை. அவ்ளோ தான்.)
//ஜெஸ்ரீ கூட..// நீங்க யாரு, என்னைப் பத்தி என்ன நினைச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை— அந்தக் கடவுளுக்கு பேர் ராமரோ, கிருஷ்ணரோ, பிள்ளையாரோ… இயற்கையோ அல்லது இது எதுவுமே இல்லாத ஒன்றோ, எதுவாயிருந்தாலும் எனக்கு நம்பிக்கை உண்டு. என்ன, மூட நம்பிக்கைகள், சாதி மத சமாசாரங்களை எல்லாம் இதுல போட்டு குழப்பிக்கறதால அது பலருக்கு பிரச்சினை ஆகுது. எனக்கில்லை. மத்தபடி எனக்கு நாத்திகர்களையும் பிடிக்கும். ஆனா உண்மையான நாத்திகனை இன்னும் நான் சந்திச்சதே இல்லை. எல்லாம் போலியா இருக்காங்க. 😦
சரி வந்தது வந்துட்டீங்க, இந்தச் சுட்டில இருக்கற ஆடியோ என்னால கேட்கவே முடியலை. இதைக் க்ளிக்கினா மட்டும் இப்படி மெசேஜ் வருது.
===
Windows Media Player cannot find the file. If you are trying to play, burn, or sync an item that is in your library, the item might point to a file that has been moved, renamed, or deleted.
===
இந்தப் பதிவுல இருக்கற மத்த ஆடியோ எல்லாம் கேட்க முடிஞ்சது. இது மட்டும் தான் பிரச்சினை. வேறொரு நண்பரைக் கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கும் தெரியலை போலிருக்கு. பதிலே இல்லை. உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ். முன்கூட்டிய நன்றிகள். 🙂
சனி, செப்ரெம்பர் 22, 2007 at 1:57 பிப
vijayram,
தாளிக்கும்போது கடுகு தெறிச்சு கண்ணுல விழுந்து உவ்வாவாயிடுச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க? 😦
//நிறைய விரோதிகள் வேறு சேர்த்திருப்பீர்கள் போல் இருக்கிறது.//
>என்னங்க நீங்களும் இப்படிச் சொல்றீங்க? எனக்கு விரோதியாக எல்லாம் நிறைய தகுதி வேணும்.:) அந்த அளவுக்கு யாரையும் நான் பெரியாள் ஆக்கறதில்லை. யாருக்காவது விரோதி ஆகற அளவுக்கு நானும் பெரியாள் இல்லை. யாரோ நண்பர்(கள்) தான். என்ன, வேற எங்கயாவது காண்பிக்க நினைக்கற கோபத்தை இங்க காண்பிச்சுடுவாங்க. வீட்டுல எல்லாருடைய மனத் தாங்கலும் அடுப்படி அம்மாகிட்டயே காண்பிப்போமே, அது மாதிரி. அதனால இவங்களும் நண்பர்களாகத் தான் இருக்கணும். அதனாலதான் புண்படுத்திடக் கூடாதேன்னு வார்த்தைகளை சிதறவிடாம பதில் சொல்லிகிட்டிருக்கேன்.
அது போகட்டும், மேஜர் சுந்தரராஜன், எல்லா வசனத்தையும் ஒரு தடவை ஆங்கிலத்துல சொல்லிட்டு, கையோட தமிழ்லயும் சொல்வாராமே, அது மாதிரி உங்க பின்னூட்டமெல்லாம் முதல்ல ஒரு வரி ஆங்கிலத்துல ஆரம்பிச்சு, அப்புறம் தமிழுக்குத் தாவுறீங்களே, இது என்ன ஸ்டைல்? முழுக்கவே தமிழ்ல சொன்னா என்ன? 🙂
சனி, செப்ரெம்பர் 22, 2007 at 9:38 பிப
காலையில் எழுந்ததும் உனக்கு இது தேவையா என்று என்னை நானே கேட்க வேண்டியதாகி விட்டது. 🙂 உண்மையில் நீங்கள் ஏதும் மன உளைச்சலில் இருப்பீர்களோ என்று தயங்கித்தான் அந்த பின்னூட்டம் எழுதினேன். சொல்ல நினைப்பதை ஆங்கிலத்தில் சரசரவென எழுதுவது எனக்குச் சுலபம். தமிழில் ஒரு முறை சொல்லிப் பார்த்து தட்டி திருத்தி தான் முழு வடிவம் கொடுக்க முடியும். இனிமேல் கவனமாக எழுதுகிறேன்.
நீங்கள் கூடத்தான் சிந்துபைரவி சிந்து மாதிரி (‘இருக்கே விலாசம் எனக்கு, என் இனிஷியலுக்குத்தான் விலாசம் இல்லை’) பெரும்பாலான வாக்கியங்களில் முதல் பகுதியை கடைசியில் எழுதுகிறீர்கள். இதற்கு முந்தைய பின்னூட்டத்திலேயே உதாரணம் – ‘வேற பதில் கூட சொல்லலாம் விளக்கமா இதுக்கு,..’.
‘இதுக்கு வேற பதில் கூட விளக்கமா சொல்லலாம்’ என்று எழுதினால் என்ன? மரத்தடியில் உங்கள் எழுத்துகளை எல்லாம் முதலில் படிக்கும்போது கொஞ்சம் கடியாக (sorry to say this.) இருந்தது. இப்போது பழகிவிட்டது. எனக்கும் தொற்றாமல் இருக்க வேண்டும். அதற்காக சிந்து மாதிரி ஏன் பேசுகிறீர்கள் என்று நான் உங்களை கேட்டேனா? 🙂 🙂 🙂
சனி, செப்ரெம்பர் 22, 2007 at 10:42 பிப
அடேயப்பா! :(((
பிகேஎஸ் எப்பயோ சொல்லியிருக்காரு, என் வாக்கிய அமைப்பு கதைல சரியில்லை, கொஞ்சம் குழப்படியா இருக்குன்னு. வேற யாரும் என்ன பிழைன்னு சரியாச் சொன்னதில்லை. இப்ப நீங்க சொன்ன பிறகு தான் வித்தியாசம் தெரியுது. 🙂 பேசும்போதும் அப்படித்தான் பேசுவேன் போலிருக்கு, தெரியலை. அதுக்காக… ஜேகேபி, “புலிநகச் சங்கிலி போட்டவனெல்லாம் ஜேகேபி ஆயிட முடியுமா?”ன்னு தர்பார் ராகத்தை எடுத்து விடறதுக்கு முன்னாடி சொல்வாரே அப்படி, மாத்தி மாத்தி பேசறவங்க எல்லாம் சிந்து ஆயிடமுடியுமான்னு அந்தம்மா சண்டைக்கு வந்துடப் போறாங்க. நான் அவங்க முன்னால பெரிய சைஃபர் எல்லாத்துலயும்னு அவசரமா சொல்லி வெச்சுக்கறேன். :((
ஞாயிறு, செப்ரெம்பர் 23, 2007 at 8:31 முப
ஜெ. இந்த அட்வைஸ் எல்லாம் கண்டுக்காம போவீங்களா, அதை விட்டு விட்டு பக்க பக்கமா விளக்கம் அடிக்கணுமா? என்னைக்கூட எழுதினா ஜெயமோகன், ஜெயகாந்தன், அருந்ததிராய் …. போல எழுதின்னு நிறைய பேரூ சொன்னாங்க, நா கேட்டேனா? இது உஷா ஸ்டைல்னு சொல்லிட்டு என் கடமையை செய்யலையா? லிங்க் எல்லாம் போட்டு, தேடி பிடிச்சி பழைய மேட்டர்களை
நினைவுக்குக் கொண்டு வந்து, படிச்சிப் பார்த்தா நம்ம செந்தில்/ சரவணன் எழுத்தைப் படித்தால் தெரிஞ்ச பார்ட்டி மாதிரி இருக்கு லூஸ்ல விடுங்க! செந்தில் ஐயா, நீங்க குறிப்பிட்ட பதிவர் பதிவில் பொம்பளையா லட்சணமா எழுதக்கூடாதான்னு யாரோ அறிவுரை சொன்னாமாதிரி நினைவு 🙂
ஞாயிறு, செப்ரெம்பர் 23, 2007 at 8:49 முப
யக்கோவ், முக்கியமான பி.கு வை மறந்துவிட்டேன். இது உங்களுக்கு அறிவுரை எல்லாம் இல்லைங்கோ! சரவணன்/செந்தில்/ மேற்கு பதிப்பகம்! இப்பொழுது எல்லாம் இணையம் ஒருவகை அலுப்பை தருகிறது. எழுத்தை முன் வைத்து கருத்து மோதல்கள்
முழுக்க முழுக்க காணாமல் போய் அனைத்துமே தனிப்பட்ட தாக்குதல்களாய் வருகின்றன. ஓரளவு தங்களைப் பற்றிய விவரங்களை பொதுவில் வைப்பவர்களை, முகமிலிகள் அல்லது நாளும் புது பெயர்கள் சூட்டிக் கொள்பவர்களுக்கு இது
சுலபமாய் போய்விடுகிறது. காரணம் அவர்களை பற்றி பல்லு மேல் நாக்கைப் போட்டு எந்த பதில் கேள்வியும் கேட்க இயலாது தன்னிலை விளக்கம் மட்டுமே சொல்ல முடியும் இல்லையா? மற்றப்படி எழுத்தை விமர்சியுங்கள், யார் எழுதுவது பிடித்திருக்கிறதோ அதை படியுங்கள். பிடிக்கவில்லையா உங்கள் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவழித்து என் எழுத்துக்களை
படிக்காதீர்கள் என்று நான் சொல்வதுண்டு. வாசிக்கும் அனைவருக்கும் ப்டிக்கும்படி யாராலும் எழுத முடியாதுங்கையா!
பி.கு ஜெ, இங்கிட்டு புள்ளையாருக்கு நாளை சப்பன் போக்! வீட்டுக்கு ஒரு பலகாரம் வைகக்ணுமாம். அவல் கேசரியைத் தேடி வந்த எனக்கு இவை எல்லாம் கண்ணில்பட்டன. ஞாயிற்றுகிழமை வேலை அதிகம். வர்ட்டா!
பி.கு.கு வழக்காம ஒன் லைன்னர் இன்றைக்கு இப்படி ஆச்சே
ஞாயிறு, செப்ரெம்பர் 23, 2007 at 11:49 முப
Jayashree Govindrajan, I am a regular reader for your recipes. I hesitate to comment as I lack tamil typing. I admire your stand and style of ‘kadavul nambikkai’ ignoring all other stupidities like caste and religion. It is a great thing but you have presented it in a simple way! Thanks.
ஞாயிறு, செப்ரெம்பர் 23, 2007 at 12:36 பிப
தூக்கமது கைவிடேல் என்று இருந்துவிட்டு நீண்ட நெடிய தூக்கத்துக்குப்பின் சோம்பல் முறித்து வந்து எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி. 🙂 வேறு எந்த பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும்? கருத்துகளை வாதத்தால் வாயடைக்க வைக்க ஜெஸ்ரீக்கு யாராவது சொல்லித் தர வேண்டுமா? 🙂
ஆடியோ குறித்து உங்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறேன். 🙂 பிள்ளையார் அருளால் அந்தச் சுட்டியில் எனக்கும் கிடைக்கவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் ‘கிழக்கு’ எந்த திசையில் இருக்கிறது என்றுகூட தெரியாது என்று மேலே ஒரு பதிலில் நீங்கள் சொல்லியிருப்பதை நான் நம்புகிறேன். எப்படீங்க இதெல்லாம்? 🙂
///நான் அவங்க முன்னால பெரிய சைஃபர் எல்லாத்துலயும்னு அவசரமா சொல்லி வெச்சுக்கறேன்.///
But I have great regards on you Jsri. சுஹாசினி மாதிரி ஒரு நடிகையோடு உங்களை ஒப்புமைப்படுத்திக்கொண்டு சைஃபர் என்று சொல்லிக் கொள்வது உங்களது வழக்கமான அபத்தமான தன்னடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்குச் சம்மதமில்லை. ஏற்கனவே அவர்மேலோ அவர் நடிப்பின் மேலோ எந்தக் குறைந்தபட்ச அபிப்ராயமும் எனக்கு இல்லை. குஷ்பு விஷயத்திற்குப்பின் பல படிகள் கீழிறங்கியவர்.
///ஆனா உண்மையான நாத்திகனை இன்னும் நான் சந்திச்சதே இல்லை.///
நாம் சந்திக்கலாம். :))
திங்கள், செப்ரெம்பர் 24, 2007 at 8:56 முப
உஷா, நீங்க முழுநேர எழுத்தாளினி. உங்களை நாலு பேர் சொன்னாலும் தகும். நான் தேமேன்னு இருக்கேன். “தேவையான பொருள்கள்”, “செய்முறை”யோட என் எழுத்தே முடிஞ்சுடுது. என்னையப் போட்டு இப்படி படுத்தறாங்களே. :((
ஆனா இந்த ஐபி அட்ரஸ் பாக்கறது, எழுத்து நடை பாத்து கண்டுபிடிக்கறதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. (‘தெரியலை’ங்கறதைத் தான் கெத்தா சொல்லிக்கறேன்.) இணையத்துல இருக்கற யாரையுமே இதுவரைக்கும் நான் சந்திச்சதில்லை. எல்லாருமே எனக்கு அநாநிதான்.
இத்தனை கடுப்புலயும் சிரிக்க வெச்சது.. //காரணம் அவர்களை பற்றி பல்லு மேல் நாக்கைப் போட்டு எந்த பதில் கேள்வியும் கேட்க இயலாது..// கோபத்துல பல்லு மேல நாக்கைப் போட்டுட்டீங்க! :))))
அவல் கேசரி நல்லா வந்ததா? நீங்க வேண்டாம்னாலும் பிள்ளையார் விட மாட்டேங்கறாரு.. இங்க நாளைக்குத் தான். ஆனா நாங்களெல்லாம் வீட்டுல மெனக்கெடறதில்லை. இந்த ஒரு வாரமும் வெளில ஆர்டர் கொடுத்துடுவோம்.
////இப்பொழுது எல்லாம் இணையம் ஒருவகை அலுப்பை தருகிறது.////
அதைச் சொல்லுங்க. என்னமோ போங்க!
திங்கள், செப்ரெம்பர் 24, 2007 at 8:58 முப
Sumathy Venkat,
எழுதும்போது சுலபமா இருக்கற அளவு வாழ்க்கைல அது ‘இந்தியா’வுல சுலபம் இல்லை. நிறைய இடி வாங்குவோம். ஆனா இதுக்கு என் கணவரோட முழு ஆதரவும் இருக்கறதால அல்லது அவர் கருத்தும் அப்படியே இருக்கறதால எனக்கு சாத்தியமாகுது.. கணவன் மனைவி இரண்டு பேர்ல ஒருத்தர் வேறுபட்டாலும் இது கஷ்டம். அதையும் நாம புரிஞ்சுக்கணும்.
எனக்கு தமிழ்லதான் பின்னூட்டம் போடணும்னு எதுவும் இல்லை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மூணுமே ஓரளவு சமாளிப்பேன்.
திங்கள், செப்ரெம்பர் 24, 2007 at 9:01 முப
மே.ப.,
////But I have great regards on you Jsri.////
ஐயய்ய, என்னைக் கேக்காம ஏன் அதெல்லாம் என் மேல வெக்கறீங்க? இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு.
நான் என்னை ஒப்புமைபடுத்திக்கிட்டது சிந்துங்கற அந்தப் படத்தோட கதாபாத்திரத்தோட தான். ஆனா நீங்க சொன்னப்பறம் சுஹாசினியோட ஒப்புமைப் படுத்தினாலும் அதான் சொல்வேன்.
எனக்கும் சுஹாசினிங்கற நடிகைமேல பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை. கொஞ்சம் செயற்கையா கூட நடிப்பாங்க(குறைஞ்சது தமிழ்ப் படங்கள்ல). ஆனா குஷ்பு இஷ்யூக்கப்புறம் தான் அவங்களை ஒரு மனுஷியா, பெண்ணா ரொம்பப் பிடிச்சது. தன் collegue சொல்ற கருத்துல உடன்பாடா இருந்தும்(நமக்கு அது தவறாக் கூட இருக்கலாம்.) அவங்க பெரிய பிரச்சினைல இருந்தபோது எத்தனை பேர் அப்ப தைரியமா முன்ன வந்து ஆதரவு கொடுத்தாங்க. இதுல சத்யராஜையும் சேர்க்கணும். “காதலும் காமமும் இயற்கை; கற்பும் கடவுளும் கற்பிதம்”னு ஒரே வாக்கியத்துல மொத்த பெரியாரியத்தையும் முடிச்சுட்டுப் போயிட்டாரு.
பெரியார் பிறந்து வந்து என்னைத் திருத்தணுங்கறீங்க, கடவுள் நம்பிக்கை இல்லைன்னு அவரை ஒற்றிச் சொல்ற உங்களால கூட கற்பு விஷயத்துல அவரோட ஒத்துப் போக முடியலை இல்ல? 🙂 அதுக்காக உங்களைத் திருத்த பெரியார் வரணும்னெல்லாம் சொல்ல மாட்டேன். அவங்கவங்களுக்கு அவங்கவங்க கருத்து.
மே.ப., இந்தப் பதிவே ஒரு வெட்டிப் பதிவு. இட்லிவடைங்கற முகமூடில ஆரம்பிச்சு….. மே.ப வரைக்கும் யாருன்னே தெரியாம நான் பாட்டுக்கு பேசிகிட்டிருக்கேன். அதைவிட நீங்க, அநாநி எல்லாம் என்ன குறிக்கோளோட என்னை நிக்கவெச்சு கேள்வி கேக்கறீங்கன்னே தெரியலை. ப்ரசன்னாவும் கல்வெட்டும் உஷாவும் எட்டிப் பார்த்திருக்கலைன்னா, நான் வெறுத்தே ஓடியிருப்பேன். இதுக்கப்புறம் பல சமையல் பதிவுகளும் எழுதிட்டேன். அது மட்டும் தான் இந்த வலைப்பதிவோட குறிக்கோளே. அதனால இதை இதோட நிறுத்திக்கலாம். நீங்க வேணும்னா உங்க அறிமுகத்தோட ஜவ்வரிசி உப்புமாவுக்கு கருத்து இருந்தா சொல்லுங்க. 🙂 இந்தப் பதிவோட பின்னூட்டப் பெட்டியை மூடறேன்னு சம்பிரதாயமா செய்யவோ சொல்லவோ போறதில்லை. ஆனா அதுதான் என் நிலைப்பாடு. உங்க புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.