என்ன காரணத்தினாலோ என் முந்தைய ‘தேங்காய்ப் பால்’ பதிவு பிழைதிருத்தி சேமிக்கும்போது செங்கல் கட்டிடமாக மாறிவிட்டது. எவ்வளவோ முயன்றும் சரிசெய்ய முடியவில்லை.  இதை  யாராவது  நண்பர்களுக்குத்  தெரிவிக்கலாம்  என்று கடிதம் தட்டினால் அங்கும் அதே கதை. நோட்பேடிலோ,யாஹூ பக்கத்திலோ, வேர்ட்பிரஸ் பக்கத்திலோ தட்டும்போது சரியாக இருக்கும் எழுத்துகள் அனுப்பியதும் வூடு கட்டி அடிக்கின்றன. இந்த வலைப்பதிவு கடந்த 3,4 நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிட் வாங்கியும் இந்தத் தொழில்நுட்பம் தெரிந்த நண்பர் யாரும் இந்தப் பதிவைக் கடக்கவில்லை அல்லது அப்படிப்பட்டவர்களை நான் என் நண்பராகப் பெறவில்லை என்று நினைக்கிறேன். Slow net(Grrr… to Sify) காரணமாக Flickrல் புகைப்படங்களும் ஏற்றமுடியவில்லை. ஆகச் சொன்ன காரணங்களால் தற்சமயம் என் கணினி, வலையேற்றும் மூடில் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் படிக்கும் மூடில் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் செமத்தியாகப் பதியும் மூடில் இருக்கிறேன். எனவே தொடர்ந்து வலைபதிய இருக்கிறேன். அதற்காக cut, grate, soak, cook, steam, fry, garnish என்றெல்லாம் ஆங்கிலத்தில் பதியப் போய்விடுவேன் என்று நினைக்கவேண்டாம். எழுத்துருப் பிரச்சினை சரியாகும் வரை எதுவுமே எழுதாமல் தலைப்பு மட்டும் (முடிந்தால் படமும்) வரும். ‘எப்படியோ இவள் வாயை அடைத்துவிட்டோம்’ என்று யாரும் மகிழ வேண்டாம். தமிழ் இணைய வரலாற்றில் முதன்முதலில் ஊமைப் பதிவு போட்டவள் என்று என் பெயரையும் இணைக்கும் முயற்சி தொடரும்…

பி.கு: இந்தப் பதிவை மட்டும் வேறு ஒருவர் உதவியுடன் வேறு கணினியிலிருந்து  வலையேற்றியிருக்கிறேன்.

Advertisements