(1)
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 10 அல்லது 12
மல்லி விதை – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பெருங்காயம் – 1 துண்டு
செய்முறை:
- மேலே சொல்லியிருப்பவற்றை தனித் தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இதை கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய் மாதிரி நாட்டுக் காய்களுக்கு இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.
-0-
(2)
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 15
மல்லி விதை – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
செய்முறை:
- மேலே சொல்லியிருக்கும் சாமான்களை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியை எல்லாக் காய்கறிகளுக்கும் இறுதியில் தூவ உபயோகிக்கலாம்.
-0-
(3)
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் – 10
மல்லி விதை – 200 கிராம்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
லவங்கப் பட்டை – 1 (பெரியது)
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
வால் மிளகு – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
விரளி மஞ்சள் – 3
செய்முறை:
- இவைகளை தனித் தனியாக வாணலியில் வறுத்துக் கொண்டோ, நல்ல வெயிலாக இருந்தால் காய வைத்தோ எடுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளலாம்.
காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு மற்ற சாமான்களை மட்டும் அரைத்துக் கொண்டு, காரத்தை அன்றாடம் தனியாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறையில் பொடியை ருசிக்கேற்றவாறு அவரவர் கூட அல்லது குறைய, போட்டுக் கொண்டு, தேவையான அளவு காரத்தை மட்டும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த மசாலா அதிகம் வேண்டாதவர்கள், காரத்திற்காக மட்டும் இதை அதிகம் சேர்க்கத் தேவை இல்லை. அல்லது அதிகம் மசாலா தேவை இருப்பவர்கள், காரம் அதிகமாகிக் கஷ்டப்பட வேண்டாம்.
வெள்ளி, ஏப்ரல் 20, 2007 at 9:40 பிப
முதல் வகையை மட்டும் தான் உபயோகிப்பது வழக்கம். இரண்டாவது வகையையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
சனி, ஏப்ரல் 21, 2007 at 6:46 பிப
கூமுட்டை சார்/மேடம் வந்து படத்தில் இருக்கும் மிளகாயை எண்ணிப் பார்த்துவிட்டு, 12ன்னு போட்டிருக்கீங்களே, கூட இருக்கேன்னு கேப்பாங்கன்னு காத்துக்கிட்டே….. இருக்கேன்.
ஞாயிறு, ஏப்ரல் 22, 2007 at 11:19 பிப
சொக்காயி, இரண்டாம் வகை எல்லாக் காய்க்கும் உபயோகிக்கலாம். ஜாலியா இருக்கும்.
ப்ரசனனா, ஐயோ பாவம் நீங்க. நான் தேவை கருதி சொன்ன மாதிரி இரண்டு மடங்கு எடுத்து செஞ்சிருக்கேன். அது கூம்ஸ் சாருக்குப் புரிஞ்சிருக்கு! Better luck atleast next time!
திங்கள், மே 14, 2007 at 12:53 பிப
pls make this into english there r other people who r reading this………….but how they underatnd the language .
திங்கள், மே 14, 2007 at 12:54 பிப
pls change to english for other people to read.
வியாழன், மே 8, 2008 at 11:37 முப
[…] – 3 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 கறி மசாலாப் பொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு – […]
வெள்ளி, ஓகஸ்ட் 14, 2009 at 10:24 முப
please use english language!
வியாழன், செப்ரெம்பர் 17, 2009 at 2:31 பிப
please in english
ther are many many of us that cannot read or write tamil, but lived in madras during our child hood and love the tamil food!!!!