சுண்டைக்காய் வற்றல்: எலந்தைப் பழத்தைவிட சிறியதாக இருக்கும். இதை வாங்கி நுனியைக் கல்லால் தட்டினால் வாய் பிளந்துகொள்ளும். அப்படியே வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். கடைகளில் வாங்குவதில் உள்ளே இருக்கும் விதைகள் எல்லாம் நீங்கி சரியாக இருக்காது, வீட்டிலேயே செய்வதுதான் நன்றாக இருக்கும் என்பது வீட்டுப் பெரியவர்களின் மாற்ற முடியாத கருத்து.
மணத்தக்காளி வத்தல்: வாங்கி எதுவும் செய்யாமல் அப்படியே காய வைக்கலாம்.
மினுக்கு வத்தல் (aka மிதுக்கு வத்தல்): குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம். ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள். இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.
இந்தப் படம் சொக்காயிக்கு…
காய்கறி வற்றல்:
வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் போன்ற நாட்டுக் காய்களை லேசான புளித் தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை ஒட்ட வடித்துவிட்டு, வெயிலில் காயவைத்து, பொரித்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மோர் வற்றல்:
- சுண்டைக்காய், மணத்தக்காளி, தும்டிக்காய் மட்டுமல்ல, மிளகாய்(இது சின்னச் சின்னதாக பிஞ்சாக இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும். காரமில்காத பெரிய மிளகாயும் நன்றாக இருக்கும்.) போன்றவற்றில் தேவையானதை எடுத்துக் கொள்ளவும்.
- சுண்டைக்காயாக இருந்தால், வாயை உடைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயாக இருந்தால் உடல் பகுதியில் கொஞ்சம் லேசாகக் கீறிக் கொள்ள வேண்டும். மினுக்கு வத்தலை நறுக்கியும் மணத்தக்காளியை அப்படியேயும் போடலாம்.
- தயிரைக் கடைந்து கெட்டியான மோராக்கி, உப்புப் போட்டு அதில் இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து பகலில் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
- பின்னர் மீண்டும் மாலையில் அதே தயிரில் போட்டுவிட இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
- இப்படி முழுத்தயிரும் காய்கிற வரை செய்து, நன்றாகக் காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
- தயிரில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வற்றல் கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.
தஞ்சாவூர் குடமிளகாய் வற்றல்:
தேவையான பொருள்கள்:
குடமிளகாய் – 1 கிலோ
தயிர் – 1 லிட்டர் (அதிகம் புளிப்பில்லாதது)
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
உப்பு – 250 கிராம்.
செய்முறை:
- தஞ்சாவூர் குடமிளகாய் செம குட்டியாக குண்டாக இருக்கும். கொஞ்சம் பெரிய அளவில் கிடைத்தாலும் பரவாயில்லை, வாங்கிக் கொள்ளவும்.
- முதலில் உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் தண்ணீரில் ஊறவைத்து பெருங்காயம் சேர்த்து நைசாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
- மிளகாயை கொஞ்சம் காம்புப் பகுதியை விட்டு மிச்சத்தை நறுக்கி விடவும். நடுவில் லேசாகக் கீறலாம் அல்லது ஒரு ஊசியால் அங்கங்கே குத்தலாம். உள்ளே இருப்பது வெளியே வந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.
- ஒரு பாத்திரத்தில் மிளகாய், அரைத்த விழுது, தயிர், உப்பு, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி மூடி வைத்து விடவும்.
- இரண்டு நாள்கள் அப்படியே அவ்வப்போது கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
- மூன்றாம் நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மிளகாய் கலவையைத் தனியாக எடுத்து வெயிலில் உலர்த்தவும். அருகிலேயே அந்தத் தயிர் பாத்திரத்தையும் வைக்கவும்.
- மாலையில் திரும்ப மிளகாயை தயிரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
- இரண்டு மூன்று நாள்களில் இப்படி செய்துவந்தால் மிளகாய் எடுத்துக் கொண்டதுபோக எல்லா நீரும் வற்றி இருக்கும்.
- மேலும் 2 அல்லது 3 நாள்கள் மிளகாயை உலர்த்தி, ஈரப்பதம் இல்லாமல் முற்றிலும் காய்ந்ததும் (கலகல என்று சப்தம் கேட்கும்) ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
- தேவையான போது வாணலியில் சிறிது எண்ணை வைத்து கருகாமல் பொரித்து எடுத்து உபயோகிக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாதா வற்றல் மற்றும் காய்கறி வற்றல்களை வற்றல் குழம்பிற்கு உபயோகிக்கலாம்.
மோர் வற்றல்களை, எண்ணையில் பொன்னிறத்துக்கும் மேலேயே கொஞ்சம் கருக வறுத்தால், தயிர்சாதத்திற்கு மிகப் பொருத்தமான துணை. வெளியூர் பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. மோர் மிளகாயை தாளித்தும் தயிர்சாதத்தில் கலக்கலாம்.
சூடான நெய் சாதத்தில் மோரில் நனைத்துக் காயவைத்த சுண்டைக்காய், மணத்தக்காளி அல்லது மினுக்குவத்தலைப் பொடித்துப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
வெள்ளி, ஏப்ரல் 20, 2007 at 6:15 பிப
//மினுக்கு வத்தல் (aka மிதுக்கு வத்தல்): குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம். ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள். இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.//
மிதுக்கம்வத்தல் – னு எங்க ஊர்ல சொல்லுவோம், ஏன்ன மிதுக்கங்காயிலிருந்து செய்வதால்.
காயும் பொரியல் செய்ய நல்லாயிருக்கும். கொஞ்சம் கசக்கும்.
வெள்ளி, ஏப்ரல் 20, 2007 at 6:17 பிப
btw, தும்டிக் காய் வேற, மிதுக்கங்காய் வேற – ன்னு நினைக்கிறேன். எங்க ஊர்ல ரெண்டும் உண்டு.
வேலிப்பருத்திக்காய் சாப்பிட்டிருக்கீங்களா, இதெல்லாம் extinctஆகிட்ட vegetables.
வெள்ளி, ஏப்ரல் 20, 2007 at 9:38 பிப
சொக்காயிக்காக ஸ்பெஷல் படம் காமிச்சதுக்கு thanks!
ஞாயிறு, ஏப்ரல் 22, 2007 at 11:00 பிப
//குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம்.//
பிரேமலதா, நீங்க சொல்றதுதான் சரியா இருக்கணும். நான் இதோட ஒரிஜினல் காயை கண்ணால பார்த்ததில்லை.ஸ்ரீரங்கத்துல சுண்டைக்காய், மணத்தக்காளி மாதிரி இது பச்சையா கிடைக்காது. அதனால தான் ‘லாம்’ விகுதி சேர்த்து வாக்கியம்.
உறவினர்கள் வழியா மதுரை புதுக்கோட்டை, திண்டுக்கல்னு மானாவாரியா சுத்தி வத்தல் மட்டும் வந்திடும். ஆனா எனக்குச் சொன்னது இதோட பேர் ‘தும்டிக்காய்’னு தான். இல்லைன்னா இந்தப் பேர்கூட எனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.
நீங்க அந்தப் பக்கம்னா நீங்க சொல்றதுதான் சரி. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது விசாரிச்சு வைங்க.
கசக்கும்னா சொல்றீங்க? எனக்கு ரொம்பப் பிடிக்கும். கரகரன்னு எள் வாசனை வரும். மும்பைலயே கடைக்காரர் ‘இதென்ன பிரமாதம், வரவழைச்சுக் கொடுக்கிறேன்’னு சொல்லியிருக்காரு. 🙂
ஞாயிறு, ஏப்ரல் 22, 2007 at 11:00 பிப
சொக்காயி, e-சுரைக்காய் கறிக்கு உதவுமா? 🙂
வெள்ளி, மே 4, 2007 at 6:24 பிப
//கசக்கும்னா சொல்றீங்க?//
வத்தல் இல்ல. காய். காய் லேசாக் கசக்கும். 🙂
எனக்கு சமையல் எல்லாம் சரியா வராது. ரெசிப்பி பார்த்து செய்ற பழக்கம் கிடையாது. 🙂
உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி.
அதென்ன இன்னொரு ஜெயஸ்ரீ உங்களுக்கு கமெண்ட் போட்டிருந்தாங்க? ரெண்டு ஜெயஸ்ரீயா தமிழ்ப்பதிவுலகில்? தெரியாது இம்புட்டுநாளும். தெரிஞ்சுக்கிறேன் இனிமே.
என்னோட சமையல் முயற்சி வலையேத்தியிருக்கேன் பாருங்க: மிளகுக் குழம்பு வைச்சு, அப்புறம், கொத்து பரோட்டா போட்டு, இடியாப்பம் புழிஞ்சு, அப்புறம் களி கிண்டி, பணியாரம்லாம் கூட சுட்டேன். 😀 த்துக்கப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன். ஆரஞ்சுப் பழத்தோலையெல்லாம் காயவைச்சிருக்கிறதப் பார்த்து நண்பர் ஒருவர் கேட்டார், என்னாத்துக்கு இதெல்லாம் காயுதுன்னு, “யாருக்குத்தெரியும், யோசிக்கணும்”னு சொன்னேன்.. ஆப்பிள்சாதத்துக்கப்புறமும் அடங்கலையா-ன்னு கேட்டுட்டுப் போறார்.. 😦
வெள்ளி, மே 4, 2007 at 6:25 பிப
ஆ, என்னோட ஆப்பிள் சாதத்தை பின்னூட்டம் சாப்பிட்டிருச்சே! விடுவேனா, இந்தா பிடி: ஆப்பிள் சாதம்.
வெள்ளி, மே 4, 2007 at 7:18 பிப
பிரேமலதா, சொன்னா நம்புவீங்களா, உங்களோட எல்லா சமையல் குறிப்பு பதிவுகளும் படிச்சிருக்கேன். ஆப்பிள் சாதம் அட்டகாசம். 🙂 ஆனா பின்னூட்டம் எங்கயும் எழுதறதில்லை, (ஏற்கனவே ஒரு வாழ்நாளுக்குத் தேவையான பின்னூட்டம் எழுதி முடிச்சுட்டதால.) அதனால படிச்சதை அங்க பதிவு பண்ணலை. ராமசந்திரனுக்கு மிரட்டல் பதிவு 🙂 அப்புறம் இன்னிக்கி ஒத்தை ரூபா பதிவு எல்லாம் அள்ளிட்டீங்க!
உண்மையா சுஹாசினி பதிவு படிக்கத் தான் முதல்ல வந்தேன். என் favorite பெண்கள்ல (நடிகைகள்னு சொல்லலை) அவங்களுக்கு முக்கிய இடம் உண்டு. 🙂
அதைவிட இன்னொரு ஒத்துமையா நான் நினைக்கறது, எனக்கும் என் தம்பி ரொம்ப முக்கியம் வாழ்க்கைல. ஒருநாளைக்கு 3 தடவையாவது ஃபோன் செஞ்சு சீண்டுவான். பாசக்காரப் பய!
வெள்ளி, மே 4, 2007 at 7:25 பிப
பிரேமலதா சொல்ல மறந்தது, உங்க வலைப்பதிவுப் பேரும் அந்த புகைப்படத்துல இருக்கற பெண்ணும் கொள்ளை அழகு. துடைச்சு விட்ட மாதிரியான கிராமத்து அழகுன்னு சொல்வாங்களே அது இதுதான்.
ஆமாம், ரெண்டு ஜெயஸ்ரீ. ஒருத்தங்க தங்கத் தாரகை ஜெயஸ்ரீ. விக்கிப் பசங்களோட கூட சேர்ந்து எழுதுவாங்க. பெரிய இலக்கியவாதி. மேட்டர் உள்ளவங்க. அதனால கொஞ்சமா பேசுவாங்க. ஆங்கிலத்துல அதை நிறைகுடம்னு சொல்வாங்க.
அதுக்கெல்லாம் ஆப்போசிட்டா ஒருத்தங்க இருந்தாத்தானே வித்யாசம் தெரியும், அதான் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். (எப்படியோ நம்மாளு பேரையும் இழுத்துவெச்சு கெடுத்தாச்சு!)
வெள்ளி, மே 4, 2007 at 8:43 பிப
// ஆனா பின்னூட்டம் எங்கயும் எழுதறதில்லை, (ஏற்கனவே ஒரு வாழ்நாளுக்குத் தேவையான பின்னூட்டம் எழுதி முடிச்சுட்டதால.) //
யக்கா, நானு ஊருக்கு புச்சு. அதனால எனக்கு கொஞ்சம் பின்னூட்டம் விடுங்க.
//பிரேமலதா, சொன்னா நம்புவீங்களா, உங்களோட எல்லா சமையல் குறிப்பு பதிவுகளும் படிச்சிருக்கேன். //
ஆஹா, சந்தோசப் பட்டேன். 🙂
//ராமசந்திரனுக்கு மிரட்டல் பதிவு //
🙂 பின்ன. நம்மகிட்ட ஆகுமா? ப்ளாக் படிக்கிறான் மெயில் அனுப்பாம.
//ஒத்தை ரூபா பதிவு //
நீங்களும் ஒங்களோட ஒத்த ரூபா யாருன்னு எழுதியிருக்கலாம்ல.
(உங்களோட As I am suffering from கலக்கல். நான் என்னா சொல்றது, wordpressக்குள்ல நுழைஞ்சாலே உங்க பேருதான் டாப்ல. எப்பவும். 🙂 )
//உண்மையா சுஹாசினி பதிவு படிக்கத் தான் முதல்ல வந்தேன். என் favorite பெண்கள்ல//
She is a wonderful woman. wonderful human being.
// 3 தடவையாவது ஃபோன் //
🙂 நல்லபிள்ளையாட்டம் இருக்கான்.
//அந்த புகைப்படத்துல இருக்கற பெண்ணும் கொள்ளை அழகு. //
அதுக்காகத்தானே போட்டிருக்கேன், சிலரு நானு நினைச்சு ஏமாந்து போகட்டும்னு. 😀
She is cute.
//அதான் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்//
நீங்களும் மரத்தடி கிரத்தடி-ன்னு கேள்விப்பட்டேன்.. (பாலராஜன் கீதா உங்களுக்குப் போட்ட பின்னூட்டத்திலிருந்து) எல்லோரும் செம humbleஓ humbleதான் போலிருக்கு. 🙂
//(எப்படியோ நம்மாளு பேரையும் இழுத்துவெச்சு கெடுத்தாச்சு!)//
நல்லா இருந்தாச்சரி. 🙂
வெள்ளி, மே 11, 2007 at 8:35 பிப
அம்மணி என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே 🙂
இதப் படிச்சப்ப சிரிக்க ஆரம்பிச்சதுதான் எங்க வீட்டு ரங்கமணி, இன்னும் நிறுத்தலை 🙂
வெள்ளி, மே 11, 2007 at 8:36 பிப
பிரேமலதா, என்னை ஞாபகம் இல்லையா , மதுரா பதிவில meet பண்ணினோமே 🙂
வியாழன், மே 24, 2007 at 6:46 முப
///…படிச்சப்ப சிரிக்க ஆரம்பிச்சதுதான் எங்க வீட்டு ரங்கமணி,..///
ஜெயஸ்ரீ, இது தங்கமணிக்கும் ரங்கமணிக்கும் எந்நாளும் உள்ள கதை… விடுங்க. அதுக்காக நான் சொன்னது இல்லைன்னு ஆயிடுமா என்ன?
அப்றம் பிரேமலதாவுக்கு உங்களை சரியா நினைவூட்டிட்டீங்க போல. 🙂
வியாழன், மே 24, 2007 at 7:58 முப
//நீங்களும் ஒங்களோட ஒத்த ரூபா யாருன்னு எழுதியிருக்கலாம்ல.//
ம்ம்ம்…
பிரேமலதா, நானெல்லாம் bold and not so beautiful ரகம். என் நண்பர்(?) ஒருத்தரு, “write ‘bold’ in beautifil script and ‘not so beautiful’ in bold script”ன்னு சொல்வாரு. அதாவது என் boldness ரொம்ப அழகாம்; நான் not so beautiful ங்கறது உலக உண்மையாம். நான் எங்கப்பா ஜாடைல இருக்கறதே எனக்கு மகிழ்ச்சி (போடா!) ன்னுடுவேன். நான் எப்பவும் உண்மைக்கு அப்படித்தான் தலைவணங்கறது வணக்கம். 🙂 அதனால…
அப்றம் ஸ்ரீரங்கம் மாதிரி சின்ன ஊர்ல நான் யாரோட தங்கை, யாரோட அக்கான்னு மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கும். காலேஜை கட்பண்ணிட்டு அண்ணனோட சினிமா போவேன். அவன் அப்ப பொறுக்கிகளா இருந்த சட்டக் கல்லூரி. (எனக்கே வாய் ஜாஸ்தின்னு வைங்க!) பின்ன எவன் தைரியமா ஒத்தை ரூபாயை நீட்டுவான். நீட்டியிருந்தாலும் அதை பத்திரப்படுத்தாம சோன்பப்டி வாங்கிச் சாப்பிட்டிருப்பேன்னு தான் நினைக்கிறேன். :)அதனால…
கடைசில உஷா சொல்ற மாதிரி நமக்குன்னு ஒருத்தரைத் தேடறதை விட அப்பா சொல்ற ஆளை நமக்குத் தேவையான மாதிரி மோல்ட் பண்ணிக்கறது எனக்கு சுலபமாவும் ரிஸ்க் இல்லாததாவும் இருந்தது/ இருக்குது. உங்க கட்டுரையோட கடைசி வாக்கியத்தோட முழுமையா ஒத்துப் போறேன். அதனால..
இந்தப் பக்கம், நான் யாருக்காவது ஒத்தை ரூபா கொடுத்திருக்கேனான்னு யோசிச்சா, ம்ம்ம்… சிலரை சில விஷயங்களுக்கு admire செஞ்சிருக்கலாம். (நான் ஒன்னும் தலையைக் குனிஞ்சுகிட்டுப் போற பெண்ணா வளரலையே!) ஆனா அவங்க பெண்ணா இருந்தாலும், எந்த வயசா இருந்தாலும் கூட அதே மாதிரி admire செஞ்சிருப்பேன். அதனால அது நீங்க சொல்ற வகைல வராது. சரியாச் சொல்லணும்னா நானே அந்தரங்கமா கையெழுத்துப் போட்டுத் தர அளவுக்கு ஒரு பெர்சனாலிட்டியை இன்னும் வாழ்க்கைல சந்திக்கவே இல்லை. அதனால…
அதனால… என் அக்கவுண்ட் எப்பவும் nil balance தான். (இங்க என்ன ஸ்மைலி போடணும்னு தெரியலையே. போட்டே ஆகணுமா என்ன? சரி, உங்க வசதிப்படி எதையாவது போட்டுக்குங்க!)
வியாழன், மே 24, 2007 at 8:37 முப
பிரேமலதா உங்க wordpress formattingபதிவு படிச்சு ரொம்பவே ஜில்லாயிட்டேன். பதிவை விட பின்னூட்டங்களைப் படிச்சு. பின்ன, பொன்ஸ், bsubra மாதிரி பொட்டிப் பிஸ்தாக்களெல்லாம் ‘wow’ சொல்ற விஷயம் எனக்கு என் முதல் பதிவு போட்ட ஜனவரி 4ம் தேதியே தெரியுமே. ஹே ஹே ஹே..
நான் வழக்கம்போல, ‘காலை எழுந்தவுடன் (support teamக்குக்) கடிதம்’னு அன்னிக்கும் font variety இல்லை, கலர் கொடுக்க முடியலை. நான் இன்னிக்கு முதல் பதிவு போட்டே ஆகணும். எனக்கு இந்த html எல்லாம் தெரியாது. நானெல்லாம் பதிவு எழுதறதா வேண்டாமா.. ஆச்சா போச்சான்னு ஒரு கடிதம்…
வழக்கம்போல கோபமே படாம ஸ்மைலியோட Mark கிட்டேயிருந்து ஒரு ரிப்ளை..
========
Hi, 🙂
Try pressing alt-v when writing a post.
That will help with colours 🙂
–
Mark
========
Alt+v அமுக்கினாலும் திறக்கும்/மூடும். அங்க Alt+b ன்னு தப்பா போட்டிருக்கும். 🙂
வியாழன், மே 24, 2007 at 9:35 பிப
காலேல ஒரு ரெண்டு பக்க நீளத்துக்கு கமெண்ட் தட்டச்சுனேன். எல்லாம் காயப். 😦
அப்புறம் வந்து மறுபடியும் தட்டச்சுறேன்.
புதன், ஜூன் 6, 2007 at 10:00 முப
ஜெ!, பிரேமலதா, ஒரு முக்கியமான விஷயத்தை ரெண்டு பக்கம் அடிச்சு வராம காயப்போட்டுட்டுப் போயிட்டீங்களா? இதுவும் என்ன மோர்மிளகாயா? சூடான வம்பு அல்வாங்க. பெண்கள் ரெண்டு பேரும் ஒரு சுவாரசியமான தொடரை பாதில நிறுத்தி ஐயோ… என் தலையே வெடுச்சுடும் போல இருக்கு. சிரமம் பாக்காம தொடர்ந்து எழுதி என் தலையை காப்பாத்துங்கன்னு ஆண்கள் அல்வாப்படை சார்பா கேட்டுக்கறேன்!
புதன், ஜூன் 6, 2007 at 10:44 முப
த.வெ.தா.,
:)))
[அந்த ஸ்மைலி, நீங்க (பொய்யா) கொடுத்திருக்கற மெயில் ஐடில இருக்கற நகைச்சுவை உணர்வுக்கு மட்டும்.]
வரும்போது கொண்டையை மறைக்கறதில்லையா? சொந்தப் பேர்லயே கேட்டிருக்கலாமே. 🙂
செவ்வாய், ஓகஸ்ட் 21, 2012 at 10:07 பிப
மினுக்கு வற்றல் கூகிளில் தேடியபோது
உங்க வலைபூ வந்தது ..
துமுட்டிக்காய் தான் சுக்காங்காயா ?
ஒருவர் டவுட் கேட்டாங்க .உங்க லிங்கை கை காட்டி விட்டுட்டேன்