எண்ணை குறைவாகவும், செய்யச் சுலபமானதுமான முறை.

தேவையான பொருள்கள்:

காய்கறி – 1/2 கிலோ
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

paruppu-usili-idlis.jpg

செய்முறை:

  • பருப்புகளை தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு (பருப்புக்குத் தேவையானது மட்டும்), பெருங்காயம் சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • அரைத்த பருப்புக் கலவையை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
  • ஆறியதும் கையால் உதிர்த்தாலே உதிர்ந்துவிடும்; அல்லது மிக்ஸியில் ஒரே ஓட்டில் தூளாகிவிடும்.
  • அதற்குள் வாணலியில் எண்ணைவிட்டு மேலே சொல்லியிருப்பவற்றைத் தாளித்து, எடுத்துக் கொண்டிருக்கும் காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் இந்தப் பருப்பு உதிரியைச் சேர்த்து நிதானமான சூட்டில் பருப்பு மொறுமொறுப்பாக ஆகும்வரை நன்கு வதக்க வேண்டும்.

* இந்த இட்லிகளை கொஞ்சம் அளவு அதிகமாகச் செய்து, அல்லது வார இறுதியில் செய்து ஃப்ரீசரில் ஜிப்லாக்கி விட்டால் தேவைப் படும்போது மைக்ரோ அவனில் அறை சூட்டுக்குக் கொண்டுவந்து, உதிர்த்து உடனே எந்தக் காயோடும் உபயோகிக்கலாம். திடீர் விருந்தாளிகள், அவசரச் சமையல் அல்லது சோம்பேறித் தனமான சமையலுக்கு இப்படி எளிதல் சமாளிக்கலாம்.

* இந்த முறைக்கு எண்ணை குறைவாக வைத்தால் போதும் மற்றும் முந்தையை முறையைப் போல் பருப்பு விழுதை உதிராக்க, மெனக்கெட்டு எண்ணையில் வதக்கிக் கொண்டிருக்கத் தேவை இல்லை.

* பொதுவாக பருப்பு உசிலிக்கு கொஞ்சம் எண்ணை அதிகமாக வைத்து, மொறுமொறுப்பாகச் செய்தாலே சுவையாக இருக்கும்.

* காய்க்கான உப்பு, காரத்தை காயோடும், பருப்புக்கான உப்பு காரத்தை பருப்போடும் தனித் தனியாகச் சேர்த்துவிட்டால் அதிகம் குழம்பாமல் தவறில்லாமல் செய்யலாம்.

* சுமார் அரைக் கிலோ காய்க்கு 4 அல்லது 5 இட்லிகள் இருந்தால் சரியாக இருக்கும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இங்கே…

Advertisements