தேவையான பொருள்கள்:

சிறிய மாங்காய் – 1
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பச்சை மிளகாய் – 1
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

maangaai_paruppu_usili.jpg

செய்முறை:

  • துவரம் பருப்பு, கடலைப் பருப்பைக் கழுவி, தண்ணீரில் ஊறவைத்து, உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதிகம் புளிப்பில்லாத மாங்காயைத் தோல்சீவி, துருவி வைக்கவும்.
  • பருப்பு விழுது, மாங்காய்த் துருவல் நறுக்கிய கொத்தமல்லித் தழை, தேங்காய்த் துருவல் சேர்த்து மென்மையாக அழுத்தாமல் கலந்து, இட்லித் தட்டில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  • ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
  • வாணலில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பட்டாணி, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த உசிலியைச் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.

* மாங்காய், சோர்ந்து போயிருக்கும் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியையும் உணவின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்துமென்பதால், ஊறுகாயாக இல்லாமல் இந்த முறையிலும் அவ்வப்போது மாங்காயை உணவில் சேர்க்கலாம்.

* இது மற்ற இரண்டு முறைகளை விடச் சுலபமானது. இப்படியே மற்ற காய்களையும் பருப்பு விழுதோடு சேர்த்து இட்லியாக வேகவைத்து ஒரு அவசரத்துக்கு உதிர்த்துக் கொள்ளலாம் என்றாலும், இந்த முறையில் காய்கறி அதிகமாக வெந்து சுவையைக் கெடுத்துவிடும். பொதுவாக மாங்காய்க்கு மட்டுமே இந்த முறை ஏற்றது என்பது என் கருத்து.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய் சாதம், தயிர் சாதம்.