தேவையான பொருள்கள்:

குடமிளகாய் – 4
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
பருப்பு உசிலி உதிர்த்து

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

kudamilagaai-paruppu-usili.jpg

செய்முறை:

  • முன்பே சொல்லியிருப்பது போல் பருப்பு இட்லிகளை உதிர்த்தோ அல்லது அரைத்து வறுத்த பருப்பு உதிரியையோ தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை நடுவில் இருக்கும் காம்பு, விதை, குடலை நீக்கி விட்டு, மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் தாராளமாக எண்ணண வைத்து 🙂 கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • குடமிளகாய், அதற்குத் தேவையான உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது கூட தண்ணீர் சேர்க்காமல், அடுப்பை அதிகத் தீயில் வைத்து இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டும் வேகமாக வறுத்துக் கொள்ளவும். இதற்குள்ளாகவே குடமிளகாய் பொரிந்தாற் போல் பாதி வெந்திருக்கும்.
  • அடுப்பின் தீயைக் குறைத்து பருப்பு உதிரியைச் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
  • தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* இதில் ஏற்கனவே காயில் காரம் இருப்பதால் தனியாக இன்னொரு முறை காரம் சேர்க்கக் கூடாது.

* குடமிளகாயை அதிகம் வேகவைத்து விடாமல் கொஞ்சம் நறுக்’கென்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* குடமிளகாய் உசிலியை மட்டும் தனியாக ஒரு குறிப்பாக மீண்டும் சொல்லியிருப்பதன் காரணம், பொதுவாக குடமிளகாய் மட்டும் உபயோகித்து, வித்யாசமான கறிவகைகள் அதிகம் இல்லாதது மற்றும் மற்ற காய்களின் பருப்பு உசிலிகளை விட இதில் இருக்கும் ஸ்பெஷல் சுவை. (செய்து, சாப்பிட்டுப் பார்த்தால் தான் தெரியும்.)

பகவான் கிருஷ்ணர், “நான் பருப்பு உசிலிகளில் குடமிளகாய் பருப்பு உசிலியாக இருக்கிறேன்!!” என்று சொல்லியிருக்கிறார். 🙂

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இங்கே…

Advertisements