ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் வரும் புனர்பூசம்/நவமி திதிக்குத் தான் ஸ்ரீராம நவமி கொண்டாடுவோம். இருந்தாலும் ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும், மெனக்கெட்டு மஹாராஷ்டிரா அரசு பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாலும், இன்று.
சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…
பானகம்
தேவையான பொருள்கள்:
வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்கு – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
- வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.
- ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
- இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.
- இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் கலக்கலாக இருக்கும் என்றாலும் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே…..
“Ram! would you mind…? ”
“ஆமாண்டீ, பெரிய பெரிய அட்டூழியம் செய்யுற போது எல்லாம் என் நினைப்பே வர்றதில்லை. ரொம்ப பயந்த மாதிரி, ரெண்டு ஐஸ் க்யூபுக்குத் தான் பர்மிஷன்! திருந்தவே மாட்டியா?”
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி.. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவக் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், நைமிசாரண்யத்திற்கு ஈடான புனிதமானது என்று கூறப்படுகிறது. கீழேயிருந்து மலைக்கு 20 ரூ. ஆட்டோவில் போய் வரலாம்.
சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம். வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம். எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், ‘கடக்’ என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப் படுகின்றன. ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது என்ற கூடுதல் செய்தியைச் சொல்கிறார்கள்.
கோயில் குறித்து மேல் விபரங்கள்….
சனி, மார்ச் 31, 2007 at 4:03 பிப
Tamirand is not needed for pAnakam?????
சனி, மார்ச் 31, 2007 at 4:52 பிப
புளித் தண்ணில வெல்லம் போடறவங்களைப் பார்த்திருக்கேன், கர்நாடகத்துலயும் நம்ப சேட்ஜி சாட் மீடா சட்னிலயும். வெல்லத் தண்ணில புளியா? நீங்க எந்த ஊருங்ணா? என்னை வெச்சு காமெடி கீமடி ஒன்னும் பண்ணலையே? :((
சனி, மார்ச் 31, 2007 at 5:03 பிப
I am from Veeravanallur. In our side, We use to add tamarind for Panakam. No comedy in it. When I heard for the first time about making of Panakam without Tamarind, I really wondered. Now you are wondering! – NJ
வியாழன், பிப்ரவரி 18, 2010 at 7:58 முப
Glad that u are from Veeravanallur!!
Pl. visit,http://sriboominathaswamytemple.blogspot.com/,
thanks.
ஞாயிறு, ஏப்ரல் 1, 2007 at 6:26 முப
NJ, Sorry! நீங்க ஏதோ கிண்டல் செய்றீங்கன்னு நினைச்சுட்டேன். புளி சேர்த்து நான் கேள்விப்பட்டதில்லை. 😦
செவ்வாய், மார்ச் 23, 2010 at 7:57 பிப
தங்களுடைய வலைத்தளம் பார்தேன்.
மிகவும் உபயகரமாக இருந்தது.
மிக்க நன்றி.
உங்களுடைய வலைதளத்தை என்னுடைய வலை தளத்தில் சேர்க்க அனுமதி வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சாந்தகோமதி.
ஞாயிறு, ஒக்ரோபர் 23, 2011 at 4:47 முப
[…] Lime Cardamam Juice (Panagam) […]
செவ்வாய், ஒக்ரோபர் 30, 2012 at 11:25 பிப
[…] Lime Cardamam Juice (Panagam) […]